Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iravukkum Pagalukkum Ini Enna Velai
Iravukkum Pagalukkum Ini Enna Velai
Iravukkum Pagalukkum Ini Enna Velai
Ebook144 pages47 minutes

Iravukkum Pagalukkum Ini Enna Velai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Vijaya Chandran
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466954
Iravukkum Pagalukkum Ini Enna Velai

Read more from Vijaya Chandran

Related to Iravukkum Pagalukkum Ini Enna Velai

Related ebooks

Related categories

Reviews for Iravukkum Pagalukkum Ini Enna Velai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iravukkum Pagalukkum Ini Enna Velai - Vijaya Chandran

    1

    காலை மணி எட்டு மினி பேருந்தை விட்டு இறங்கி நடந்தாள் கல்யாணி கையில் வைத்துள்ள முகவரியைத் தேடினாள். நந்தா இன்டர் நேஷனல் டெக்டைல்ஸ் கட்டிடம் கண்ணில் பட்டது. நிறைய மாடிகளைக் கொண்டு பளிச்சென இருந்தது. பெரிய சுற்றுப்புற சுவர் உள்ளே வகைவகையான செடிகள் மரங்கள் கண்ணில் பட்டன கண்களுக்கு இதமாக இருந்தது.

    கேட்டில் கூர்க்கா நின்றிருந்தான்.

    இண்டர்வியூ கடிதத்தைக் காட்டினாள்.

    வாங்கிப் பார்த்தவன் கல்யாணியை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான்.

    கல்யாணி கண்டுக் கொள்ளவில்லை.

    எழுதிவிட்டு கடிதத்தைக் கையில் கொடுத்தான்.

    நேராகப் போங்க உள்ளே அலுவலகம் வடக்குப் பார்க்க காபி கலரில் மார்பில் போட்டிருக்கும் நிறைய பேர் இருப்பாங்க அங்கே வெயிட் பண்ணுங்க முதலாளி பத்து நிமிடத்தில் வந்துடுவாங்க.

    தலையாட்டிக்கொண்டு நடந்தாள்.

    நந்தா இன்டர்நேஷனல் டெக்டைல்ஸ் கரூர் நகரில் பெரிய கைத்தறி ஏற்றுமதி நிறுவனம் போர்வைகள் டவல்கள் மற்ற அயிட்டங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

    கண்டுபிடித்துப் போனாள் அமர்ந்தாள் நிறைய ஆண்களும் பெண்களும் அழகாகவும் விதவிதமான பெண்க்ள ஆடைகள் அணிந்தும் நுனி நாக்கில் ஆங்கிலம் இராதா இரான பேசியபடி அமர்ந்திருந்தனர். கல்யாணி தமிழ் பாராம்பரியப்படி சேலை அணிந்து கொண்டையில் மல்லிகை சரத்தை வைத்து அழகுச் சிலையாக இருந்தாள் மற்ற பெண்கள் கல்யாணியை வேடிக்கை பார்த்தனர்.

    அவளுக்கே மிகவும் சங்கடமாக இருந்தது. என்னை ஏன் அப்படி பார்க்கிறார்கள். மாடர்ன் டிரஸ் போடாததால் தானோ என நினைத்துக் - கொண்டாள் அருகில் உள்ள குரோட்டன் செடிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...

    ஒருவர் வந்து இன்டர்வியூ, கடிதங்களை வாங்கி உள்ளே போனான்.

    இரண்டு போஸ்டிங் தான் காலியாம் அதற்கு இத்தன பேர் போட்டி யாருக்கு கிடைக்குதோ என்று பேசியது கல்யாணியின் காதில் விழுந்தது.

    ஒவ்வொருவராக அழைத்தனர் போய்விட்டு வந்தனர் கல்யாணியை அழைக்கும்போது மணி ஒன்று. மதியம் ஐம்பத்தி ஒன்றாவதாக உள்ளே போனாள்...

    முதலாளி எளிமையாக மூக்குக் கண்ணாடி அணிந்த நரைத்த முடிக்கு டை அடித்து இளமைத்துள்ளலுடன் அமர்ந்திருந்தார்.

    உள்ளே போனதும் குட்மார்னிங் - என்று கை தூக்கி சொன்னாள் கல்யாணி

    அவரும் குட்மார்னிங் என்று பதிலுக்கு சொன்னார். படிப்பு ஆவணங்களைக் கொடுத்தாள் வாங்கிக் கொண்டார். பார்த்தார்.

    எம்.பி.ஏ. படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் சாட்டர்டு அக்கவுண்டன்ட் படித்த ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

    முகவரியை பார்த்தார்.

    கி.கல்யாணி

    DIO கிருஷ்ணன்,

    பழமாபுரம் என்கிற கரூர் மாவட்டம் முகவரியை படித்தவுடன் உள்ளம் பூரித்து நம்ப ஊர்ப் பெண்ணாச்சே எப்படி இருந்தாலும் ஊர் நம்ப ஊராக இருந்தாலும் எளிமையான தோற்றம் அழகான உடைகள் அடக்கம் பணிவு எல்லாமே முகத்திலே தெரிகிறது. இவளுக்கே இந்த வேலையை கொடுத்து விடலாம் என்கிற முடிவில் இருந்தார்.

    சில கேள்விகளைக் கேட்டார் டக்கென பதில் சொன்னாள்.

    கல்யாணி நீங்க நாளைக்கே பணியில் சேரலாம் கொஞ்ச நேரத்தில் ஆர்டரை கையில் வாங்கிக்கொண்டு போங்க என்றார்.

    கல்யாணியின் முகத்தில் பிரகாசமான மகிழ்ச்சி நம்பி வேண்டின தெய்வங்கள் துணைக்கு வந்து வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டது என பெருமைப்பட்டாள்.

    வேலைக்கான ஆர்டர் வந்தது வாங்கிக் கொண்டாள்.

    கல்யாணி கோயம்புத்தூர் ரோட்டில் புன்னம் சத்திரத்தில் உள்ள ஹெட் ஆபிஸ் அங்கேதான் வேலை. ஊருக்கும் வேலை பார்க்கிற இடத்துக்கும் இரண்டு கி.மீ தான் போக வர சுலபமாக இருக்குமல்லவா.

    ரொம்ப நன்றிங்க சார் என்று கூறி வெளியே வந்தாள். நேராக பேருந்து பிடித்து வீட்டிற்கு வந்தாள் அப்பா கிருஷ்ணன் மட்டும் வீட்டில் இருந்தார்.

    ஏப்பா வேலை இல்லைங்கனா?

    இருந்துச்சு கல்யாணி சாயம் போட நூல் இல்லை இன்றைக்கு தண்ணீரில் ஊற வைச்சிருக்கோம் நாளைக்கு வேலை இருக்கு.

    அப்பா எனக்கு வேலை கிடைச்சிடுச்சுப்பா

    என்ன கல்யாணி சொல்றே.

    உண்மைதாங்கப்பா.

    வேலை, வேலைன்னு கம்பெனி கம்பெனியா சர்பிட்கேட்டை கையில் எடுத்து படிப்படியா ஏறினே பலபேரோட கைபட்டு சர்டிபிட்கேட் கிழிஞ்சு போயிடும் என்று பயந்து கிடந்தேன் நாம்ப கும்பிட்ட தெய்வம் வழிவிட்டுச்சு. தெய்வமாகிப் போன உன் அம்மா சந்தியா உனக்கு துணையா இருந்து வேலை வாங்கிக் கொடுத்திட்டா. உன் அம்மா இருந்திருந்தா என்னமா பூரிச்சுக் கிடப்பா அதைப் பார்க்க கொடுத்து வைக்கலை கல்யாணி அவளுக்கு.

    நல்ல மனதைப் படைச்சவன் ஆயுசு குறைச்சு படைச்சுட்டான் அம்மா போய் சேர்ந்திடுச்சுப்பா இனி நினைச்சு நினைச்சு வேதனைப்பட்டு என்ன செய்ய முடியும்.

    கண்ணீர் சிந்திய கிருஷ்ணனை சேலைத் தலைப்பால் துடைத்து விட்டாள். கொஞ்ச நேரம் வீடு மழை பெய்து ஓய்ந்ததைப் போல இருந்தது.

    கல்யாணி.

    என்னங்கப்பா.

    வேலைக்கு எப்ப சாயண்ட் பண்ணனும்.

    நாளைக்கே.

    சம்பளம் என்ன தருவாங்க.

    பத்தாயிரம். அந்த கம்பெனிக்கு மேனேஜர் நான்தான்.

    பெரிய பதவியில்ல சமாளிச்சுடுவியா?

    சமாளிச்சுடுவேன் அதற்குத்தானே படிச்சேன்.

    பரவாயில்லை புத்திசாலிம்மா நீ.

    எல்லாம் உங்களோட வளர்ப்புதானே இந்த அளவுக்கு புத்திசாலியாக்கியது.

    கல்யாணி நன் சம்பாரிச்சாலும் அதை சரிவர குடும்ப வண்டியை ஓட்டினாளே உன் அம்மா சந்தியா? அவதான் காரணம்.

    வெளியில் கல்லூரிப் பேருந்து நின்றது.

    காதம்பரியும் - கலாவதியும் சிட்டுக்குருவிபோல பறந்து வந்தனர்...

    அக்கா வேலை கிடைச்சுடுமா இந்தக் கம்பெனியிலாவது கோரஸாக இரண்டு பேரும் கேட்டார்கள்.

    வேலை கிடைச்சுடுச்சுடி.

    என்னக்கா சொல்றே?.

    ஆமான்டி என்று கூறி வேலைக்கான ஆர்டரை கையில் கொடுத்தாள்.

    படித்துப் பார்த்தார்கள்.

    காதம்பரி அக்கா வாயில் போட கல்கண்டு இல்லையே என்றாள் கலாவதி

    ஏய் போடி சர்க்கரை டப்பாவில் இருக்கிற சர்க்கரையை கல்கண்டா நினைச்சு போட்டு விடுவோம்.

    ஆமாம்க்கா நல்லா ஐடியா? இருவரும் சர்க்கரையை வாயில் போட்டனர்.

    கல்யாணி பூரித்துப் போனாள்.

    அக்கா நீ வேலைக்குப் போறியே நந்தா இன்டர்நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் ஓனர் சுந்தரபாண்டியன் நம்ப பழமாபுரம் தான். சொந்த ஊர் மூன்று தலைமுறைக்கே முன்பே பிழைக்க இலங்கை போயிட்டாங்களாம் அங்கே சம்பாரிச்சு பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்க வந்துட்டார். நம்ப ஊர் பகவதியம்மன் கோயில் விழாவுக்கு செலவே அவர்தான் ஏத்துக்கிறாராம்.

    யார்டி சொன்னா இதெல்லாம்

    எங்க கல்லூரி பேராசிரியர் திலகம் மேடத்திற்கு ஒன்றுவிட்ட மாமாவாம். அவர் அடிக்கடி சொல்வாங்க. அத்தோடு பழமாபுரம் என்றாலே எந்த உதவியும் செய்வார். உனக்கு கூட ஊர்ப்பெயரை பார்த்ததும் வேலை கொடுத்திருக்கார் என்று நினைக்கிறேன்.

    அப்படியும் இருக்கலாம். எப்படியோ வேலை கிடைச்சிருக்கு அதுவே சந்தோஷம்.

    என்றும் இல்லாத அளவுக்கு வீடே கலகலப்பாக இருந்தது. கண்ணாடி பிரேமுக்குள் சிரித்த முகத்துடன் வேலையுடன் இருக்கும் சந்தியாவை கிருஷ்ணன் தொட்டு வணங்கினார்.

    அம்மா என்றுமே துணையாக எங்க கூட இரும்மா என்று மூன்று பிள்ளைகளும் வணங்கினார்கள்.

    2

    காலை எழுந்து காலைக்கடன்களை முடித்து குளித்து பூஜை அறையில் பூஜையை முடித்து விட்டு ஒவ்வொரு தங்கையாக எழுப்பினாள் கல்யாணி

    எழுந்து ஆளுக்கொரு வேலையைச் செய்து கல்லூரிக்கு புறப்பட்டனர்.

    "கல்யாணி வேலைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1