Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பாச மலர்கள்
பாச மலர்கள்
பாச மலர்கள்
Ebook157 pages56 minutes

பாச மலர்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சாரதா குளித்து விட்டுப் புத்துணர்வுடன் வந்தபோது ப்ரவீண் கோவிலிலிருந்து வந்திருந்தான். கையோடு கொண்டு போயிருந்த பையிலிருந்து தேங்காய் மூடி பழம் பூ என எடுத்து மனைவியின் கையில் கொடுத்துக் கொண்டிருந்தான்.
சாரதாவைப் பார்த்ததும் அவனுடைய முகம் பூவாக மலர்ந்தது.
“அக்கா கிளம்பிட்டியா?”
“கிளம்பிக்கிட்டேயிருக்கேன்” என்றாள் சாரதா புன்னகையுடன்.
“அக்கா உனக்காகக் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துட்டு வர்றேன். முதன் முதலா வேலையில சேரப் போறே. அதுவும் சாதாரண உத்யோகம் இல்லை. கலெக்டர் உத்யோகம். நினைச்சாலே உடம்பு சிலிர்க்குது. எவ்வளவு பெரிய பதவி. இப்படி ஒரு வேலை பார்ப்பேன்னு யாராவது நினைச்சுப் பார்த்திருப்போமா? இப்ப மட்டும் நம்ம அம்மாவும் அப்பாவும் இருந்தா எப்படியிருந்திருக்கும்?”
அவன் கேட்க அவள் விரக்தியாகச் சிரித்தாள்.
“நான் இந்த நிலைமைக்கு நிச்சயம் வந்திருக்க முடியாது. என்னை நாலு சுவத்துக்குள்ள அடைச்சுப் போட்டிருப்பாங்க.”
“ப்ச்! அக்கா... இந்த நல்ல நேரத்துல ஏன் பழசைசெயல்லாம் கிளறிக்கிட்டு. சந்தோஷமா கிளம்புக்கா. மஞ்சு அக்காவுக்கு விபூதி குங்குமம் கொடு.”
“மஞ்சு... பானுவும், பாக்யாவும் எழுந்துட்டாங்களா?” என்றாள்.
“இல்லை இன்னும்நீ சீக்கிரம் எழுந்திருக்கிறது பெரிசில்லை. குழந்தைங்களை சீக்கிரம் எழுப்பிப் படிக்க வை. காலையில் எழுந்து படிக்கிற பழக்கம் அதுங்களுக்கு வரணும். ப்ரவீணுக்கு இன்னைக்கு டியூட்டி உண்டா?”
“இல்லை சித்தி. இன்னைக்கு அவருக்கு லீவு தான்.”
“சரி பசங்களை எழுப்பி படிக்க வை.”
“சரி சித்தி...” மஞ்சு நகர்ந்ததும் சாரதா மறுபடியும் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்.
நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றி ஏதோ ஒரு சிந்தனையிலிருந்து விடுபடுவதைப் போல் தலையை உதறிக் கொண்டாள்.
மஞ்சு சாப்பிட அழைத்தபோது பானுவும் பாக்யாவும் சாப்பாட்டு மேசையின் முன் மடிப்பு கலையாத சீருடையில் பளிச்சென்றிருந்தனர்.
“ஆன்ட்டி... குட்மார்னிங்”
இருவரும் கோரஸாக கூறினர்.
“குட்மார்னிங்” என அவர்களுடைய தோளில் செல்லமாகத் தட்டியபடியே இருவருக்கும் இடையே அமர்ந்தாள்.
“ஆன்ட்டி... நீங்க இன்னைக்கு கலெக்டர் வேலையில சேரப் போறீங்களா?” பானு ஆர்வமாகக் கேட்டாள்.
பானு மூத்தவள். ஐந்தாம் வகுப்பு படிப்பவள்.
“ஆமா. எப்படிக் கண்டுபிடிச்சே?”
“அம்மா சொன்னாங்க.”
“ஆன்ட்டி... நாங்களும் உங்களை மாதிரியே கலெக்டராவோமா?” பானு ஏக்கமானதொரு குரலில் கேட்டாள்.
“ஓ... ஷ்யூர். நல்லா படிச்சா ஆன்ட்டி போலவே கெலெக்டராகலாம்.”
சாரதா அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வந்து விட்டனர். அவளை வாழ்த்திப் பேசினர்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
பாச மலர்கள்

Read more from ஆர்.சுமதி

Related to பாச மலர்கள்

Related ebooks

Reviews for பாச மலர்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பாச மலர்கள் - ஆர்.சுமதி

    1

    தாவணிப் பருவத்தில் கண்ட கனவு இன்று நிறைவேறப்போகிறது. இதயமும் கடிகார முட்களைப் போல் துடிக்கிறது.

    இன்றையிலிருந்து நான் புதிய மனுஷி. என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. என் பிறப்பிற்கு ஒரு மகத்துவம் இருக்கிறது.

    மற்றவர்களின் மனதில் நான் மரியாதைக்குரியவள்.

    இலேசான மகிழ்ச்சி காலை நேர பனியைப் போல் மனதில் படர்ந்தது.

    வெகுமதிக்காகவே அவளுடைய சிந்தனைகள் இன்றைய பொழுதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க பொழுது புலர்ந்தது.

    ஐந்தரைக்கே எழுந்து விட்டாள். அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது அடுக்களையில் சத்தம் கேட்டது.

    மஞ்சு எழுந்து விட்டாள்.

    மஞ்சுவை நினைத்ததுமே மனம் நெகிழ்ந்தது.

    மஞ்சு எத்தனை நல்லவள்? எப்படி வந்தாளோ அப்படியேதான் இருக்கிறாள். ஒரு முக சுளிப்பு, ஒரு எரிச்சலான பார்வை, ஏளனப் பேச்சு... இவை எதையும் அவள் முகத்தில் பார்த்தது கிடையாது.

    களையான முகம் கனிவான பேச்சு இதமான பார்வை இவை தான் மஞ்சு,

    மஞ்சு இருக்கும் இடத்தில் வேறொருத்தி இருந்தால் என்னால் இங்கே இருக்க முடியுமா?

    சமையலறையின் ஜன்னல் வழியே சாரதாவைப் பார்த்துவிட்ட மஞ்சு மிக்ஸியின் ஜாடியில் சட்னிக்காக தேங்காய் பூவைக் கொட்டியபடியே உற்சாகமாக குரல் கொடுத்தாள்.

    சித்தி... எழுந்திட்டீங்களா? என்ன ரொம்ப சீக்கிரம் எழுந்திட்டீங்க? சாரதா சமையலறையின் உள்ளே வந்தாள்.

    ப்ச்... தூக்கமே வரலை... எப்படா பொழுது விடியும்னு இருந்தது.

    எனக்கே தூக்கம் வரலைன்னா பாருங்களேன். ஏதோ டென்ஷனாயிருந்தது. நானாவது பரவாயில்லை. உங்க தம்பி ராத்திரியெல்லாம் சுத்தமா தூங்கலை. உங்களைப்பத்தியே பேசிக்கிட்டிருந்தார். அவருக்கு மகிழ்ச்சி தாங்கலை. நீங்க இன்னைக்கு ஐ.ஏ.எஸ் ஆபீசரா பதவி ஏற்கப் போறீங்கங்கறதை நினைச்சு நினைச்சு அவருக்கு ரொம்பப் பெருமை. ஏதோ அவரே வேலையில சேரப் போற மாதிரி ஒரே டென்ஷன். அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்குப் போயிருக்கார். உங்க பேர்ல அர்ச்சனை செய்ய.

    மஞ்சுவின் முகத்தில் பெருமிதம் குடிகொண்டது.

    சாரதா கண்களில் கண்ணீர் துளிர்க்க மஞ்சுவைப் பார்த்தாள்.

    மஞ்சு... என்னோட இந்த முன்னேற்றத்துக்கு முழுக் காரணம் பிரவீண் தான். அவன் மட்டும் இல்லைன்னா நான் என்ன ஆயிருப்பேன். உடைஞ்சுபோன எனக்கு ஒரு உருவம் கொடுத்ததோடயில்லாம இன்னைக்கு ஒளிவீசிப் பிரகாசிக்க விட்டவன் அவன் தான். என் வாழ்க்கையில இழக்கக் கூடாததையெல்லாம் இழந்தேன். ஆனா... நான் செய்த பாக்கியம் தான் எனக்கு இப்படி ஒரு தம்பி கிடைச்சிருக்கான். பத்தாங்கிளாஸோட படிப்பறிவை இழந்த என்னோட பேருக்கு பின்னால இன்னைக்கு இத்தனை பட்டம்... இதெல்லாம் யாரால்? என் தம்பியால? அவன் மட்டும் இல்லை, நீ எங்கிருந்தோ வந்தவ. என்னை உன் கூடப் பிறந்தவளா நினைச்சுப் பாசத்தைக் காட்டறியே...

    சாரதாவின் கண்கள் கலங்கிய நீரை வழிய விட்டன.

    மஞ்சு சாரதாவின் கரங்களைப் பற்றிக்கொண்டாள்.

    சித்தி... என்னயிது? கண்கலங்கிட்டு. நாங்க என்ன பெரிசா செய்துட்டோம்? நீங்க படிச்சீங்க. முன்னேறியிருக்கீங்க.

    இல்லே மஞ்சு. என் தம்பி ஒண்ணும் பணக்காரன் இல்லை. சாதாரண பஸ் டிரைவர். அந்த வருமானத்துல குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டு என்னைப் படிக்க வச்சிருக்கான்னா உண்மையிலேயே அவனுக்கு பெரிய மனசு. ஊர் உலகத்துல கூடப்பிறந்தவங்களுக்கு பத்துக் காசு கொடுத்தாலே பொண்டாட்டி சண்டை போடுறாங்க. ஆனா... நீ இந்தக் குடும்பத்துக் கஷ்டத்தையெல்லாம் காட்டாம சிக்கனமா குடும்பம் நடத்தி என்னோட உயர்வுக்கு காரணமாயிருந்திருக்கே. நீ மட்டும் எனக்கு எதுவும் செய்யக்கூடாதுன்னு சராசரி பொண்ணுங்க மாதிரி சண்டைப் போட்டிருந்தா இன்னைக்கு நான் யார் வீட்டிலேயாவது பத்து பாத்திரம் தேய்ச்சு வயித்தைக் கழுவ நேர்ந்திருக்கும். உன்னால எனக்கு இன்னைக்கு எவ்வளவு மதிப்பு?

    என்ன சித்தி... என்னைப்போய் புகழ்ந்துக்கிட்டு. நீங்க போய் பல் தேய்ச்சுட்டு வாங்க. சூடா காபி கலக்கறேன்.

    ஒ.கே. என்ன டிபன் இன்னைக்கு?

    இன்னைக்கு வழக்கமான இட்லி. உங்களுக்குப் பிடிச்ச புதினா சட்னி. ஸ்பெஷலா அவல் கேசரி. அப்புறம் விஜிடபிள் கிச்சடி...

    ஏய்... எதுக்கு சிரமப்படறே? விருந்தாளியா வரப் போறாங்க.

    இது விருந்தாளிக்கு இல்லை. உங்களுக்கு. இன்னைக்கு உங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாள் இல்லையா? அதனாலதான். மனசு நிறையும்போது வயிறும் நிறையணும். மஞ்சு சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

    அப்படின்னா... நானும் சமையல்ல உனக்கு ஹெல்ப் பண்றேன்.

    வேண்டாம். நீங்க யாரு? கலெக்டரம்மா. நீங்க போய் சமைக்கிறதா? இந்தக் கை எத்தனையோ ஃபைல்களை புரட்ட வேண்டிய கை. இந்தக் கை கரண்டி பிடிக்கலாமா?

    மஞ்சு அன்பான அதிகாரத்துடன் சாரதாவைக் குளியலறை இருந்த பக்கம் இழுத்துக் கொண்டு விட்டாள். தொடர்ந்து அவளுடைய சிரிப்பு வீடெங்கும் எதிரொலிக்க சாரதாவின் சிரிப்பும் அதில் கலந்தது.

    2

    சாரதா குளித்து விட்டுப் புத்துணர்வுடன் வந்தபோது ப்ரவீண் கோவிலிலிருந்து வந்திருந்தான். கையோடு கொண்டு போயிருந்த பையிலிருந்து தேங்காய் மூடி பழம் பூ என எடுத்து மனைவியின் கையில் கொடுத்துக் கொண்டிருந்தான்.

    சாரதாவைப் பார்த்ததும் அவனுடைய முகம் பூவாக மலர்ந்தது.

    அக்கா கிளம்பிட்டியா?

    கிளம்பிக்கிட்டேயிருக்கேன் என்றாள் சாரதா புன்னகையுடன்.

    அக்கா உனக்காகக் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்துட்டு வர்றேன். முதன் முதலா வேலையில சேரப் போறே. அதுவும் சாதாரண உத்யோகம் இல்லை. கலெக்டர் உத்யோகம். நினைச்சாலே உடம்பு சிலிர்க்குது. எவ்வளவு பெரிய பதவி. இப்படி ஒரு வேலை பார்ப்பேன்னு யாராவது நினைச்சுப் பார்த்திருப்போமா? இப்ப மட்டும் நம்ம அம்மாவும் அப்பாவும் இருந்தா எப்படியிருந்திருக்கும்?

    அவன் கேட்க அவள் விரக்தியாகச் சிரித்தாள்.

    நான் இந்த நிலைமைக்கு நிச்சயம் வந்திருக்க முடியாது. என்னை நாலு சுவத்துக்குள்ள அடைச்சுப் போட்டிருப்பாங்க.

    ப்ச்! அக்கா... இந்த நல்ல நேரத்துல ஏன் பழசைசெயல்லாம் கிளறிக்கிட்டு. சந்தோஷமா கிளம்புக்கா. மஞ்சு அக்காவுக்கு விபூதி குங்குமம் கொடு.

    மஞ்சு... பானுவும், பாக்யாவும் எழுந்துட்டாங்களா? என்றாள்.

    இல்லை இன்னும்.

    நீ சீக்கிரம் எழுந்திருக்கிறது பெரிசில்லை. குழந்தைங்களை சீக்கிரம் எழுப்பிப் படிக்க வை. காலையில் எழுந்து படிக்கிற பழக்கம் அதுங்களுக்கு வரணும். ப்ரவீணுக்கு இன்னைக்கு டியூட்டி உண்டா?

    இல்லை சித்தி. இன்னைக்கு அவருக்கு லீவு தான்.

    சரி பசங்களை எழுப்பி படிக்க வை.

    சரி சித்தி... மஞ்சு நகர்ந்ததும் சாரதா மறுபடியும் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்தாள்.

    நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றி ஏதோ ஒரு சிந்தனையிலிருந்து விடுபடுவதைப் போல் தலையை உதறிக் கொண்டாள்.

    மஞ்சு சாப்பிட அழைத்தபோது பானுவும் பாக்யாவும் சாப்பாட்டு மேசையின் முன் மடிப்பு கலையாத சீருடையில் பளிச்சென்றிருந்தனர்.

    ஆன்ட்டி... குட்மார்னிங்

    இருவரும் கோரஸாக கூறினர்.

    குட்மார்னிங் என அவர்களுடைய தோளில் செல்லமாகத் தட்டியபடியே இருவருக்கும் இடையே அமர்ந்தாள்.

    ஆன்ட்டி... நீங்க இன்னைக்கு கலெக்டர் வேலையில சேரப் போறீங்களா? பானு ஆர்வமாகக் கேட்டாள்.

    பானு மூத்தவள். ஐந்தாம் வகுப்பு படிப்பவள்.

    ஆமா. எப்படிக் கண்டுபிடிச்சே?

    அம்மா சொன்னாங்க.

    ஆன்ட்டி... நாங்களும் உங்களை மாதிரியே கலெக்டராவோமா? பானு ஏக்கமானதொரு குரலில் கேட்டாள்.

    ஓ... ஷ்யூர். நல்லா படிச்சா ஆன்ட்டி போலவே கெலெக்டராகலாம்.

    சாரதா அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டாள். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வந்து விட்டனர். அவளை வாழ்த்திப் பேசினர்.

    பலர் இனிப்புக் கொடுத்தனர். சரியாக ஒன்பதரைக்கெல்லாம் வாசலில் கார் வந்து நின்றது.

    ஓட்டுனர் இறங்கி கதவைத் திறந்துவிட்டு மரியாதையுடன் நின்றான்.

    சாரதா எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினாள். கார் வாசலைக் கடந்து கம்பீரமாகச் சென்றது.

    மஞ்சு பிரவீணைப் பார்த்தாள்.

    அவனுடைய கண்கள் கலங்கிவிட்டிருந்தன.

    பானுவும் பாக்யாவும் கையசைத்தபடி நின்றிருந்தனர்.

    கலங்கிய விழிகளுடன் உள்ளே வந்தான் ப்ரவீண். பானுவும் பாக்யாவும் சாரதாவைப் பற்றியே பேசியபடி சில நிமிடங்களில் வாசலில் வந்து நின்ற பள்ளிப் பேருந்தில் ஏறிச் சென்றனர்.

    அவர்களைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு மஞ்சு உள்ளே வந்தபோது ப்ரவீண் படுக்கையறையில் சாய்ந்து படுத்துக் கைகளைத் தலையில் கோர்த்து கண்களை மூடியிருந்தான்.

    அவனுடைய சிந்தனையெல்லாம் சாரதாவைப் பற்றியே சுழலும் என அவளுக்குத் தெரியும். அவளும் சாரதாவின் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தபடியே மதிய சமையலுக்கு வேண்டிய காய்களை நறுக்கத் தொடங்கினாள்.

    3

    அடுத்தநாள் பரீட்சைக்கு படிக்கச்சென்ற ப்ரவீண் வீட்டின் முன்பாக கார் நிற்பதை பார்த்துவிட்டு, பின் வாசல் வழியாக உள்ளே சென்றான்.

    Enjoying the preview?
    Page 1 of 1