Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நட்சத்திரம் இல்லாத இரவு!
நட்சத்திரம் இல்லாத இரவு!
நட்சத்திரம் இல்லாத இரவு!
Ebook99 pages31 minutes

நட்சத்திரம் இல்லாத இரவு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆச்சரியத்தை தேக்கிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் சூரியநிலா. அப்பா ருத்ரபதியும், சித்தி அம்சாவும் வாயெல்லாம் பல்லாக ஒரு இளைஞனிடமும், ஒரு நடுத்தர வயது பெண்மணியிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். சூரியநிலாவைப் பார்த்ததும் அம்சா வேகவேகமாய் வந்து, அவளுடைய தோளின் மேல் கையை வைத்து சமையலறைக்குள் கூட்டிப் போனாள்.
 "என்ன சித்தி... யார் இவங்க?"
 "சொல்றேன். முதல்ல முகத்தைக் கழுவி, பட்டுச்சேலையைக் கட்டிக்கோ."
 "பட்டுச் சேலையா?"
 "ஆமா. சென்னையிலிருந்து உன்னை பெண் பார்க்க வந்திருக்காங்க. ரொம்பப் பெரிய இடம்."
 சூரியநிலாவின் முகம் கோபத்திற்குப் போயிற்று. குரல் உஷ்ணமாய் தொண்டையிலிருந்து வீறிட்டு வந்தது. "சித்தி! யாரைக் கேட்டுகிட்டு இதையெல்லாம் ஏற்பாடு பண்ணினீங்க?"
 "சத்தம் போடாதடி! வந்திருக்கிறவங்க காதுல விழுந்துடப் போவுது..."
 "அப்பா என்கிட்டே போன்ல பேசும் போது சொன்ன விஷயம் வேற! இங்கே இப்போ நடந்திட்டிருக்கிற விஷயம் வேற! அப்பா எதுக்காக பொய் சொல்லணும்?"
 பின்பக்கம் கனைப்புச் சத்தம் வந்தது. சூரியநிலா திரும்பினாள். அப்பா ருத்ரபதி உதட்டில் புன்னகையோடு நின்றிருந்தார்.
 "என்னம்மா... ரொம்பவும் கோபமா இருக்கியா?"
 "இதெல்லாம் என்னப்பா?"
 "எதும்மா?"இந்தப் பெண் பார்க்கிற படலம்..."
 "திடீர்ன்னு வந்திட்டாங்கம்மா. நம்ம புரோக்கர் சென்னைக்கு போயிருந்தப்போ எதேச்சையா உன்னோட போட்டோவை அவங்களுக்குக் காட்டியிருக்கார். பையனுக்கும் பையனோட பெரியம்மாவுக்கும் உன்னைப் பிடிச்சுப் போச்சு. உடனே காரிலேயே கிளம்பி வந்துட்டாங்க. மாப்பிள்ளை பையன் பெரிய இடம். சொந்தத்துல உரம் தயாரிக்கிற ஒரு பெரிய கம்பெனி இருக்கு. நாலு பங்களா, ஏழு கார்..."
 "அப்பா...!"
 "என்னம்மா? பாங்கிலிருந்து கடனை கேட்டு லெட்டர் வந்ததா? உன்கிட்டே சொன்னது பொய்தான். பெண் பார்க்க வந்திருக்காங்கன்னு சொன்னால், நீ வர மாட்டேன்னு நினைச்சுதான் அப்படி பொய் சொன்னேன்."
 "என் மனசை புரிஞ்சுக்காமே ஏம்பா இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க? கல்யாணம் பண்ணி வையுங்கன்னு நான் இப்ப கேட்டேனா?"
 "ஏன்... உனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க வேண்டிய வயசுதானே?"
 "வயசுதான். ஆனால், எனக்கு விருப்பமில்லை."
 "இது ஒரு நல்ல சம்பந்தம். நம்ம ஜாதியில் இவ்வளவு பெரிய இடம் நமக்கு வாய்க்கவே வாய்க்காது. பையனும் ராஜலட்சணத்தோடு இருக்கான். அப்பா, அம்மா கிடையாது. ஒரேயொரு பெரியம்மா மட்டும்தான்."
 "எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்."
 "ஏன் வேண்டாம்? என்றைக்காவது ஒருநாள் நீ எவனையாவது கல்யாணம் பண்ணிக்கத்தானே வேணும்...?"
 "அன்றைக்கு சொல்றேன்."
 ருத்ரபதியின் கண்கள் சிவந்தன. "என்ன, கைநிறைய சம்பளம் வாங்கற திமிரா? பெத்த அப்பன் பேச்சை கேட்க மாட்டியா?"
 "அ… அப்பா... வந்து..."எந்த காரண காரியத்தையும் நீ என்கிட்டே சொல்லிட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இன்னும் கால் மணி நேரத்துல நீ ரெடியாகி கூடத்துக்கு வரணும். மாப்பிள்ளை பையனையும், பெரியம்மாவையும் நமஸ்காரம் பண்ணணும். கல்யாணத்துக்கு சம்மதமான்னு அவங்க - முன்னாடியே - உன்னைக் கேட்பேன். நீ சரின்னு தலையாட்டணும். அதுக்கு மாறாக ஏதாவது ஏடாகூடமா பண்ணினே, எனக்கு பயங்கர கோபம் வந்து விடும். உங்கம்மா உயிரோடு இருந்தவரைக்கும், பாய்ல படுத்துகிட்டே என் உயிரை வாங்கினாள். இப்ப... நீ...?"
 "அப்பா! அம்மாவைப் பத்தி பேசாதீங்க."
 "சரி, பேசவில்லை. சீக்கிரம் தயாராக வா. மூஞ்சியை உம்ன்னு வைச்சுக்காதே! சந்தோசமா வா" சொல்லிவிட்டு ருத்ரபதி சமையலறையிலிருந்து வெளிப்பட்டு, கூடத்து சோபாவில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையையும், அந்தப் பெரியம்மாவையும் நோக்கிப் போனார்.
 "என்ன, ஏதாவது பிரச்சனையா?" பெரியம்மா கேட்டாள்.
 "அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாப் பெண்களும் சொல்ற 'எனக்கு இப்போ கல்யாணம் எதுக்கு?' என்கிற வாக்கியத்தைத்தான் என் பொண்ணும் சொல்றா."
 பெரியம்மா சிரித்தாள். "அப்படி சொல்ற பொண்ணுகளுக்குத்தான் கல்யாண ஆசை அதிகமா இருக்கும்."
 மாப்பிள்ளை ரகு குறுக்கிட்டான்.
 "உங்கள் - பொண்ணுக்கு எந்த இலாகாவில் வேலை?"
 "சர்வே."
 "கல்யாணத்துக்கப்புறம் வேலையை விட வேண்டியிருக்குமே?"
 "விட்டுட்டாப் போச்சு."
 "இந்த வீடு பேரில் பாங்கிலிருந்து கடன் வாங்கியிருக்கிறதா புரோக்கர் சொன்னார். உண்மையா?"
 "உண்மைதான். என்னோட முதல் மனைவி இருதய ஆபரேஷனுக்காக ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வேண்டியிருந்தது. இந்த வீட்டை அடமானம் வைச்சு பணத்தை வாங்கினேன்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 18, 2023
ISBN9798223685913
நட்சத்திரம் இல்லாத இரவு!

Read more from Rajeshkumar

Related to நட்சத்திரம் இல்லாத இரவு!

Related ebooks

Related categories

Reviews for நட்சத்திரம் இல்லாத இரவு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நட்சத்திரம் இல்லாத இரவு! - Rajeshkumar

    ւebook_preview_excerpt.htmlZN#G~ᾀ3K$`, ZRpۇ0f9ٯ2ʓd?=?Wվˋ_~9];|lmMu_SMZYYu֭Ziw?U`|lx evw]`-௾O`ϊ`o/{LX~E:7p,)<6%'5TKQ:Sԙ[y %:I6gg~˒B3dğq*VgúR_ӥ p{Εt"xo\yWa3gpӰ/uUZ}!DLh)D7gsW#|&voKGBwF+ةdEV15kXd5W[zD9JQ]J}j )\ڧ^1BtD ʍ[k{E~U7𗑦{nvQ#) QVR?&dm ٰ8 kgEw(!YLeGPY3E% $G0ݮ$E'%߀7 uYt B @'@?h僚xс )h_cBRyʀ494o վv[rf 9#wL,ZCʽd7 l%f.C,n/cV8 0B< ,BƏ Dv"uV0PT΃(R܉<2)NJ.@ϡNqZ'MU6St?c7K6S'JX> @1CU!q<#/7W3./-f/e23#X9UCr'Js28@1- ^CFԺUvda2 ?9|MU3i"QJ^AE`+Nhŵۯpy,-٘psՄ%p%'ynԽpdJ odzfOv[I0z+ˈdiI2`b"b ^Ҏ7I[ gc.DB4&v,Y$BDJuX]ݣO L2*aޜ ʗz6mj) 7"%\C cKR0&*FUD"Gt30*LO:M ?4(YAy#cgWf8Ddsi5 a0!%#p845%ksx=HLjs)xî gDVT6@ҶٯԚ\Ioώ#eCOBr,S"-'il`2IԬx5qJԧ~DD1;V-3#<4vNcrr&.֪H,jR(kO:T\r< &I+ B8;ɬT1A$ѾD@2U{9UkKbgW2ŕl[>Mf$L ]RFx.,3A˜\U36,{ {VS<@L5]o%PPOB9p1vIif沲 /R[IORHe'3q+en՞cauWb N`9rO g0b?Va~.0zlj-gEorŖ[پ }/wrS ;M=%Ɠ ьH퍝GΧaɷ?p75J{qrjLj. > G 햖 ed!(Ĭ#G4+k OTI$ܺ*xݤN% 8SمO}d NDc%R6 8nU :OVƗ72w t`N%sep;5 Key(;T8a=ba"k"bl؋=gLgj0\0ĮCu\4K| *z_Fm^MdM( xyLJ&dZy>3pҽJA9w4?Ub4+
    Enjoying the preview?
    Page 1 of 1