Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வெள்ளிக்கிழமை விடியும் வேளை
வெள்ளிக்கிழமை விடியும் வேளை
வெள்ளிக்கிழமை விடியும் வேளை
Ebook85 pages25 minutes

வெள்ளிக்கிழமை விடியும் வேளை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உள்ளே நுழைந்த ஆர்த்தி நேராய் ரெஸ்டாரெண்ட் கெளண்டருக்குப் போய் அங்கே இருந்த டை கட்டிய அந்த இளைஞனிடம் ஏதோ கேட்க - அவன் அதற்கு புன்னகையோடு தலையை ஆட்டி பதில் - சொன்னான்.
 சாரதி அவளையே பார்த்தான்.
 'அவள் என்ன கேட்டாள்...?'
 'அவன் என்ன பதில் சொன்னான்?'
 சாரதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே - ஆர்த்தி வேகவேகமாய் ரெஸ்டாரெண்ட்டை விட்டு வெளியேறினாள். சாரதியும் எழுந்தான்.
 பேரர் ட்ரேயோடு எதிர்பட்டான்.
 "ஸார்... லார்ஜ் கேட்டீங்க..."
 "வேண்டாம்... இந்தா பில்லை செட்டில் பண்ணி பாலன்ஸை நீயே வெச்சுக்க" - பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை உருவி - பேரரின் கையில் திணித்துவிட்டு வெளியே வந்தான்.
 ஆர்த்தி காரை ஸ்டார்ட் செய்து கொண்டிருக்க சாரதி கொஞ்சம் தள்ளி நிறுத்தியிருந்த தன் பைக்கை நோக்கிப் போனான்.
 'இவளை சும்மா விடக்கூடாது...!'
 'வழியிலேயே எங்கேயாவது மடக்கி - வாங்கி வைத்திருக்கிற கத்திக்கு வேலை கொடுக்க வேண்டும்...!'
 உடனே உயிர் போய்விடும்படியாய் குத்தக்கூடாது. ஒவ்வொரு உறுப்பாய் பார்த்து - அவள் துடிக்கத் துடிக்க குத்திக் கொல்ல வேண்டும்.
 கார் புறப்பட்டது.எடுத்த எடுப்பிலேயே நல்ல வேகம்.
 சாரதி பைக்கை விரட்டி - காரை ஒரு டிஸ்டன்ஸ் வைத்து பின் தொடர்ந்தான்.
 ரெஸ்டாரெண்டிலிருந்து சிட்டி ஏழு கிலோ மீட்டர். ஹைவேஸ் ரோடு. போக்குவரத்து இல்லாத இடத்தில் காரை மடக்கி விடலாம்.
 கார் இப்போது ஹைவேஸ் ரோட்டில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.
 சாரதி தன் பைக் வேகத்தை அதிகரித்தான். மனசுக்குள் ஆர்த்தியைப் பற்றிய பழைய நினைவுகள் அதே வேகத்தில் பின்னோக்கி ஓடின.
 ஆர்த்தி அதற்குப் பிறகு - சாரதியை அடிக்கடி சந்தித்தாள். வாரத்தில் ஒரு நாளாவது பீச்சுக்குப் போனார்கள். மூன்று மாதத்தில் இரண்டு தடவை கோல்டன் பீச் போனார்கள். நிறைய பேசினார்கள்.
 சாரதிக்கு ஆர்த்தியின் - நட்பின் ஆழம் தெரியவில்லை.
 "சாரதி..."
 "ம்..."
 "நீங்க எடுப்பா இருக்கிறதுக்கு என்ன காரணம் தெரியுமா...?"
 "என்ன காரணம்...?"
 "உங்க சுருட்டை முடிதான்... முடிக்கு ஸ்பெஷலா தைலம் ஏதாவது போடறீங்களா...?"
 "பின்னே...?"
 "என்ன தைலம்...?"
 "இமயமலை அடிவாரத்துல கேசகிரி சித்தர்னு ஒருத்தர் இருக்கார். அவருக்கு நூத்தி அம்பது வயசு... மாசா மாசம் ஒரு பாட்டிலை வி.பி.பி.யில் எனக்கு அனுப்பி வெச்சிடுவார். அந்தத் தைலத்தோட மகிமைதான் இந்த சுருட்டை முடி..."
 "நிஜமாவா...?கண்களை அகல விரித்தாள் ஆர்த்தி.
 "சரியா போச்சு... இதையும் நம்பீட்டிங்களா...? நான் சொல்றப்பவே இது பொய்ன்னு உங்களுக்குத் தோணலையா ஆர்த்தி...?"
 "உங்களைப் பார்த்தா பொய் பேசறவர் மாதிரி தெரியலையே...?"
 சாரதி அவளையே பார்த்தான்.
 "என்ன பார்க்கறீங்க...?"
 "ஒண்ணுமில்லை..."
 "நம்ப மாட்டேன்... என்னமோ சொல்லவர்றீங்க...?"
 "அது... வந்து..."
 "ம்... சொல்லுங்க..."
 "காலேஜ் படிப்பை முடிச்சும் நீங்க இன்னும் சின்னக் குழந்தையாவே இருக்கீங்க.? நீங்க மனுஷங்களைப் படிக்க வேண்டியது நிறைய இருக்கு."
 ஆர்த்தி சிரித்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 5, 2024
ISBN9798224711031
வெள்ளிக்கிழமை விடியும் வேளை

Read more from Rajeshkumar

Related to வெள்ளிக்கிழமை விடியும் வேளை

Related ebooks

Related categories

Reviews for வெள்ளிக்கிழமை விடியும் வேளை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வெள்ளிக்கிழமை விடியும் வேளை - Rajeshkumar

    1

    அந்த ஒதுக்குப்புறமான மூன்லைட் ரெஸ்டாரெண்ட்டில் சிக்கனைக் கடித்து விஸ்கியைத் துளித்துளியாய் விழுங்கிக் கொண்டிருந்த சாரதியைப் பற்றி நீங்கள் இப்போதே தெரிந்து கொள்வது உத்தமம். பின்னால் அவனைப் பற்றிச் சொல்ல அவகாசம் கிடைப்பது கஷ்டம்.

    அந்த சாயந்தர ஏழு மணியில் - சற்றே அழுக்கான சிமெண்ட் நிற சர்ட்டும் அதே நிற பேண்ட்டும் அணிந்து - சவரம் செய்யாத மோவாயோடு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் சாரதிக்கு முப்பது வயது. சற்றே சதை குறைந்து வற்றிப்போன உடம்பு. உடம்பு ஒரு சுற்று இளைத்துப் போனதுக்கு காரணம் போன வாரம்தான் ஜெயிலிலிருந்து இரண்டு வருஷ தண்டனையை முடித்துக் கொண்டு வந்ததுதான்.

    சாரதி ஏன் ஜெயிலுக்குப் போனான்? பின்னால் ஏதாவது ஒரு பக்கத்தில் - ஏதாவது ஒரு பத்தியில் தெரிந்து கொள்வீர்கள். - சாரதி ஒரு எம்.ஏ. பட்டதாரி. ஒரு கன்ஃபெக்ஷனரி கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யூடியாய் குப்பை கொட்டியதில் மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளமும் வாங்கி ஒரு சிற்றரசன் போல் இருந்தான்.

    பீர் குடிக்கிற கெட்டவழக்கம் மட்டும் இருந்தது. வரப்போகிற மனைவிக்காக கற்பை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருந்தான்.

    அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நச்சரித்த போதெல்லாம் ‘இப்ப வேண்டாம்மா. உத்யோகத்துல ஒரு ப்ரமோஷன் கிடைக்கட்டும் பார்த்துக்கலாம்’ என்று சொல்லி வந்தான். அப்பா சின்ன வயசுலேயே மைனஸ்.

    ‘ஆண்கள் சந்தோஷமாய் இருந்தால்தான் இந்தப் பெண்களுக்குப் பிடிக்காதே...!’

    சாரதியின் இருபத்தியேழாவது வயதில் ஒரு பெண் அவனுடைய வாழ்க்கையில் கிரஹப்பிரவேசம் செய்தாள்.

    பெயர் ஆர்த்தி. அது ஒரு ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமை.

    சாரதி தன் என்ஃபீல்ட் பைக்கில் கோல்டன் பீச் போய்விட்டு திரும்பும் வழியில் - ஃபியட் கார் ஒன்று தன் பானட்டைத் திறந்து ‘ஆ’ காட்டிக் கொண்டிருக்க - பக்கத்தில் வியர்த்த முகமாய் - கையைப் பிசைந்து கொண்டு சல்வார் கம்மிஸூம், துப்பட்டாவுமாய் - அந்தப் பெண் தெரிய - பைக்கை வேகம் குறைத்து காருக்குப் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தினான் சாரதி.

    மே... ஐ... ஹெல்ப்... யூ...

    ப்ளீஸ்...

    என்ன ப்ராப்ளம்...?

    புரியலை...

    பைக்கை ஸ்டாண்டிட்டு நிறுத்திவிட்டு - காருக்கு வந்து பானெட்டுக்குள் தலையை நுழைந்தான் சாரதி, டிகிரியை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஒரு வருஷம் பாட்சாவின் ஒர்க் ஷாப்புக்கு போய் விளையாட்டாகக் கார் மெக்கானிசம் கற்றுக் கொண்டது வீண் போகவில்லை.

    ஒரு நிமிஷம் நோண்டி பார்த்த மாத்திரத்திலேயே காருக்கு என்ன நோய் என்பது பிடிபட்டுவிட்டது.

    பெட்ரோல் வரும் ட்யூப்பில் அடைப்பு.

    சாரதி புன்னகையோடு அவளை ஏறிட்டான்.

    காரை எத்தனை வருஷமா ஓட்டறீங்க?

    ரெண்டு வருஷமா...?

    காரை ட்ரைவ் பண்றவங்க மொதல்ல தெரிஞ்சுக்க வேண்டியது எதைத் தெரியுமா?

    எதை...?

    அவள் ஆர்வமாய் கேட்க - சாரதி ஒரு புன்னகையோடு சொன்னான்.

    ஓரளவுக்காகவாவது கார் மெக்கானிஸத்தை. அது தெரியாம காரை லாங் டிஸ்டன்ஸ்க்கு பயன்படுத்தக் கூடாது. இல்லேன்னா ட்ரைவரை வெச்சுக்கணும்...

    இ... இது... இது எனக்கு புது அனுபவம்... கார் இப்படி மக்கர் பண்ணினதே இல்லை...

    அப்படி நினைச்சுட்டு வர்றது தப்பு... இதே ராத்திரி வேளையா இருந்திருந்தா... உங்களாலே என்ன பண்ண முடியும்... உதவிக்கு வர்றவங்க எல்லாருமே நல்லவங்களா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது.

    வந்து... வந்து...

    நோ... ப்ராப்ளம்... இனிமே இப்படி வராதீங்க... கார்ல மேஜரா எந்த ப்ராப்ளமும் இல்லை... பெட்ரோல் வர்ற ட்யூப்ல அடைப்பு ஏற்பட்டிருக்கு. அவ்வளவு தான்... சொன்ன சாரதி ட்யூப்பை வாயில் வைத்து உறிஞ்சி - பெட்ரோலை வாய்க்குள் இழுத்து வெளியே ‘புளிச்’சென்று துப்பிவிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1