Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theruvengum En Therodum
Theruvengum En Therodum
Theruvengum En Therodum
Ebook143 pages51 minutes

Theruvengum En Therodum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முகுந்தன் சம்பங்கி இருவரும் காதலர்கள். சம்பங்கி வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதவனை திருமணம் செய்து வைக்கிறார்கள். சம்பங்கிக்கு, பிடிக்கவில்லை என்றாலும் முகுந்தனை மறந்து ஆதவனுடன் வாழ பழகிவிட்டாள். ஆனால் ஆதவனிடம் சில மாற்றங்கள் தென்படுகின்றன. ஆதவன் தன் குடும்ப சூழ்நிலையால் சம்பங்கியை கண்டு கொள்ளாமல் போகிறான். இதற்கிடையில் முகுந்தன் திரும்ப வருகிறான் இப்பொழுது சம்பங்கியின் வாழ்க்கை நிலை என்ன? இவர்கள் இருவரில் நெஞ்சமென்னும் தெருவில் தேர் அலங்காரமாய் யாருடன் பவனி வந்தாள்? என்பதை படித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateFeb 10, 2024
ISBN6580137110709
Theruvengum En Therodum

Read more from R. Sumathi

Related to Theruvengum En Therodum

Related ebooks

Reviews for Theruvengum En Therodum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theruvengum En Therodum - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தெருவெங்கும் என் தேரோடும்

    Theruvengum En Therodum

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    நேர் பார்வையாய் தன் பைக்கை செலுத்திய முகுந்தன் ஏதோ உறுத்த பைக்கின் வேகத்தை குறைத்து பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான்.

    அவள் அந்த பேருந்து நிறுத்தத்தில் ஆறேழு பெண்களுக்கு மத்தியில் தோளில் மாட்டிய பேகுடன் நின்றிருந்தாள். கையிலிருந்த அலைபேசியை தடவிக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட நின்றிருந்த பெண்களில் சிலபேர் அலைபேசியை அவளைப் போலவே தடவிக் கொண்டிருந்தனர்.

    சரக்கென வத்திக் குச்சி கிழித்தது நெஞ்சக்குள். பற்றிக் கொண்ட நெருப்பு உறுத்தி உறுதிப் படுத்திக் கொள்ள முயற்சி செய்தது. அதற்குள் அவனுடைய பைக் மெதுவாகவே சென்றாலும் அந்த இடத்தைக் கடந்து விட்டது.

    அவள்தானா? அவளேதானா? ஐந்தாறு பெண்கள் மத்தியில் என்ன, ஆயிரம் பேர் மத்தியில் இருந்தாலும் அவளை அடையாளம் தெரியாதா என்ன?

    அழகாய் பதிந்த தோற்றங்களெல்லாம் மாற்றங்கள் கொள்வதில்லையே காலம் மாறினாலும!

    காலநிலை மாறி வானம் தூறினாலும் அதன் குளிர்ச்சி மாறுவதில்லையே. கோடையில் பொழிந்ததனால் மழை சூடாக விழுவதில்லையே.

    கண்ணில் தோன்றாவிட்டாலும் நெஞ்சில் பதிந்த அவளுடைய தோற்றம் செதுக்கி வைத்த சிற்பமாய் வளர்சிதை மாற்றத்திற்குட்படாமல் அப்படியே இருந்து இன்று இனம் காட்டிக் கொடுத்துவிட்டதே.

    அவளே தான். சம்பங்கியேதான்.!

    மறுபடி பைக்கைத் திருப்பி அந்த பேருந்து நிறுத்தத்தை கடந்து அவளை பார்த்தால் என்ன? அவள்தான் என உறுதிப் படுத்திக் கொண்டால் என்ன?

    உறுத்திய எண்ணம் அவனை உறுதி செய்துக் கொள்ள தூண்ட அவன் பைக்கை திருப்ப நினைத்த போது வந்து நின்ற பேருந்தில் நின்றிருந்த ஐந்தாறு பெண்களுடன் அவளும் சேர்ந்து ஏறி விட பேருந்து நகர்ந்து கடந்துவிட்டது.

    காற்றில் அவள் நின்ற இடம் அவளுடைய தோற்ற பிம்பத்தை அவனுக்கு மட்டும் காட்டுவதாகத் தோன்றியது.

    தூரத்தே போகும் பேருந்தையே தொலைந்து போய்விட்ட பொம்மையை எண்ணி ஏங்கும் குழந்தை மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன்.

    சட்டென்று அந்த இடமே பெரும் பேரிரைச்சலாக மாறியதைப் போல் அவனைத்தாக்கியது. ஓவ்வொரு வாகனத்தின் சத்தமும் ஆயிரம் மடங்கு பெருகி காதை கிழித்து நிமிடத்தில் நெற்றிப் பொட்டை விண்விண் என தெறிக்க வைத்தது.

    மேற்கொண்டு பைக்கை செலுத்தாமல் ஒரு ரெஸ்ட்டாரன்டின் முன் நிறுத்தினான்.

    உள்ளே இருந்தவர்களில் ஒருவனாக போய் அமர்ந்தான்.

    உணவு கார்டை நகர்த்தி வைத்த பணியாளிடம் காபி என்று கூறிவிட்டு அந்த உணவு அட்டையை ஒதுக்கினான்.

    காபி வருவதற்குள் சம்பங்கி ஆயிரம் முறை வந்து போனாள்.

    அழகாய் சிரித்தாள். ஆசையாய் பேசினாள். அதிகாரமாய் மிரட்டினாள்.

    ஆவேசமாக அணைத்துக் கொண்டாள். அதற்கு மேல் நினைக்க முடியாமல் நினைவுகளை உதறிக் கொண்டானா? இல்லை காபி வந்ததால் சூழ்நிலைக்கு வந்தானா எனத் தெரியவில்லை.

    திடீரென வந்த தலைவலிக்கு திருப்தியாக இருந்தது காபி. அவள் விட்டுப் போன அன்றும் இப்படித்தான் வந்தது தலைவலி. வெகுநாட்கள் நீடித்தது. வெடித்துவிடும் மூளை நரம்பு என பயம் காட்டியது.

    தூக்கம் பறித்தது. பசி மரித்தது. பார்க்கும் மனிதர்களை வெறுத்தது.

    இயல்பு நிலைக்கு இன்று வரை மாற முடியவில்லை. மாறிவிட்டதாக நினைத்த நினைப்பெல்லாம் நொடியில் பொய் என நிரூபிக்குமளவிற்கு பேருந்து நிறுத்தத்தில் நின்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

    அவள் சென்னையில் இருக்கிறாள் என்று தெரியும்.

    ஆனால்...தான் சென்னைக்கு வருவோம் எனத் தெரியாது. வந்து இறங்கியபோது ஏதோ அவள் மட்டுமே இந்த சென்னை மாநகரத்தில் அவனை வரவேற்க காத்து நிற்பததைப் போல் ஒரு பிரமை.

    அது பிரமையா? எதிர்படும் பெண்களையெல்லாம் அவளாக இருக்கக் கூடாதா என்றும் அவளாகவே கற்பனை செய்துக் கொண்டும் பார்த்த பொழுதுகள்.

    ஓல்லியான பெண்கள் கூட...ஒரு வேளை வேலைக்கு சென்று இளைத்துவிட்டாளோ? என எண்ணிப் பார்க்க வைத்தார்கள்.

    குண்டான பெண்கள் கூட...கல்யாணம் ஆனாலே பெண்களுக்கு உடல் பெருத்துவிடுமே அதைப் போல் பெருத்துவிட்டாளோ என பெருமூச்சுவிட்டுப் பார்க்க வைத்தார்கள்.

    கருப்பான பெண்களைக் கூட...சென்னை வெயிலில் கருத்துவிட்டாளோ என கவனம் கொள்ள வைத்தது.

    சிவப்பான பெண்களை...நகரத்திற்கு வந்ததும் கூடுதல் மேக்கப் போட்டிருக்கலாம் என யோசிக்க வைத்தது.

    மொத்தத்தில்; தனக்காக அவள் எதிரே நிற்க வேண்டும் என நினைக்க வைத்தது.

    பிரபலமான நிறுவனத்தில் பல வருடங்களாய் போராடி பெற்ற, கனவிலும் நினைத்தறியாத வேலை கிடைத்தது கூட மறந்து...

    ஆட்டோவில் அந்த நிறுவனத்தை நோக்கி செல்லும் போது கூட முகவரியை சொல்ல முடியாமல் தடுமாற வைத்தது.

    பூம்புகார் என்றால் எப்படி கண்ணகி ஞாபகம் வருகிறதோ...

    மதுரை என்றால் எப்படி மீனாட்சி ஞாபகம் வருகிறதோ...

    அதைப் போல் அவனைப் பொருத்தவரை சென்னை என்றால் அவள் ஞாபகம் மட்டும்தான் வந்தது. சென்னையில் அவள் மட்டுமே வசிப்பதைப் போல்...அல்லது...ஒரு நுண்கிருமி நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான நுண்கிருமிகளாக பல்கிப் பெருகுவதைப் போல் பார்க்கும் அத்தனை மனிதர்களும் அவளாகவே தெரியும் நிலை என்ன நோய் நிலை என புரியவில்லை.

    கிருமிதான். நுண் கிருமிதான். காதல் என்ற வைரஸ_ம் அவனிடத்தில் கோடானுக் கோடியாய் பல்கி பரவுவதைப் போல்தான் காதலும் பெருகி அவனை ஆக்கரமித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கொன்ற உயிர் குடிக்கும் அந்த நுண்கிருமி மிக அழகான முகத்தைக் கொண்டிருக்கிறது. அந்த முகம் சம்பங்கியின் முகம். அதன் ஆக்கரமிப்பு தந்த பாதிப்பு கொஞ்சம் நஞ்சம் இல்லையே.

    படுக்கையில் போட்டது. பைத்தியம் பிடிக்க வைத்தது. பிடித்த பைத்தியத்தை வெளி உலகிற்குத் தெரியாமல் மறைத்து நாடகமாட வைத்து பளிச்சென்ற உடையில் பவனி வரவைத்தது. பணியில் பந்தாவாக கெத்துக் காட்ட வைத்தது.

    அடி மனதின் வேதனையை வெளிக் காட்ட முடியாமல் அம்மாவிடம் அழகாக நடிக்க வைத்தது. அவளுக்காக மட்டும்தான் நான் என்பதை விழுங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டும்தான் நான் என அக்கா தங்கைகளிடம் பொய்யாய் சிரிக்க வைத்தது. அவர்களுக்காக உழைக்க வைத்தது

    இன்றும் ஜவுளிக் கடையின் முகப்பில் தோரணங்கட்டித் தொங்கும் புடவை அவளுக்குப் பிடித்த கலராக இருந்தால் ஓடி சென்று வாங்க வைக்கிறது.

    பெண் வாசனையே இல்லாத வீட்டில் இப்படி நிறைய புடவைகள் அலமாரியில் சேர்ந்திருக்கின்றன.

    அண்ணா...என்ன இது? என எப்பொழுதாவது வரும் தங்கையோ அக்காவோ அதை எடுத்து பார்த்து வியக்கும் போது என்ன பதில் சொல்வததென தடுமாற அவர்களே எனக்காக எடுத்து வச்சியா? என பதில் சொல்லிவிட்டு எடுத்து மார்பில் போட்டு அழகுப் பார்த்து அவன் மனதை வலிக்க செய்துவிட்டு பையில் வைத்துக் கொள்வர்.

    இன்னும் அவனுக்குள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். இன்னொருத்திக்கு இடம் கொடுக்க முடியாமல் முரண்டுப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுக்குப் பிடித்த பொருட்கள், அவளுக்குப்பிடித்த உடைகள் என வீட்டை நிறைத்திருக்கிறாள்.

    அவளே சுவாசமானதில் அவளுக்கும் சேர்த்து சுவாசிப்பதைப் போல் நுரையீரல் நுரை தள்ளுகிறது சில சமயங்களில். அவளுக்குப் பிடித்த உணவு வகை இலையில் இருக்கும் போது அவளுக்கும் சேர்த்து சாப்பிடுவதாய் கல்யாண விருந்துகளில் இன்னும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டு வயிறு ஜீரணத்திற்கு திணறியிருக்கிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1