Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thedi Vantha Deivam
Thedi Vantha Deivam
Thedi Vantha Deivam
Ebook112 pages41 minutes

Thedi Vantha Deivam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தெய்வீகாவும், மேகலாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். மேகலா, தெய்வீகாவுக்கு நண்பியாக மட்டும் தான் இருந்தாளா? சந்ரோதயம் என்பவள் தெய்வீகாவை தேடிக்கொண்டிருக்கிறாள். சந்ரோதயம் என்பவள் யார்? இதில் தேடி வந்த தெய்வமாய் யார் இருக்கிறார்கள்? என்பதை படித்து தெரிந்துகொள்வோம்!

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580137111065
Thedi Vantha Deivam

Read more from R. Sumathi

Related to Thedi Vantha Deivam

Related ebooks

Reviews for Thedi Vantha Deivam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thedi Vantha Deivam - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தேடி வந்த தெய்வம்

    Thedi Vantha Deivam

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    மேகலா தெய்வீகாவைத் தேடிக்கொண்டு வந்தபோது அவள் பால்கனியில் நின்றபடி பக்கத்திலிருந்த ரோஜா செடியின் இலைகளை கிள்ளி கிள்ளிப் போட்டபடியே சிரித்து சிரித்து செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தாள்.

    அந்த சிரிப்பு முக சிவப்பு எல்லாம் அவள் தீபனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை சொல்லாமல் சொல்லியது.

    அவள் பேசி முடிக்கும் வரை பொறுமையில்லாதவளாய் மேகலா ஏய்...பேசினது போதும் வாடி. பசி தாங்க முடியலை. சாப்பாடு காலியாகிடப் போகுது என கத்தினாள்.

    மேகலா கத்தியது நிச்சயம் தீபனுக்கு கேட்டிருக்க வேண்டும். அங்கே அவன் என்னவோ சொல்ல இவள் பதிலுக்கு அது ஒரு லூசு. அப்படித்தான் கத்தும் நீ பேசு என கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

    அருகே வந்த மேகலா அவளை முறைக்கவும் தெய்வீகா பயந்தவளாய் சரி...ஓகே ஓகே என தொடர்பைத் துண்டித்தாள்.

    லூசா...யாருடி லூசு? பொழுது விடிஞ்சு பொழுது போனா அவனோட பைத்தியமாட்டம் பேசிக்கிட்டு சிரிச்சுக்கிட்டிருக்கற நீ லூசா நான் லூசா? என சீறினாள் மேகலா.

    காதலிக்கிறவங்களெல்லாம் லூசுன்னா...காதலிக்காதவங்களெல்லாம் ஞானிகளா? உன்னை எவனுமே ப்ரபோஸ் பண்ணலைங்கற வயித்தெரிச்சல். தெய்வீகா தனக்கேயுரிய தெய்வீக சிரிப்பை இதழ்களில் படரவிட்டாள்.

    ஞானிகள் இல்லடி. அறிவாளிகள். படிக்கிற காலத்துல படிப்பை விட்டுட்டு இப்படி காதல் கண்றாவின்னு சுத்தறதெல்லாம் உன்னை மாதிரி முட்டாள்கள் பண்ற வேலை. இது கடைசி வருஷம். படிப்புல கவனத்தை செலுத்து. பரிட்சையில என்னைப் பார்த்து காபி அடிச்சுக்கலாம்னு கனவெல்லாம் காணாதே. நான் காட்ட மாட்டேன்.

    மேகலாவின் பேச்சைக் கேட்டு பெரிதாக சிரித்தாள் தெய்வீகா.

    என்னது உன்னைப் பார்த்து காப்பியடிப்பேனா? உன்னைப் பார்த்து காப்பியடிச்சா...வாங்கற மார்க் கூட வாங்க மாட்டேன். நிச்சயம் பெயில்தான் ஆவேன். உன் மனசுல என்ன காலேஜ் ஃபர்ஸ்ட் வருவேங்கற எண்ணமா?

    ம்...அதையும் பார்க்கத்தானே போறே?

    வர்ற அன்னைக்குப் பார்த்துக்கலாம்

    சரி...முதல்ல கேண்டினுக்கு வா. எனக்கு பயங்கர பசி. சண்டேன்னு லேட்டா எழுந்ததால காலை டிபனே கிடைக்காமப் போயிடுச்சு. மதியான சாப்பாட்டையாவது நேரா நேரத்தோட கொட்டிப்போம். லேட்டா போனா மதியானமும் பட்டினிதான். ஏதோ சண்டேன்னா ரெண்டு கறித் துண்டை கண்ணுல காட்டறாங்க. அதையும் கெடுத்துடாதே. வா என கையைப் பிடித்து இழுக்காத குறையாக இழுத்தாள் மேகலா.

    தலையை ஸ்டைலாக அசைத்து சிரித்தாள் தெய்வீகா.

    நான் வரலை. நீ போய் சாப்பிடு

    என்னது வரலையா? ஏன் விரதமா? அதுவும் சண்டே. சிக்கன் இருக்கும் போது

    நான் எதுக்கு விரதம் இருக்கனும்? நான் தீபன் கூட வெளியில போறேன். ஜாலியா அவனோட சாப்பிடப் போறேன். நீயும் வாயேன்.

    ம்...நிஜமாவே என்னை முழு மனசோட கூப்பிடறியா? இதை நான் நம்பனுமா?

    நிஜமாவே முழு மனசோடதான் கூப்பிடறேன். வா. ஜாலியா வெளிய போய்ட்டு வரலாம்

    நான் வரலை

    ஏன்...நாங்க ரெண்டுபேரும் சாப்பிடறதை உன் தலையில கட்டிடுவோம்னு பயமாயிருக்கா...அதெல்லாம் தீபன் பே பண்ணிடுவான் வா

    நீ வேணா பில்லை வாட்ஸ் அப்புல அனுப்பு. நான் உங்களுக்காக பே பண்ணிடறேன். ஆனா...உங்க கூட வரமாட்டேன். நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்றதை நான் வேடிக்கைப் பார்த்துக்கிட்டிருக்கனுமா?

    உனக்கு பொறாமை

    ஆமா...அப்படித்தான் வச்சுக்க...

    அதுக்குத்தான் ப்ரபோஸ் பண்றவனை பத்தி கொஞ்சமாவது யோசிக்கனும்ங்கறது

    போதும்...போதும் நீ யோசிச்சது. இவனெல்லாம் ஒரு ஃபிகருன்னு அவன் கூட சுத்தறே? முகம் சுளித்தாள் மேகலா.

    ஏன்டி...அவனுக்கென்ன? ஹீரோமாதிரி இருக்கான். சண்டைக்கு வந்தாள் தெய்வீகா.

    நீதான் மெச்சிக்கனும்.

    பாரு...பாரு நீயும் ஒரு நாள் காதல்ல விழுவே. அப்ப அவன் எந்த அழகுல இருக்கான்னு பார்ப்போம் பழிவாங்கும் விதமாய் பார்த்தாள் தெய்வீகா.

    இதைக் கேட்டு பெரிதாக சிரித்தாள் மேகலா.

    முட்டாள்கள்தான் காதலிப்பாங்க. நான் முட்டாள் இல்லை.

    உலகத்துல அதிக திறமைப் படைச்சவங்க...சாதிச்சவங்களையெல்லாம் எடுத்துப் பார். அவங்களெல்லாம் காதலிச்சவங்களாத்தான் இருப்பாங்க. மேரி க்யூரி ரேடியத்தை கண்டுப்பிடிச்சவங்க. அவங்க ப்யரிக் க்யூரியை காதலிச்சுதான் மணந்தாங்க. நம்ம நாட்டலதான் காதலிச்சு தோல்வியடைஞ்சவங்களையே காதலிக்கறவங்களுக்கு உதாரணமா சொல்லிக்கிட்டிருக்கோம். அம்பிகாபதி அமராவதி, தேவதாஸ் பார்வதின்னு... காதல்ல சாதிச்சவங்களைப் பத்தி பேசறதைவிட...சாதிச்சவங்களோட காதலைப் பத்தி யோசிக்கனும்.

    தெய்வீகா பேச பேச கைகட்டி சிரித்தாள் மேகலா.

    உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?

    அது...

    அப்போ...நீ எந்த மெடிசினைக் கண்டுப்பிடிக்கப் போறே?

    நான் எதுக்கு கண்டுப்பிடிக்கனும்? காதலே ஒரு மெடிசின்தான். காதலிச்சுப்பார்...மனசு எவ்வளவு சந்தோஷமாயிருக்குன்னு...? மனசு சந்தோஷமாயிருந்தா ஒரு வியாதியும் வராது.

    அப்போ...நாட்ல இருக்கற ஹாஸ்பிடலையெல்லாம் காதலர்கள் பூங்காவா மாத்திடலாம். வியாதி வராதாம். வியாதி. இப்ப மட்டும் எனக்கு என்ன வியாதி இருக்கு? தோள்களை குலுக்கிக் கொண்டாள் மேகலா.

    ம்...போய் செக்கப் பண்ணிப் பாரு தெரியும். ஆயிரெத்தெட்டு வியாதி இருக்கும்

    ஏதேது...செக்கப் பண்ணாமலேயே நீயே சொல்லிடுவே போலிருக்கே...

    பின்னே...பொறாமை. பொச்செரிப்பு...வன்மம் இப்படி உன்கிட்ட நிறைய நோய் இருக்கு.

    அடிப்பாவி...யாரைப் பார்த்து நான் பொறாமைப் படறேன்.

    வேற யாரைப் பார்த்து? என்னைப் பார்த்துத்தான்.

    உன்னைப் பார்த்தா?

    ஆமா...என் காதலைப் பார்த்து...என் காதலரைப் பார்த்து...

    கருமம்...கருமம்...மரியாதையா ஓடிப் போயிடு. இல்லாட்டி நான் என்ன செய்வேன்னே தெரியாது. சுட்டு விரல் நீட்டி மேகலா கண்களை உருட்டி எச்சரிக்கவும் கலகலவென சிரித்தபடி ஓடினாள் தெய்வீகா.

    ...

    தீபனுக்கு எதிரே அமர்ந்து அவன் ஆர்டர் செய்த ஸ்வீட்டை ஸ்பூனால் கொஞ்சமாக எடுத்து சுவைத்துக் கொண்டிருந்த தெய்வீகாவின் தெய்வீகமான அழகை ரசித்துக் கொண்டிருந்தான் தீபன்.

    தெய்வீகா. அழகான பெயர். வித்தியாசமான பெயர். இதுவரை எந்த பெண்ணையும் இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1