Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naalai Varuvaan Nayagan!
Naalai Varuvaan Nayagan!
Naalai Varuvaan Nayagan!
Ebook151 pages51 minutes

Naalai Varuvaan Nayagan!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைப்பருவ நட்பில் தொடர்ந்து பின் காதலாய் மாறியது. இருவரும் பள்ளிப்படிப்பை முடித்த பின் இருவரும் தங்கள் லட்சியத்தை நோக்கி நகர்கின்றன. அரவிந்தனின் லட்சியத்தை தன் லட்சியமாக நந்தினி ஏற்று வாழ்கிறாள். இருவரும் வீட்டில் ஏற்றுக்கொண்டனர். இருவரும் சேர்ந்து வாழ்வில் இணையும் நேரத்தில் திடீர் திருப்பமாக ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதனால் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது. இருவரும் இறுதியில் இணைவார்களா?என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுவோம்.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580137107240
Naalai Varuvaan Nayagan!

Read more from R. Sumathi

Related to Naalai Varuvaan Nayagan!

Related ebooks

Reviews for Naalai Varuvaan Nayagan!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naalai Varuvaan Nayagan! - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    நாளை வருவான் நாயகன்!

    Naalai Varuvaan Nayagan!

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    "பசுமை நிறைந்த நினைவுகளே

    பாடித்திரிந்த பறவைகளே…

    பழகி கலந்த தோழர்களே

    பறந்து செல்கின்றோம்…"

    இந்தப் பாடலை யாரும் பாடவில்லை. எங்கும் ஒலிக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு மனதிலும் இந்த பாடலே ஒலித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு மனமும் ரகசியமாக உருகிக்கொண்டிருந்தது.

    அந்தப் பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் பிரிவு உபசாரவிழா. பள்ளியில் அவர்கள் இருக்கும் கடைசி நாள். ஒவ்வொருவராக மாணவ, மாணவிகள் வந்து சேர்ந்தவண்ணமிருந்தனர். மாணவர்கள் மாணவர்களைப் போல்தான் இருந்தார்கள்.

    ஆனால் மாணவிகள்?

    ஒவ்வொரு வருடமும் இந்த விழாவிற்கு மட்டும் மாணவிகள் புடவை அணிந்து வரவேண்டும். இது கட்டாயம்.

    டேய்… இதுங்களை பாருங்கடா. இதுங்க நம்மகூட படிக்கறதுகளா? நம்பவே முடியலைடா! இப்ப நடக்கப்போறது பிரிவு உபசாரவிழாவா? இல்லே அழகிப்போட்டியா?

    ஆமான்டா. புடவை கட்டியதுமே எவ்வளவு பெரிய பொண்ணுங்களா தெரியறாளுங்க. நிஜமாவே அவளுங்க பக்கத்துல நின்னா நாம தம்பிங்கமாதிரி தெரிவோம்டா.

    சரிதான். மறந்தும் நீ எவ பக்கத்திலேயும்போய் நின்னுடாதே. ஏற்கனவே நீ குள்ளமணி மாதிரி இருக்கே. இன்னும் குள்ளமாத் தெரிவே.

    கொல்லென சிரித்தனர்.

    அவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்.

    டேய்… நம்ம டீச்சர்ஸுக்கும், இவளுங்களுக்கும் இப்ப வித்தியாசமே தெரியலை. இவங்ககூட டீச்சர்ஸ் நின்னா நமக்கு யாரு ஸ்டூடண்ட், யாரு டீச்சர்னே வித்தியாசம் தெரியாது.

    ஆமான்டா பாபு. ஏற்கனவே உனக்கு கண்ணு அரைகுறை. எவளையாவது பார்த்து குட்மார்னிங்னு சொல்லிவைக்காதே. இதுங்க சாதாரணமாவே திமிர் பிடிச்சதுக. அப்பறம் மண்டைக்கனம் ஏறிடும்.

    அனைவரும் ஆமோதித்து சிரித்தனர். அரவிந்தை சிரிப்பினூடே கவனித்தனர்.

    அரவிந்த் நகம் கடித்தபடி நொடிக்கொருதரம் வாசலையே பார்த்த வண்ணமிருந்தான். அலைபாயும் அவனுடைய விழிகளின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண்களை சிமிட்டி விஷயத்தை பரிமாறிக்கொண்டனர்.

    ஒருவன் விஷயத்தை போட்டு உடைத்தான்.

    டேய்… இதுங்களே இன்னைக்கு இவ்வளவு அழகாயிருக்குங்கன்னா… நந்தினியை யோசிச்சுப் பாருங்கடா…

    அதானே… எங்கடா அவளைக்காணோம்.

    இன்னும் வரலை போலிருக்கு…

    அவளுக்காக சிலபேர் தவமா தவம் கிடக்கறது. பாவம் அவளுக்குத் தெரியாதா?

    அதான்! எல்லாரும் வந்துட்டாங்க. இன்னும் அவளைக்காணோம்?

    நான் நினைக்கிறேன். அவ எங்காவது ப்யூட்டி பார்லர் போயிருக்கா போலிருக்கு அழகுபடுத்திக்க.

    போடா! அவளே அழகு. அழகுக்கு அழகு பண்ணிக்க அவ போகமாட்டாடா.

    டேய்… பொண்ணுங்களைப் பத்தி உனக்குத் தெரியாது. அவங்க என்னதான் அழகாயிருந்தாலும், தனக்கு புடிச்சவங்க முன்னாடி இன்னும் அழகாக காட்டிக்க ஆசைப்படுவாங்க.

    அப்போ நந்தினிக்கு புடிச்சவங்க இங்க இருக்காங்கன்னு சொல்லு என்று அரவிந்தை ஒருசேரப் பார்த்தனர்.

    அரவிந்தின் இதயம் சிறகடித்தது.

    உமர் அருகில் வந்தான். தோளைத் தட்டினான்.

    டேய்… எனக்கென்னமோ நந்தினி வீட்ல உட்கார்ந்து அழுதுக்கிட்டிருக்காளோன்னு தோணுது…

    எதுக்கு அழணும்? சிறகடிப்பு குறைந்தது அரவிந்திற்குள். எல்லோரையும் விட்டு எப்படி பிரியறதுன்னு. முக்கியமா உன்னைவிட்டு எப்படி பிரியறதுன்னு.

    டேய்… சும்மாயிருக்கமாட்டே. அவனுங்கதான் கலாய்க்கறானுங்கன்னா நீயும்…

    டேய்… நான் கலாய்க்கலைடா. உன்மேல உள்ள அக்கறையாலத்தான் சொல்றேன். இன்னைக்குத்தான் கடைசி நாள். உன் காதலை சொல்லிடு.

    அரவிந்த் நகம் கடித்தான்.

    என்னடா யோசிக்கறே? பயமாயிருக்கா? வேணுமின்னா நான் சொல்லட்டா?

    டேய்… முறைத்தான் அரவிந்த்.

    நீ காதலிக்கறதா சொல்றேன்டா.

    நீ எதுவும் சொல்லத் தேவை இல்லை. அவளும் என்னைக் காதலிக்கிறாள்னு எனக்குத் தெரியும்.

    அவ சொன்னாளா?

    இதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா?

    அப்போ… நீ அவளைக் காதலிக்கறதும், அவளுக்குத் தெரியுமா?

    அதே பதில்தான் இதுக்கும்.

    தப்புடா. அவ உன்னை காதலிக்கறதா நீ நினைச்சாலும், அதை கன்ஃபார்ம் பண்ணிக்கணும். இல்லாட்டி கதையே மாறிடும். இந்த வயசுல காதல் வரும்போது நிறையபேர் சொல்றதில்லை. அப்பறம் ஆட்டோகிராப் படம் மாதிரியாயிடும். அதனால சொல்லிடுடா.

    எப்படிடா சொல்றது?

    எப்படி சொல்றதா?

    காதலை சொல்ற வயசு இது இல்லையேடா…

    காதல் வர்ற வயசு இதுன்னா… சொல்ற வயசு இல்லையா?

    காதலை சொல்ல வயசுமட்டும் இல்லைடா தகுதியும் வேணும் படிக்கணும். வேலைக்குப் போகணும், நிலை நிறுத்திக்கணும். இந்த ரெண்டுங்கெட்டான் வயசுல சொன்னா அப்பறம் ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மாதிரியாயிடும்.

    அப்ப என்னதான்டா பண்ணப்போறே?

    புரிய வைப்பேன். நான் அவளைக் காதலிக்கறதை எதிர்காலத்துல அவதான் என் வாழ்க்கை துணைன்னு புரிய வைப்பேன்.

    எப்படி?

    எப்படியோ!

    அவன் சொன்ன அதே நிமிடம், தேவதையைப்போல் உள்ளே நுழைந்தாள் நந்தினி.

    அந்த இடத்தில் அனைவரும் சட்டென்று திடீர் தியானத்திற்கு சென்றதைப்போல் ஒரு அமைதி.

    அறிவிப்பின்றி வந்த தூறலைப்போல், அழைப்பின்றி வந்த தென்றலைப்போல் அதிசயங்களின் கலவையைப் போலிருந்தாள்.

    இறுக்கி பின்னி இருசடையாய் மடக்கிகட்டி, உச்சியில் ரிப்பனே பூவாய் சிரித்த கூந்தல், விரித்துவிடப்பட்டு காற்றில் அலைபாய்ந்தது.

    யூனிஃபார்மில் சிறைப்பட்டிருந்த தேகம் சேலை கொண்டு சித்திரிக்கப்பட்ட ஓவியமாய்…! இதுவரை தேவதைகளைப் பார்க்காதவர்கள் இப்பொழுது! இவளைப் பார்த்துக்கொள்ளலாம். ஏற்கனவே பார்த்தவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம். கவிதை எழுதத் தெரியாதவர்கள் இவளைக் கண்டு கற்றுக்கொள்ளலாம். எழுதத் தெரிந்தவர்கள் இன்னும் கற்பனையை வளர்த்துக்கொள்ளலாம். ஓவியம் பயில நினைப்பவர்கள் ஓரளவு கற்றுக்கொள்ளலாம். ஓவியம் பயின்றவர்கள் உலகளவின் பரிசுகளை வெல்லலாம்.

    இப்படிப்பட்ட எண்ணங்கள் எல்லோருக்கும் தோன்றும். ஆனால் அரவிந்திற்கு தோன்றவில்லை. அவனுடைய உணர்வுகள் வேறு விதமாகயிருந்தன.

    கடவுளை போற்றி தேவாரம், திருவாசகம் என பாடியவர்கள்கூட நேரில் கடவுளை காண நேர்ந்திருந்தால் அப்படி பாட முடியுமா?

    பார்க்காத வரை தான் கற்பனை வளம். பார்த்துவிட்டால் கற்சிலை மனம்தான். அப்படி ஒரு நிலையில்தான் அவனிருந்தான். தவமின்றி, சாதனை இன்றி முக்தியடைந்துவிட்டான்.

    பேச முடியாமல் பிரமித்துப்போயிருந்தான்.

    டேய்… மச்சான் அரவிந்த் செத்தான்டா. என்னடா இவ்வளவு அழகாயிருக்கா? இவளுங்களைப் பெத்தவங்களுக்கு பயம் இருக்கோ இல்லையோ. எனக்கு பயமாயிருக்குடா. பத்திரமா இவளுங்களை வீட்ல கொண்டு சேர்க்கணும்டா.

    ஒண்ணும் கவலைப்படாதே. அவங்கல்லாம் நம்மைவிட சூப்பரா படிக்கறவங்க. சீக்கிரம் பெரிய பெரிய போஸ்ட்டுக்கு போயிடுவாளுங்க. நமக்கெல்லாம் வேலைக்கிடைக்கறது குதிரைக்கொம்பு. கூடப்படிச்ச பாவத்துக்கு நமக்கு ஒரு செக்யூரிட்டி வேலை கூடவா போட்டுத்தரமாட்டாளுங்க? காலம்பூரா அவளுங்களுக்கு செக்யூரிட்டி கார்டா இருந்து, அவளுங்களைப் பாதுகாப்போம் என்ன சொல்றீங்க?

    ஆஹா… அதுவல்லவோ பெரிய பாக்கியம்!

    சரி… சரி… நந்தினியும் வந்தாச்சு. ஹாலுக்குப் போகலாம் வாங்க. அப்பறம் டீச்சர்ஸ் நம்மை வெல்கம் பண்ற மாதிரியாகிடப் போகுது.

    யாரோ ஒருத்தி உரத்த குரலில் உத்தரவிட, உலுக்கிவிடப்பட்ட நிலையில் உணர்விற்கு வந்தான் அரவிந்த்.

    அனைவரின் கண்களும் ஹாலை நோக்கி அவசர அவசரமாக நடந்தன.

    நான்கு கால்கள் மட்டும்

    Enjoying the preview?
    Page 1 of 1