Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மலரே, மயங்காதே!
மலரே, மயங்காதே!
மலரே, மயங்காதே!
Ebook120 pages43 minutes

மலரே, மயங்காதே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கைகள் இரண்டையும் தாமரை மொட்டாக்கி, நந்தனின் எதிரே குவித்தாள், தமிழ்.
தாமரை மொட்டின் மீது பனித்துளி விழுந்து சிதறியதைப் போல், அவளுடைய கண்ணீர்த் துளி, கையில் விழுந்து சிதறியது.
“நன்றி... எங்க அப்பாவைச் சரியான நேரத்துக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரைக் காப்பாத்திட்டீங்க! உங்களுக்குக் கோடி நன்றி சொன்னாலும் நீங்க செய்த உதவிக்கு ஈடாகாது.”
நந்தன் சற்றே சங்கோஜப்பட்டான்.
‘‘ஐயோ.. என்ன மேடம், நீங்க வேற..! மனிதனுக்கு மனிதன் இந்த உதவி செய்யலைன்னா எப்படி?”
“நீங்க செய்த உதவியைச் சாதாரணமா எடுத்துக்கிறது உங்களுக்குப் பெருந்தன்மையா இருக்கலாம், ஆனா, எனக்கு எங்க அப்பாவைக் காப்பாத்தின தெய்வமா நீங்க தெரியுறீங்க.’’
“இல்லை... எப்போதெல்லாம் பிறருக்கு உதவி செய்ய நேரம் வாய்க்குதோ, அப்போதெல்லாம் உதவி செய்திடணும். அப்பத்தான், மனித வாழ்க்கை நிறைவா இருக்கும்.”
“உங்க செயல் மட்டுமில்லை, பேச்சும் மனதைத் தொடுகிற மாதிரி இருக்கு, மிஸ்டர்...’’
‘‘நந்தன்.’’
அவளுடைய முகத்தில் அப்பா ஏற்படுத்திய கலக்கம் மறைந்து முதன் முறையாக அழகான புன்னகை மலர்ந்தது.
‘‘நந்தன், உங்களுக்குப் பொருத்தமான பெயர்தான். ஆபத்துல துடிக்கிற உயிரைக் காக்கிற பகவானுடைய திருநாமம். அந்தக் கிருஷ்ணனே வந்து எங்க அப்பாவைக் காப்பாத்தின மாதிரி காப்பாத்திட்டீங்க.”ட்டா... விட்டால் இந்த ஆஸ்பத்திரி ஓரமா கோவிலே கட்டி, கையில் ஒரு புல்லாங்குழலைக் கொடுத்து நிக்க வச்சுடுவீங்க போலிருக்கே! அப்புறம்... இங்க உள்ள அழகழகான நர்சுகள் எல்லாம் கோபிகை மாதிரி என்னையே சுத்த ஆரம்பிச்சுடுவாங்க.’’
அவன் இப்படிச் சொல்லவும் புன்னகை படர்ந்த அந்த முகம், பூரிப்பில் நிறைந்தது.
“அப்பாவை இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் பார்க்கணும்னு. டாக்டர் சொல்லிட்டார். இனிப் பயம் இல்லைன்னு உறுதி கொடுத்துட்டார். நீங்க ஆபீசிலிருந்து ஓடி வந்திருக்கீங்க. மணி இரண்டாகப் போகுது. சாப்பிடாம இருக்கக் கூடாது. வாங்க, பக்கத்திலேயே ஓட்டல் இருக்கு. சாப்பிடலாம்,’’ என்றான்.
“இல்லைங்க. எனக்குப் பசி இல்லை. அப்பாவைப் பார்த்த பிறகுதான் என்னால் எதுவுமே சாப்பிட முடியும்.’’
‘‘நீங்க சாப்பிடாம இருக்க முடியும். ஆனா, எனக்குப். பயங்கரப் பசி...’’
அவனை அதிர்வாக ஏறிட்டாள்.
‘நீங்க சாப்பிடலையா?’’
‘‘எப்படிங்க சாப்பிட முடியும்? ஒருவர் உயிருக்குப் போராடும் போது பக்கத்தில் இருக்கிறவனுக்குப் பசி எடுக்குமா? இப்போ பயங்கரப் பசி எனக்கு. ஏன்னா... மனசு நிறைவா இருக்கு. நீங்க என்னோடு சாப்பிடலைன்னா பெண் பாவம் என்னைச் சும்மா விடுமா?’’ அவன் சந்தோஷமாகச் சிரித்தான்.
‘‘சாரி... வாங்க!’’ அவனுடைய பேச்சில் இதமாகச் சிரித்த படி அவனுடன் கிளம்பினாள்.
இருவரும் பக்கத்திலிருந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். இரண்டு சாப்பாடு சொல்லிவிட்டு வந்தான், நந்தன். இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.
‘‘நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க மிஸ்டர் நந்தன்?’’
‘‘இந்த மிஸ்டர், சிஸ்டரெல்லாம் எதுக்கு? அழகா நந்தன்னு கூப்பிடுங்க. நந்துன்னு சுருக்கிக் கூப்பிட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். பதிலுக்கு நானும் உங்களை அமுது என்று கூப்பிடுகிறேன்.”
‘‘பசியில் உங்களுக்கு என் பேர் கூட மறந்துடுச்சா? என் பெயர் அமுது இல்லை , தமிழ்!’’ “நான் ஞாபக சக்தியில் யானை மாதிரி. உங்க பேரை மறக்கலை. சரியாத்தான் சொன்னேன்.’’
‘‘என்ன... என் பெயர் அமுது என்றுதானே சொன்னீங்க?’’
‘‘ஆமா! ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ பாட்டுக் கேட்ட தில்லையா? பாரதிதாசன் பாடல். அதான், தமிழை அமுதாக்கிச் சொன்னேன்.”
அவளை முதலில் புன்னகைக்க வைத்து, பிறகு மலர வைத்தவன், இப்போது பலமாய்ச் சிரிக்கவே வைத்து விட்டான்.
‘‘சிரிக்க வைக்கிற மாதிரி நல்லா பேசுறீங்க!’’ அவள் சலங்கையாகக் குலுங்கினாள்.
சிலர் திரும்பிப் பார்த்தனர்.
“பாருங்க, வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு பெரியவங்க சொன்னது எவ்வளவு உண்மை! உங்க முகத்துல தெரிஞ்ச கவலை யெல்லாம் நீங்க சிரிக்க ஆரம்பிச்சதும் போன இடமே தெரியலை!” என்றவாறே அவளுடைய முகத்தை ரசித்தான்.
இலையில் சூடாகச் சோறு போட்டு. சாம்பார் ஊற்றி, வகை வகையாகப் பொரியலை வைத்தான், ஓட்டல் பணியாள்.
சாப்பாட்டைப் பிசைந்த நந்தன், ‘‘பாருங்க... நாம உண்மைன்னு நினைக்கிறதெல்லாம் அடுத்த நிமிடமே பொய்யா மாறிடுது!” என்றான்.
“எது?” அவனை ஆவலாகப் பார்த்தாள், அவள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
மலரே, மயங்காதே!

Read more from ஆர்.சுமதி

Related to மலரே, மயங்காதே!

Related ebooks

Reviews for மலரே, மயங்காதே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மலரே, மயங்காதே! - ஆர்.சுமதி

    1

    வங்கியில் கூட்டம் அதிகமிருந்தது. பணம் பெறுவதற்கு நேரமாகி விட்டது. இடக் கையை உயர்த்திப் பார்த்தான், நந்தன். சரியாக மணி பன்னிரண்டு.

    அலுவலகத்தில் அனுமதி வாங்கிக் கொண்டு வங்கிக்கு வந்திருந்தான். குறித்த நேரத்துக்குள் போய்விட வேண்டும். இல்லாவிட்டால் முதலாளி ஒரு பிடி பிடித்து விடுவார்.

    வாங்கிய பணத்தைச் சரி பார்த்து, அவசர அவசரமாக பாக்கெட்டில் திணித்துக் கொண்டு வெளியே வந்தான். வங்கி வாசலில் நிறுத்தி இருந்த தன் இரு சக்கர வாகனத்தை நோக்கிச் சென்றபோதுதான் அவரைக் கவனித்தான்.

    தள்ளாடும் நடையைச் சரி செய்து கொண்டு நடக்க முயற்சிப்பதைப் போல் சாலையோரமாக வந்தார்.

    பணம் எடுக்க அவனுக்கு முன்னே வரிசையில் நின்று கொண்டிருந்தவர், இங்கே உச்சி வெயிலில் நடை தள்ளாடுகிறார்.

    அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தடாலெனக் கீழே விழுந்தார். நந்தன் சட்டென்று பதறி விட்டான். ஓடிச் சென்று அவரைத் தூக்கினான்.

    சாலையில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களும் மனிதர்களும் இயங்கிக் கொண்டிருந்தனர்.

    ‘‘சார்...’’ அவன் மெதுவாகத் தூக்க, அவர் முனகலுடன் கையை ஊன்றி எழுந்தார்....

    அவரைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான். அவரும் ஒரு பிடிமானம் தேடியவரைப் போல், அவன் மேல் தன்னைச் சாய்த்துக் கொண்டார்.

    ‘‘சார்... என்னாச்சு?"

    செருகும் கண்களைச் சிரமப்பட்டு உயர்த்தி, அவன் முகத்தைப் பார்த்தார். ‘‘தம்பி... என்னமோ திடீர்னு மயக்கமா இருக்கு. லேசா நெஞ்சு வலிக்குது. படபடப்பாக இருக்கு."‘.

    ‘‘வாங்க சார்... அந்த நிழலில் கொஞ்ச நேரம் உட்காருங்க!" என அவரை அரவணைப்புடன் அழைத்துச் சென்றான். பக்கத்திலிருந்த தேநீர்க் கடை முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர வைத்தான்.

    ‘‘சார்... காப்பி, டீ ஏதாவது குடிக்கிறீங்களா?’’

    "வேண்டாம்ப்பா. கொஞ்சம் தண்ணீர் மட்டும்...’’ என்றார்.

    கடைக்காரரிடம் சொல்லித் தண்ணீர் வாங்கிக் கொடுத்தான். அதை வாங்கி நிதானமாகப் பருகிய பெரியவர் சற்றே தெம்பு வந்தவராக, "ரொம்ப நன்றி, தம்பி!’’ என்றார்.

    "சார்... உங்க வீடு எங்கே இருக்குன்னு சொல்லுங்க, நான் உங்களை வீட்டுல கொண்டு விடுறேன்.

    "வேண்டாம் தம்பி. பக்கத்துலதான் என் வீடு. நான் மெதுவா நடந்தே போயிடுறேன்.’’

    இல்லை சார்... உங்க உடம்பு ரொம்ப களைப்பா இருக்கிற மாதிரி தெரியுது, என்றவன், அவசரமாகச் சாலையில் இறங்கி ஓடினான். தன் வாகனத்தைத் தேநீர்க் கடை அருகே கொண்டு வந்து நிறுத்தினான். பூட்டினான். எதிர்ப்பட்ட ஆட்டோவைக் கைதட்டி அழைத்தான்.

    ஆட்டோ ஓரமாக வந்து நின்றது. ஓட்டுநர் எட்டிப் பார்த்து, எங்கே போகணும்? என்றார்.

    சொல்றேன். இப்படிக் கிட்டே கொண்டு வா, என்றான்.

    ஆட்டோ அலுங்கிக் குலுங்கி அருகே வந்தது.

    ‘‘வாங்க சார்!" எனப் பெரியவரைக் கைத்தாங்கலாகத் தூக்கினான். அவனுடைய துணையோடு ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்.

    ‘‘உங்க வீடு எங்கே இருக்குன்னு இப்பவாவது சொல்லுங்க சார்.’’ நந்தன் கேட்டதும், கண்களை மூடியிருந்த அவர் மெல்ல இமைகளைத் திறந்தார். தன் வீட்டு முகவரியைச் சோர்வாகக் கூறிவிட்டு, மறுபடியும் கண்களை மூடிக் கொண்டார்.

    ஆட்டோ விரைந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர் சொன்ன தெருவினுள் நுழைந்தது.

    பத்தாம் எண் வீட்டின் எதிரே நின்றது.

    அழகான மாடி வீடு, வெளி வாசலில் ‘ஜெகதீஸ்வரன்’ என்ற பெயர்ப் பலகை இருந்தது.

    ‘‘சார்... ஜெகதீஸ்வரன்னு பேர் போட்டிருக்கே... இந்த வீடா?"

    கண்களைத் திறந்த பெரியவர் சோர்வாகக் குனிந்து வீட்டைப் பார்த்தார். "ஆமாம்ப்பா! இந்த வீடுதான். ஜெகதீஸ்வரன்கிறது என் பேர்தான்,’’ என்றார்.

    வீடு பூட்டி இருந்தது.

    ‘‘என்ன சார், வீடு பூட்டி இருக்கு?" என்றான், நந்தன்.

    "சாவி என்கிட்டேதாம்பா இருக்கு,’’ என, அவனைப் பிடித்துக் கொண்டு இறங்கினார். மெல்ல நடந்தார்; வீட்டு வாசல்படியிலேயே அமர்ந்துவிட்டார். சட்டைப் பையில் இருந்த ஒரு சாவியை எடுத்து அவனிடம் நீட்டினார். அவன் கதவைத் திறந்தான்.

    ஜெகதீஸ்வரனை உள்ளே அமர வைத்தான்.

    ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து விட்டு, மீண்டும் உள்ளே வந்தான்.

    சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவரிடம், "சார்... தண்ணி குடிக்கிறீங்களா?’’ என்றான்.

    "வேண்டாம்ப்பா. இந்தா... ஆட்டோவுக்கு நீ கொடுத்த பணத்தை எடுத்துக்க,’’ எனச் சட்டைப் பையிலிருந்து ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினார்.

    "அட... என்ன சார் நீங்க? இருக்கட்டும். ஆமா... வீட்டுல நீங்க தனியாவா இருக்கீங்க?’’ என்றவாறே அவர் கொடுத்த பணத்தை அவருடைய சட்டைப் பையிலேயே வைத்தான்.

    ‘‘என்னப்பா, நீ! இந்தக் காலத்துல பசங்களுக்கு உதவுற மனப்பான்மையே குறைஞ்சுக்கிட்டிருக்கும்போது, நீ இப்படி உன் வேலையைப் போட்டுட்டு வந்து எனக்கு உதவினதே பெரிசு. இதுல பணமும் தரணுமா? வேண்டாம்ப்பா .’’

    ‘‘அட... விடுங்க சார்! இப்ப பணமா முக்கியம்? உங்களை எப்படி இந்த வீட்டுல தனியா விட்டுட்டுப் போறதுன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். உங்க மனைவி, பசங்களெல்லாம் வெளியில் போயிருக்காங்களா?’’

    "எனக்கு மனைவி இல்லைப்பா. அவ என்னை விட்டுப் போய் ரொம்ப நாளாயிடுச்சு. ஒரே ஒரு மகள்தான். அவள் வேலை பார்க்கிறார். இப்ப ஆபீசில் இருப்பா. அந்தப் போனைக் கொஞ்சம் இப்படி நகர்த்து, நான் அவளை உடனே வீட்டுக்கு வரச் சொல்றேன். போகப் போக எனக்கும் தனியா இருக்க என்னவோ போல் இருக்கு!’’ என்றார்.

    அவன் தொலைபேசியை அவருக்கு அருகே நகர்த்தினான். அவர் எண்களை அழுத்தினார். எதிர் முனையில் ஆண் குரல் கரகரத்தது.

    ‘‘சார்! நான் உங்க ஆபீஸில் வேலை செய்கிற தமிழோட அப்பா பேசுறேன். தமிழைக் கொஞ்சம் கூப்பிட முடியுமா?"

    சில நிமிடங்கள் கழித்துத் தமிழ் பேசினாள்.

    அம்மா, தமிழ்! நான் அப்பா பேசுறேன்... ஒண்ணுமில்லைம்மா! பணம் எடுக்கப் போயிருந்தேன். வரும்போது திடீர்னு தலை சுத்தல் மாதிரி இருந்தது. ஒரே படபடப்பா இருக்கு. தனியா இருக்கப் பயமா இருக்கு. நீ அவசரமா வர்றியா?

    ‘‘...... ‘‘

    "இப்ப நான் தனியாக இல்லைம்மா! ஒரு தம்பி என்னை ஆட்டோ வச்சு வீட்டுல கொண்டு வந்து விட்டுச்சு. இப்ப அந்தத் தம்பிதான் பக்கத்துல இருக்கு. அது போகணுமில்லே! சீக்கிரம் வந்துடும்மா! வச்சிடுறேன்.’’

    ரிசீவரை வைத்து விட்டுத் திரும்பிய ஜெகதீஸ்வரன், திடீரென நந்தனின் கரங்களைப் பற்றிக் கொண்டார். தம்பி.. நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி!

    ‘‘அட... என்ன சார் நீங்க? இதெல்லாம் பெரிய உதவியா?’’

    "இருக்கட்டுமே! என்னை வீடுவரை

    Enjoying the preview?
    Page 1 of 1