Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mr. X Siri Kadhaigal - Part 1
Mr. X Siri Kadhaigal - Part 1
Mr. X Siri Kadhaigal - Part 1
Ebook193 pages1 hour

Mr. X Siri Kadhaigal - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மிஸ்டர் எக்ஸ் - வயது 60+. ஒரு அப்பாவி, அதே நேரத்தில் கொஞ்சம் குசும்பு பிடித்தவர். அவர் மனைவி எக்ஸெல். மிஸ்டர் எக்ஸை விட சற்றே புத்திசாலி. இருவருக்கும் பெயர் உண்டா? உண்டு. ஆனால் இந்தக் கதைகளில் இல்லை. இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி கலாட்டாக்கள் தான் இந்தக் கதைகள். குமுதம் பத்திரிக்கையில் வெளியான 80 மிஸ்டர் எக்ஸ் கதைகளில் முதல் 20 கதைகளின் தொகுப்பு இது. படியுங்கள், மனம் இலகுவாகும்.

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580141510528
Mr. X Siri Kadhaigal - Part 1

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Mr. X Siri Kadhaigal - Part 1

Related ebooks

Related categories

Reviews for Mr. X Siri Kadhaigal - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mr. X Siri Kadhaigal - Part 1 - Nandhu Sundhu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மிஸ்டர் எக்ஸ் சிரி கதைகள் - பாகம் 1

    Mr. X Siri Kadhaigal - Part 1

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    பொருளடக்கம்

    வாங்க பழகலாம்

    அறை எண் 108 ல் பேய்

    ஐயா... என் சீட்டைக் காணோம்...

    கால் கிலோ கருப்புப் புளி...

    சுத்தித் சுத்தி வந்தீக...

    சோபா ஃபார் சேல்...

    பென்சிலின் ‘செல்’வன்

    இத்துடன் கோர்ட் கலைகிறது

    கனவின் மாயா லோகத்திலே...

    ஆர்கானிக் ஆனந்தி

    ஒரு நாள் ரவுடி

    பூச்சி விரட்டு

    போட்டி மன்றம்

    எங்க ஏரியா... உள்ளே வராதே...

    குளிக்காதீங்க...

    என்னமோ நடக்குது... மர்மமாய் இருக்குது...

    கொங்கு நாட்டுப் பொங்கல்

    காதல் சனி ரசமே...

    மஞ்சள் மகிமை

    துப்பறியும் திலகம்

    இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து மிஸ்டர் எக்ஸ் கதைகளும் குமுதம் இதழில் பிரசுரமானவை.

    முதலில் மிஸ்டர் எக்ஸ் கதைகளை Face book-ல் தான் எழுதிக் கொண்டிருந்தேன். குமுதம் ஆசிரியர் அமரர். திரு. ப்ரியா கல்யாணராமன் அவர்கள் அவைகளைப் படித்துவிட்டு குமுதத்தில் எழுதுமாறு பணித்தார்.

    அவ்வாறு ஆரம்பித்து எழுதப்பட்ட கதைகள் தான் இவை. குமுதத்தில் தொடர்ந்து 80 மிஸ்டர் எக்ஸ் கதைகள் பிரசுரமாகின.

    அதில் ஒன்று முதல் இருபது வரையான இருபது கதைகள் அடங்கிய தொகுப்பு தான் இந்த நூல். எல்லாமே கலகலப்பான நகைச்சுவைக் கதைகள் தான்.

    என் எழுத்துகளுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரம் கொடுத்த குமுதம் பத்திரிகைக்கும், அவை வெளியான சமயம் படித்து நல்லாதரவு வழங்கிய வாசகர்களுக்கும் நன்றி.

    இந்நூலை சிறப்பான முறையில் வெளிக் கொணர்ந்திருக்கும் புஸ்தகாவுக்கு நன்றி.

    அன்பன்

    நந்து சுந்து

    போன்: 94431 81615

    வாங்க பழகலாம்

    வாசல் கதவு தட்டப்பட்டது. ஓடிப் போய்க் கதவைத் திறந்தார் எக்ஸெல். அது நடந்து போய் கதவைத் திறப்பது போல இருந்தது.

    யார் வாசல்ல? என்றார் மிஸ்டர் எக்ஸ். அவர் பழைய செய்தித்தாள்களை அடுக்கிக் கொண்டிருந்தார். ஒரு பேப்பரில் படையப்பா படத்தின் விமரிசனம் வந்திருந்தது.

    "அமேசான்லேந்து ஒரு பையன் வந்திருக்கான்.

    சவுத் அமெரிக்காலேந்து நடந்தே வந்திருக்கானா? அடப் பாவமே?

    அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்லேர்ந்து வந்திருந்தான். இந்தாங்க டப்பா... இவ்வளவு கனமா இருக்கே? என்ன ஆர்டர் செஞ்சீங்க? இப்போ சாணத்துல வறட்டி கூட விக்கறாங்களாம்

    அதுக்கு கஸ்டமர் ரெவியூ வேற. அவனவன் வறட்டிக்கு ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் வேற கொடுக்கறான்

    சரி...சரி... டப்பாவை பிரிச்சுப் பாருங்க...

    டப்பாவைப் பிரிக்க சிசர்ஸைத் தேடினார். கிடைக்கவில்லை. திடீரென அமெரிக்காவிலிருந்து மகன் ஒய் கூப்பிட்டான்.

    அமேசான்லேந்து ஏதாவது டெலிவரி ஆச்சா? என்றான்.

    டெலிவரி ஆச்சு. இப்போ சிசேரியன் பண்ணனும். கத்திரியக் காணோம்

    அப்பா... அந்த பார்சல் உனக்குத்தான். பிரிச்சுப் பாரு. என்ன ஏதுன்னு அப்புறமா சொல்றேன் என்று போனை கட் செய்து தொடரும் போட்டான்.

    அவன் எப்போதும் இப்படித்தான். திடீரென தொடரும் போடுவான். எக்ஸெல் மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் போது பிறந்தவன்.

    டப்பாவைப் பிரித்தால் உள்ளே Hollow block செங்கல் மாதிரி ஒரு தெர்மோகோல் பாளம் இருந்தது. அதற்கும் உள்ளே ஒரு பெரிய காமிரா இருந்தது. கல்யாணவீட்டு சீர் மைசூர் பாக் சைஸுக்கு இருந்தது. ஒரு டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் காமிரா. கூடவே மூன்று லென்ஸ். சார்ஜர், மெமரி கார்ட் என்று ஏகப்பட்ட உதிரிகள் வேறு. பொன்னியின் செல்வன் சைஸுக்கு ஒரு user manual.

    என்ன இது? ஏதோ காமிரா மாதிரி இருக்கு? இதை பெர்முடாஸ் போட்ட பசங்க தானே தூக்கிகிட்டு திரிவாங்க. நமக்கு எதுக்கு?

    மறுநாள் மகன் ஒய் மறுபடியும் போன் செய்தான்.

    அப்பா...அந்த காமிராவைப் பாத்தியா? அது உனக்குத் தான்

    எனக்கா? அதை வெச்சிகிட்டு என்னடா பண்றது?

    அதுல போட்டோ எடுத்து பழகிக்கோ... இனிமே எந்த ஊருக்கு போனாலும் அதுல போட்டோ பிடிச்சு எனக்கு அனுப்பறே... வேணும்னா ஏதாவது போட்டோகிராபி க்ளாஸுக்குப் போ... இல்லேன்னா விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே கத்துக்கோ

    மறுபடியும் தொடரும் போட்டு விட்டான்.

    இதென்னா... இவ்வளவு பெரிய காமிரா வைச்சு என்னை போட்டோ பிடிக்கச் சொல்றான். இதுல வாசல் எது... புழக்கடை எதுன்னு கூட தெரியல்லியே என்று புலம்பினார் மிஸ்டர் எக்ஸ்.

    செல்போன் காமிராவில் போட்டோ எடுப்பதற்கே தடுமாறுபவர் அவர். காமிரா பட்டனை அமுக்க நினைத்து பலமுறை ஓலா பட்டனை அமுக்கி டாக்ஸி வீட்டு வாசலில் வந்து நின்றிருக்கிறது.

    ஏங்க, பையன் ஆசையா வாங்கி அனுப்பியிருக்கான். எப்படி எடுக்கனும்னு கேள்வி கேளுங்க... அவ்வையார் கேள்வி கேக்கல்லியா? வேலைப் பிடித்தது என்ன... வெண்ணீர் அணிந்தது என்னன்னு

    அவங்க அவ்வையாரா... இல்லே ஹவ்வையாரா?

    பையன் ஏதாவது க்ளாஸுக்கு போகச் சொல்றானே... போங்க என்றார் எக்ஸெல்.

    க்ளாஸா...நானா...நோ சான்ஸ்... இனிமே டீ க்ளாஸைக் கூடத் தொட மாட்டேன்...

    அடுத்த ப்ளாக்ல ஒரு மாமா இருக்காரு. எப்போப்பாத்தாலும் கழுத்துல காமிரா தொங்கும். கரப்பான் பூச்சியை எல்லாம் க்ளோஸ் அப்ல போட்டோ எடுத்துகிட்டு இருப்பாரு. அவர் கிட்டே கத்துக்குங்க

    அவர் பேர் என்ன?

    சாமிநாதன்...எல்லாரும் காமிராநாதன்னு கூப்பிடுவாங்க

    அன்று மாலை காமிராநாதன் வீட்டுக்கதவைத் தட்டினார் மிஸ்டர் எக்ஸ்.

    காமிராநாதன் வெட் க்ரைண்டரை போட்டோ பிடித்துக் கொண்டிருந்தார்.

    ஹை ஸ்பீட் போட்டோகிராபி. ஓடற க்ரைண்டர் நிக்கற மாதிரி போட்டோவுல தெரியும். பாருங்க என்று எடுத்த போட்டோவை வியூ ஸ்கிரீனில் காட்டினார்.

    முதல்ல ஸ்விட்சை போடுங்க சார்... கிரைண்டர் ஓடாம நிக்குது என்றார் மிஸ்டர் எக்ஸ்.

    ஹீ...ஹீ... இது தான் ஸ்டாண்ட் அப் காமெடி... ஆமா என்ன வேணும் உங்களுக்கு?

    நான் போட்டோகிராபி கத்துக்கனும்... நான் அடுத்த ப்ளாக்ல இருக்கேன் என்று கை கொடுக்க கையை நீட்டினார்.

    அவரின் கை பயங்கரமாக ஷேக் ஆகிக் கொண்டிருந்தது. இந்த சேக்கிழாருக்கு எப்படி போட்டோகிராபி கற்றுக் கொடுப்பது? இவர் ஸ்டில் போட்டோ எடுத்தால் கூட M TV வீடியோ ஆல்பம் மாதிரி ஏகத்துக்கும் ஆடுமே!

    கை ரொம்ப ஷேக் ஆகுதே... கைல ஜல்லடையக் கொடுத்தா அரிசி மாவை அஞ்சு நிமிஷத்துல ஜல்லிச்சிடுவீங்க போல இருக்கே

    அது பிரச்சினை இல்லே... நான் எப்படியாவது ஹாண்டில் பண்ணிக்கறேன்

    சரி... நான் சொல்லித்தரேன். நான் பீஸ் எல்லாம் வாங்கறதில்லே... இந்த மாச கரண்ட் பில் மட்டும் நீங்க கட்டிடுங்க

    சரி சார்...

    ரொம்ப புழுக்கமா இருக்கு. கொஞ்சம் இருங்க ஏ.சி போட்டு விடறேன்... பங்கஜம் அப்படியே அந்த பெட்ரூம் ஏசியும் ஆன் பண்ணிக்கோ

    ஏதாவது பவர் ஷட்டவுன் வரக்கூடாதா என்று ஏங்கினார் மிஸ்டர் எக்ஸ். தமிழ்நாட்டை மின்சார மிகை மாநிலமாக யார் மாற்றச் சொன்னது?

    சரி... காமிரா கொண்டு வந்தீங்களா?

    இல்லையே

    "போய்க் கொண்டு வாங்க.

    கிளம்பும் முன் மிஸ்டர் எக்ஸ் தயங்கினார்.

    அந்த ஏசி ஆப் பண்ணிடலாமே

    இல்லே. ஏசி பக்கத்துல தயிர் வெச்சிருக்கேன். இல்லேன்னா புளிச்சிப் போயிடும்

    மிஸ்டர் எக்ஸ் காமிராவை திருப்பிக்கொண்டு வரும்போது காமிராநாதன் வீட்டு இரண்டு பாத் ரூமிலும் வாட்டர் ஹீட்டர் ஆன் செய்திருந்தது.

    முதல்ல காமிராவை எப்படி பிடிச்சிக்கனும்னு சொல்றேன்... இடது கை வயித்துல இருக்கனும்

    கைய எப்படி வயித்துக்குள்ள விடறது?

    நாம என்ன எண்டாஸ்கோபியா எடுக்கறோம். வயித்துல இடது முழங்கைய அழுத்திப் பிடிச்சிக்கனும். அப்போ தான் ஸ்டெடியா இருக்கும். இடது கை விரல் அஞ்சும் லென்ஸ் கீழே இருக்கனும். வலது கைய க்ளிக் பட்டன் மேல வைக்கனும்

    அவர் சொன்ன மாதிரியே மிஸ்டர் எக்ஸ் வைத்துக் கொண்டார். பானையை கவிழ்த்து பிடித்துக் கொண்டிருக்கும் காவிரித் தாய் மாதிரி இருந்தது அவர் போஸ்.

    இப்போ வியூ ஃபைண்டர்ல பாருங்க... என்ன தெரியுது

    ஏ.சி ரொம்ப நேரமா ஓடிகிட்டு இருக்கறது தெரியுது

    அந்த மூலைல ஒரு பூத் தொட்டி தெரியுது பாருங்க. அதைப்பாத்து க்ளிக் பண்ணுங்க

    மிஸ்டர் எக்ஸ் க்ளிக்கினார்.

    என்ன பூத்தொட்டி விழுந்ததா?

    விழல்லயே... வேணும்னா போய்த் தள்ளி விட்டுடட்டுமா

    காமிராவை வாங்கிப் பார்த்தார் காமிராநாதன்.

    என்ன சார்... லென்ஸ் மூடியக் கழட்டவே இல்லே

    இல்லே... லென்ஸ் அழுக்கு ஆயிடும்னு தான் கழட்டல்லே

    சரி... மூடிய கழட்டிட்டு இன்னொரு தடவை காமிராவைப் பிடிங்க... இதென்ன சார்... காமிரா கைல சரியாவே நிக்க மாட்டேங்குதே

    அது Nikkon காமிரா சார். சரியா நிக்காது

    ஓ.கே... நான் அந்த சுவத்தோரமா போய் நிக்கறேன். என்னை க்ளிக் பண்ணுங்க. ஜஸ்ட் aim and shoot

    Shoot பண்ணனும்னா டெபுடி தாசில்தார் யாராவது ஆர்டர் கொடுக்கனுமே

    பட்டனை அமுக்குங்க சார்

    மிஸ்டர் எக்ஸ் க்ளிக் பட்டனை அமுக்கினார்.

    ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தார். புகையிலிருந்து வந்த பூதம் மாதிரி கலங்கலாகத் தெரிந்தார்.

    அடடா... அவுட் ஆப் போகஸ். நீங்க செட்டிங் manual-ல வெச்சிருக்கீங்க... Beginners-க்கு அது ஆகாது. நீங்க auto-ல எடுங்க

    இப்போ நான் ஆட்டோவுக்கு எங்கே போவேன்? எல்லாரும் ஸ்டாண்ட்ல தந்தி பேப்பர் படிச்சிகிட்டு இருப்பாங்களே

    இங்கே வாங்க... இந்த டயலைத் திருகுங்க. ஆட்டோனு போட்டிருக்கு பாருங்க. அந்த இடத்துல நிறுத்துங்க

    இப்போ என்ன செய்யனும்?

    ஒன்னும் செய்ய வேணாம். எல்லா செட்டிங்கும் காமிராவே பாத்துக்கும்

    பாத்ரூம் வாட்டர் ஹீட்டரை ஆப் பண்ணுமா?

    நீங்க கீழே போங்க... இதே ஆட்டோ செட்டிங்க்ல போய் அபார்ட்மெண்ட்ல பாக்கறதை எல்லாம் படம் பிடிங்க

    அதுக்குத்தான் சி.சி.டி.வி காமிரா இருக்கே

    செடி, கொடி எல்லாம் எடுங்க சார்... அப்புறம் நாளைக்கு வாங்க... இன்னும் அட்வான்ஸ் செட்டிங் எல்லாம் சொல்லித் தரேன்

    கீழே போனார். ஒரு குப்பை தொட்டி இருந்தது. அதை க்ளோஸ் அப்பில் போட்டோ பிடித்தார்.

    என்ன சார் பண்றீங்க? என்றார் செக்யூரிட்டி.

    "குப்பைய படம் பிடிக்கறேன்... பிடிச்சு National Garbage Channel-க்கு அனுப்பப் போறேன்.

    வீட்டுக்குப் போனதும் எக்ஸெல் செய்திருந்த எலுமிச்சை சாதத்தை போட்டோ பிடித்தார். அது தேங்காய் சாதம் மாதிரி கறுப்பு வெள்ளையில் வந்தது. பின்னர் பார்த்தால் Black and white செட்டிங்கில் இருந்தது காமிரா.

    ஓ... இப்படிக் கூட தேங்காய் சாதம் செய்யலாமா என்று அக மகிழ்ந்தார்.

    திடீரென்று போய் வாஷிங் பவுடரை போட்டோ பிடித்தார்.

    என்ன பண்றீங்க?

    Ariel shot எடுக்கறேன்

    மறுநாள் மறுபடியும் காமிராநாதன் வீட்டுக்குப் போனார்.

    ஏ.சி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது.

    முதல்ல அபர்ச்சர் செட்டிங் பத்தி பாக்கலாம்

    அப்பச்சியை செட் செய்வது பற்றி பேசுகிறாரே... பிரச்சினை ஏதாவது வந்து விடுமா என்று பயந்தார் மிஸ்டர் எக்ஸ்.

    "அபர்ச்சர்ங்கறது லென்ஸ் ஓபனிங்... அது பெரிசா இருந்தா லைட் நிறைய

    Enjoying the preview?
    Page 1 of 1