Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Varum Kaalam Vasantha Kaalam
Varum Kaalam Vasantha Kaalam
Varum Kaalam Vasantha Kaalam
Ebook131 pages47 minutes

Varum Kaalam Vasantha Kaalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆதன் சிற்பிகா தம்பதியினர் பெங்களூரில் வசித்து வருகிறார்கள். தன் தம்பியின் திருமணத்திற்காக ஆதன் சொந்த ஊருக்கு வருகிறான். அங்கு ஒரு பெண்ணை பார்த்து ஆதன் அதிர்ச்சி கொள்கிறான். யார் அந்த பெண்? ஆதனக்கும் அவளுக்கு என்ன சம்பந்தம்? இனி வரும் காலம் வசந்த காலமாக இருக்குமா? தொடர்ந்து படியுங்கள்.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580137110925
Varum Kaalam Vasantha Kaalam

Read more from R. Sumathi

Related to Varum Kaalam Vasantha Kaalam

Related ebooks

Reviews for Varum Kaalam Vasantha Kaalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Varum Kaalam Vasantha Kaalam - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வரும் காலம் வசந்த காலம்

    Varum Kaalam Vasantha Kaalam

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்? சூடான காபியை உதடு குவித்து உறிஞ்சியபடியே கேட்ட சிற்பிகாவை ஏறிட்டான் ஆதன்.

    சிற்பிகா!

    ஏற்றிருந்த பெயருக்கு ஏற்றாற் போல் வீற்றிருந்தாள் சிற்ப வளைவு நெளிவுகளுடன்.

    கல்லால் செய்த சிற்பமல்ல சிற்பிகா. செல்லால் செய்த சிற்பம். எல்லா அழகும் இவளுக்கே என்பதைப் போல் இறைவன் அள்ளிக் கொடுத்துவிட்டான்.

    ஞாயிற்றுக் கிழமையாதலால் தலைக்குளித்திருந்ததால் தன் இஷ்டத்திற்கு விரிந்து பறந்துக் கொண்டிருந்தது கூந்தல். தோட்டத்து காலை நேரத் தென்றல் துவட்டாமல் விட்ட மச்ச மீத ஈரத்தையும் துவட்டிவிட்டுக் கொண்டிருந்தது.

    தன் கையிலிருந்த காபி கோப்பையை உறிஞ்சியபடியே சிற்பிகாவின் அழகில் சிந்தையை இழந்திருந்த ஆதன் நீ எதுவும் செய்ய வேண்டாம். வெளியில ஆர்டர் பண்ணிக்கலாம் என்றான்.

    ஏன்... என் சமையல்லேர்ந்து எப்படியாவது தப்பிச்சா போதும்னு நினைக்கிறீங்களா? என்றாள் கோபமாக.

    ச்சே! எது சொன்னாலும் தப்பாத்தான் யோசிப்பியா? தினம்தான் காலையில எழுந்திருச்சு அரக்கப் பறக்க சமைச்சுட்டு பரபரன்னு வேலைக்கு ஓடறே. இன்னைக்கு ஒரு நாள்தான் ரெஸ்ட். ரிலாக்ஸா இரேன். எதுக்கு சமையலறையில கிடந்து சிரமப்படனும்னு அக்கறையில சொன்னா என்னையே கோபிச்சுக்கறே? என்று சிரித்தான் ஆதன்.

    ம்... இதை நான் நம்பனும்? என முறைத்தாள்.

    தாயே. உன்கிட்ட சண்டைப் போட எனக்கு பொறுமையில்லை. நீ என்ன வேணா பண்ணு

    பிரியாணிப் பண்ணப்போறேன்

    ஐய்யோ...

    "பார்த்திங்களா... பார்த்திங்களா  பயப்படறீங்க?’

    நான் ஒண்ணும் பயப்படலை. இன்னைக்கு ஒரு நாள்தான் ரெஸ்ட். என்னை அதை வாங்கிட்டு வா இதை வாங்கிட்டுவான்னு நூறுவாட்டி வெளியில  துரத்துவியே. அதை நினைச்சாத்தான்...

    ஆமா... வெளியில போய் வாங்காம எல்லாம் வீட்டுக்குள்ளயே கிடைக்க நீங்க வீட்லயே கோழிப்பண்ணை வச்சிருக்கனும்.

    வச்சிட்டா போச்சு

    "என்ன கோழிப்பண்ணையா?’

    இல்ல மயில் பண்ணை.

    மயில் பண்ணையா?

    ஆமா... ஒரு மயில் இருக்கு. இன்னும் ரெண்டு மயில் இருந்தா மயில் பண்ணைத்தானே

    "ஒரு மயில் இருக்கா? நம்ம வீட்லயா? எங்கே?’

    எழுந்து அவளருகே வந்தவன் பறந்து விரிந்து அலைப்பாய்ந்த அவளுடைய கூந்தலை கையில் ஏந்தி நீதான்... அந்த மயில். எவ்வளவு அழகாயிருக்கே? தோகை மாதிரி... கூந்தல் வாசனைப் பிடித்தான்.

    என்ன ஷாம்பு? செம வாசனை. அப்படியே ஆளை கிறங்க அடிக்குதே. ஞாயித்துக் கிழமை வேற. நிறைய நேரம் இருக்கு. அதுக்குத்தான் வெளியிலயிருந்து ஆர்டர் பண்ணிக்கலாம்னு சொன்னேன்.

    அவன் ஏந்திக் கொண்டிருந்த கூந்தலை உருவிக் கொண்டவள் சுள்ளென விழுந்தாள்.

    கிறங்கடிக்கறதெல்லாம் இருக்கட்டும். ஒரு மயில் இங்க இருக்கு. இன்னும் ரெண்டு மயில் இருந்தான்னு சொல்றிங்களே... யாரு அந்த ரெண்டு மயில்... ம்...? அவன் காதைப் பற்றித் திருகினாள்.

    ஆவ்... சனியனே! வலிக்குது. விடறியா?

    சொன்னாத்தான் விடுவேன் இன்னும் இறுக்கமாக திருகினாள்.

    சட்டென்று அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டவன் இன்னும் ரெண்டு மயில்னு நான் சொன்னது இந்த மயில் போடப்போற குஞ்சுகளை... சொல்லிக் கொண்டே அவளுடைய வயிற்றை ஆசையாகத் தடவினான்.

    "போதும். சந்தடி சாக்குல அச்சாரம் போடாதிங்க. இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் குழந்தையைப் பத்தி யோசிக்கனும். பெங்களுர்ல

    அதுவரைக்கும் நான் என்ன பண்றது? இப்படி சும்மா சும்மா உன் கூந்தலை மோந்துப் பார்த்துக்கிட்டிருக்க வேண்டியதுதானா?

    ஆமா. ஆனா... இப்ப அந்த சான்ஸ் கூட கிடையாது. போயி சிக்கன் வாங்கிட்டு வாங்க.

    அப்போ... கண்டிப்பா ஆபிஸுக்கு லீவுதான் சொல்லனும்

    ஏன்... இன்னைக்கு செய்யறது மீந்துப் போனா நாளைக்கு லீவுப் போட்டுட்டு வீட்லயிருந்து சாப்பிடப் போறிங்களா?

    நாளைக்குமா? வடிவேலைப் போல் அலறினான்.

    இன்னைக்கு சாப்பிடப் போறதே செரிக்குமான்னு எனக்கு சந்தேகமாயிருக்கு. லூஸ் மோஷன் ஆகாம இருக்கனுமேன்னு பயமாயிருக்கு

    என்கிட்ட அடிவாங்கப் போறீங்க?

    அதையாவது வாங்கிக்கறேன். சிக்கன் மட்டும் செய்யாதே

    கொலை விழும். போய் வாங்கிட்டு வாங்க சொல்லிவிட்டு காபி கோப்பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

    அவளை பின் தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தவன் சட்டென்று பின்னாலிருந்து கட்டிப்பிடித்தான்.

    யேய்... என்ன பண்றீங்க?

    இன்னைக்கு வெளியில ஆர்டர் பண்ணிக்கலாமே. ஏன்டி... டயத்தை வேஸ்ட் பண்ணனும்? என்று மோகமாக அவளுடைய பின் கழுத்தில் முத்தமிட்டான்.

    அட... டா மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா உங்க ரொமான்ஸை என கையிலிருந்த காபி கோப்பையினாலேயே திரும்பி அவனுடைய தலையில் நங்கென குட்டினாள்.

    அம்மா... என அலறியவனை அலைபேசி ஒலித்து அழைத்தது.

    போங்க... போய் எடுங்க. யாரோ கூப்பிடுறாங்க என்று அவனைப் பிடித்து தள்ளினாள்.

    யாரா வேணா இருக்கட்டும். நல்ல நேரத்துல டிஸ்டர்ப் பண்றானுங்க. எடுக்க முடியாது. என மறுபடியும் அவளை அணைத்தான்.

    உங்கம்மாவா இருக்கப் போறாங்க,

    அம்மாவா? அவள் அம்மா என்றதும் தீயைத் தொட்டதைப் போல் அவளை விட்டான்.

    நீங்கன்னா பாருங்க. அம்மாதான். என்றவள் கூடத்திற்கு வந்தாள். மேசைமேலிருந்த அலைப்பேசியை எடுத்தாள். அவன் பக்கம் சிரித்தபடியே திரும்பினாள்.

    நான் சொன்னேன்ல? பாருங்க. அம்மாவேதான். பேசுங்க நீட்டினாள்.

    நீயே பேசு என்றபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

    அம்மான்னா... அவ்வளவு பயமா? என்றபடி அலைபேசியை காதிற்கு கொடுத்தாள்.

    சொல்லுங்க அத்தை

    எங்க அவன் வீட்ல இல்லையா? எடுத்ததுமே அதிரடியாகக் கேட்டாள் யோகநாயகி.

    வீட்லதான் இருக்கார் அத்தை.

    வீட்லதான் இருக்கானா? எவ்வளவு நாழியா ரிங் போயிக்கிட்டேயிருக்கு... எடுக்காம என்ன பண்ணிக்கிட்டிருக்கான்?

    நமட்டு சிரிப்பு சிரித்த சிற்பிகா அவனைப் பார்த்து கிசுகிசுத்தாள்.

    என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்கன்னு கேட்கறாங்க? சொல்லட்டா? என்றாள்.

    அடிப்பதற்காக கையை ஓங்கிய ஆதன் அவளிடமிருந்து அலைபேசியை வாங்கினான்.

    சொல்லும்மா... என்றான்.

    எவ்வளவு நாழியா ரிங் போயிக்கிட்டிருக்கு. எடுக்காம என்ன பண்ணிக்கிட்டிருந்தே?

    அம்மாவின் அதட்டலுக்கு உதறலாய் பேசினான்.

    அது... தோட்டத்துக்கு தண்ணி ஊத்திக்கிட்டிருந்தேம்மா...

    ம்... பரவாயில்லையே இதெல்லாம் கூட நீ செய்யறியா?

    செய்யலைன்னா சோறு கிடைக்காதே அவன் பாவமாக சொல்ல சிற்பிகா முறைக்க அம்மா எதிர் முனையில் வாய்விட்டு சிரித்தாள்.

    ஆமா... ஞாயித்து கிழமை வேற இல்லையா? கறி சோறு கிடைக்காமப் போச்சுன்னா என்ன பண்றது? அம்மாவும் கலாய்த்தாள்.

    ம்க்கும்... கறி கிறி ஒண்ணும் கிடையாது

    ஏன்... இன்னைக்கு ஞாயித்துக் கிழமைதானே? நான்வெஜ் இல்லையா?

    வாரத்துல ஒரு நாள்தான் லீவு கிடைக்குதாம். அந்த ஒரு நாளும் நான் கிச்சன்ல நிக்கனுமான்னு கேட்கறா. ஹோட்டல்ல ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்றாம்மா

    அடப்பாவி... மனுஷா? இப்படியா பொய் சொல்வே?  பேசி முடிச்சுட்டு வா உனக்கு இருக்குவாயைப் பொத்திக் கொண்டாள் சிற்பிகா.

    Enjoying the preview?
    Page 1 of 1