Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cricket Raathiri
Cricket Raathiri
Cricket Raathiri
Ebook102 pages34 minutes

Cricket Raathiri

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு நபர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை கடத்த முயற்சி செய்கின்றனர்.

சக நடிகையின் புகழை கண்டு பொறாமை கொண்டு அத்தகைய புகழுக்கு போட்டியிடும் நடிகை.

போலீஸிடம் கடத்தலுக்கு விலை பேசும் கடத்தல்காரர்கள். அவர்கள் கேட்ட பணம் கிடைத்ததா? போலீஸாரின் வல்லமை ஜெயித்ததா?....... கதையுடன் பயணித்து பாருங்கள்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580100906650
Cricket Raathiri

Read more from Pattukottai Prabakar

Related to Cricket Raathiri

Related ebooks

Related categories

Reviews for Cricket Raathiri

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cricket Raathiri - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    கிரிக்கெட் ராத்திரி

    Cricket Raathiri

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    BOWLER 1

    WICKET KEEPER 2

    1st SLIP 3

    2nd SLIP 4

    3rd SLIP 5

    GULLY 6

    POINT 7

    COVER POINT 8

    EXTRA COVER 9

    SILLY MID-OFF 10

    SILLY MID-ON 11

    MID WICKET 12

    LONG ON 13

    LONG OFF 14

    LONG LEG 15

    FINE LEG 16

    LEG SLIP 17

    FIRST SHORT LEG 18

    SECOND SHORT LEG 19

    SQUARE LEG 20

    SHORT SQUARE LEG 21

    DEEP SQUARE LEG 22

    BACKWARD SHORT LEG 23

    BOWLER 1

    மாலை வெயில் நிழல்களை நீளமாக்கியிருந்தது. மரங்கள் இலை அசங்காமல் கப்சிப் என்றிருந்தன. செண்ட்ரி கதவு திறந்து விட...

    உள்ளே ஒரு முறைப் பார்த்து விட்டு மத்திய சிறைச்சாலையின் இரும்பு வாசலைத் தாண்டி வெளியே வந்தான் கிரண்.

    ஜீன்ஸ் பாண்ட்டும், கட்டம் போட்ட காட்டன் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தான். கண்களிலும், உதட்டிலும் அப்பட்டமாய் அலட்சியம் இருந்தது.

    முதல் காரியமாக சிகரெட் வாங்கிக் கொண்டான்.

    அடுத்த காரியமாக... அந்த மளிகை கடைக்குச் சென்று...

    சார், ஒரு போன் பண்ணிக்கலாமா?

    ஒரு ரூபா.

    எண் தடுமாற்றம் இல்லாமல் சுழற்றினான்.

    ஹலோ, ராவ் ஹியர்

    "ராவ், நல்லாருக்கியா? என் குரல் தெரியுதா?

    ஹேய் கிரண்! எப்ப வந்தே?

    பதினேழு நிமிஷமாச்சு.

    இன்னும் நாள் இருக்குன்னாங்களே...

    நன்னடத்தை!

    யாரு, நீயா? வெரிகுட் எங்கேர்ந்து பேசறே?

    ஒரு மளிகைக் கடையிலேர்ந்து

    எடம் சொல்லு. காரெடுத்துக்கிட்டு வர்றேன்

    வேணாம். நீ ஊர்ல இருக்கியான்னு தெரிஞ்சுக்கத்தான். போன் செஞ்சேன். நான் டாக்ஸி பிடிச்சு வர்றேன்

    அட்ரஸ் மாத்திட்டேன் கிரண். இப்போ நுங்கம்பாக்கம்.

    அட்ரஸ் சொல்லு. விசாரிச்சி வர்றேன்

    சொன்னான்.

    மனதில் குறித்துக் கொண்டான்.

    பார்ட்டி ஏற்பாடு செய்யட்டுமா?

    அனிதா, இனியா, சுரேகா...

    வேணாம், ராயல் சல்யூட் வச்சிருப்பியே?

    இருக்கு.

    போதும். வர்றேன். உனக்கு எதுவும் புரோக்ராம் இல்லையே?

    நீ போன் செய்றதுக்கு முன்னாடி வரைக்கும் இருந்தது. இப்ப கேன்சல். உன் கூட நிறைய பேசணும் நான்.

    நானும்தான். பேசலாம்.

    ஒரு ரூபாய் தந்து விட்டு நடந்தான்.

    கார்கள், சாலையில் ரயில் பெட்டிகளைப் போல வரிசையாய் தொடர்ந்து கொண்டு, தத்தம் குரல்களில் சப்தம் இரைத்துக் கொண்டிருந்தன.

    சுவர்களில் போஸ்ட்டர்கள் பார்த்தான். சில நடிகைகள் புது முகங்களாய்த் தெரிந்தனர். சாலை விளக்குகள் சட்டென்று கடமை துவங்க... ஒன்றிரண்டு லீவு போட்டிருந்தது.

    ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் பார்த்து நெருங்கினான்.

    யாருப்பா போகணும்? வேலு, நீயா?

    ஏறிக் கொண்டான். ஏரியா சொன்னான்.

    மீட்டரின் தலை கவிழ்க்கப்பட்டது. புறப்பட்டது.

    இரு பக்கமும் மாறி மாறி பார்த்துக் கொண்டே வந்தான்.

    மின்சாரம் பூசின கட்டிடங்கள். வேக வாகனங்கள். அவசர மக்கள்.

    அத்தனை இயக்கங்களின் ஆதார காரணமாக - பணம், வீடுகளாக - வைரங்கள் - பாங்க் காகிதங்களாக.......

    நுங்கம்பாக்கம் வந்ததும், தெருவின் பெயர் சொன்னான். வந்ததும் இறங்கிக் கொண்டான்.

    ஆட்டோ போனதும் நிமிர்ந்து பார்த்தான்.

    பரபரப்போ, சப்தமோ இல்லாத தெரு. ஏதோ ஒரு வீட்டின் மொவிஷன் இயங்கிக் கொண்டிருப்பது காற்றில் உணர முடிந்தது. கச்சிதமான வீடு, பக்கத்தில் காலி மனை காம்பௌண்ட்டுக்கு வெளியில் கறுப்பு அம்பாஸிடர் உள்ளே சங்கிலி கட்டின, இன்னும் குரைக்க ஆரம்பிக்காத, நாக்கு தொங்கும் ராஜபாளையம்.

    கறுப்பு, வெள்ளை பெய்ண்ட் அடித்த விக்கெட் கேட்டின் கொக்கி நீக்கித் திறந்தான். உள்ளே நடந்தான், ஒரே ஒரு சோம்பேறி ‘லொள்.' தீவிரப் பார்வை.

    வாசலுக்கு அருகில் உரச் சாக்குகளை இணைத்துத் தைக்கப்பட்ட உறை மாட்டிப் பதுங்கியிருந்தது ஒரு ஸ்கூட்டர்.

    மணி படம் வரைந்த சுவிட்சைத் தொட்டான்.

    நாய் இப்போது ரோஷமாய் குரலுயர்த்த...

    கதவு திறந்த ராவ், டேய், சும்மாரு என்றான். கிரணின் கையைப் பிடித்துக் கொண்டு, வாய்யா. கொஞ்சம் இளைச்சிட்டேம்மா"

    உள்ளே வந்ததும் கதவு மூடின ராவ் முழுக்கை சட்டை மேல், கை இல்லாத சிகப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்தான்.

    உக்காரு என்று ஸோபாவில் புத்தகங்களை ஒதுக்கினான்.

    அமர்ந்த கிரண்.

    Enjoying the preview?
    Page 1 of 1