Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன் அருகில்... உன் நிழலில்!
உன் அருகில்... உன் நிழலில்!
உன் அருகில்... உன் நிழலில்!
Ebook158 pages40 minutes

உன் அருகில்... உன் நிழலில்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாமுந்திரிகாவிற்கு எப்பொழுதுமே படுத்தவுடன் உறக்கம் வந்துவிடும். அதற்கு காரணம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை 'இன்று போய் நாளை வா' என சொல்லிவிட்டு தெளிந்த மனதுடன் தான் படுக்கையில் சாய்வாள்.
ஆனால் இன்றைக்கு அது முடியவில்லை.
 காரணம் ஸ்ரீயா.
 பார்ட்டியில் அனைவரும் அவளுடைய பள்ளித்தோழன் தோழியரே. ஆனால் ப்ரவீணிடம் மட்டும் அவள் அதிக உரிமை எடுத்துக் கொள்வதைப் போல் தோன்றியது. அவனைப் பார்க்கும்போது மட்டும் கண்களில் பட்டாம்பூச்சி பறந்தது. அன்பையும் நட்பையும் மீறி ஏதோ ஒன்று மின்னி மறைந்தது.
 அவனும் அப்படித்தான். அதிகமாக வழிந்தான். தேவையில்லாமல் சிரித்தான். அவன் பார்வை அவளுடைய அழகை - அங்க அசைவை பருவத்திற்கே உரிய தடுமாற்றத்துடனும் தவிப்புடனும் ரசித்தபடி இருந்ததை சாமுந்திரிகா கண்டு கொண்டிருந்தாள்.
 இனம் புரியாத பீதி அவளுடைய வயிற்றில் புரண்டது.
 விக்னேஷ்வரனை நினைத்தாள். அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். 
 இரு பெண்களையும் பற்றிய பொறுப்பு கவலை எல்லாவற்றையும் அவளிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக உறங்குகிறார். அதுவும் கோயம்புத்தூருக்கு மாற்றலாகி வந்த பின் வங்கி மேனேஜராகப் பொறுப்பேற்ற பதவி உயர்வு அவரை வீட்டைப் பற்றி சிந்திக்கவே விடாமல் செய்தது. படுத்த வாக்கிலேயேகண்களைத் திறந்து விழிகளை உருட்டி பக்கத்தில் படுத்திருந்த ஸ்ரீயாவை பார்த்தாள்.
 ஒருக்களித்து அவளுக்கு முதுகைக் காட்டிய வண்ணம் படுத்திருந்தாள் ஸ்ரீயா. இன்னொரு பக்கம் படுத்திருந்த சுஜா காலைத் தூக்கி சாமுந்திரிகாவின் மேல் போட்டுக் கொண்டு வலது கையால் கழுத்தை வளைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.
 சுஜா ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவளும் பருவத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள். எந்த ஒரு கணத்திலும் மலர்ந்து விடுவாள் எனத் தோன்றியது.
 பிள்ளைகளை பெற்றெடுப்பதும் வளர்ப்பதும் பெரிய விஷயம் இல்லை. பருவ வயதில் அவர்களை வழி நடத்துவதே சிரமம். மாயாஜால உலகில் சட்டென்று மாட்டிக் கொண்டதைப் போன்றதொரு மாயையை ஏற்படுத்தும் இந்த வயதைக் கடப்பது கத்திமேல் நடப்பதற்கு சமம். பருவமும் உருவமும் மனதை அழுத்தாமல் பார்த்துக் கொண்டு அறிவை மட்டுமே மேலோங்கச் செய்ய வேண்டும்.
 சாமுந்திரிகா யோசனையாக கண்களை மூடியபொழுது ஸ்ரீயா புரள்வது தெரிந்தது. சில கணங்கள் கண்களைத் திறக்காமலேயே இருந்தவள் ஏதேதோ யோசித்த வண்ணம் அப்படியே படுத்திருந்தாள்.
 ஸ்ரீயாவின் செய்கை நெஞ்சுக்குள் கலவரத்தை உண்டு பண்ணியது.
 'எல்லா பரிசுப் பொருட்களும் மெத்தை மேல் பரவிக் கிடந்தபோது ஏதோ ஒன்றை மட்டும் ஸ்ரீயா ஏன் மறைக்க வேண்டும்?
 அந்த பரிசுப் பொருள் என்னவாக இருக்கும்? யார் கொடுத்தது? ப்ரவீண் கொடுத்திருப்பானோ?
 ஏதோ உறைபோல் இருந்ததே. உறைக்குள் என்ன இருந்திருக்கும்? பணம் வைத்து கொடுத்திருப்பானோ? ஏதாவது செலவு செய்யலாம் என தனியாக ஒளித்து வைத்துக் கொண்டாளோ?
 ச்சே! ஸ்ரீயாவிற்கு பணம் எதற்கு? எதுவுமே அவள் தானாக பணம் வைத்துக் கொண்டு வாங்க மாட்டாளே. ஒரு பேனா வாங்க வேண்டுமென்றாலும் 'அம்மா...எனக்கு மார்க்கெட் போகும்போது பேனா வாங்கி வா' என்றுதானே சொல்வாள். வேறு என்ன இருக்கும் அந்த உறைக்குள்?யோசித்தவாறே கண்களைத் திறந்தவள் திக்கென திகைத்தாள்.
 முதுகைக் காட்டியபடி ஒருக்களித்துப் படுத்திருந்த ஸ்ரீயா தலையணைக் கடியிலிருந்து அந்த உறையை எடுத்தாள். உள்ளிருந்த ஒரு கனமான காகிதத்தை இழுத்தாள். அதில் இரண்டு அன்னங்கள் ஒன்றின் கழுத்தை ஒன்று வளைத்தபடி அழகாக வரையப்பட்டிருந்தது.
 கீழே 'ஐ லவ் யூ' என்ற வாசகம் வண்ண பேனாவால் எழுதப்பட்டிருந்தது.
 அதை அரைகுறையான இரவு விளக்கின் வெளிச்சத்தில் படித்த சாமுந்திரிகாவிற்கு சகலமும் நடுங்கியது.
 'ப்ரவீண் பிறந்த நாள் பரிசாக இதைத்தான் கொடுத்தானா? இதைப் ப்ரவீண்தான் கொடுத்தானா? அல்லது வேறு யாராவதா?'
 கண்களை சுருக்கி மெல்ல ஸ்ரீயாவின் தோள் வழியே பார்வையை ஓட்டினாள். ப்ரவீண்தான். வாசகத்திற்கு கீழே கையெழுத்துப் போட்டிருந்தான்.
 வண்ண ஓவியம் அழகாயிருந்தது. ஆனால் வாசகம்...? அருவெறுப்பாயிருந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223203261
உன் அருகில்... உன் நிழலில்!

Read more from R.Sumathi

Related to உன் அருகில்... உன் நிழலில்!

Related ebooks

Related categories

Reviews for உன் அருகில்... உன் நிழலில்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன் அருகில்... உன் நிழலில்! - R.Sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    வர்ண விளக்குகள் சொர்ணம் போல் ஜொலித்தன. பூக்களை உதிர்த்த மரங்களுக்கு மறுவாழ்வு கொடுக்க நட்சத்திரங்கள் இறங்கி வந்து மரங்களின் கூந்தலில் குடி புகுந்தனவோ என எண்ணும்படி தோட்டத்து மரங்களில் சின்னச் சின்ன சீரியல் பல்புகள் சிரித்தன.

    தோட்டம் இருளும் ஒளியுமாய் ரம்மியம் காட்டியது. இங்கும் அங்கும் சிரித்தபடி எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்த ஸ்ரீயா இம்மியளவும் கம்மியாகாத அழகின் படைப்பாக இருந்தாள். அந்த அழகின் படைப்பு எதிர்காலத்தில் எத்தனை இதயத்தை உடைக்கப் போகிறதோ என்று எண்ணும்படியிருந்தது.

    மடிப்பு மடிப்பாக இடுப்பிலிருந்து சுற்றி பறக்கும்படி தைக்கப்பட்ட வெண்ணிற கவுனில் தேவதையை பிரதியெடுத்திருந்தாள். மற்ற பெண்களுக்கு பொறாமையில் சுருதியை குறைத்திருந்தாள்.

    ஸ்ரீயா ப்ளஸ் டூ படிக்கிறாள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். சிலருக்கு பருவம் மட்டும் அழகைத் தருவதில்லை. படிப்பு, பழகும் விதம், பாசம் பொங்கும் வளர்ப்பினால் உண்டான பிரகாசம் - இதெல்லாம் தனி அழகை கூடுதலாகத் தரும். அவளுடைய அழகு கூட அப்படி தரப்பட்டதைப் போல்தான் இருந்தது.

    சாமுந்திரிகாவும் விக்னேஷ்வரனும் ஸ்ரீயாவின் அழகைப் பார்த்து ரசித்தபடி நின்றிருந்தனர். சின்னவள் சுஜா, வெட்டுவதற்காக வைத்திருந்த கேக்கில் மெழுகுவர்த்திகளை ஒட்ட வைத்துக் கொண்டிருந்தாள்.

    ஸ்ரீயா... உன்னோட ஃபிரண்ட்ஸெல்லாம் வந்தாச்சுன்னா ஆரம்பிச்சுடலாமே? சாமுந்திரிகா சொல்ல ஸ்ரீயாவின் விழிகள் யாரையோ தேடின.

    ஏய்...ரீனா...ப்ரவீண் இன்னும் வரலையே? என பக்கத்தில் நின்ற ரீனாவிடம் கிசுகிசுத்தாள்.

    ஸ்ரீயா...யாருக்காக வெயிட் பண்றே?

    அம்மா...ப்ரவீண் இன்னும் வரலை. அதான்... வாசல் கேட் வரை ஓடிய அவள் பார்வையில் எதிர்பார்ப்பை மீறிய ஏதோ ஒன்று தெரிவதை தெளிவாகவே உணர முடிந்தது சாமுந்திரிகாவால்.

    ப்ரவீண் அவளுடைய வகுப்பு தலைவன். உடன் படிப்பவன்.

    அடுத்த சில நிமிடங்களில் கேட் அருகே பைக் சத்தம். நிறுத்திவிட்டு கம்பீரமாக இறங்கி வந்தான் ப்ரவீண். பருவ வயதில் அடி எடுத்து வைக்கும் ஆணுக்குரிய அத்தனை அலைபாய்தலும் உடலிலும் உள்ளத்திலும் அடங்கிக் கிடப்பதை சிரிப்பும் ஸ்டைலான நடையுமே உணர்த்தின.

    உடையலங்காரம் மதிப்பாக எடைபோட வைத்தது. அவனைக் கண்டதுமே தோழிகளும் தோழர்களும் உற்சாகக் குரல் கொடுத்து வரவேற்றனர்.

    வாப்பா...உனக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கோம். ஆளாளுக்கு சொல்ல ப்ரவீணின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்து புருவங்கள் உயர்ந்தது. மெல்ல தோள்களை குலுக்கியவன் அய்யோ...என்ன இன்னைக்கு இவ்வளவு அழகாயிருக்கே? என்று பாராட்டினான்.

    ஸ்ரீயா வெட்கத்தை மறைத்தவண்ணம் தாங்க் யூ என்றாள். பார்ட்டி தொடங்கியது.

    மெழுகுவர்த்திகள் ஒளி தந்தன. ஏனோ வலிப்பதைப் போல் அழுதன. சிரித்துக் கொண்டே அழும் சிவாஜி கணேசனை நினைவுபடுத்தின. மெழுகு வர்த்தியை அணைப்பது ஏதோ பெரிய சாதனையைப் போல் கரவொலி.

    ஹேப்பி பர்த்டே டூ யூ என கோரஸ் பாடல். குதூகல சிரிப்பு. ஸ்ரீயா கேக் வெட்டினாள். முதலில் சாமுந்திரிகாவிற்கு கொடுத்தாள். மகள் ஊட்டிய கேக்கை சுவைத்த சாமுந்திரிகாவின் முகத்தில் மகிழ்ச்சியின் அலைகள்.

    ஸ்ரீயாவை அணைத்து முத்தமிட்டாள். ஸ்ரீயா விக்னேஷ்வரனுக்கும் கேக் ஊட்டினாள். அடுத்து தன் தங்கை சுஜாவிற்கும் ஊட்டினாள். நண்பர்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்ய - கேக் துண்டங்களை தட்டில்வைத்து அனைவருக்கும் கொடுத்தாள்.

    நண்பர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினர்.

    விருந்து பரிமாறப்பட்டது. அனைவரும் நின்றபடியே பேசி சிரித்து கலாட்டாவாக சாப்பிட்டனர்.

    ஸ்ரீயாவின் வகுப்பு தோழன் தோழிகள் மட்டுமே என்பதால் சமையலை சாமுந்திரிகா தானே செய்திருந்தாள்.

    ஏய்... சூப்பர் போ! உங்கம்மா ரொம்ப அருமையா சமைச்சிருக்காங்க.

    உங்கம்மா சமைச்சாங்களா...? நம்பவே முடியலைப்பா, ரொம்ப டேஸ்ட். சூப்பர்.

    சாமுந்திரிகாவை அனைவரும் பாராட்டினார்கள்.

    ஸ்ரீயா உங்கம்மா ரொம்ப அழகுடி. பார்த்தா உனக்கு அம்மா மாதிரியே தெரியலை. அக்கா மாதிரி இருக்காங்க.

    கருநீல வண்ண பட்டுப்புடவையில் தேவதை போல நின்றிருந்த இந்த அம்மாவைப் பார்க்க பார்க்க ஸ்ரீயாவிற்கு பெருமையாக இருந்தது.

    சாமுந்திரிகா மிகவும் எளிமையாக இருப்பாள். அவளை வற்புறுத்தி பட்டும் நகையும் அணிய வைத்தது ஸ்ரீயாவும் சுஜாவும்தான். தலை நிறைய ஜாதி மல்லியும் கழுத்தை ஒட்டிய பளீரிடும் நெக்லஸும் அம்மாவை கல்யாண பெண்ணைப் போல் காட்டியது.

    யேய்...இவங்கம்மாவை சாதாரணமாக நினைக்காதே. அருமையா பாட்டுகூட பாடுவாங்க.

    எவளோ ஒருத்தி போட்டுக் கொடுக்க - ஸ்ரீயாவின் தோழிகள் சாமுந்திரிகாவை சூழ்ந்து கொண்டனர்.

    ஆன்ட்டி...ஒரு பாட்டுப் பாடுங்க...ப்ளீஸ்...

    சாமுந்திரிகா எந்த பிகுவும் பண்ணிக் கொள்ளாமல் புன்னகை ததும்ப

    ‘பூப்போல உன் புன்னகையில்

    பொன் உலகினைக் கண்டேனம்மா..’ என்ற பழைய சிவாஜி பாடலை இனிமையாகப் பாடினாள். பாடல் முடியும் வரை ஒருவர்கூட சாப்பிட வில்லை.

    பாடி முடித்ததும் ஸ்ரீயாவும் சுஜாவும் கண்கலங்க சாமுந்திரிகாவைக் கட்டிக் கொண்டனர். அவர்களுக்காகவே அம்மா அந்த பாடலை தேர்ந்தெடுத்துப் பாடியதாகவே உள்ளம் நெகிழ்ந்தனர். விக்னேஷ்வரனின் கண்களும் கலங்கிவிட்டன.

    பார்ட்டி முடிந்து அனைவரும் சென்ற பின்பு ஸ்ரீயாவும், சுஜாவும் அம்மாவை கட்டியணைத்து முத்தமிட்டனர்.

    அம்மா...பர்த்டே என்னமோ எனக்குத்தான். ஆனா... இன்னைக்கு ஸ்டார் நீதான். என் ஃப்ரண்ட்ஸ் எப்படிப் பாராட்டினாங்க தெரியுமா? உன்னைப் பார்த்தா எனக்கு அம்மா மாதிரி தெரியலையாம். அக்கா மாதிரி தெரியுதாம்.

    அப்படியா...அப்போ நாளையிலிருந்து உங்கம்மாவுக்கு யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போ... சொல்லிவிட்டு விக்னேஷ்வரன் பெரிதாக சிரித்தார்.

    சாமுந்திரிகா வெட்கப்பட்டாள். "உங்களுக்கெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1