Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kann Varaintha Oviyamey!
Kann Varaintha Oviyamey!
Kann Varaintha Oviyamey!
Ebook155 pages54 minutes

Kann Varaintha Oviyamey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மங்களா ஒரு அழகான நேர்மையான பெண். தந்தையை இழந்த மங்களா குடும்பப் பொறுப்பை ஏற்கின்றாள். இதில் எதிர்பாராவிதமாக அம்மாவிற்கு ஹாட்-அட்டாக் ஏற்படுகின்றது. ஆப்பரேஷன் செய்ய பணம் இல்லாத போது ஏற்ற நேரத்தில் உதவிய தன் தோழிக்கு நன்றியை தெரிவிக்க, தோழிக்கு வாடகைத்தாயாக மாறுகிறாள். இதனால் மங்களாவின் காதலன் ஏற்றுக்கொள்வானா? மங்களாவின் நிலை என்ன? வரையலாமா... கண் வரைந்த ஓவியத்தை....

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580137107310
Kann Varaintha Oviyamey!

Read more from R. Sumathi

Related to Kann Varaintha Oviyamey!

Related ebooks

Reviews for Kann Varaintha Oviyamey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kann Varaintha Oviyamey! - R. Sumathi

    https://www.pustaka.co.in

    கண் வரைந்த ஓவியமே!

    Kann Varaintha Oviyamey!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    ஓவியர்கள் மறைந்தாலும் அவர்கள் வரைந்த ஓவியங்கள் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அவளைப் பார்க்கும் போது கூட நிரஞ்சனுக்கு அப்படித்தான் தோன்றியது.

    தோற்றமே யாருக்கும் ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணிவிடும். விழிகளுக்கு வேலி போல் கரிய இமைகள். ஆளை காலி செய்து விடுவதைப்போல் கருவிழிகள். செதுக்கிய மூக்கு. பதுக்கிய முத்துக்களை கொண்ட செவ்வாய். நிமிர்ந்து அமர்ந்திருந்த மிடுக்கில் தெரியும் துணிவு. பயமில்லாத விழிகளில் தெரிந்த அறிவு என்று நிறைந்த ஓவியமாக தோன்றினாள்.

    மிஸ், மங்களா...

    எஸ் சார்

    இதுக்கு முன்னாடி நீங்க எங்கே வேலைப் பார்த்தீங்க?

    ராஜி மோட்டார் கம்பெனியில

    அந்த பதில் அவனுக்குள் சரக்கென தீக்குச்சியை கிழித்திருக்க வேண்டும். லேசாக நிமிர்ந்து அமர்ந்தான்.

    முகத்தில் அலட்சியமாக அவளுடைய அழகை ரசித்துக் கொண்டிருந்த நிலைமாறி ஒரு மரியாதை கலந்த மதிப்பு உண்டானது.

    ராஜி மோட்டார் கம்பெனிதான் அவனுடைய போட்டி கம்பெனி. மாவரைக்கும் இயந்திரங்கள் மின்சாதனங்களுக்கு மோட்டார் தயாரித்து விற்பதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். அதே மின்சாதனங்களுக்கான மோட்டார் உற்பத்தியில்தான் இவனும் இறங்கியிருக்கிறான். அதுவும் ராஜி மோட்டார் தொடங்கிய அதே காலத்தில்தான். ஆனால் அந்த கம்பெனியை வீழ்த்த முடியவில்லை. இணையாககூட இருக்க முடியவில்லை. இரண்டாமிடத்தில்தான் இருக்கிறான். தன் நிறுவனத்தை எப்படியாவது முதலிடத்திற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அவனுடைய லட்சியம். இந்த நிலையில் அங்கே வேலைப் பார்த்த ஒருத்தி தன்னிடம் வேலைக் கேட்டு வந்திருக்கிறாள்.

    லேசாக தொண்டையை செருமிக் கொண்டு அவளை ஆழ்ந்து நோக்கினான்.

    அங்கே நீங்க என்ன வேலைப் பார்த்தீங்க?

    ரிசப்ஷனிஸ்ட்டாயிருந்தேன்

    உங்க அழகைப் பார்த்ததுமே நினைத்தேன்.

    அவளிடம் எந்த சலனமும் இல்லை.

    சரி எதனால அந்த வேலையை விட்டுட்டீங்க

    மும்பை கிளைக்கு என்னை மாத்தினாங்க. சம்பளம் கூடுதலா கிடைக்கும்கற ஆசையில நானும் போனேன். ஆனா அந்த க்ளைமேட் எனக்கு ஒத்துவரலை. அதனால ஒரு வருஷம் கழிச்சு திரும்ப சென்னைக்கே மாற்றல் கேட்டேன். கொடுக்கலை. அதனால வேலையை விட்டுட்டு உங்க கம்பெனிக்கு விண்ணப்பம் செய்தேன். இங்கேயும் ரிசப்ஷனிஸ்ட் போஸ்ட்ங்கறதால வந்தேன்.

    ஐ.ஸி...

    அவன் அவளுடைய சான்றிதழ்களைப் பார்த்தான். பின் திருப்தியுடன் அவளிடம் நீட்டினான்.

    ஓ.கே! உங்களை மாதிரி ஒரு அழகு தேவதை என் ஆபீஸ் வரவேற்பறையை அலங்கரிச்சா மங்களகரமாயிருக்கும்னு நினைக்கிறேன் மிஸ். மங்களா? உங்க பேர்கூட ரொம்ப மங்களகரமாயிருக்கு. நீங்க இப்பவே வேலையில ஜாயின் பண்ணலாம்.

    நன்றி சார்! ரொம்ப நன்றி! ஆங்கிலத்தில் சொன்னாள்.

    வேலைக்கான உத்தரவை இப்பவே ரெடி பண்ண சொல்றேன்.

    அவள் மறுபடியும் நன்றி கூறிவிட்டு எழுந்துக் கொண்டாள். கம்பீரமான அந்த அழகில் அவன் சற்றே அசைந்தான்.

    ***

    மறுநாள் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது வரவேற்பறையில் இருந்த மங்களா குட்மார்னிங் சார் என்றாள். ஒரு நிமிடம் நின்று குட்மார்னிங் என்றவன் அவளை தலைமுதல் கால் வரை நோட்டமிட்டான்.

    நேற்றே சொல்லணும்னு நினைச்சேன். வரவேற்பறையில் இருக்கறதால கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணினா நல்லாயிருக்கும்னு. ஆனா... இப்ப தோணுது இந்த மங்களகரமான தோற்றமே சிறப்புன்னு என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

    அழகான பருத்தி புடவை. காதில் ஆடும் ஜிமிக்கி. புருவங்களுக்கு இடையில் வட்டமாக சாந்து பொட்டு. காலையில் அம்மாகூட சொன்னாள்.

    இன்னைக்கு ரொம்ப அழகாயிருக்கேடி! மென்மையாக சிரித்துக் கொண்டவள், தன் வேலையை கவனிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொலைபேசி ஒலித்தது.

    மிஸ் மங்களா, ஒரு நிமிஷம் என் அறைக்கு வந்துவிட்டு போங்கள்.

    தொலைபேசியை வைத்துவிட்டு அவனுடைய அறைக்கு வந்து கதவை விரலால் தட்ட அவனுடைய குரல் உள்ளிருந்து அனுமதி கொடுத்ததும் உள்ளே வந்தாள்.

    இருக்கையில் சாய்ந்த வண்ணம் அவளை ஒரு நிமிடம் ஏற இறங்கப் பார்த்தவன்,

    ராஜி மோட்டார் கம்பெனியில் நீங்க என்னவாயிருந்தீங்க மிஸ். மங்களா? என்றான்.

    ரிசப்ஷனிஸ்ட்டா

    அவன் இருக்கையை விட்டு எழுந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறே அவளருகே வந்தான்.

    பொய்!

    திக்கென்ற அதிர்வு அவளிடம் உண்டானதை அவன் கவனித்தான். அவள் மௌனமாக நின்றாள்.

    நீங்க அங்கே அந்த கம்பெனி முதலாளி கோசலைமைந்தனுக்கு செகரட்ரியா இருந்திருக்கீங்க. கிட்டத்தட்ட ரைட் ஹேண்ட். கம்பெனி பற்றிய எல்லா துறை சம்பந்தமான விவரங்களும் உங்களுக்கு அத்துப்படி. என்ன நான் சொல்றது சரியா?

    அவனுடைய இதழ்களில் குறுநகை பரவியது.

    அவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே நின்றிருந்தாள்.

    ரெண்டாவது நீங்க மும்பைக்கு இதே கம்பெனியோட கிளைக்கு மாற்றலாகிப் போனதுன்னு சொன்னதும் பொய்!

    இப்பொழுது அவள் மெல்ல நிமிர்ந்தாள்.

    நீங்க போன வருஷமே அந்த கம்பெனியிலேர்ந்து விலகிட்டிங்க

    சார்...

    நீங்க ஏன் பொய் சொன்னீங்கன்னு நான் கேட்கமாட்டேன். ஏன்னா காரணம் எனக்குத் தெரியும்.

    கூடுதலான அதிர்வு அவள் முகத்தில் தெரிந்தது.

    என் கம்பெனிக்கு வேலைக்கு வர்ற ஒவ்வொருத்தரைப் பத்தியும் எனக்குத் தெரியணும். அவங்க கேரக்டர் எப்படி என்ன ஏதுன்னு? அதிலும் நீங்க என்னோட போட்டி கம்பெனியில வேலைப் பார்த்திருக்கீங்க. அதனால அவசியம் தெரிஞ்சுக்கணும்னு முயற்சி செய்தேன். தெரிஞ்சுக்கிட்டேன்.

    அவள் சலனமே இல்லாத ஒரு பார்வையை அவன் மீது செலுத்தினாள்.

    கோசலை மைந்தன் பொம்பளை விஷயத்துல ஒரு மாதிரி. பணத்துக்காகவும், பதவி உயர்வுக்காகவும் சில பெண்கள் வலியபோய் விழறதும் உண்டு. பர்சனல் செகரட்ரியான உங்கக்கிட்டேயும் அவர் அதே மாதிரி தன் கைவரிசையை காட்டியிருக்கிறார். அவரோட நோக்கம் தெரிஞ்ச நீங்க வேலையை விட்டு வந்திட்டீங்க, இல்லையா மிஸ் கண்ணகி ஸாரி மங்களா? அவன் கிண்டலாக கேட்டாலும் அவனுடைய கண்கள் அவளை மதிப்பாக எடைப்போட்டன.

    ஆமாம் என்றாள் அமைதியாக.

    ஏன் இதை என்கிட்ட சொல்லலை.

    எதுக்கு சொல்லணும்? அந்த மனுஷன் செய்த தப்பை பகிரங்கப்படுத்தவும் பழிவாங்கவும் நான் விரும்பலை. பணத்துக்காக யாரை வேணா பணிய வைக்கலாம்கறது அவரோட எண்ணம்னா எந்த சூழ்நிலையிலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாதுங்கறது என்னோட எண்ணம். அதனாலதான் துஷ்டனைக் கண்டால் தூர விலகணும்னு விலகிட்டேன். தவிர வேலைக்கு வந்த இடத்துல இதையெல்லாம் எந்த பொண்ணும் பேசமாட்டா.

    வெரிகுட்! ஆனா செகரட்ரியா வேலை செய்துட்டு எதுக்காக ரிசப்ஷனிஸ்டுன்னு பொய் சொல்லணும்? ஒரு வேளை இங்கேயும் செகரட்ரியா வேலை கொடுத்துட்டு கோசலை மைந்தன் மாதிரி நானும் நடந்துப்பேனோன்னு பயமா?

    பயம்தான். ஆனா கோசலை மைந்தன் மாதிரி எல்லாரையும் எடைபோட முடியாதில்லையா? இது வேற மாதிரி பயம்

    வேற மாதிரின்னா? அவன் தன் கம்பீரமான புருவங்களை உயர்த்தினான்.

    அவள் துணிச்சலான சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

    "நீங்களேதான் சொன்னிங்க. ராஜி மோட்டார் கம்பெனியோட எல்லாத்துறை சம்பந்தமான விஷயங்களும் எனக்கு அத்துப்படின்னு! அந்த பயம்தான். பர்சனல் செகரட்ரின்னு உங்கக்கிட்ட என்னை வெளிப்படுத்திக்கிட்டிருந்தா, ராஜி மோட்டார் கம்பெனியை தன்னோட போட்டி கம்பெனியா நினைக்கிற நீங்க என்கிட்டேயிருந்து அந்த கம்பெனி பற்றிய ரகசியங்களை

    Enjoying the preview?
    Page 1 of 1