Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyire Unaithedi
Uyire Unaithedi
Uyire Unaithedi
Ebook285 pages2 hours

Uyire Unaithedi

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

அவனது அலுவலகத்தில் உதவி பொறியாளராக புதிதாக ஒரு பெண் வேலைக்கு சேர்கிறாள். அவனிடம் அவள் பேசும் வார்த்தைகள்யாவும் சங்கேத வார்த்தைகளாக உள்ளன. அவனை அவள் தேடி வந்திருப்பதாக பாடல்களில் உணர்த்துகிறாள். யார் அவள்..? ஏன் அவனைத் தேடி வந்திருக்கிறாள்..?

A new girl hires as an Assistant Engineer in his Office. All the words she speaks to him are sarcastic words. She make him to feel that she joined for him in this office by a song. Who is she? Why is she looking for him?

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133805517
Uyire Unaithedi

Read more from Muthulakshmi Raghavan

Related to Uyire Unaithedi

Related ebooks

Reviews for Uyire Unaithedi

Rating: 3.625 out of 5 stars
3.5/5

8 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyire Unaithedi - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    உயிரே உன்னைத் தேடி

    Uyire Unaithedi

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    http://pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    1

    வெப்பம் தாக்காத குளுமை நிறைந்த பெங்களூரின் இதமான சீதோஷ்ணநிலை உடலைத் தொட்டுத் தொட்டு விளையாடியது. அதிகாலை நேர வெயில் சூடே இல்லாமல் சுகமாய் இருந்தது. பாதையோர வீடுகளில் இருந்த பூக்களின் நறுமணம் கலந்த காற்று சுவாசத்தில் நுழைந்து மனதில் ஓர் உற்சாகத்தை உண்டு பண்ணியது. பெங்களூரை 'கார்டன் சிட்டி' என்று அழைப்பது எத்தனை பொருத்தம் என்று தினமும் நினைத்துக் கொள்வதைப் போல் இன்றும் நினைத்துக் கொண்டான் கிரிதரன். மதுரையை கோவில் நகரம் என்று அழைப்பதுபோல் பெங்களூரை தோட்ட நகரம் என்று அழைப்பதனால் மதுரையில் தெருவுக்கு ஒரு கோவில் இருப்பதுபோல் பெங்களூர் சாலையோர மரங்கள் கூட பூங்கா போல காட்சி அளிக்கின்றதோ என்று எண்ணிக் கொண்டான் அவன்.

    தூரத்தில் அவன் பணிபுரிந்த 'டால்பின் கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனம் தெரிந்தது. ஒரு தேரைச் செலுத்துவது போல் காரை நிறுத்தி நிதானமாகச் செலுத்தியபடி பெங்களூர் சாலையோர மரங்களையும் பூக்களையும் ரசித்தபடி சென்று கொண்டிருந்த கிரிதரன் 'டால்பின் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற நியான் எழுத்துக்கள் பொன் நிறமாய் ஒளிர்ந்த சலவைக்கல் பதித்த அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் வெளிப்புற வாயிலின் உள்ளே காரைச் செலுத்தி பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திப் பூட்டிவிட்டு இறங்கி நடந்தான்..

    வரவேற்பில் அமர்ந்திருந்த பெண் சிவப்பு நிறத்தில் காபிக் கொட்டை கலர் பார்டரில் எம்பிராய்டரி வேலை செய்த சேலை உடுத்தியிருந்தாள். கையில்லாத சிவப்புக் கலர் ஜாக்கெட் அணிந்திருந்தாள். கூந்தலை கொண்டை யிட்டிருந்தாள். தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். பேசி முடித்து தொலைபேசியை வைத்து விட்டு நிமிர்ந்து கிரிதரனைப் பார்த்தவள் மலர்ச்சியாக.

    குட்மார்னிங் கிரி... என்றாள்.

    குட்மார்னிங் சரளா.. என்றபடி கிரிதரன் அவளைக் கடந்து உள்ளே சென்றான். அவன் சென்ற திசையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சரளாவின் முன்னால் சொடுக்குப் போட்டு அவளது கனவைத் கலைத்த பக்கத்து சீட் டெலிபோன் ஆபரேட்டர் ஜெனிஃபர்.

    தினமும்தானே இந்தப் பார்வை பார்க்கிற... விழுங்கி விடுவது போல் பார்ப்பதில் ஒன்றும் குறைச் சலில்லை. செயலில்தான் ஒன்றும் முன்னேற்றத்தைக் காணோம்.. ஒன்று சைட் அடிப்பதை நிறுத்து.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெனிஃபரின் வாயை மூடியை சரளா,

    சொல்லாதே.. என்னால் அதை நிறுத்த முடியாது.. என்றாள்.

    அப்படியென்றால் விசயத்தை உடைத்துவிடு...

    எதை உடைக்கச் சொல்லுகிறாய்..?

    உன் மனதில் உள்ள காதலை உடைத்துச் சொல்..

    ஒருவேளை கிரி மறுத்துவிட்டால்..? என் மனம் உடைந்து விடுமே..

    தோல்வியை எதிர்பார்த்து ஆரம்பிக்கும் செயல் வெற்றியில் முடியாது..

    வெற்றியில்தான் முடியணும்னு நினைப்பது நமது விருப்பம்.. ஆனால் அது வெற்றி பெறாவிட்டால்...? அதுதான் என் கேள்வி..

    அதனால்..?

    இப்போது பொறுமையாக இருக்க விரும்புகிறேன் ஜென்னி. காலம் வரும்.. அப்போது நினைத்துக் கொண்டி ருப்பதை வெளியில் சொல்வேன்..

    அது வரையில்..?

    தினமும் காலை வருகின்றது.. அலுவலகத்திற்கு கிரிதரனும் வருகிறார். எனக்கு இப்போதைக்கு இது போதும்..

    என்னமோ போடி.. பெயர்தான் பெத்த பெயர் 'ரிஷப்சனிஸ்ட்' அலட்ரா மாடர்ன் அலங்காரம். சிந்தனையில் பத்தாம்பசலி. எனக்கெல்லாம் இந்த சைவக் காதல் ஒத்து வராது..

    அதுதான் எனக்குத் தெரியுமே, சிரித்தாள் சரளா..

    இவை அனைத்தையும் அறிந்தும் அறியாதவன் போல் உள்ளே சென்றுவிட்ட கிரிதரன் எதிரில் தென்பட்ட சக ஊழியர்களிடம் 'குட்மார்னிங்' கை கொடுத்து பெற்றுக் கொண்டே 'கே.கிரிதரன், எம்.ஈ. சீஃப் என்ஜீனியர்' என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்த தன் அறைக் கதவைத் திறந்து உள்ளே சென்று அமர்ந்தான்.

    ஏ.ஸியின் இதமான குளிர் அறையில் நிரம்பியிருந்தது. சுவரில் ராதாகிருஷ்ணன் ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.

    இந்தக் கம்ப்யூட்டர் காலத்தில் மாடர்ன் ஆர்ட்ஸ் மாட்ட வேண்டிய சுவரில் ராதாகிருஷ்ணன் பெயிண் டிங்கா.. உன் ரசனை எனக்குப் புரியவில்லை.. அடிஷனல் சீஃப் என்ஜினியரும் அவனது நெருங்கிய நண்பனும் ஆன மகேஷ் இதைக் கூறியபோது கிரிதரன் சிரித்தான்.

    மகேஷ்.. ஓவியம் என்பது கண்ணுக்கும், மனதிற்கும் குளிர்ச்சியைக் கொடுக்க வேண்டும். இந்த ராதாகிருஷ்ணன் ஓவியம் என் மனதிற்கு அவை இரண்டையும் கொடுக்கும். மாடர்ன் ஆர்ட்ஸ் கொடுக்காது.

    ஆனால் மாடர்ன் ஆர்ட்ஸ் சிந்தனையைத் தூண்டுமே.

    அப்கோர்ஸ்.. பார்ப்பவங்க ஒவ்வொருவரும் இது என்ன என்று ஆராய்ந்து தம்தம் போக்கில் ஒரு அர்த்தத்தைக் கண்டு பிடிப்பதுதான் மாடர்ன் ஆர்ட்ஸ். அது சிந்தனையைத் தூண்டிவிடும் வல்லமை மிக்கது. நமது அறிவை கூராக்கும் அற்புதம் கொண்டது. பட்.. ஏற்கனவே சிந்தித்துச் சிந்தித்து சூடாகி இருக்கும் நம் மூளையை குளிர்விப்பது இந்த ராதாகிருஷ்ணன் ஓவியம்தான்.

    நண்பன் சொன்னதும் ராதாகிருஷ்ணன் ஓவியத்தைக் கூர்ந்து பார்த்த மகேஷிற்கு அது உண்மை என்று புரிந்தது.

    தலையைச் சுற்றித் தாவணி மறைத்திருக்க கணு காலின் மேலே பாவாடை சுற்றி சுழன்றாடும் விதத்தில் விரித்திருக்க பாதங்களில் கொலுசு அணிந்து இடுப்பில் வேலைப்பாடுகள் செய்த குடத்தை சுமந்துகொண்டு கண்களை கண்ணன் மேல் படற விட்டிருந்த ராதையின் மைவிழிகளில் கரை கடந்த காதல் தெரிந்தது. குழலூதிய வண்ணம் ராதையின் தோளோடு தோள் தொட்டு நின்றிருந்த கார்மேக வண்ணனின் கண்களில் ராதையின் காதலைப் புரிந்து கொண்ட கனிவு தெரிந்தது. சுற்றிலும் பசுக்களின் கூட்டம். அவர்கள் நின்றிருந்ததோ யமுனை நதிக்கரை ஓரம். சற்று விலகிச் சென்ற நதிநீரின் அலைகள் கண்முன் தெரிவதைப் போன்ற கற்பனைத் திறனுடன் அச்சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. அந்தி நேரத்துச் சூரியனின் கதிர்கள் பட்டு நதிநீர் ராதையின் கன்னச் சிவப்பு போல் வெட்கிச் சிவந்திருந்தது.

    கிரிதரனின் அறைக்கு அந்த ஓவியம் எழிலூட்டியது புரிய யு ஆர் ரியலி கிரேட் கிரி. நீ சொன்ன பின்னால் இந்த ஓவியத்தைப் பார்க்கும் போது இனம் புரியாத ஓர் அமைதி என் நெஞ்சில் நிறைகின்றது. இட் இஸ் ஸோ நைஸ், மகேஷ் பாராட்டுதலாய் அன்று கூறினான்.

    அன்று போல் இன்றும் முகம் மென்மையுற அந்த ராதாகிருஷ்ணன் ஓவியத்தைப் பார்த்தான் கிரி. என்றோ கேட்ட பாடல் வரிகள் செவிகளில் ஒலித்தன.

    'குழந்தைப் பருவம் முதல் ஒன்றாகச் சேர்ந்து

    கோகுல வீதிகளில் ஆடியதை மறந்து

    குழலின் ஓசை தரும் தேன்சுவையைப் பிரிந்து

    விழிகள் வேறு திசை மாறியே-

    கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள்

    ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்.'

    திரைப்படப் பாடல்தான். ஆனால் சிறு வயதில் அவன் அடிக்கடி பாடிய பாடல். அவனுடைய சிறு வயதில்.. அவனுடைய சிறு வயதுக் காதலியைப் பார்த்துப் பாடிய பாடல்.

    உன் குரல் எவ்வளவு அழகாயிருக்கு தெரியுமா கிரி.. பட்டுப் போன்ற குரல் என்றால் என்னவென்பது உன் பாட்டைக் கேட்பவர்களுக்குத்தான் புரியும், மெச்சும் குரலில் கூறி மகனை மார்போடு அணைத்து உச்சி முகர்வாள் உமாமகேஸ்வரி.. அவனது தாய்.. இசையில் பட்டம் வாங்கியவள். வாய் பாட்டிலும், வீணையிலும் மிகச் சிறந்த புலமை பெற்றவள்.

    தன் இசைக்கு ரசிகனாகவும் வாரிசாகவும் மகன் மட்டுமே இருக்கிறான் என்பதில் அவளுக்கு சிறிது மன வருத்தம் உண்டு. மகளிடம் போராடிப் பார்ப்பாள்.

    கவிதா... இங்கே வா.. வீணையை எடு.. நான் சொல்லித் தருகிறேன்..

    போங்கம்மா.. நீங்க வாசிக்கும்போதே கேட்க எனக்குப் போராக இருக்கும் இதில் நான் வாசிப்பதா..? ஐ டோன்ட் லைக் இட்.

    அடிப்பாவி.. இசையை விரும்பாத ஜீவன் எனக்கு மகளா..? கஷ்டமாக இருக்கிறது. கவி என் மகளாய் இருந்து கொண்டு நீ இப்படிப் பேசலாமா..? உமாமகேஸ்வரி கோபப்படுவாள்.

    ஏனென்றால் அவள் என் மகளாகவும் இருக்கிறாளே. அதனால்தான் அவள் இசையை விரும்பவில்லை, என்று மகளைத் தட்டிக் கொடுத்து போர்க்கொடி பிடிப்பார் செல்வநாயகம். உமாமகேஸ்வரியின் கணவர்.

    ஏங்க.. நீங்க பெரிய என்ஜினியர்ன்னா இசையை மட்டமாக நினைக்க வேண்டுமா..? ஐந்து அறிவு படைத்த தாவரங்கள் கூட இசையை ரசித்துத் தலையை ஆட்டும். நாம் மனிதர்கள்.. ஆறாவது அறிவும் உண்டு..

    உமா மகேஸ்வரி கோபமாய் மொழிவாள். செல்வ நாயகம் வம்புக்கு இழுப்பார்.

    அட.. தாவரங்கள் தலையாட்டி ரசிக்குமா..? எந்த இசையைக் கேட்டு..?

    காற்றின் இசையைக் கேட்டு..

    செல்வநாயகத்தின் கிண்டலுக்கு பதில் அளிக்க முடியாமல் உமா கணவனை முறைத்துக் கொண்டு நின்ற போது அன்று கிரிதரன் பட்டென்று பதில் கொடுத்தான். அவனது அன்னை ஆனந்தப்பட்டுப் போனாள்.

    பார்த்தீங்களா.. என் மகன் பதில் கொடுப்பதை..

    புரியுதில்ல.. மகளுக்கு இசை பிடிக்காவிட்டால் என்ன..? நம் மகனுக்குப் பிடிக்கிறதே.. அவனுக்கு கற்றுக் கொடு.. உன் இசைக்கு வாரிசாக்கு.. ஏன் கவிதாவை கஷ்டப்படுத்துகிற.. உமா பிடிக்காத விசயத்தை திணிப்பது சரியல்ல.. அதனால் இசையின் உயர்வு கூடப் போவதில்லை. புரிந்துகொள். கவிதாவை அவள் போக்கில் விடு. கிரிதரன் இசையை உயிராய் நினைக்கிறானே. அவனுக்குச் சொல்லிக் கொடு..

    உமா மகேஸ்வரி சொல்லிக் கொடுத்தாள். தாய்க்கு தலைமகனாய் இசையைக் கற்றுக் கொண்ட கிரிதரன் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று இன்ஜினியரிங் படிப்பையும் முடித்தான். அவனது தங்கை கவிதா பட்டப் படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்குப் பறந்து விட்டாள்.

    கவி.. மேலே என்ன படிக்கப் போகிற..?

    அம்மா.. இப்போதுதான் டிகிரி முடித்துவிட்டு நிம்மதியாய் 'அக்கடா' ன்னு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டி ருக்கிறேன். உங்களுக்கு அது பொறுக்கவில் லையா..? மேலே படிக்க எல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லை.. எரிந்து விழுந்தாள் கவிதா.

    உமா.. அவளை ஏன் டிஸ்டர்ப் பண்ணுகிற.. அடுத்த மாதமே யு.எஸ்.ஏ. போகப் போகிற பெண். நம் வீட்டில் இருக்கும்வரை என்ஜாய் பண்ணட்டுமே.. செல்வநாயகம் அமைதியாய் கூறினார்.

    என்ன.. அடுத்த மாதம் யு.எஸ்.ஏ போகப் போகிறாளா..?

    எதற்கு பதட்டப்படுகிற.. நம்ம ராமசுப்ரமணியம் அவருடைய மகனுக்கு நம்ம கவிதாவை பெண் கேட்கிறார். பையன் சாப்ட்வேர் இன்ஜினியர். யு.எஸ்.ஏவில் இருக் கிறான். இன்றைக்கு பெண் பார்த்து நிச்சயம் பண்ண வருகிறார்கள். அடுத்த இரு வாரங்களில் கல்யாணம். அடுத்த மாதம் கவிதா அவளுடைய கணவனுடன் யு.எஸ்.ஏ. பறந்து விடுவாள்..

    எல்லாமே முடிவு பண்ணிவிட்டீங்களா..? விரக்தியுடன் வினவினாள் உமா..

    ஆமாம்.. எப்போதோ முடிவு பண்ணிவிட்டேன்.. செல்வநாயகம் கூறினார்.

    என்னிடம் ஓர் வார்த்தை சொல்ல வேண்டுமென்று தோன்றவில்லையா..?

    அதுதான் இப்போது சொல்லிவிட்டேனே.. அமர்த்த லாய் கூறினார் செல்வநாயகம்.

    உமாமகேஸ்வரியை அனுதாபத்துடன் பார்த்தான் கிரிதரன். பெற்ற தாயின் உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

    இசையில் பட்டம் படித்தவள்.. மியுசிக் டீச்சராக பணி புரிந்த பள்ளியில் தன் அண்ணன் மகனை அழைத்துப் போவதற்காக வந்த செல்வநாயகம் அண்ணன் மகனின் கரங்களைப் பிடித்துக் கொண்டு வந்த உமா மகேஸ்வரியைப் பார்த்தார்.

    அதன்பின் தினமும் அண்ணன் மகனைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு மாலையில் அழைத்து வரும் பொறுப்பை வலிய ஏற்றுக் கொண்டார். செல்வநாயகத்தின் அண்ணன் அதிசயப்பட்டுப் போனார்.

    என்னடா இது.. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்குது.. வருடத்தில் ஒரு நாள் அவசரவேலை, கூட்டி வான்னு கெஞ்சினால் கூட ஆயிரம் பிகு செய்து கொண்டு போவாய். இப்போது என்ன அண்ணன் மகன் மேல் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது..?

    அது அண்ணன் மகன் மேல் பொழியும் பாசமில்லை. அண்ணன் மகனின் மியுசிக் டீச்சரின் மேல் பொழியும் காதல், அண்ணி இடக்காகக் கூறினாள்.

    அப்படிப்.. போடு சக்கை.. யாருடா அது..? அண்ணன் ஆவலாய் வினவ அண்ணி முறைத்தாள். மனைவியின் முறைப்பைக் கண்டு கொள்ளாமல் தம்பியிடம்,

    சொல்லுடா செல்வா.. காதலித்து மணம் முடிக்கும் திரில் உனக்காவது வாய்த்திருக்கிறதே.. என்னைப்பார். வீட்டில் பார்த்து வைத்தார்கள்ன்னு உன் அண்ணியின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு அவஸ்தைப்படுகிறேன். நீயாவது இதையெல்லாம் அனுபவி ராஜா அனுபவி.. என்று குதூகலமாய் கூறினார்.

    சொன்னது போலவே செல்வநாயகத்தின் அண்ணன் தோள் கொடுத்தார்.. உமாமகேஸ்வரியை நித்தமும் சந்தித்துக் காதலை உரைத்தார் செல்வநாயகம். கரைப்பார் கரைக்க கல்லும் கரைந்தது.

    பெண் கேட்டுப் போன போது உமாமகேஸ்வரியின் தனபாலன் முறைத்தார்.. பொன் விளையும் தஞ்சை பூமியின் வயல்களுக்குச் சொந்தக்காரர். அந்தக் கிராமத்தின் பெரிய பண்ணையார். தங்கையை சீரும் சிறப்புமாய் போற்றி வளர்த்தவர். தகப்பன் சிறு வயதிலேயே இறந்து விட தாயார் ராஜம்மாளின் கண்காணிப்பில் தகப்பனுக்கு தகப்பனாய் அண்ணனுக்கு அண்ணனாய் கண்ணுக்குள் வைத்துக் காத்து வளர்த்தவர்.

    தங்கைக்கு மணம் முடிக்காமல் தான் மண முடிப்பதா என்று தங்கைக்கு அவர் உள்ளூரில் மாப்பிள்ளை தேட செல்வநாயகம் தான்தான் மாப்பிள்ளை என்று முன்னே வந்து நின்றார்.

    காதலை விரும்பாத கண்டிப்பான தனபாலனுடன் 'காதல் வாழ்க' என்று காதலின் புகழ்பாடும் செல்வ நாயகத்தின் அண்ணன் தில்லைநாயகம் மோதினார்.

    ஏங்க.. சின்னவர்கள் ஆசைப்படுகிறார்கள்.. நாம் பெரியவர்கள் சேர்த்து வைப்போம்..

    சின்னவங்க தவறு செய்தால் பெரியவங்க திருத்தணும்.. துணை போகக் கூடாது..

    காதல் தவறு இல்லையே..

    அது உங்கள் கருத்து.. பெரியவங்க பண்ணி வைக்கும் கல்யாணம்தான் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

    இது உங்கள் கருத்து. தவறான கருத்து..

    எதிரும், புதிருமாய் இருவரின் அண்ணன்மார்களும் சொற்போர் புரிந்தனர். இருவரும் தங்கள் உடன் பிறப்புகளின் எதிர்கால வாழ்க்கைக்காக வாதாடினார்கள். அந்த சொற்போர்தான் பின்னால் வந்த எத்தனைக் குடும்பப் போர்களுக்கு வித்திட்டு விட்டது?

    கிரிதரன் பெருமூச்சுவிட்டான். அன்று உமாமகேஸ்வரி காதலில் ஜெயித்திருக்கலாம்.. வாழ்க்கையில்..?

    விடை தெரியாத வினாக்களை வைக்கும் வாழ்க்கையில் இன்று வரை கிரிதரனுக்கு இதற்கான விடை கிடைக்கவேயில்லை. வாழ்க்கைப் பயணத்தின் பாதையில் மலர் விரிப்பின் கீழ் கண்ணுக்குத் தெரியாத வாழ்நாள் முழுவதும் நெஞ்சை நெருடும் முட்கள்தான் எத்தனை யெத்தனை..?

    2

    கிரிதரன் சுவரிலிருந்த ராதாகிருஷ்ணன் ஓவியத்தை மீண்டும் பார்த்தான்.. 'ராதாகிருஷ்ணன்' என்றாலே 'காதல்' என்ற வார்த்தை தான் எல்லோரின் மனதிலும் உடனே தோன்றும். தோழமை கலந்த சிறுவயது பாசம் என்பது யாருக்குமே இதுவரை தோன்றியதில்லை.

    ராதா கிருஷ்ணனின் பால்ய காலத்துத் தோழி. சிறு பிராயத்திலிருந்தே உடன் வளர்ந்தவள். கிருஷ்ணன் மேல் அளவு கடந்த அன்பை வைத்தவள். அவனது கானத்தின் ரசிகை.

    'கானம்'கிரிதரனின் கண்கள் எங்கோ மிதந்தன..

    பாடும்மா.. நீ பாடுவதைக் கேட்கும்போது அந்த சரஸ்வதியே வீணையுடன் கீழே இறங்கி வந்து விட்டது போல இருக்கு.. பாடு...

    உமா... காபி கொடு.. அலுவலகத்திலிருந்து வந்த செல்வநாயகம் அதட்டுவார்.

    இருங்க.. இப்ப வந்து விடுகிறேன்..

    ச்சு.. உன்னோடு இது பெரிய தொல்லை உமா.. எப்பப் பார்த்தாலும் வீணையும் கையுமாய் உட்கார்ந்து விடுகிறாய்.. அலுத்துக் களைத்து வரும் மனிதனுக்கு ஒரு காபி கொடுக்க நாதியிருக்கா இந்த வீட்டில்..?

    இந்தா செல்வா காபி..

    செல்வநாயகம் பேசி வாய் மூடுமுன் அவர் முன் காபிக் கோப்பையை நீட்டுவாள் தமிழ்செல்வி. செல்வநாயகத்தின் அண்ணி..

    நீங்க ஏன் அண்ணி சிரமப்படுகிறீங்க... அவள் கொண்டு வரமாட்டாளா..?

    "என்னவோ.. உனக்குக் காபி கொடுப்பது மட்டும் தான் எனக்குச் சிரமம் என்பது போல் பேசுகிறாயே.. நாள்

    Enjoying the preview?
    Page 1 of 1