Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilaiya Manathu Inaiyum Pothu...
Ilaiya Manathu Inaiyum Pothu...
Ilaiya Manathu Inaiyum Pothu...
Ebook98 pages34 minutes

Ilaiya Manathu Inaiyum Pothu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாதவன், சாருகாசினி இருவரும் காதலித்து அவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சில நாட்களுக்குப் பின்னர் சாருவின் தோழியான மகேஸ்வரியின் திருமணத்திற்கு இருவரும் சென்றிருந்தனர். அங்கு சாருவின் நிலைமை என்ன நிகழ்ந்து? அதனால் சாருகாசினி, மாதவன் இருவரின் வாழ்க்கையில் இறுதியில் நிகழ்ந்தது என்ன? என்பதையும் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateJan 13, 2024
ISBN6580137109475
Ilaiya Manathu Inaiyum Pothu...

Read more from R. Sumathi

Related to Ilaiya Manathu Inaiyum Pothu...

Related ebooks

Reviews for Ilaiya Manathu Inaiyum Pothu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ilaiya Manathu Inaiyum Pothu... - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இளைய மனது இணையும் போது...

    Ilaiya Manathu Inaiyum Pothu...

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தது.

    ஊஞ்சலின் மேல் ஏஞ்சல் ஒன்று அமர்ந்திருந்தது. அதன் கையில் பிரித்த நிலையில் புத்தகம். விரிந்த நிலையில் தோள்வரை வெட்டப்பட்ட கூந்தல் காற்றில் அலைந்தது.

    கூந்தல் மட்டும் காற்றில் அலையவில்லை. அவளுடைய மணமும்தான் அலைந்தது. படிப்பதில் மனம் லயிக்காமல் மனதில் லயித்தவனையே நினைத்துக் கொண்டிருந்தாள் சாருகாசினி.

    எழுத்துக்களுக்கிடையில் எழுந்து சிரித்தான் மாதவன். வார்த்தைகளோடு கோர்த்து நின்றான். பொருள் புரியாதபடி அருள் பாலித்தான். பக்கத்திற்கு பக்கம் பரவசப்படுத்தினான்.

    புத்தகத்தை மூடினாள். அட்டையிலும் அவனே சிரித்தான். அதே சமயம் அவளுடைய செல்ஃபோன் சிணுங்கியது. எடுத்துக் கொடுத்தாள் காதிற்கு. ‘ஹலோ’ என்றாள். கம்பீரமான அழைப்பு கேட்டது.

    ஹாய்... நான் மாதவன். என்ன பண்ணிக்கிட்டிருக்கே?

    சும்மா! புக் படிச்சுக்கிட்டிருக்கேன். ரொம்ப போரடிச்சுது. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. இல்லாட்டி இன்னேரம் உங்ககூட பீச்சுலயோ பார்க்குலயோ உட்கார்ந்து காதல் வளர்த்துக்கிட்டிருந்திருப்பேன்.

    ஞாயிற்றுக்கிழமை கடமைக்குத்தான் ஓய்வு. காதலுக்கில்லை. நீ கிளம்பி வா.

    எங்கே?

    கபாலீஸ்வரர் கோவிலுக்கு.

    கோவிலுக்கா? என்ன புதுசா கோவிலுக்கெல்லாம் வரச் சொல்றிங்க? பக்தி முத்திட்டா?

    ப்ச்! அதெல்லாம் ஒண்ணுமில்லை. எப்பவும் பீச், பார்க்குன்னு சந்திச்சு போரடிச்சுப் போய்ட்டு. அதான் ஒரு சேஞ்சுக்கு கோவில்ல சந்திக்கலாம்னு.

    சரி. இன்னும் பத்து நிமிஷத்துல வர்றேன்.

    செல்போனை அணைத்துவிட்டு ஊஞ்சலிலிருந்து குதித்தது அந்த ஏஞ்சல். போட்டிருந்த நைட்டியை கழற்றிப் போட்டுவிட்டு வழக்கமாகப் போடும் ஜீன்ஸ் பேண்ட்டும், டி ஷர்ட்டும் போட்டுக்கொண்டு ஒரு ஹேண்ட் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டியபடியே தன் அறையிலிருந்து வெளிப்பட்டாள். அதே சமயம் அம்மா கையில் காபி கோப்பைகள் அடங்கிய தட்டுடன் வெளிப்பட்டாள்.

    சாரு. எங்க கிளம்பிட்டே?

    வந்து கோவிலுக்கும்மா.

    என்னது கோவிலுக்கா? அங்கெல்லாம் போவியா என்ன?

    கடவுள் என்ன எனக்கு விரோதியா?

    நான் கூப்பிட்டா ஒரு நாள்கூட நீ வந்ததில்லையே!

    அம்மா, மனசுல வாழ்க்கையைப் பத்தின பயம், எதிர்காலத்தைப் பத்தின குழப்பம் இதெல்லாம் இருக்கவறங்கதான் கோவிலுக்குப் போவாங்க. மனசுல தெளிவு உள்ளவங்க கோவிலுக்குப் போக மாட்டாங்க. தெளிவே கடவுள்.

    அப்போ இப்போ எதுக்குப் போறே?

    நானா எங்க போறேன். என்னோட ஃபிரண்ட் ஒருத்தி போன் பண்ணினா. கபாலீஸ்வரர் கோவிலுக்குப் போறாளாம். இன்னைக்கு அவளுக்கு பர்த்டேவாம். ஸ்பெஷலா அர்ச்சனைக்கு கொடுத்திருக்காளாம். என்னை வாடின்னா. பிறந்த நாளும் அதுவும் அவளை மனம் கோண வைக்கக்கூடாதுன்னுதான் கிளம்பறேன்.

    சரி. போறதுதான் போறே! அழகா ஒரு புடவையை கட்டிக்கிட்டு தலையைப் பின்னி பூ வச்சுக்கிட்டு ஒரு நகையை நட்டை போட்டுக்கிட்டு லட்சுமிகரமா போகக்கூடாதா? பேண்ட் போட்ட பத்ரகாளி மாதிரியாயிருக்கு. நீயும் உன் ஹேர் ஸ்டைலும், சாருகாசினி சிரித்தாள்.

    அம்மா! காலேஜ்க்குத்தான் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு சட்டம் போட்டிருக்காங்க. நீ இப்படி சத்தம் போட்டுப் பேசாதே. அப்புறம் கோவிலுக்கும் ஜீன்ஸ் போட்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு சட்டம் போட்டுடப் போறாங்க. காபி ஆறிடப் போகுது. கொடு என ஒரு கோப்பையை எடுத்து உறியத் தொடங்கினாள்.

    என்னமோ போ. எல்லாம் அப்பா கொடுக்கற செல்லம் என்றாள் அம்மா பூர்ணிமா.

    என்ன என் பேர் அடிபடுது என்று குரல் கொடுத்தபடியே வெளிப்பட்டார் அப்பா அருணாச்சலம்.

    பாருங்கப்பா. நான் கோவிலுக்குப் போறேன். அம்மா திட்டறாங்க! சிணுங்கினாள் சாருகாசினி.

    கோவிலுக்குப் போறது நல்ல காரியம்தானே! அதுக்குப்போய் ஏன் திட்டறே?

    கோவிலுக்குப் போறதுக்கு நான் ஒண்ணும் திட்டலை. கோவிலுக்குப் போறவ எப்படி டிரஸ் பண்ணிக்கிட்டுப் போறா பாருங்க. பொண்ணா லட்சணமா ஒரு புடவையை கட்டிக்கிட்டு போகக்கூடாது.

    பூர்ணிமா பக்திங்கறது மனசுலயிருந்தா போதும், உடையில இருக்கணும்னு அவசியம் இல்லை.

    அப்படிச் சொல்லுங்கப்பா. காவி உடை பக்தியின் அடையாளம். ஆனா இன்னைக்கு நாட்ல நடக்கற அசிங்கங்களைப் பார்க்கும்போது காவி உடைக்கே களங்கம் வந்த மாதிரியில்லே...

    சரி... சரி நீ கிளம்பு. பேச ஆரம்பிச்சா வீணா வாக்குவாதம்தான். போ... சாமிக்கிட்டே நல்ல புத்தியை கொடுன்னு வேண்டிக்கிட்டு வா.

    அம்மா புத்தியெல்லாம் கடவுள் கொடுக்கறதில்லை. அது தாய் தர்றது. தாயைப்போல பிள்ளைன்னு சொல்றதில்லையா? உனக்கு நல்ல புத்தியிருந்தா கண்டிப்பா அது என்கிட்டேயும் இருக்கும்.

    அடிவாங்கப்போறே!

    மனைவியின் கையிலிருந்த இன்னொரு காபி கோப்பையை எடுத்துக்கொண்ட அருணாச்சலம் பெரிதாக சிரித்தார்.

    பை... என்று கூறிவிட்டு துள்ளலுடன் வாசலுக்கு வந்தாள் சாருகாசினி.

    அடுத்த சில நிமிடங்களில் தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறந்தாள்.

    கபாலீஸ்வரர்

    Enjoying the preview?
    Page 1 of 1