Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhiyaatha Uravugal
Azhiyaatha Uravugal
Azhiyaatha Uravugal
Ebook132 pages42 minutes

Azhiyaatha Uravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466954
Azhiyaatha Uravugal

Read more from Vijaya Chandran

Related to Azhiyaatha Uravugal

Related ebooks

Reviews for Azhiyaatha Uravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhiyaatha Uravugal - Vijaya Chandran

    1

    காலைக்கதிரவன் உதிக்க துடித்துக் கொண்டிருந்தது. பரிமளம் எழுந்து வாசலைப் பெருக்கி கோலம் போட்டுக் குளித்து தலைவாரி பூஜையறையில் பூஜை முடித்து வந்தாள். காலை மணி ஏழு.

    போர்வையால் கால், தலை தெரியாமல் போர்த்திப்படுத்திருந்த முத்தழகியை எழுப்பினாள்.

    அம்மா ஞாயிற்றுக்கிழமை லீவுதானே மெதுவா எழுந்திரிக்கிறேனே! ஏம்மா எழுப்பறே?

    என்ன கிழமையா இருந்தாலும் காலையில் வெயில் ஏறும் வரை இப்படி தூங்கக்கூடாதுடி. புகுந்த வீட்டுக்குப் போனாலும் இதே பழக்கம்தான் வரும். பெத்தவள் என் தலைதான் உருளும்

    அம்மா கற்பனை பண்ணிப் பேசாதே. எப்பவும் அதே பல்லவிதானா.

    நான் இப்பச் சொல்வது தவறாக தெரியும். போகப்போக நல்லதாகத் தெரியும்

    அம்மாவின் பேச்சு கோபம் உண்டாக்க எழுந்தாள்.

    போர்வையை விலக்கி முகம் அலம்பி அம்மா கொடுத்த டீயை குடித்தபடி வெளியில் வந்தாள். வெயில் அந்தி காலை நேரத்திலும் சுள்ளென்று அடித்தது.

    ஸ்ரீபுரம் கிராம வயல்வெளிகள் சூழ்ந்து பச்சைப்பசேலென இருக்கும். காவிரித்தண்ணீர் பாய்கிறது. விவசாயமே அவர்களுக்கு வாழ்வாதாரம். காலையில் விவசாய வேலைக்கு மண்வெட்டி கலப்பை போன்ற கருவிகளை சுமந்து போவது கண்களுக்கு பார்க்க அழகாக இருக்கும்.

    முத்தழகி

    என்னம்மா?

    லீவுதானே வயலுக்குப் போகலாம். அப்பாவுக்கு சாப்பாடு கொடுத்திட்டு வரலாம்.

    போகலாம்மா வாய்க்காலில் குளிச்சு விளையாண்டு பல மாதங்கள் ஆகிடுச்சு. இன்று அங்கதான் குளியல் என்றாள் சந்தோஷமாய்.

    சாப்பிட்டு தூக்குச்சட்டியை கையில் பிடித்தபடி நடந்தார்கள்.

    முத்தழகி எப்பவும் சுடிதார், மாடர்ன் டிரெஸ் போடுறே. டீச்சர் வேலைக்கு மட்டும் போகலைன்னா சேலையை மறந்திடுவே

    அம்மா சேலை கட்டுறது நம்ம பண்பாடு. என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் சேலைகட்டுவதை தமிழ்ப்பெண்கள் மறக்கமாட்டார்கள்.

    இடையில் பக்கத்து வீட்டு மாரியம்மா குரல் கொடுக்க பேச்சு நின்றது.

    வயலுக்கு போறீங்களா?

    ஆமாம் மாரியம்மா.

    கூறிவிட்டு நடந்தார்கள்.

    வாய்க்காலில் தண்ணீர் சலசலத்தது. மாமரம், தென்னை மர நிழலும் குளு குளுவென இருந்தது.

    வயலில் கிருஷ்ணமூர்த்தி மாடுகலப்பையில் பூட்டிக்கொண்டிருந்தார்.

    அப்பா நான் ஓட்டறேன்

    வேண்டாம் நீ பெண். இதெல்லாம் செய்யக்கூடாது

    அப்பா கர்நாடக மாநிலத்தில் பெண்கள் தான் ஏர் உழவு ஓட்டுறாங்க

    இன்னொரு நாளைக்கு ஓட்டலாம். குளிச்சுட்டுப்போ

    காலையிலும் நேரமில்லை. புறப்பட்டுப் போக நேரம் சரியாயிருக்கு. மாலையிலும் அப்படித்தான் இவளுக்கு எங்க நேரம் இருக்குங்க

    பரவாயில்லை டீச்சர் வேலை புனிதமான வேலை. பெண்களுக்கு ஏற்ற வேலை. அதை குறையா மதிப்பு போடாதே

    குழம்பு சாப்பாடு சாப்பிட்டு முடித்ததும் தயிரில் கரைத்து பச்சை மிளகாயை கடித்தபடியே நீராகாரத்தை குடித்தார்.

    முத்தழகி ரசித்துக் கொண்டிருந்தாள்.

    என்ன முத்தழகி அப்படி பார்க்கிறே?

    நீங்க சாப்பிடுறதைத்தான்

    வயலில் வேலை செய்கிறவர்கள் இப்படி சாப்பிட்டாதான் களைப்பு வராமல் வேலை செய்ய முடியும்.

    அது உண்மைதான் பா

    சாப்பிட்டு முடித்து ஏர் உழப்போய் விட்டார் கிருஷ்ணமூர்த்தி.

    இரண்டு பேரும் அருகில் உள்ள கொட்டகையில் உட்கார்ந்திருந்தனர் வேடிக்கை பார்த்தபடி.

    அம்மா

    என்ன முத்தழகி?

    வாய்க்காலில் குளிக்கணும்னு ஆசையா இருக்கும்மா

    குளிக்கிறது உடம்புக்கு நல்லதுதான். புதுத்தண்ணீர் சேரலைன்னா சளி பிடிக்கும். ஜுரம் வரும்.

    அம்மா இந்த உடம்பு காவிரி தண்ணீரில் ஊறி வளர்ந்த உடம்பு. எனக்கு சேரும்மா

    போய்க்குளி நான் கரையில் உட்கார்ந்துக்கிறேன்

    எழுந்து போனாள்.

    முதலிலேயே தோழிகள் சிலர் குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் சந்தோஷமாக இறங்கினாள். தண்ணீரில் நீச்சலடிக்க, கண்ணமூச்சி விளையாடியதில் நேரம் போனதே தெரியவில்லை.

    முத்தழகி மணி என்ன தெரியுமா?

    தெரியும்மா. இரண்டுதானே? கொஞ்ச நேரம்மா

    இப்படியே விளையாடியவள் மூன்று மணிக்கு கரையேறினாள். ஈரத்துணியுடன் தண்ணீர் சொட்ட சொட்ட -

    கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு நடந்தனர்.

    சுந்தரும், புனிதாவும் பைக்கில் வந்து இறங்கினார்கள்.

    மோர் கலக்கிக் கொடுத்தாள் முத்தழகி.

    சுந்தர் அப்பாவை பார்க்கப் போகிறேன் என்று புனிதாவை வீட்டிலேயே விட்டுப் போனான்.

    முத்தழகி டிரெஸ் மாற்றிக்கொண்டு அம்மாவுடன் வீட்டு வேலை செய்தாள். மணியைப்பார்த்தாள். அவள் காபி கலந்து கொண்டிருந்தபோது வயலில் இருந்து அப்பாவும், மகனும் வந்து விட்டார்கள்.

    அவர்களும் காபி சாப்பிட்டனர்.

    முத்தழகி

    என்னங்கண்ணா?

    நீ மாற்றல் கேட்டியிருக்கியாம் சோலையூருக்கு

    யார் சொன்னா அண்ணா?

    உன் தோழி கவிதாதான்

    ஆமாம் தினமும் நாற்பது மைல் பஸ்லயே போய்ட்டு வர முடியுமா? அலுப்பாயிருக்கு. அதான் பக்கத்திலே சேலையூர் இருக்கு. அங்க மாற்றல் வாங்கிக்கன்னு சொன்னாங்க. அதான் சரின்னுட்டேன். அந்த ஊரைப்பத்தியும் சொன்னாங்க. அதையும் கேள்விப்பட்டு சம்மதத்துடன் வாங்கிக்கிட்டேன். நம்ம ஊரில் இருந்து ஆறு ரூபாய் பஸ் டிக்கெட் போக, வர பன்னிரெண்டு ரூபாய் செலவு, அரைமணி நேரத்தில் வந்திடலாம்ல வீட்டுக்கு?

    அதெல்லாம் கேட்கிறதுக்கும், பேசறதுக்கும் நல்லாயிருக்கும். மோசமான ஊர். ஒரு பிள்ளை படிக்கலைன்னு அடிச்சு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சரை கத்தியால் குத்திக் கொலை செய்த ஊர். ஒரு வாத்தியாரை கையை வெட்டுனாங்களாம். அங்க வேலைக்குப் போக வேண்டாம் நீ. வேலையை வேண்டாம்னு நீ எழுதிக் கொடுத்திடு

    அண்ணன் பேசியதைக் கேட்டு அம்மாவும் அதையேதான் சொன்னாள். அண்ணா, அம்மா, அரசு உத்யோகம் கிடைக்காமல் லட்சக்கணக்கில் பணத்தை வெச்சுக்கிட்டு நாயா அலைகிற காலத்தில் என்னுடைய திறமையால் பரீட்சை எழுதி பாஸ் பண்ணி பத்துக்காசு செலவில்லாமல் வாங்கின வேலை. வேலையை மட்டும் விடுன்னு சொல்லிடாதீங்க என்னோட அணுகுமுறையால் அந்த ஊரை மாற்றிக் காட்டுவேன். என் தோழிங்ககிட்ட சவால் விட்டுட்டு வந்திருக்கேன். போகப்போகப் பாருங்க

    முத்தழகி பேச வாயடைத்து நின்றான்.

    எப்ப போவ அங்கே?

    திங்கட்கிழமை போகணும்மா

    சரி உன்னுடைய ஆசையை ஏன் தடுக்கணும்? ஆண்டன் மேல பாரத்தை போட்டுட்டு போடி

    இதுவரை அமைதியாக இருந்த அப்பா பரிமளம் சொன்னதைப் போலவே சொன்னார்.

    சரி முத்தழகி பார்த்து நடந்துக்க

    சுந்தரும், புனிதாவும் புறப்பட்டனர்.

    பரிமளாவும் கிருஷ்ணமூர்த்தியும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.

    முத்தழகி அவர்களையே பார்த்து நின்றாள்.

    2

    பள்ளி செல்லும் நாள் வந்தது.

    சோலையூர் புறப்பட்டாள் முத்தழகி.

    எந்த இடையூறும் வரக்கூடாதுன்னு தெய்வத்தை வேண்டிக்கடி என்றாள் தாய்.

    முத்தழகி பேருந்து நிறுத்தம் வந்தாள்.

    தோழி புவனேஸ்வரி நின்று கொண்டிருந்தாள்.

    "முத்தழகி இன்றைக்கு எங்கக்கா ஊருக்கு போகிறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1