Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அரை விநாடி அநியாயம்
அரை விநாடி அநியாயம்
அரை விநாடி அநியாயம்
Ebook118 pages39 minutes

அரை விநாடி அநியாயம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மேகலா மழையில் சொற்பமாய் நனைந்திருந்தாள். தலைமுடி கலைந்து கொஞ்சம் போல் சோர்வைக் காட்டினாள். மஞ்சளை அரைத்து பூசின மாதிரி நிறம். சுருண்ட முடியில் நீர்த்திவலைகள் மின்னியது. கட்டியிருந்த 'க்ரிம்ப்' சேலையில் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் ஈரம் தெரிந்தது.
 "ஏய்... மேகலா... உனக்கு ஆயுசு நூறடி... இப்பத்தான் நானும் என்னோட கணவரும் உன்னைப் பத்திப் பேசிட்டு வந்தோம்... திருச்சிக்கு எப்போ வந்தே...?"
 "இப்பத்தான் பதினஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி..."
 "உன்னோட ஹஸ்பெண்ட் வரலையா...?"
 "இல்லே. நான் மட்டுந்தான் வந்தேன்..."
 "இவர்... என்னோட கணவர்... நீதான் எங்க கல்யாணத்துக்கே வரலையே...! அதான் இந்த மழை தூவற நேரத்துல அறிமுகப்படுத்த வேண்டியிருக்கு..."
 "அம்ருதா! உன்னோட ப்ரெண்டை மொதல்ல உள்ளே கூட்டிட்டு வா... அவங்க ரொம்பவும் டயர்டா இருக்காங்க போலிருக்கு..."
 "ஸாரிடி... மேகலா... உள்ளே வா..."
 அவளை இழுத்துக் கொண்டு உள்ளே போனாள். ரமணன் காரை நிறுத்தி விட்டு வந்து கதவில் தொங்கிய பூட்டுக்கு விடை கொடுத்தான்.
 அம்ருதா உள்ளே நுழைந்து ஹால் ஸ்விட் சைத் தட்டி ட்யூப்லைட்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டே கேட்டாள்"என்னடி திடீர்ன்னு வந்து நிக்கறே...? ஒரு லெட்டர் ட்ராப் பண்ணியிருந்தா... நான் வீட்லேயே இருந்திருப்பேனே..."
 "மெட்ராஸ் ஆபீஸிலிருந்து... என்னை திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க அம்ருதா... நாளைக்கே நான் ட்யூட்டியில ஜாய்ண் பண்ணனும்..."
 "என்னடி கொடுமை இது...? உன்னோட கணவர் மெட்ராஸ்ல... நீ இங்கேயா? நல்லாயிருக்கடி உன்னோட தாம்பத்ய வாழ்க்கை...! ட்ரான்ஸ்பர் வேண்டாம்ன்னு சொல்றதுதானே...?"
 "ஜி.எம் - எம்.டி - சேர்மன் எல்லார்கிட்டேயும் கெஞ்சிப் பார்த்துட்டேன். ஒண்ணு ட்ரான்ஸ்பர்ல போ... இல்லேன்னா ரிசைன் பண்ணுன்னு சொல்லிட்டாங்க..."
 "பாவிங்க... அவனவன் பொண்டாட்டியை... ட்ரான்ஸ்பர் பண்ணிகக்காய வெச்சாத்தான்... அந்த ஆபீஸர்களுக்குப் புத்தி வரும்... சரி... நீ சாப்பிட்டியா...?"
 "நான் மொதல்ல குளிக்கணும்..."
 "என்னோட ரூமுக்குப் போயிடலாம் வா... பாத்ரூம் உள்ளேயே இருக்கு... உனக்கு சரியா அரைமணி நேரம் தர்றேன்... குளிச்சு டிரஸ் பண்ணி ரெடியாகி டைனிங் டேபிளுக்கு வந்துடணும்... நான் போய் டிபனை ஃபிரிபேர் பண்ணனும்..."
 "ஏன் வீட்ல சமையலுக்கு ஆள் இல்லையா?"
 "இல்லை... அவர்க்கு எல்லாமே... நான்தான் பண்ணனும்..."
 "கல்யாணமாகி ஒரு வருஷம் இருக்குமா?"
 "வர்ற இருபத்தஞ்சாம் தேதியோட ஒரு வருஷம் முடியப்போகுது மேகலா. அந்த வெட்டிங் அனிவர்சரியை பிரமாதமா கொண்டாடப்போறோம்..."
 "என்னிக்கு? இருப்பத்தாஞ்சாம் தேதியா?""இன்னும் பத்து நாள் இருக்கு... என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அம்ருதா... உன்னைப் பார்க்கும்போதே... நீ ரொம்பவும் சந்தோஷமா இருக்கிறமாதிரி தெரியுது... ஏதாவது உண்டாகியிருக்கியா?"
 "இன்னும் இல்லை..."
 "ஏன்...?"
 "ஒரு வருஷம் ஜாலியா இருக்கலாம்ன்னு சொன்னார்..."
 "அப்போ... இருபத்தஞ்சாம் தேதியிலிருந்து தான் சின்சியரா ட்ரை பண்ணப் போறீங்க போலிருக்கு..."
 "ச்சீ... போடி... வந்ததும் வராததுமா... கெட்ட வார்த்தை பேசிகிட்டு... ஆமா... என்னை... இவ்வளவு தூரம் சீண்டறியே...? அவ்விடத்தில எப்படி...? விசேஷமா...?"
 மேகலா கசப்பாய் புன்னகைத்தாள்.
 "என்னடி... கேட்டதுக்கு பதில் சொல்லாமே... சிரிக்கிறே...?"
 "வந்ததும் வராததுமா உனக்கு அதிர்ச்சி தரக கூடாதுன்னு பார்க்கிறேன்..."
 "ஏய்... நீ என்னடி சொல்றே?"
 "நான் இந்த ரெண்டு வருஷத்துல நாலு தரம் விசேஷமாகி... வேணுமின்னே அபார்ஷன் பண்ணிகிட்டவ..."
 "மே... க... லா..."
 "இன்னிக்கு ராத்திரி நான் உன்கிட்டே பேசணும் அம்ருதா... நிறைய பேசணும்... அதுல சில விஷயம் உனக்கு அதிர்ச்சியாவும் இருக்கலாம்..."
 பார்வையை எங்கோ நிலை நிறுத்திக் கொண்டு எந்திரத்தனமாய் உதடுகளை அசைக்கும் மேகலாவைக் கொஞ்சம் பயத்தோடு பார்த்தாள் அம்ருதா
 "ஆமா..."

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 9, 2023
ISBN9798223532071
அரை விநாடி அநியாயம்

Read more from Rajeshkumar

Related to அரை விநாடி அநியாயம்

Related ebooks

Related categories

Reviews for அரை விநாடி அநியாயம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அரை விநாடி அநியாயம் - Rajeshkumar

    1

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு திருச்சியில் மழை பெய்து ரோடுகள், ரோட்டோர மரங்கள் நனைந்து கொண்டிருந்த ஒரு ராத்திரி நேரம். மணி ஒன்பதே கால்.

    காவேரியில் படம் முடிந்து போயிருக்க பாடாவதி படம் பார்த்த எரிச்சலில் ஜனங்கள் தூறுகிற மழையில் நனைந்து கொண்டே ரிக்ஷாக்களையும் ஆட்டோக்களையும் தேடினார்கள். சினிமாவுக்கு நச்சரித்துக் கூட்டி வந்த மனைவி மேலும் குழந்தைகள் மேலும் வெறி நாய் மாதிரி ‘வள்’ளென்று எரிந்து விழுந்தார்கள்.

    இந்த படத்துக்கு வந்ததற்குப் பதிலாக வீட்ல உட்கார்ந்து டி.வி. நாடகத்தையாவது பார்த்திருக்கலாம்...? ஏண்டி டப்பிங் படம்ன்னு மொதலியே சொல்றதுக்கு என்ன கேடு...? அம்பது ரூபா... தண்டம்...

    வழுக்கைத் தலையில் கர்ச்சீப்பை போட்டு ரிக்ஷாவைத் தேடிக் கொண்டிருந்த அந்த ஆசாமி தன் நோஞ்சான் மனைவியைப் பார்த்து சத்தம் போட - அவள் பதிலுக்கு

    அனு ராதாவோட டான்ஸை மட்டும் வாயைப் பொளந்துகிட்டு பார்த்தீங்களே... அப்போ இந்த அம்பது ரூபா தண்டம்ன்னு உங்களுக்கு தோணலையா...? என்று கேட்க

    அவளுடைய கணவன் முறைத்தான்.

    கோபால்ட் நிற பியட் காருக்குள் உட்கார்ந்து ஜனங்கள் போகட்டும் என்று காத்திருந்த அம்ருதாவும், ரமணனும் மேல் பாராவில் நடை பெற்ற கணவன் மனைவி பேச்சைக் கேட்டு விட்டு ஒருத்தரையொருத்தர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.

    நிறைய கணவன் - மனைவிகள் இப்படி தான் இருக்காங்க...

    எதனாலே இப்படி...?

    ஒரு காம்ப்ளக்ஸ் தான்.

    என்ன காம்ப்ளக்ஸ்...?

    சினிமாவில வர்ற ஹீரோ... கார்ல போவான். அவனுக்கு அழகான ஒரு காதலியிருப்பா. கலர் கலரா ட்ரஸ் போட்டுட்டு ஒடுவான் ஆடுவான். ஆடம்பரமான பங்களாவில் சொகுசா இருப்பான்... இதையெல்லாம் சினிமாவில் பார்க்கிற ஆண்களோட அடி மனசுல சபலம் படியும்... எரிச்சலும் கிளம்பும்... தன்னோட அழகில்லாத பெண்டாட்டி மேலே எரிஞ்சு விழுவான்...

    அம்ருதா சிரித்தாள்.

    உங்களுக்கும் அப்படிப்பட்ட காம்ப்ளக்ஸ் வருமா?

    வராது...

    ஏன்...?

    என்னோட அம்ருதாவுக்கு முன்னாடி இப்ப இருக்கிற நடிகைகளெல்லாம் தூசி மாதிரி...! இந்த ரோஜா நிறம் யார்க்கு இருக்கு...? இந்த திராட்சை கண்ணு எவகிட்டே இருக்கு...? இந்த செர்ரி நிற உதடு... இந்த அமுல் வெண்ணெய் கன்னம்... இந்த வழவழ கழுத்து... இந்த... இந்த...

    போதும்... போதும்... கழுத்துக்குக் கீழே போகாதீங்க... காரை நகர்த்துங்க... எல்லாரும் போயாச்சு... - அம்ருதா சொல்ல,

    காரை நகர்த்தினான் ரமணன். வைப்பர்கள் இயங்கி கண்ணாடியில் பட்ட நீரை வழித்து வழித்துப்போட்டது.

    அம்ருதா...

    வீட்டுக்குப் போற வழியிலதானே ப்ரியா பிரிண்டர்ஸ் இருக்கு...?

    ஆமா...

    ஒரு நிமிஷம் காரை அங்கே நிறுத்தி நம்ம வெட்டிங் அனிவர்ஸரி இன்விடேஷன் கார்ட்ஸை வாங்கிட்டுப் போயிடலாமா? நாளையிலிருந்து எல்லார்க்கும் அழைப்பு கொடுக்க ஆரம்பிச்சுடணும்...

    என்னங்க?

    ம்...

    நான் ஒண்ணு சொன்னா கோபிச்சுக்க மாட்டீங்களே...?

    இந்தக் கல்யாணமான ஒரு வருஷத்துல நான் என்னிக்கு உம்மேல கோபப்பட்டிருக்கேன்? மை ஸ்வீட் ஹனி... நீ என்ன சொன்னாலும் எனக்கு கோபம் வராது...

    இந்த வெட்டிங் அனிவர்சரி அவசியம் தானா...? நம்ம கல்யாண நாளை நாம ரெண்டு பேர் மட்டுமே கொண்டாடினா போதாதா?... அம்பது அறுபது பேரைக் கூப்பிட்டு விருந்து வெச்சுத்தான் கொண்டாடணுமா...?

    பின்னே எப்படிக் கொண்டாடலாம்? நீயே சொல்லு...

    கார், தில்லை நகர் போகும் ரோட்டில் திரும்பியது. ரோட்டோரத்தில் தேங்கி நின்றிருந்த மழை நீரை ‘ச்சல்ல்’ என்று சிதறடித்தது

    கார் இயல்புக்கு வந்ததும் அம்ருதா சொன்னாள்

    கல்யாண நாளன்னிக்கு நாம் ரெண்டு பேரும் காலையிலே குளிச்சதுமே கோயிலுக்குப் போகப் போறோம்... மத்தியானம் ஏதாவது ஒரு ஹோட்டலில் லஞ்ச். அது ஒரு ஸ்டார் ஹோட்டலாகவும் இருக்கலாம். சாப்பிட்டு விட்டு ரெஸ்ட்... சாயந்தரம் மலைக்கோயிலுக்குப் போகிறோம்...

    நோ... ஹனி! இவ்வளவு சிம்பிளா நம்ம கல்யாண நாள் கொண்டாட்டம் இருக்கக்கூடாது. இது நம்ம முதலாண்டு கல்யாண நாள் கிரேண்டாத்தான் இருக்கணும்... இந்த, வருஷம் என்னோட இஷ்டப்படி கொண்டாடுவோம் அடுத்த வருஷம் உன்னோட இஷ்டப்படி கொண்டாடுவோம்... ஓ.கே...?

    ம்... ம்... அவன் தோள் மேல் சாய்ந்தாள் அம்ருதா.

    கார் வேகம் பிடித்து திருச்சியின் நான்கைந்து குறுகலான தெருக்களில் டயர்களை தேய்த்து அந்தப் ப்ரியா பிரிண்டர்ஸ் கட்டிடத்திற்கு முன்னால் நின்றது. காரைப் பார்த்ததுமே பிரிண்டிங் செக்ஷனில் இருந்த அந்த இளைஞன் மழையில் குடை பிடித்துக் கொண்டு ஓடி வந்தான்.

    என்னப்பா... கார்ட்ஸ் இன்னிக்காவது கிடைக்குமா?

    ரெடியாயிடுச்சு ஸார்... பேக் பண்ணித் தரட்டுமா?

    குடு...

    அவன் மறுபடியும் உள்ளே ஓடி... ஐந்து நிமிஷம் கழித்து ஒரு சின்ன பிரவுன் நிற பண்டலோடு ஓடி வந்தான். மேலே பில்லையும் வைத்துக்கட்டியிருந்தான்.

    பில்... எவ்வளவுக்கு போட்டிருக்கே?

    அம்பத்தேழு ரூபா... ஸார்...

    நூறு கார்டுதான் அடிச்சேன்... அதுக்கு அம்பத்தேழு ரூபாயா...?

    ‘ஜே.கே. போர்ட் பேப்பர் வாங்கி பிரிண்ட் பண்ணியிருக்கேன் ஸார்... அதான் ரேட் கொஞ்சம் கூட...

    சரி... இந்தா!

    பணத்தை எண்ணிக் கொடுத்து விட்டு காரை உசுப்பினான் ரமணன்.

    அம்ருதா பண்டலைப் பிரித்து ஒரு கார்டை உருவினாள்.

    இள நீல நிற கார்டில் மெஜண்டா எழுத்துக்கள் மின்னின.

    கார்டை அற்புதமாக பிரிண்ட் பண்ணியிருக்கான். கார்டை கண்ணில ஒத்திக்கலாம் போலிருக்கு...

    நம்ம செலக்ஷன் என்னிக்குமே பெஸ்ட் செலக்ஷன்தான்... சொல்லிவிட்டு தன் முழங்கையால் அம்ருதாவின் தோள்பட்டையை இடித்தான் ரமணன்.

    ரொம்பத்தான் வழியாதீங்க... காரைப் பார்த்து ஓட்டுங்க...

    சரி... உனக்கு எவ்வளவு கார்டு வேணும்...?

    எனக்கா...?

    ம்... உனக்குன்னு பிரண்ட்ஸ் இருப்பாங்கள்ல...?

    எனக்கு இந்த ஊர்ல பிரண்ட்ஸ் அஞ்சே அஞ்சு பேர்தான்.

    யார்... யாரு...?

    செல்வமணி, மதியரசி, செல்வி, மலர்க்கொடி, லதா... இதுல செல்விக்குக் கல்யாணம் முடிஞ்சு ஹைதராபாத் போயிட்டா...

    வெளியூர் பிரண்ட்ஸ்...?

    "மெட்ராஸ்ல மேகலான்னு ஒருத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1