Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mura Penn
Mura Penn
Mura Penn
Ebook151 pages57 minutes

Mura Penn

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த கதையின் தலைப்பை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். முறப் பெண். முறைப் பெண் அல்ல.

இந்தக் கதை ஒரு விபரீதமான கற்பனை. ஒரு முறையில்லாத கற்பனை. ஒரு முறத்தின் சரித்திரத்தைக் கூறுகிறது.

இந்தக் கதையில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் ஓசோன் ஒட்டைகளை விடப் பெரியது. தயவு செய்து அவைகளைப் பொருட்படுத்தாமல் படிக்கவும். ஜாலியாக எழுதப்பட்ட கதை இது.

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580141510469
Mura Penn

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Mura Penn

Related ebooks

Related categories

Reviews for Mura Penn

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mura Penn - Nandhu Sundhu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    முறப் பெண்

    (நகைச்சுவை நாவல்)

    Mura Penn

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    இரண்டாம் நாமகரணம்

    சிவா - தி டெய்லர்

    என்னுரை

    ஒரு நகைச்சுவை நாவலுக்கு என்னுரை எல்லாம் அனாவசியம்.

    பெரிதாக ஆராய்ச்சி செய்தா எழுதுகிறோம்? நாவலுக்கான பின் புலம் பற்றி எல்லாம் விவரிக்க!

    இருந்தாலும் படிப்பதற்கு புகும் முன் கதையைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்வது மனதைத் தயார்ப்படுத்திக் கொள்ள உதவும் என்பதால் இந்த என்னுரை.

    இந்த கதையின் தலைப்பை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். முறப் பெண். முறைப் பெண் அல்ல.

    இந்தக் கதை ஒரு விபரீதமான கற்பனை. ஒரு முறையில்லாத கற்பனை. ஒரு முறத்தின் சரித்திரத்தைக் கூறுகிறது.

    இந்தக் கதையில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் ஓசோன் ஓட்டைகள விடப் பெரியது. தயவு செய்து அவைகளைப் பொருட்படுத்தாமல் படிக்கவும்.

    கனமாக எழுதி யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று ஜாலியாக எழுதப்பட்ட கதை இது.

    விமானத்தில் ஆட்டோ பைலட் என்ற ஒரு பதத்தை உபயோகிப்பார்கள். விமானி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க விமானம் அதுவாகவே ஓட்டிக் கொள்ளும். அது போல் இந்த கதையும் அதுவாகவே நகரும்.

    ஆனால் கண்டிப்பாகப் போக வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்து விடும்.

    கதையில் ஹீரோ உண்டு. ஹீரோயின் உண்டு. கொசுறுக்கு வில்லியும் உண்டு.

    ஆங்காங்கே காமெடியும் உண்டு. முறப் பெண் கதையுடன் கூட கொசுறாக இரண்டு குட்டிக் கதைகளும் உள்ளன.

    ஒரே மூச்சில் படிக்க முடியா விட்டாலும் விட்டு விட்டுப் படிக்கலாம். E.M.I வசதி உண்டு.

    கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

    அன்பன்

    நந்து சுந்து

    போன்: 94431 81615

    1

    அடுத்தது என்ன? என்று டி.வியில் ஒரு க்ரைம் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.

    அடுத்தது டி.வியை ஆஃப் பண்றது தான் என்று டி.வியை அணைத்தான் கீர்த்தி. அம்மா கோகிலா பின்னால் வந்து அவன் முதுகை சுரண்டினாள்.

    எனக்கு பதில் வேணும் என்றாள்.

    பதில் வேணும்னா ஏதாவது பத்திரிகை கேள்வி பதிலுக்கு எழுதி அனுப்பு

    எப்படா கல்யாணம் பண்ணிக்கப் போறே?

    இப்படியெல்லாம் பத்திரிகைக்கு மரியாதை இல்லாம எழுதி அனுப்பக் கூடாது

    அவன் தலையில் ஓங்கிக் குட்டினாள் அம்மா.

    நாலு ஜாதகம் வந்திருக்கு. அஞ்சு போட்டோ வந்திருக்கு

    கணக்கு டேலி ஆகல்லியே?

    ஒரு பொண்ணு ரெண்டு போட்டோ அனுப்பியிருக்கு

    நல்ல வேளை. ரெண்டு பொண்ணு சேர்ந்து ஒரே போட்டோ அனுப்பல்லே

    கடைசி பொண்ணுது ரெண்டு போட்டோ இருக்கு. நேர் போஸ்ல ஒன்னு. சைட் போஸ்ல ஒன்னு

    அந்த பொண்ணு போட்டோவைக் காட்டு

    அம்மா கோகிலா ஓடிப் போய் இரண்டு போட்டோக்களை கொண்டு வந்தாள்.

    போட்டோவைப் பார்த்தான் கீர்த்தி.

    சைடு போஸ்ல சுமாராத்தான் இருக்கா என்றான்.

    நேர் போஸ்ல எவ்வளவு லட்சணமா இருக்கா பாரு

    அதுக்காக எப்போப் பார்த்தாலும் அவ முன்னால ஸ்ரெயிட்டாவே நின்னு பாத்துகிட்டிருக்க முடியுமா? நான் என்ன சிவன் கோவில் நந்தியா?

    ஆனாலும் உனக்குத் திமிர்டா

    பொண்ணு என்ன பண்ணுது?

    வீட்ல தான் இருக்குது

    வேலைக்கு போகல்லயா?

    வொர்க் ஃப்ரெம் ஹோம்டா

    ஐயோ... அப்போ தலை கூட வாராது

    ஐ.டில இருக்கு. நல்லா சம்பாதிக்குது. ஜாதகம் அம்சமா இருக்கு. இதோ பாரு ஜாதகம்

    இது நேர் போஸ் போட்டோவுக்கான ஜாதகம். சரி. சைட் போஸ் போட்டோவோட ஜாதகம் எங்கே?

    உதைப்பேன். பொண்ணு பிடிச்சிருக்கா?

    சுமாரா இருக்கு. யோசிக்கனும்

    அதெல்லாம் கிடையாது. அடுத்த வாரம் பொண்ணு பாக்கப் போறோம். என்னங்க இங்கே வாங்க. அடுத்த வாரம் பொண்ணு பாக்க வர்ரோம்னு சொல்லிட்டீங்க இல்லே? என்று உள்ளே பார்த்து கத்தினாள் அம்மா.

    ஆமா... ஆமா. சொல்லிட்டேன் என்று சொல்லிக் கொண்டே கையில் போனுடன் வந்தார் கீர்த்தியின் அப்பா வாசுதேவன்.

    அப்பா... ஏன் அதுக்குள்ளே சொன்னீங்க

    இதுக்குள்ள தான் சொல்ல முடியும். காதுக்குள்ள சொல்லனும்னா நேர்ல போய் தான் சொல்லனும்

    என்ன அவசரம்? முந்திரிக் கொட்டை நீங்க

    ஆமாம்டா. முந்திரிக் கொட்டை தான். அவங்க கேசரி செய்யனும்னா முந்திரி வாங்கனும். திராட்சை வாங்கனும். அதுக்கு டைம் கொடுக்க வேணாமா? பொண்ணு பாக்கப் போறப்ப கேசரில முழு முந்திரி போட்டிருந்தாங்கன்னா நான் உடனே ஓ.கே சொல்லிடுவேன் என்றார் அப்பா.

    சே... நீ அப்பா இல்லே... அல்ப்பா

    அது மட்டும் இல்லேடா. கேசரியை சாப்பிட்டா சானிடைஸர் பூசின மாதிரி கையெல்லாம் நெய் ஒட்டிகிட்டிருக்கனும் என்று கூடுதல் ஆசையை வெளியிட்டார் அப்பா.

    அம்மா குறுக்கிட்டாள்.

    விடுடா. அவர் எப்பவுமே இப்படித்தான். நெய் பிசாசு. அரிச்சுவடி படிக்கறப்பவே ஆனா... ஆவான்னாவுக்குப் பதிலா ஆனா... ஆவின்னானு படிச்சவரு. சொல்லுடா. பொண்ணு பாக்கப் போலாமா? நான் புடவை டிரை க்ளீனுக்கு கொடுக்கனும்

    டிரை க்ளீனுக்கு கொடுக்கறது இருக்கட்டும். முதல்ல பொண்ணோட ஜாதகத்தையும் சுய குறிப்பையும் என் கிட்டே கொடு. நான் ராத்திரி முழுக்க ஆராய்ச்சி செஞ்சிட்டு காத்தால சொல்றேன் என்றான் கீர்த்தி.

    இந்தா – எல்லாவற்றையும் கொடுத்தாள் அம்மா. நல்லா யோசிச்சு காத்தால சொல்லு

    அம்மா அடுக்களைக்குள் நுழைந்தாள்.

    என்னங்க... கடைலேந்து இட்லி மாவு வாங்கிட்டு வந்தீங்களே. எங்கே வைச்சிருக்கீங்க?

    கிரைண்டருக்குள்ளே வைச்சிருக்கேன் பாரு. இல்லேன்னா நீ கிரைண்டருக்குள்ளே வெங்காயத்தை வைச்சிடுவே

    அவர்கள் வீட்டில் கிரைண்டரை கப் போர்ட் மாதிரி தான் உபயோகித்து வந்தார்கள்.

    கீர்த்தி ஜாதகத்துடனும் போட்டோவுடனும் தன் அறைக்குள் புகுந்தான்.

    பெண்ணின் சுய குறிப்பைப் பார்த்தான்.

    பெயர்: ப்ரீத்தி

    வயது: 25

    கல்வித் தகுதி: பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் (94%) என்று ஆக்ஸிஜன் ரீடிங் போல ஏதோ போட்டிருந்தார்கள்.

    க்ளாஸ் டாப்பர் என்று வேறு இருந்தது.

    அவள் வேலை செய்யும் கம்பெனி பெயர் இருந்தது. வாங்கும் சம்பளம் இருந்தது. மாச சம்பளத்துக்குப் பதிலாக வருட சம்பளத்தைப் போட்டு ஜிகினா பூசியிருந்தார்கள். அவள் அப்பா சுந்தரவரதனின் போன் நம்பர் இருந்தது.

    வரதா... உன் போன் நம்பர் எனக்கெதற்கு? ப்ரீத்தியின் ப்ரி பெய்ட் நம்பர் சொல்லுடா என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

    எப்படியாவது அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு முறை ப்ரீத்தியை சந்தித்துப் பேசி விடுவது என முடிவெடுத்தான். அப்படியே தூங்கிப் போனான்.

    மறு நாள் காலை.

    அம்மா... நான் வாக்கிங் போறேன் என்று கிளம்பினான்.

    என்றுமில்லாமல் இன்று ஏன் வாக்கிங் போகிறான் என்று அம்மாவுக்குப் புரியவில்லை. வீட்டில் போன் பேசாமல் வெளியே போய் ரகசியமாக ப்ரீத்தியுடன் போனில் பேசி விட வேண்டுமென்பது தான் அவன் திட்டம்.

    அருகிலிருக்கும் பார்க் போனான். நிறைய பேர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். பலருக்கும் வயிறு அல்ட்ரா சிமெண்ட் கான்க்ரீட் மிக்சர் மாதிரி உப்பியிருந்தது. சில ஆன்டிகள் சுங்கிடி சேலை கட்டி ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டிருந்தார்கள்.

    சுய குறிப்பில் இருக்கும் ப்ரீத்தியின் அப்பாவுக்கு போன் செய்தான்.

    பக்கத்திலேயே எங்கோ ரிங் போகும் சத்தம் கேட்டது. அவனுக்கு முன்னால் ஒரு அறுபது வயது நபர் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். போனை எடுத்தார்.

    சுந்தரவரதன் ஹியர் என்றார்.

    ‘அட...  நாளைய மாமனார் இவர் தானா?’

    பக்கத்தில் இருக்கும் ஒரு மரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பேச ஆரம்பித்தான்.

    ஹலோ. நான் ப்ரீத்தி நம்பர் ட்ரை பண்ணேன். ஏதோ சுந்தரவரதன்னு சயின்டிஸ்ட் குரல் கேக்குது. ஸாரி. ராங்க் நம்பர்

    நான் ப்ரீத்தியோட அப்பா. சயின்டிஸ்ட் இல்லே. செக்சன் ஆபிசரா இருந்து ரிட்டயர் ஆனவன். நீங்க யார்?

    நான் ப்ரீத்தியோட ப்ராஜக்ட் லீடர். ஒரு ப்ராஜக்ட் உடனே முடிச்சாகனும். அவங்களை இந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லுங்க. அர்ஜன்ட். ஆஸ்திரேலியால ஒரு டெலிவரி இருக்கு

    கங்காருவுக்கா?

    சார். இதைமுடிக்கல்லேன்னா முப்பது பேருக்கு வேலை போயிடும்

    "இப்போ

    Enjoying the preview?
    Page 1 of 1