Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உனக்கே உயிரானேன்
உனக்கே உயிரானேன்
உனக்கே உயிரானேன்
Ebook129 pages45 minutes

உனக்கே உயிரானேன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யாழினி வீட்டிற்கு வந்ததும் மகிழ்ச்சிப் பெருக்கிலும் ஒரு விதப் படபடப்பிலும் மிதி வண்டியை நிறுத்தி இறங்கினாள். பூட்டக் கூடத் தோன்றாமல் உள்ளே ஓடினாள்.
“அம்மா...”
அம்மா துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்தாள். மகளின் உற்சாகமான குரல் கேட்டுத் திரும்பினாள்.
“என்னடி... இன்டர்வியூ நல்லா இருந்ததா? நல்லா பதில் சொன்னியா? வேலை கிடைக்க அறிகுறி ஏதாவது இருந்ததா?” என்றாள்.
வியர்த்துக் கொட்ட நின்றிருந்தாள் யாழினி. அருகே வந்த அம்மா தன் முந்தானையால் அவளுடைய முகத்தைத் துடைத்தாள்.
“அறிகுறி என்னம்மா? வேலையே கிடைச்சாச்சு” என்றாள்.
“என்னடி சொல்றே?”
“உண்மையாத்தாம்மா சொல்றேன். எனக்குத்தான் வேலை கிடைச்சிருக்கு.”
“ரொம்ப சந்தோஷமா இருக்குடி. எனக்குத் தெரியும். உனக்குத்தான் இந்த வேலைன்னு. ஆனால்... வேலை கிடைக்கிறது பெரிய விஷயம் இல்லைடி, ஒரு பொண்ணுக்கு. நல்ல வாழ்க்கை கிடைக்கணும். எவ்வளவோ படிச்சுட்டுப் பெரிய பதவியில இருக்கற பெண்களுக்கு நல்லவாழ்க்கை கிடைக்கலைடி. உனக்கு வேலை கிடைச்சது எனக்கு சந்தோஷம் தான். ஆனா... நான் மனசுல நினைக்கிற மாதிரி உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ எந்தக் கவலையும் இல்லாம இங்க இருக்கற மாதிரியே சந்தோஷமா வாழணும். அதான் என் ஆசை...”
“அம்மா... வேலை கிடைச்சதும் கல்யாணப் பேச்சை எடுத்திட்டியா?காலா காலத்துல உனக்கொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும். நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை அமையணும். எனக்குக் கிடைச்சமாதிரி ஒரு வாழ்க்கையை இல்லை. மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத ஒரு இடமா உனக்குப் பார்க்கணும்.”
“இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்? கொஞ்ச நாளைக்கு என்னை சுதந்திரமா இருக்கவிடு.”
கல்யாணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் யாழினி சாப்பிட்டு விட்டு எழுந்தாள். நிம்மதியாக சற்று நேரம் படுத்தாள். மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. காலையில் பள்ளிக்கு செல்வதைப் பற்றியே நினைவு சுழன்றது. அந்தப் பள்ளிக்கூடமே நினைவிற்கு வந்தது. சுகமாக இருந்தது அந்த நினைவு.
அப்படியே கண்கள் சொருக உறங்கினாள். பள்ளிக்கூடம் செல்வதைப் போலவும் பாடம் எடுப்பதைப் போலவும் பகல் கனவு வந்தது. கூடவே அவளுடன் பேசிய அந்த இளைஞனின் முகமும் அவனுடன் ஏதேதோ பேசுவதைப்போலவும் காட்சிகள் வந்தன.
விழித்தபோது மணி மாலை நான்கு. எழுந்து குளியலறைக்குள் சென்று சந்தன சோப்பில் முகம் கழுவி வாசனையாக வந்தாள்.
அம்மா, சூடாக காபியும் பஜ்ஜியும் தந்தாள். சாப்பிட்டு முடித்துவிட்டு முகத்தில் பவுடர் போட்டு பொட்டு வைத்த போது எதிர்வீட்டுக்கார அம்மாவின் மகள் வந்தாள். அவள் கல்லூரியில் படிப்பவள்.
“அக்கா... வாழ்த்துக்கள்.. வேலை கிடைச்சிருக்காம். அம்மா சொன்னாங்க” என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
“வா... ராணி... உட்கார்.” தனக்கு வேலை கிடைத்த பள்ளியின் பெயரைச் சொன்னாள்.
“நல்ல ஸ்கூல்க்கா” என்ற ராணி, “அக்கா... கோவிலுக்கு வர்றியா? போயிட்டு வருவோம்” என்றாள்.
“கோவிலுக்கா?” யோசனையாய் முகத்தில் அதிகப்படியாய் இருந்த பவுடரைத் துடைத்தாள் யாழினி.
“போ போயிட்டு வாயேன்டி. வேலை வேற கிடைச்சிருக்கு. அம்பாளுக்கு உன் பெயருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா” என்றாள் அம்மா.யாழினிக்கும் எங்காவது வெளியே சென்றால் தேவலாம் போலிருந்தது.
“சரி வர்றேன்” என்றாள்.
பூஜைக் கூடையுடன் சேலை மாற்றிக் கொண்டு கிளம்பினாள். இரண்டு தெரு தாண்டி ஒதுக்குப் புறமாய் அமைதியாய் இருந்த அம்மன் கோவிலுக்கு இருவரும் வந்தனர்.
உள்ளே நுழையும் போதே கவனித்தாள் யாழினி. தீபன் ஒரு தூணோரம் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
உனக்கே உயிரானேன்

Read more from ஆர்.சுமதி

Related to உனக்கே உயிரானேன்

Related ebooks

Reviews for உனக்கே உயிரானேன்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உனக்கே உயிரானேன் - ஆர்.சுமதி

    1

    காலை பத்து மணிக்கு முன்னதாகவே அந்த மேல்நிலைப் பள்ளிக்கு வந்து விட்டாள் யாழினி. சாதாரண பருத்திச் சேலையில் அழகாக இருந்தாள்.

    நேர்முகத் தேர்விற்கு வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வராண்டாவில் அமர்ந்திருந்தனர் பலர். ஒவ்வொருவர் முகத்திலும் ‘ஏண்டா படித்துத் தொலைத்தோம்?’ என்பதைப் போன்ற அலுப்பும் சலிப்பும் இருந்தது. ஒவ்வொருவரும் மற்ற எல்லோரையும் ஒருவித விரோத உணர்வில் பார்ப்பதைப்போலிருந்தது. யாழினியும் அவர்களுடன் வந்து ஐக்கியமானாள். சான்றிதழ்கள் அடங்கிய கோப்புக்களை அனைவரும் ஒரு குழந்தையைப் போல் மடியிலோ அல்லது மார்பிலோ வைத்துக் கைகளால் அணைத்திருந்தனர்.

    யாழினி ஒரு முறை தன் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொண்டாள். சாதாரணமாக அமர்ந்திருந்தாள்.

    அவள் பல நிறுவனங்களுக்கு நேர்முகத் தேர்விற்கு சென்று வந்திருக்கிறாள். பள்ளிக்கூடத்திற்கு நேர்முகத் தேர்விற்கு வந்தது இது தான் முதல்தடவை.

    மணி பத்து ஆனதும் அழைத்தார்கள். ஒவ்வொருவராக உள்ளே சென்றனர்.

    தன் முறை வந்ததும் லேசான படபடப்புடன் எழுந்து சென்றாள் யாழினி. அவள் தான் கடைசி.

    அந்த அறை மிகப்பெரியதாக இருந்தது. நிறைய பேர் அமர்ந்திருந்தனர். சிலர் மேலும் வயதானவர்கள். சிலர் நடுத்தர வயது ஆசிரியர்கள். ஒரே ஒரு இளைஞன் பளிச்சென தெரிந்தான்.

    அவளை உட்கார வைத்து நிறையக் கேள்வி கேட்டனர். நேர்முகத்தேர்விற்கு முதன்மை வகித்த அந்தப் பள்ளியின் நிர்வாகி அவளுடைய சான்றிதழ்களை வாங்கிப் பார்த்தார். அவள் பாடம் எடுத்த விதம் அருமையாக இருந்தது. அவர்களுக்கு அவள் பாடம் எடுத்த விதம் மிகவும் பிடித்திருந்தது. அவள் தேர்ந்தெடுக்கப்பட்டதை உடனே கூறிவிட்டனர்.

    யாழினிக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை. ரொம்ப நன்றி சார் என்றாள்.

    நீங்க நாளைக்கே வந்து வேலையில் சேரலாம். சம்பளம் பற்றிய விவரங்களை நாங்க அனுப்பிய கடிதத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறோம் என்றார் அந்த நிர்வாகி.

    ஆமா சார் பார்த்தேன்.

    நாளைக்கே வேலையில சேர்ந்திடறீங்களா? என்றார்.

    சேர்ந்திடறேன் சார் என்றாள்.

    மகிழ்ச்சி பெருக்கில் மறுபடியும் நன்றி சொல்லிவிட்டு தன் சான்றிதழ்களைத் திரட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

    ஏதோ ஒரு புத்துணர்வு அவளை ஆட்கொண்டது. மனமெங்கும் மகிழ்ச்சிபொங்கியது. அந்தப் பள்ளியின் கட்டிடத்தை கண்களால் சுற்றினாள். கம்பீரமான அந்தக் கட்டிடம் அவளை வரவேற்பதைப் போலிருந்தது.

    நாளையிலிருந்து நானும் இதில் ஓர் அங்கம். நன்றாக பாடம் எடுத்து நானும் நல்ல பெயர்வாங்க வேண்டும். இந்த மகிழ்ச்சியான செய்தியை அம்மா அப்பாவிடம் உடனே சென்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

    சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தாள். மரத்தடியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த மிதிவண்டியிலிருந்து தனியே தெரிந்த தன் மிதிவண்டியை நோக்கி நடந்தாள். வண்டியை திறந்து தள்ளிக்கொண்டு நடந்தாள்.

    அதே நேரம் -

    பின்னால் அந்தக் குரல் அழைத்தது.

    மேடம்...

    சட்டென்று திரும்பினாள்.

    அழகான அந்த இளைஞன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். சட்டென அவனைப் பார்த்ததைப் போலிருந்தது. எங்கே? நேர்முகத் தேர்வு நடந்த இடத்தில் இருந்தவர்களில் அவனும் ஒருவன். புன்னகை மிளிர அவளருகே வந்தவன் –

    மிஸ் யாழினி... வேலை கெடைச்சதுக்கு என்னோட வாழ்த்துக்கள். ரொம்ப அருமையா வகுப்பு எடுத்தீங்க என்றான்.

    தாங்க்யூ... உங்க பெயரை நான் தெரிஞ்சுக்கலாமா?

    தீபன்...

    ப்ளஸ் 2 - க்கு எடுக்கிறேன் என்றான்.

    சற்று நேரம் பேசிவிட்டு வர்றேன் என்று கூறிவிட்டு மிதி வண்டியில் ஏறி பறந்தாள் மகிழ்ச்சியாக.

    2

    யாழினி வீட்டிற்கு வந்ததும் மகிழ்ச்சிப் பெருக்கிலும் ஒரு விதப் படபடப்பிலும் மிதி வண்டியை நிறுத்தி இறங்கினாள். பூட்டக் கூடத் தோன்றாமல் உள்ளே ஓடினாள்.

    அம்மா...

    அம்மா துணிகளை மடித்து அடுக்கிக் கொண்டிருந்தாள். மகளின் உற்சாகமான குரல் கேட்டுத் திரும்பினாள்.

    என்னடி... இன்டர்வியூ நல்லா இருந்ததா? நல்லா பதில் சொன்னியா? வேலை கிடைக்க அறிகுறி ஏதாவது இருந்ததா? என்றாள்.

    வியர்த்துக் கொட்ட நின்றிருந்தாள் யாழினி. அருகே வந்த அம்மா தன் முந்தானையால் அவளுடைய முகத்தைத் துடைத்தாள்.

    அறிகுறி என்னம்மா? வேலையே கிடைச்சாச்சு என்றாள்.

    என்னடி சொல்றே?

    உண்மையாத்தாம்மா சொல்றேன். எனக்குத்தான் வேலை கிடைச்சிருக்கு.

    ரொம்ப சந்தோஷமா இருக்குடி. எனக்குத் தெரியும். உனக்குத்தான் இந்த வேலைன்னு. ஆனால்... வேலை கிடைக்கிறது பெரிய விஷயம் இல்லைடி, ஒரு பொண்ணுக்கு. நல்ல வாழ்க்கை கிடைக்கணும். எவ்வளவோ படிச்சுட்டுப் பெரிய பதவியில இருக்கற பெண்களுக்கு நல்லவாழ்க்கை கிடைக்கலைடி. உனக்கு வேலை கிடைச்சது எனக்கு சந்தோஷம் தான். ஆனா... நான் மனசுல நினைக்கிற மாதிரி உனக்கொரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ எந்தக் கவலையும் இல்லாம இங்க இருக்கற மாதிரியே சந்தோஷமா வாழணும். அதான் என் ஆசை...

    அம்மா... வேலை கிடைச்சதும் கல்யாணப் பேச்சை எடுத்திட்டியா?

    காலா காலத்துல உனக்கொரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும். நீ எங்களுக்கு ஒரே பொண்ணு. பிக்கல் பிடுங்கல் இல்லாத வாழ்க்கை அமையணும். எனக்குக் கிடைச்சமாதிரி ஒரு வாழ்க்கையை இல்லை. மாமியார், நாத்தனார் பிடுங்கல் இல்லாத ஒரு இடமா உனக்குப் பார்க்கணும்.

    இப்ப என்ன கல்யாணத்துக்கு அவசரம்? கொஞ்ச நாளைக்கு என்னை சுதந்திரமா இருக்கவிடு.

    கல்யாணப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் யாழினி சாப்பிட்டு விட்டு எழுந்தாள். நிம்மதியாக சற்று நேரம் படுத்தாள். மகிழ்ச்சியில் உறக்கம் வரவில்லை. காலையில் பள்ளிக்கு செல்வதைப் பற்றியே நினைவு சுழன்றது. அந்தப் பள்ளிக்கூடமே நினைவிற்கு வந்தது. சுகமாக இருந்தது அந்த நினைவு.

    அப்படியே கண்கள் சொருக உறங்கினாள். பள்ளிக்கூடம் செல்வதைப் போலவும் பாடம் எடுப்பதைப் போலவும் பகல் கனவு வந்தது. கூடவே அவளுடன் பேசிய அந்த இளைஞனின் முகமும் அவனுடன் ஏதேதோ பேசுவதைப்போலவும் காட்சிகள் வந்தன.

    விழித்தபோது மணி மாலை நான்கு. எழுந்து குளியலறைக்குள் சென்று சந்தன சோப்பில் முகம் கழுவி வாசனையாக வந்தாள்.

    அம்மா, சூடாக காபியும் பஜ்ஜியும் தந்தாள். சாப்பிட்டு முடித்துவிட்டு முகத்தில் பவுடர் போட்டு பொட்டு வைத்த போது எதிர்வீட்டுக்கார அம்மாவின் மகள் வந்தாள். அவள் கல்லூரியில் படிப்பவள்.

    அக்கா... வாழ்த்துக்கள்.. வேலை கிடைச்சிருக்காம். அம்மா சொன்னாங்க என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.

    வா... ராணி... உட்கார். தனக்கு வேலை கிடைத்த பள்ளியின் பெயரைச் சொன்னாள்.

    நல்ல ஸ்கூல்க்கா என்ற ராணி, அக்கா... கோவிலுக்கு வர்றியா? போயிட்டு வருவோம் என்றாள்.

    கோவிலுக்கா? யோசனையாய் முகத்தில் அதிகப்படியாய் இருந்த பவுடரைத் துடைத்தாள் யாழினி.

    போ போயிட்டு வாயேன்டி. வேலை வேற கிடைச்சிருக்கு. அம்பாளுக்கு உன் பெயருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வா என்றாள் அம்மா.

    யாழினிக்கும் எங்காவது வெளியே சென்றால் தேவலாம் போலிருந்தது.

    சரி வர்றேன் என்றாள்.

    பூஜைக் கூடையுடன் சேலை மாற்றிக் கொண்டு கிளம்பினாள். இரண்டு தெரு

    Enjoying the preview?
    Page 1 of 1