Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூமாலை நீயே...
பூமாலை நீயே...
பூமாலை நீயே...
Ebook106 pages36 minutes

பூமாலை நீயே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வில்லிவாக்கதின் குடிசைப் பகுதி.
 இரவு பதினோரு மணி...
 தெரு விளக்குகள் கண் மூடியிருந்த அந்த இருட்டான சந்துக்குள் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு போனான் நாக்ராஜ். (நீங்கள் போன அத்தியாயத்தில் சந்தித்த அதே நாக்ராஜ்) இருட்டில் தெரிந்த சாக்கடைகளை கவனமாய்த் தாண்டி வாயில் புகையும் மலபார் பீடியோடு நடந்தான். சந்தின் இருபுறமும் இருந்த குடிசைகளில் - காடா விளக்குகளின் அசைவுகள் தெரிய கூடவே பேச்சொலிகள்.
 "யோவ் கையும் காலையும் ஒயுங்கா வெச்சுகிட்டு படு... நீ என்னிய தொட்டே மெய்யாலுமே கெட்ட கோபம் வந்துடும்." ஒரு பெண் குரல் சீறியது.
 "அட... சொம்மா வாம்மே... பட்டத் தண்ணியும் கருவாட்டு - கொயம்பும் உள்ளார போன பின்னாடி உன்னிய பாத்திகினு சொம்மா இருக்க முடியுமா...?"
 "தூ... கசுமாலம்... புடிச்ச மனுஷா..."
 "கூவாதேம்மா..."
 "மருவாதையா தள்ளிப்படு..."
 நாக்ராஜ் சிரித்துக்கொண்டே சந்தின் முனையைத் தாண்டினான். வாயில் அணைந்து போயிருந்த பீடியை சாக்கடையில் சுண்டிவிட்டு பக்கத்து சந்தில் நுழைந்தான்.
 வளையல் சத்தங்களும், மல்லிகைப் பூ வாசமும் இருட்டில் மிதந்து வந்தது. கூடவே கிசுகிசுப்பான அந்தப் பெண்களின் குரல்கள்.
 "சரோசா... கிராக்கி வருது..."நீ மொதல்ல அமுக்கு... படியாட்டி நா வர்றேன்..."
 நாக்ராஜ் அவர்களை சமீபித்தான். பார்த்துக்கொண்டே மெதுவாய் நடக்க, ஒருத்தி செயற்கைத்தனமாய் நெஞ்சை உயர்த்திக்கொண்டு பேச்சு கொடுத்தாள்.
 நாக்ராஜ் அவர்களை சட்டை செய்யாமல் மௌனமாய் நடந்தான். அவள் அவனை உரசியபடியே தொடர்ந்தாள். பூசியிருந்த பௌடரும், கதம்பப்பூவும் ஒன்றாய் கலந்து விநோதமாய் நாறியது.
 நாக்ராஜ் நின்று அவளைப் பார்த்தான்.
 கண்களுக்கு பழக்கமாகிவிட்ட அந்த இருட்டில் அவள் இளமையாய் தெரிந்தாள். கண்ணின் மணிகள் இருட்டில் மின்னியது. வாய் தாம்பூலத்தை செவேலென்று அரைத்துக் கொண்டிருந்தது.
 "என்னய்யா... பார்க்கிறே...?"
 "உனக்கு எத்தினி வயசு...?"
 "இருபத்தி ரெண்டு..."
 "நெஜமாவா...?"
 "மெய்யாலுந்தான் சொல்றேன்யா... உனக்கு எம்மேல சம்சயம் இருந்தா தொட்டுப்பாரு... நா ஒண்ணும் கடைச் சரக்கை திணிச்சு வெச்சிருக்க மாட்டேன்."
 "வேண்டாம் வுடு. - பார்த்தாலே தெரியுது." - நாக்ராஜ் சட்டையின் மேல் பாக்கெட்டில் இருந்த பீடிக்கட்டினின்றும் பீடி ஒன்று உருவி உதட்டுக்குள் கொடுத்தபடியே கேட்டான்.
 அவள் அவனுடைய தோளை இடித்தாள்.
 "உன்னோட வயசுல இன்னொரு பொண்ணு வேணும்... கிடைப்பாளா...?"
 "கிடைப்பாள்."
 முதல் பெண்ணின் பக்கமாய் திரும்பினான் நாக்ராஜ்.
 "உம் பேரென்ன?"சரோசா..."
 "சரி அந்தப் பொண்ணு பேர் என்ன?"
 "சபீதா."
 "சரி அந்தப் பொண்ணைக் கூட்டிகிட்டு புறப்படு..."
 "எப்படி போறது...? ரிக்ஷா கொண்டு வந்திருக்கியா?" வெற்றிலைச் சாற்றை புளிச்சென்று துப்பியபடியே கேட்டாள் சரோசா.
 "ரிக்ஷாவா?" - சிரித்தான் நாக்ராஜ்.
 "மெயின் ரோட்ல காரே காத்திட்டிருக்கு... பொறப்படும்மே..."
 "காரா...?"
 "உம்..."
 "இன்னாய்யா... பெருய எடமா...?"
 "பெரீய எடந்தான். ஆனால் அவருக்கு உன்ன மாதிரியான கிராக்கிகளைத்தான் புடிக்கும்... அவராண்டே நீ கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி நடந்துகிட்டியானா... விடிஞ்சு வர்றப்ப கை நெறைய கரன்ஸி நோட்டோட வரலாம்... ம்... பொறப்படு..."
 சரோசாவும் சபீதாவும் சந்தோஷமாய் புறப்பட்டார்கள்.
 நாக்ராஜ் பீடி புகையும் வாயோடு சைகை காட்டிவிட்டு சாக்கடைகளைத் தாண்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
 இருட்டு ஈஷியிருந்த - சந்துகளில் வேகவேகமாய் நடந்து - வெளிச்சம் பரவிக் கிடந்த. மெயின் ரோட்டுக்கு வந்தார்கள்.! மூன்று பேரும்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223162346
பூமாலை நீயே...

Read more from Rajeshkumar

Related to பூமாலை நீயே...

Related ebooks

Related categories

Reviews for பூமாலை நீயே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூமாலை நீயே... - Rajeshkumar

    1

    காலை நேர மெரீனா.

    மட்டமான கறுப்புத் துணியை நீரில் நனைத்ததுமே சாயம் போவதைப் போல இருட்டு - சாயம் போய்க்கொண்டிருந்த நேரம். காலை ஆறு மணி. கடற்கரையோர பேவ்மெண்டில் நிறையப் பேர் தொப்பைகளை கரைக்க முயற்சித்து லொங்கு லொங்கென்று ஓடிக்கொண்டிருக்க தொப்பை இல்லாதவர் அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெள்ளிச் சரிகை பார்டரில் நீலச் சேலையைக் காய போட்ட சைஸில் கடல் பரப்பு புரண்டு கொண்டிருக்க - தொலை தூர ஹார்பரில் வெளிச்சக் கண்களோடு கப்பல் ஒன்று தெரிந்தது. கிழக்குப் பக்க ஆகாயம் காரட் நிறத்தில் ததும்பிக் கொண்டிருந்த அந்த விநாடியில்...

    உழைப்பாளர் சிலையருகே ஒதுங்கி நின்ற மார்க் த்ரி அம்பாசிடர் காரினின்றும் அவன் இறங்கினான்.

    ஆறடி இருப்பான் என்று நினைக்கத் தோன்றியது.

    மீசை வளர்ப்பில் ஆர்வம் காட்டியிருந்தான். ஒரு அங்குல அகலத்தில் கிருதாக்களை காதோரங்களில் பயிர் செய்திருந்தான். மீசைக்குக் கீழே தெரிந்த தடிமனான உதடுகளில் இடைவிடா சிகரெட் பிடிப்பின் காரணமாக கறுப்பு கலந்த ஊதா நிறம் தெரிந்தது. மஞ்சளில் சிகப்பு நிற புள்ளிகள் தெளித்திருந்த சட்டையும், வெள்ளை நிற பேண்ட்டையும் அணிந்து - அமெரிக்கன் கிராப் தலை காற்றில் படபடக்க அவன் காரினின்றும் இறங்கி - மணல்பரப்பில் கால் வைத்த நேரம் - காரின் பின் சீட்டிலிருந்து அந்த அல்சேஷன் ஜன்னல் வழியாய் கீழே குதித்து அவனுக்கு முன்பால் உற்சாகமாய் ஓடியது.

    ஏய் லயன்... கம் ஹியர்…

    அவன் கத்த...

    நாலு கால் பாய்ச்சலில் - ஓடிக்கொண்டிருந்த லயன் சட்டென்று நின்று காதுகளை உயர்த்திக்கொண்டு அவனை விசுவாசமாய் பார்த்துவிட்டு ஒரு சந்தோஷ எம்பலோடு ஓடி வந்தது. அவனுடைய மார்பின் மேல் தாவுவது போல பாவ்லா செய்துவிட்டு - மறுபடியும் மணலில் ஓட ஆரம்பித்தது.

    அவன் புன்னகையோடு அதை தொடர்ந்தான்.

    இரண்டு நிமிஷ நடை.

    கடல் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்த கரையோரமாய் நடந்தான். ஐம்பதடி தூரம் நடந்திருப்பான். பின் பக்கமாய் அந்தக் குரல் கேட்டது.

    குட்மார்னிங் ஸார்...

    அவன் திரும்பினான்.

    கண்களில் சின்ன சந்தோஷம்.

    வா நாக்ராஜ்... ரெண்டு நாளா நீ வீட்டுப்பக்கம் வரலையே... பாஸ்கூட கேட்டார்...

    சரக்குக் கிடைக்காமே வந்து என்ன ஸார் பண்றது...? |

    அதுக்காக வராமே இருக்கலாமா...?

    பின்னந்தலையை தன் வலது கை விரல்களால் சொறிந்து கொண்டு சிரித்த நாக்ராஜிக்கு முப்பது வயது இருக்கலாம். பிண்ணாக்கு நிறம். லேசாய் மாறுகண். ஒழுங்கு தவறி முளைத்த பல்வரிசை. பொய் சொல்லும் சின்னக் கண்கள்.

    நான் ரெண்டு நாள்ல வந்து பார்க்கிறேன் ஸார்...

    சரக்கு வேணும்... நாக்ராஜ்... கைவசம் ஸ்டாக் இல்லை... பாஸ் எகிற ஆரம்பிச்சுட்டா என்னால சமாளிக்க முடியாது...

    அதுக்குத்தான் ஏற்பாடு பண்ணிட்டிருக்கேன்... ஸார்...

    சரி... நீ கிளம்பு... நாக்ராஜ், என்னோட ஆள் வந்தாச்சு... அவ மனுஷங்களைப் படிக்கிற ஜாதி உன்னையும் என்னையும் பார்த்தா அவ சந்தேகமா ஏதாவது நினைச்சுடுவா... நீ சாயந்தரமா பாஸோட பங்களா பக்கம் வா...

    சரி ஸார்...

    நாக்ராஜ் நகர்ந்தான்.

    அல்சேஷன் விசுவாசமாய் சுற்றிச் சுற்றி ஓடி வர - அந்தப் பெண் ஹாய் அமர்... என்று சந்தோஷக் கையசைப்போடு அவனை நெருங்கினாள். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு - அவனுடைய தலையை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டாள். பதிலுக்கு அவன் அவளுடைய உதடுகளைத் தேட- ச்சீய்... என்று அவனுடைய நெஞ்சில் தன்னுடைய கைகளை வைத்துத் தள்ளினாள்.

    யூ... டர்ட்டி அமர்...

    அஜந்தா...! அஞ்சு நிமிஷம் லேட் நீ.! ஏன்? கீழே விழப்போன அமர் கேட்டான்.

    என் லேட்டுக்குக் காரணம் நானில்லை. அமர்... என்னோட லூனா... பீச் ஸ்டேஷன்கிட்டே வர்றப்பவே... ஏகப்பட்ட உதறல்.

    அந்த சனியனை மாத்து...

    அதை சனியன்னு சொல்லாதீங்க அமர்... நீங்களும் நானும் ஒருத்தரையொருத்தர் இப்படி புரிஞ்சுக்க உதவி பண்ணினதே அந்த லூனாதான்.

    அதுக்காக அதைக் கட்டிகிட்டு மாரடிக்கப் போறியா...? ஆறு மாசத்துக்கு முன்னாடி உன்னோட லூனா என் காருக்குப் பின்னாடி மோதாமே இருந்தாலும் - நாம எங்கேயாவது சந்திச்சிருந்திருப்போம்... அஜந்தா...

    ஆமா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க யார்கூட பேசிட்டிருந்தீங்க...? அஜந்தா அமரின் தோள்பட்டையில் முகம் பதித்து மெல்லிய குரலில் கேட்டாள்.

    ஒரு அழுக்கான ஆசாமி...?

    ஆமா... அவன்தான்....

    அவன் பேரு தேவராஜ்... லேப்புக்கு வேண்டிய மெட்டீரியல்ஸை சப்ளை பண்றவன்... பஸ்ஸுல போயிட்டிருந்தவன் என்னோட காரைப் பார்த்துட்டு இறங்கி வந்தானாம். என்னோட பாஸுக்கு ரொம்பவும் தெரிஞ்சவன்... அந்த பழக்கத்துல கடனா என்கிட்டே பணம் கேட்டான்... இல்லேன்னு சொல்லிட்டிருந்தேன்...

    உங்க பாஸ் எப்படி இருக்கிறார் அமர்...?

    அமர்க்களமா இருக்கார்... அடுத்த வருஷம் இந்நேரம் அவரோட பேர் ‘இண்டர்நேஷனல் மெடிக்கல் அரினா’வில் பிரதானமா அடிபடும்...

    அவரோட ஆராய்ச்சி என்னான்னு நீங்க சொல்லமாட்டீங்க...?

    அமர் சிரித்து அவளுடைய கன்னத்தைத் தட்டினான்.

    ஸாரி... அஜந்தா என்னோட பாஸ் சத்திய பிரமாணம் வாங்கியிருக்கார், அவரோட எப்பர்ட்ஸ் ப்ரூட்புல்லா முடிஞ்ச பின்னாடிதான்... நான் அதைப்பத்தி உன்கிட்ட சொல்ல முடியும்...

    "சரி... சரி... நீங்க எப்பவுமே சொல்ல வேண்டாம். எனக்கு நீங்கதான் முக்கியம். உங்க ஆராய்ச்சியும்

    Enjoying the preview?
    Page 1 of 1