Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உறவுகள் சிறுகதை
உறவுகள் சிறுகதை
உறவுகள் சிறுகதை
Ebook115 pages39 minutes

உறவுகள் சிறுகதை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராகவி மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது கீழ் அறையில் அப்பா கணேசமூர்த்தி அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
 "சொல்லு மங்கை பையனை உனக்குப் பிடிச்சிருக்கா?" ராகவி இறங்குவதை நிறுத்தி படிகளிலேயே நின்றாள். அம்மாவின் குரல் காதில் கேட்டது.
 "போட்டோவில பையன் நல்லாத்தான் இருக்கான்."
 "நேர்ல இன்னும் நல்லா இருப்பான். நம்ம அந்தஸ்துக்கு ஏத்த இடம். இன்னும் சொல்லப்போனா நம்மைவிட பல மடங்கு பணத்துல உள்ளவங்க. சொந்தமா பல பிசினஸ் செய்யறாங்க. ஒரே பையன். ஏகபோக சொத்து. அன்னைக்கு நம்ம கம்பெனியோட ஆண்டு விழாவுக்கு இந்தப் பையனோட அப்பா வந்திருந்தார். உனக்குக்கூட அறிமுகப்படுத்தி வச்சேனே... மதுசூதனன்னு ஞாபகம் இருக்கா?"
 "இல்லையே... ஞாபகம் இல்லையே..."
 "பலபேர் வந்து போனதால உனக்கு ஞாபகம் இருந்திருக்காது. அவரோட சேர்ந்து அவரோட பையனும் வந்திருந்தான். நம்ம ராகவியைப் பார்த்ததும் ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சுன்னு சொன்னார். தன்னோட பையனுக்கு ராகவியைப் பெண் கேட்டார். எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்றதுன்னே தெரியலை. திக்குமுக்காடிப் போய்ட்டேன். உண்மையில் அவரோட அந்தஸ்துக்கு பெண் கொடுக்க எத்தனையோ பேர் இருக்கும்போது நம்மைப் பெண் தான்னு கேட்டதே ஏதோ நமக்கு பெரிய மரியாதை கொடுத்த மாதிரி இருந்தது. நாம பணக்காரங்கதான். ஆனா... நம்மைவிடப் பல மடங்கு பணத்துல உயர்ந்தவங்க நம்மை மதிச்சு மரியாதை தரும்போது உடம்பு சிலிர்த்துப் போகுது."
 கணேசமூர்த்தியின் குரல் மிகவும் நெகிழ்ச்சியாக ஒலித்ததுஅந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அம்மாவின் குரலிலும் ஒலித்தது.
 "உண்மைதாங்க. ராகவி அதிர்ஷ்டக்காரிதான். இல்லாட்டி இப்படிப்பட்ட இடம் கிடைக்குமா? ஆமா... நீங்க அவருக்கு என்ன பதில் சொன்னீங்க? சம்மதம்னு சொன்னீங்களா?"
 "சொல்லலை..."
 "ஏன் சொல்லிட வேண்டியதுதானே. இதுல யோசிக்க எதுவும் இல்லையே."
 "உன்னைக் கேட்காம நான் எப்படிச் சம்மதம் சொல்ல முடியும்?"
 அம்மா எதுவும் பேசாதது மெளனத்தால் புரிந்தது.
 "என்ன பேச்சைக் காணோம்?"
 "பெருமையா இருக்குங்க. கல்யாணம் ஆன நாள்லேர்ந்து என்னை எதிலேயும் ஒதுக்கி வைக்காம எல்லா உரிமைகளும் கொடுத்து மதிச்சு நீங்க வாழறது எனக்குப் பெருமையா இருக்கு. எதுவும் இல்லாதவ நான். ஆனா நீங்க பணக்காரர். பணத்திமிரோ, ஆணவமோ துளிகூட இல்லாம என்னை சரிசமமா எப்படி நடத்த முடியுது உங்களால? சீர்செனத்தியோட வர்ற பொண்ணுங்களையே தினம் பத்துரூபா சம்பாதிக்கிறவன் கூட என்ன பாடு படுத்தறான்? அடிமையா நடத்தறான்? ஆனா... என்னை நீங்க..."
 அம்மாவின் குரல் தழுதழுத்தது.
 "ஏய்... என்ன இது? புருஷன் பொண்டாட்டிக்குள்ள பேசற பேச்சா இது? நீ இல்லாம என்னால எந்த விஷயத்திலேயும் முடிவெடுக்க முடியாது. என்னோட ஒவ்வொரு அசைவும் உன்னாலதான். பணமா முக்கியம்? உன்னைப் பார்த்ததுமே என் கண்ணுக்கு உன் அழகுதான் தெரிஞ்சது. அதனாலதான் கட்டினா உன்னைத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மங்கை... அன்னைக்கு உன்னை முதன்முதலா பார்த்தப்ப நீ எப்படி இருந்தியோ அதேமாதிரிதான் இப்பவும் இருக்கே. பொண்ணைக் கட்டிக்கொடுக்கற வயசுல நீயே பொண்ணு மாதிரி இருக்கே. உன்னைப் பார்க்கும்போது என்னோட வயசே எனக்கு மறந்து போகுது தெரியுமா?ப்பா காதலோடு பேசினார். அம்மா பேசிய அடுத்த வார்த்தையிலிருந்து அம்மா அப்பாவின் அணைப்பிற்குள் இருக்கிறாள் என்பது புரிந்தது.
 அங்கு நிற்க தர்மசங்கடமாக இருந்தது ராகவிக்கு. ஆனாலும் அவளால் நகரமுடியவில்லை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 7, 2023
ISBN9798223463337
உறவுகள் சிறுகதை

Read more from R.Sumathi

Related to உறவுகள் சிறுகதை

Related ebooks

Related categories

Reviews for உறவுகள் சிறுகதை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உறவுகள் சிறுகதை - R.Sumathi

    1

    மங்கையை இந்த நிலையில் சந்திப்போம் என்று சரவணன் கொஞ்சமும் நினைக்கவில்லை.

    அவளை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று எத்தனை நாட்கள் துடித்திருக்கிறார்.

    அந்தத் துடிப்பு காலப்போக்கில் குறைந்து தனக்காக விதிக்கப்பட்ட வாழ்க்கையில் ஐக்கியமாகி அதில் ஏற்பட்ட அவலங்களை ஜீரணித்து... ஒரு கட்டத்தில் மங்கையை மறந்து போனது உண்மை.

    ஆனால் –

    வாழ்க்கையில் மங்கை என்ற பெயர் ஏதோ சில தருணங்களில் காதில் வந்து மோதும்போது இதயத்தின் துடிப்பை இன்னதென்று சொல்லிவிட முடியாது.

    காபியை ஆற்றியபடியே சமையலறை ஜன்னல் வழியே பார்த்தார்.

    கூடத்து சோபாவில் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு முகத்தில் சோகம் சுமந்து அமர்ந்திருந்தாள்.

    இருபது வயதில் தளரப் பின்னிய பின்னலும், தழுவிய சேலையுமாய் ஓவியமாய் வளையவரும் அவளுடைய அழகு கண்களில் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

    இளமை நகர்ந்துவிட்ட முதுமையின் ஆரம்ப ஆட்சியில் இருந்தாள். நரையோடிய கேசம் கொண்டையாகியிருந்தது. கலைந்திருந்த முடிக் கற்றைகள் காதோரம் தொங்கின.

    அவள் அணிந்திருந்த வைரத்தோடும், மூக்குத்தியும் டியூப் லைட் வெளிச்சத்தில் சுடர்விட்டுக் கொண்டிருந்தன.

    சோகமயமான அழகான ஓவியம் போன்றிருந்தாள்.

    அவரால் இன்னும் நம்பவே முடியவில்லை.

    மங்கைதானா அவள்?

    அவளை சந்தித்த சூழ்நிலையை இப்பொழுது நினைத்தாலும் அவருடைய தேகம் சிலிர்த்தது.

    கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு காலார நடந்தபோது ஆள் நடமாட்டம் குறைந்த அந்தப் பகுதியில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தோடு சென்ற பெண்மணியைக் கண்டு துடித்து பதறி ஓடி அவளுடைய கையைப்பற்றி இழுத்தபோதுதான் அதிர்ந்தார்.

    அது மங்கை!

    இதோ அழைத்து வந்து அவளைத் தன் வீட்டு சோபாவில் உட்கார வைத்திருக்கிறார்.

    அவளுக்காக காபி தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

    அவருடைய நினைவுகள் நொடியில் கடந்த காலத்தையும் கடந்து போன காதலையும் எண்ணி எண்ணி மீண்டது. இன்றைக்கு அவளை எந்தக் கடற்கரையில் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினாரோ அன்றைக்கும் அதே கடற்கரையில்தான் அவளைத் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றினார்.

    அன்றைக்கு அவளைக் காப்பாற்றியபோது அவருடைய நெஞ்சில் காதல் சுரந்தது. இருவருக்கும் உறவு ஏற்பட்டது. ஒருவரைவிட்டு ஒருவர் வாழமுடியாது என்ற நிலை உருவானது.

    ஆனால் –

    இன்று?

    அவள் தற்கொலைக்கு முயற்சிக்கும்போதெல்லாம் காப்பாற்றுபவர் அவராகத்தான் இருக்கிறார்.

    அது ஏன்?

    அவருக்குப் புரியவில்லை.

    உண்மையைச் சொன்னால் அவர் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்த அந்தக் கணத்தில் மங்கையைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தார்.

    எங்கே இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ?

    என சிந்தனை செய்து கொண்டிருந்தார்; அதேநேரம் அவள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வாள் என்றோ, அவளைத் தான் மறுபடியும் காப்பாற்றுவோம் என்றோ அவர் சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை.

    அன்றைக்கு அவள் தற்கொலை செய்துகொள்ளப் போனது அவருடைய காதலைப் பெற.

    அவரை ஒருதலையாய் காதலித்தவள் அந்தக் காதலை அவன் ஏற்காது போகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அவராலேயே காப்பாற்றப்பட்டு ஒருதலைக் காதலை இருதலைக் காதலாக்கி...

    காதல் வானில் சிறகடித்துப் பறந்து...

    விதியால் தண்டிக்கப்பட்டு ஆளுக்கொரு பக்கம் திசைமாறிய பறவைகளாய் பறந்து...

    இதோ இன்று சிறகொடிந்த பறவைகளாக சந்தித்திருக்கின்றனர்.

    நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு காபியுடன் வெளியே வந்தார்.

    அவருடைய நினைவுகள் எதையெதையெல்லாம் சிந்தித்ததோ அதே நினைவுகள் மங்கையையும் ஆட்கொண்டன. நினைவுகளின் பிடியில் அமர்ந்திருந்தாள் அவள்.

    மங்கை...

    அவளுக்கு எதிரே அமர்ந்தார் சரவணன்.

    நிமிர்ந்தாள் மங்கை.

    காபி சாப்பிடு.

    மறுக்காமல் வாங்கி மெளனனமாகப் பருகினாள்.

    அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்தார் அவர்.

    காபியைப் பருகிவிட்டு கோப்பையை வைத்தாள்.

    அமைதி நிலவியது. என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஒருகாலத்தில் ஓயாது பேசியவர்கள்.

    அவர்தான் அழைத்தார்.

    மறுபடி நிமிர்ந்தாள்.

    அவருடைய கண்களை சந்திக்கும் தைரியம் இல்லாமல் தலை குனிந்தாள்.

    மங்கை... இத்தனை வயசாகியும் தற்கொலை செய்துக்கற அந்த எண்ணம் இன்னும் உன்னைவிட்டுப் போகலையா?

    அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

    உண்மைதான். அவள் பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறாள். முதன்முதலாக பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததற்காக அப்பா திட்டினாரென்று...

    ஆனால் பிறகு எதிலும் தோல்வியடையாமல் மேலே மேலே படித்துப் பட்டங்கள் வாங்கியபோது அதை நினைத்து வெட்கப்பட்டாள்.

    அடுத்து –

    சரவணன் தன்னைக் காதலிக்கவில்லை என்று.

    சரவணன் கிடைத்ததும் அந்த முயற்சிக்காக பெருமைப் பட்டாள்.

    பிறகு -

    இன்னொருவனுக்கு மனம் பேசியபோது…

    அவனையே மணக்க நேரிட்டு அவனுடைய காதலில் தன் காதலை மறந்தபோது அந்தத் தற்கொலை முயற்சியை நினைத்து ‘அன்றே செத்திருந்தால் இவனுடைய அன்பு கிடைக்காமல் போயிருக்கும்’ என்று வருத்தப்பட்டிருக்கிறாள்.

    இன்று தற்கொலை செய்ய முயற்சி செய்து பிழைத்தவள் சரவணனைக் கண்டு திகைத்தாள்.

    பேசத் தோன்றாது அமர்ந்திருந்தாள்.

    "மங்கை... அன்னைக்கு நான் உன்னை காதலிக்கணும்னு தற்கொலை செய்துக்கப் போனே? நான் உன்னைக் காதலிச்சேன். ஆனா... நம்ம காதல் நிறைவேற்லை.

    ப்ச்! அதெல்லாம் பழைய கதை. நீ பணக்கார இடத்துல வாழ்க்கைப்பட்டேன்னு கேள்விப்பட்டேன். உன் கணவர் தங்கமான மனுஷன்னும் கேள்விப்பட்டேன். உன்னை ரொம்ப நல்லா வச்சிருக்கார்ன்னு சொல்லிக்கிட்டாங்க. சந்தோஷப் பட்டேன், எங்க இருந்தாலும் நீ மகிழ்ச்சியா வாழணும்னு நினைச்சுக்கிட்டேன். நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைச்சிருக்கும் போது நீ இந்த முடிவுக்கு வர என்ன காரணம்? என்றார்.

    மங்கையின் விழிகளில் கண்ணீர் சுரந்தது. மெல்ல உதடுகளைத் திறந்து பேசினாள்.

    என் கணவரோட அன்பு எனக்கு இனிமே கிடைக்காதுங்கற சூழ்நிலை அமைஞ்சதால...!

    துணுக்குற்றார் சரவணன்.

    அப்படி ஒரு சூழ்நிலை அமைய என்ன காரணம் மங்கை?

    காதல். காதல்ங்கற உணர்வு மேல நான் வச்சிருந்த பக்தி. வைராக்கியம். இதுதான்.

    புரியலை மங்கை. இந்த வயசுல காதல் உனக்கு பிரச்சனையா அமைஞ்சுதா?

    "சின்ன

    Enjoying the preview?
    Page 1 of 1