Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Miss Aana Mister
Miss Aana Mister
Miss Aana Mister
Ebook104 pages37 minutes

Miss Aana Mister

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு ஜாலியான காமெடி நாவல்.

திருமணத்துக்கு முதல் நாள் மாலை கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளை மிஸ் ஆகிறார்.

வில்லன்களால் கடத்தப்படுகிறார்.

ஏன் கடத்தப்பட்டார்?

ஃப்ளாஷ் பேக்கில் அந்தக் காரணம் விரிகிறது. மாப்பிள்ளை மீண்டு வந்தாரா? திருமணம் நடந்ததா? தெரிந்து கொள்ளப் படியுங்கள். ‘மிஸ் ஆன மிஸ்டர்’

மொக்கை காமெடிக்கு நூறு சதவீத கியாரண்டி உண்டு.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580141510530
Miss Aana Mister

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Miss Aana Mister

Related ebooks

Related categories

Reviews for Miss Aana Mister

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Miss Aana Mister - Nandhu Sundhu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மிஸ் ஆன மிஸ்டர்

    (நகைச்சுவை நாவல்)

    Miss Aana Mister

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    திருமணத்துக்கு முதல் நாள் மாலை கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளை மிஸ் ஆகிறார். வில்லன்களால் கடத்தப்படுகிறார்.

    ஏன் கடத்தப்பட்டார்?

    ஃப்ளாஷ் பேக்கில் அந்தக் காரணம் விரிகிறது.

    மாப்பிள்ளை மீண்டு வந்தாரா? திருமணம் நடந்ததா?

    தெரிந்து கொள்ளப் படியுங்கள்.

    ‘மிஸ் ஆன மிஸ்டர்’

    மொக்கை காமெடிக்கு நூறு சதவீத கியாரண்டி உண்டு.

    நந்து சுந்து

    போன்: 94431 81615

    1

    அமிர்தா கல்யாண மண்டபத்தின் மணமகன் அறை. திருமணத்துக்கு முந்தைய நாள் பிற்பகல். மாப்பிள்ளை வாஞ்சி வஞ்சனையில்லாமல் தின்று விட்டு மல்லாக்க படுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய முழுப் பெயர் வாஞ்சிநாத ஸ்வாமி. அதை சுருக்கி வாஞ்சி என நண்பர்கள் வாஞ்சையுடன் அழைத்து வந்தார்கள்.

    மணப்பெண்ணின் பெயர் கோபிகா. அவனின் காதலி. அவள் அவனை வாஞ்சி என அழைக்க மாட்டாள். அதையும் சுருக்கி ‘வா’ என முதல் எழுத்தை மட்டும் வைத்து அழைப்பாள்.

    இங்கே பாரு வா. நான் வாஞ்சிங்கற பேர்ல இருக்கற முதல் எழுத்தை வைச்சு உன்னை ‘வா’ ன்னு கூப்பிடறேன். நீ என்னை எப்படி கூப்பிடப் போறே? என்றாள் அவனைக் காதலிக்க ஆரம்பித்தவுடன் கோபிகா.

    கோ ன்னு கூப்பிடறேன். உனக்கு ஒன்னும் கோபம் இல்லையே

    கோ அஹெட் என்று பச்சைக் கொடி காட்டினாள்.

    கல்யாண மண்டபம் வாசலில் கூட வா Weds கோ என்று போர்ட் வைத்து விட்டான் வாஞ்சி. கல்யாணத்துக்கு வா என்று சொல்கிறானா இல்லை Go என்று சொல்கிறானா என பாதி பேர் குழம்பிப் போய் நின்றார்கள்.

    அமிர்தா கல்யாண மண்டபம் ஊருக்கு வெளியே தேவர் காலனியில் இருந்தது. அசுரர் காலனியில் அல்ல. மண்டபம் வாசலில் அமிர்தா கேட்டரிங் சர்வீஸஸ் என்று ஒரு பேனர் இருந்தது. A to Z கல்யாண சர்வீஸஸ் என்று இருந்தது. A ல் ஆரத்தி எடுப்பார்கள். Z ல் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை.

    இரவு ஏழு மணிக்கு ரிசப்ஷன் ஆரம்பம். இப்போது மணி நான்கு. கொஞ்சம் கொஞ்சமாக உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

    வாஞ்சியின் சித்தப்பா குடும்பம் பெட்டிகளுடன் நுழைந்தது.

    என்ன இது? ஊருக்கு இவ்வளவு வெளில இருக்கு மண்டபம்? என் வீட்லேந்து வர்ரதுக்கு ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சு. ஏன் இந்த மண்டபத்தை எடுத்தே? என்று அலுத்துக் கொண்டார் சித்தப்பா.

    வேற மண்டபம் கிடைக்கல்லே என்றார் வாஞ்சியின் அப்பா.

    சுத்திலும் பாம்பு நிறைய இருக்கும் போல இருக்கே. கடிச்சுத் தொலைச்சா என்ன ஆகறது?

    ஒன்னும் ஆகாது. மண்டபம் பேர் பாரு. அமிர்தா கல்யாண மண்டபம்

    சித்தப்பா கோபத்துடன் உள்ளே போனார். நடுக் கூடத்தில் துண்டை விரித்து சாய்ந்தார். மேலே மின் விசிறியிலிருந்து சரியாகக் காற்று வரவில்லை.

    நேராக மண்டப மேனேஜர் ரூமுக்குப் போனார்.

    சார் என்று கூப்பிட்டார்.

    என்ன?

    மூனாவது ஃபேன் ஸ்பீடா ஓடல்லே

    ரெகுலேட்டரைப் பிடிச்சு வேகமா திருகுங்க

    திருகினேன். ரெகுலேட்டரை விட ஃபேன் ஸ்லோவா சுத்துது

    ஃபேனுக்கு பக்கத்துல போங்க சார்

    அதுக்கு தூக்குல தான் தொங்கனும். அட போய்யா என்று வாசலுக்குப் போனார் சித்தப்பா.

    ஒரு தண்ணீர் லாரி வந்திருந்தது. லாரிக்காரர் சித்தப்பாவிடம் பேச ஆரம்பித்தார்.

    போயிடாதீங்க சார். நைட் டின்னர் சூப்பரா இருக்கும். ருமாலி ரொட்டியும் பன்னீர் பட்டர் மசலாவும் அமிர்தா கேட்டரிங்க்ல நல்லா இருக்கும்

    அப்படியா?

    ஆமா... சீரியல் லைட் போடறவரைக் கேளுங்க. இதையே தான் சொல்லுவாரு

    ஆக மொத்தம் மண்டபம் புக் செய்தவர்கள் கணக்கில் அந்த ஏரியா வாசிகள் அனைவரும் ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தார்கள் என்று புரிந்தது.

    வாஞ்சிக்கு வாட்ஸ் அப் மெஸ்ஸேஜ் வந்தது. பார்த்தான். கோபிகா தான் அனுப்பியிருந்தாள்.

    என்ன பண்றே வா?

    சும்மா தான் படுத்துகிட்டிருக்கேன் கோ

    இன்னும் ரெடியாகல்லியா? ஏழு மணிக்கு ரிசப்ஷன்

    ஆயிடுவேன்

    சரி. சும்மா சும்மா மெஸ்ஸேஜ் அனுப்பாதே வா

    நீ தான் இப்போ அனுப்பினே கோ

    சரி வா. மேடைல சந்திக்கலாம்

    வாஞ்சியின் அம்மா வந்தாள்.

    டேய். உன்னைப் பாக்க யாரோ வந்திருக்காங்க என்றாள்.

    உயரமாக ஒருவர் வந்தார். வாஞ்சியிடம் கையை நீட்டினார்.

    நான் சாரங்கன். கோபிகாவோட மாமா. போலீஸ்ல டி.எஸ் பி யா இருக்கேன்

    அப்படியா? நான் உங்கள எந்த சிக்னல்லயும் பாத்ததே இல்லையே?

    மீசை இல்லாத பால் வடியும் முகத்துடன் சிரித்தார் அந்தப் போலீஸ்.

    நான் க்ரைம் ப்ராஞ்ச்

    பொய் சொல்லாதீங்க சார். ரைம் ப்ராஞ்ச் மாதிரி இருக்கீங்க

    சிவில் ட்ரெஸ்ல இருக்கேனேன்னு பாக்க வேணாம். வண்டில யுனிபார்ம் இருக்கு. வாக்கி டாக்கி கூட இருக்கு. எப்போ வேணும்னாலும் போலீஸா மாறுவேன்

    கூறி விட்டு அவர் போய் விட்டார்.

    அம்மாவும் அப்பாவும் வந்தார்கள்.

    என்னடா... சும்மா உக்காந்துகிட்டிருக்கே. போய் ஷேவ் பண்ணிக்கோ. குளி

    "ஹா...

    Enjoying the preview?
    Page 1 of 1