Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வா, சுகி வாசுகி
வா, சுகி வாசுகி
வா, சுகி வாசுகி
Ebook93 pages30 minutes

வா, சுகி வாசுகி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிரின்ட் போட்ட படத்தை எடிட்டரின் மேசைமேல்  வைத்தான் சோமப்பா. 


மேஜை விளக்கடியில் அதை நகர்த்தி நன்றாகப் பார்த்தார் ஆசிரியர். 


சோமப்பாவை வாசுகி அறையும் காட்சி. 


ஸ்டுடியோ லைட்டும், சூழ்நிலையும் தந்த 'பளிச்'சில் அற்புதமாக அமைந்து விட்டது அந்தப் புகைப்படம். 


“ரொம்ப வாயைக் கிண்டிட்டீங்களா?” 


“நமக்கு ஒழுங்கா ஒத்துழைச்சு நாலு வார்த்தை பேசினா, நான் ஏன் சார் வம்புக்குப் போறேன்?” 


“சரி என்ன பண்ணப் போறம்?” 


“தீபாவளி வரைக்கும் தொடரை நீட்டுவானேன்?”


“பின்ன?” 


“அடுத்த இஷ்யு ரெடியாகுது. அதுல முதல் பக்கத்துல இந்த மேட்டரைக் குடுத்து, போட்டோ போட்ரலாம். அதுக்கும் அடுத்த இஷ்யுல தொடரைத் தொடங்கிட்டா?” 


“செய்யலாம்தான்.” 


“இந்த போட்டோவைப் போஸ்டரா அடிச்சு, தொடர் கதைக்கு விளம்பரமா ஒட்டிரலாம். நடிகையின் சரித்திரம் தொடராக மலர்கிறதுன்னு போட்டு 'வா! சுகி! வாசுகி!'னு தலைப்பையும் பெரிசாப் போட்டுர்றது.” 


அடுத்த நாளுக்கும் மறுநாள் 'சந்தனம்' பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது வாசுகி, சோமப்பாவை அறையும் புகைப்படம், வண்ணத்தில். 


விவரம் உள்ளே என்று பக்கம் தரப்பட்டு, முழுப் பக்கச் செய்தியாக மலர்ந்திருந்தது. 


'நமது நிருபர் சோமப்பாவை, படப்பிடிப்பில் பளாரென அறைந்தார் வாசுகி.' 


'பத்திரிகைக்காகப் பேட்டி எடுக்கப் போன நிருபரை அவமானப்படுத்திய வாசுகி!' 


'யாரானாலும் அச்சப்படாமல் நடுநிலையுடன் உண்மைகளை எழுதிவரும் ஒரே பத்திரிகை 'சந்தனம்'. அது போல வாசுகி பற்றிக் கசப்பான நிஜங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் நாம், இயல்பாகப் பேட்டிக்குப் போனோம். அங்கே நாம் அவமானப்படுத்தப்பட்டோம். 


'பத்திரிகைகளால் வளர்ந்து, உயரம் தொட்டதும் உரியவர்களை மறந்துவிடும் இவர்களைப் போன்றவர்களது முகமூடிகளைக் கிழிக்க முடிவெடுத்து விட்டோம்.' 


மேற்படி நடிகையின் 'அந்தரங்க நாட்கள்' அடுத்த இதழில் ஆரம்பம். ஆதாரங்களுடன் வெளியாகும் இந்தத் தொடர், கலை உலகத்தையே ஒரு கலக்கு கலக்க வேண்டும். சோமப்பா நடிகையிடம் பட்ட அடி, அவரது முன்னேற்றத்துக்கு ஒரு படி. 


ஏதோ ஒரு படப்பிடிப்பில் இருந்த வாசுகியிடம் அந்தப் பத்திரிகையை அவளது அம்மா கொண்டு வந்து தந்தாள். 


“ப்ஸ். விடும்மா.” 


“விளையாடறியா வாசுகி? பத்திரிகையாளர் சங்கம், நிருபர் சங்கம் எல்லாம் சேர்ந்து உன்னை எதிர்த்து ஊர்வலம் நடத்தப் போகுதாம். நீ மன்னிப்புக் கேக்கற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கப் போறாங்களாம். 


“சோமப்பா தலைவனா அதுக்கு?”


“தெரியலை. இருக்கலாம்.” 


வாசுகி சிரித்தாள். 


“ஏண்டி சிரிக்கற?” 


“இதைவிட எனக்குப் பிரமாதமா யாரு விளம்பரம் தர முடியும்? முதல் இடத்தைப் பிடிக்க இனி நான் கஷ்டப்படவே வேண்டாம். அதுவே தானா கிடைக்கும்.” 


“இதோட சீரியஸ் உனக்குப் புரியலையா வாசுகி? அடுத்த வாரத்துல தொடர் ஆரம்பம்.” 


“அதனால?” 


“என்னல்லாம் எழுதப் போறானோ சோமப்பா?” 


“என்ன வேணும்னாலும் எழுதட்டும். சோமப்பா எழுதறதெல்லாம் அரசியல் சட்டமா இல்லை இதிகாசங்களா?” 


“ஷாட் ரெடி மேடம்.” 


எழுந்து போனாள் வாசுகி அலட்சியமாக. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 3, 2024
வா, சுகி வாசுகி

Read more from தேவிபாலா

Related to வா, சுகி வாசுகி

Related ebooks

Reviews for வா, சுகி வாசுகி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வா, சுகி வாசுகி - தேவிபாலா

    1

    "லைட்ஸ் ஆன்."

    காமிராமேன் குரல் கொடுக்கச் சகல விளக்குகளும் செட்டில் எரிந்தன.

    அந்த ஜூனியர் கேவியை டிலட் பண்ணு ஜெகன்.

    ஓக்கே! இப்பிடி வந்து பொஸிஷன் குடு.

    உதவியாளன் காமிரா முன் வந்து நின்றான்.

    ஷாடோ வருது. ஜானியோட ஏரியா சரியா இல்லை.

    ஜானி என்று சொல்லப்பட்ட பெரிய லைட் ஒன்று இடம் மாற்றப்பட்டது.

    டைரக்டர் ருக்மாங்கதன் எழுந்து வந்தார்.

    ஆச்சா தினேஷ்?

    இன்னும் அரைமணி நேரம் ஆகும் சார். நம்ம படம்னாலே லைட்டிங்கை ஸ்பெஷலாகக் கவனிக்கறாங்க ரசிகர்கள்.

    நீயும், நானும் பேர் வாங்கறது இருக்கட்டும். வாசுகி கால்ஷீட் மத்யானம் ரெண்டு மணி வரைக்கும்தான். அதுக்குள்ள ஆறு ஷாட் எடுத்தாகணும் நான்.

    "அவசரப்பட்டா முடியுமா சார்? பான் பண்ணு அருண்.

    ருக்மாங்கதன் சிகரெட்டைப் பற்ற வைத்தபடி தன் இருக்கையில் சென்றமர்ந்தார்.

    மணி பத்தரை.

    வாசுகி ஒன்பது ஐம்பதுக்கு வந்தாள். முதல் ஷாட் என்னவென்பதைத் தெரிந்து கொண்டு மேக்கப் போடப் போய் விட்டாள்.

    நான் ரெடி சார்.

    டைரக்டர் எதிரே வந்து நின்றாள்.

    லைட்டிங் முடியலைம்மா.

    ரெண்டு மணிக்கு என்னை ரிலீஸ் பண்ணிருங்க சார். மூணுக்கு வேற கால்ஷீட் தந்திருக்கேன். ஏழு மணிக்கு வேறொரு படம்.

    டச்சப் பெண் பின்னால் நின்றாள்.

    ரெடி சார்.

    காமிரா குரல் கொடுக்க-

    வாங்கம்மா. வந்து பொஸிஷன் குடுங்க.

    வந்து நின்றாள் வாசுகி.

    குட். நடந்து வர்றீங்க. பார்வை அப்படியே இடதுபக்கம் சுழன்று, திரும்பித் தரைல நிலைக்குது. இதுதான் ஷாட். ஷாக்கை க்ளோஸப்ல எடுத்துக்கலாம்.

    முதல் டேக்கில் ஓக்கே செய்து விட்டாள்.

    க்ளோஸப்புக்கு லைட்டிங் அமைக்கத் தொடங்கினான் தினேஷ்.

    உட்கார்ந்து கொண்டாள் வாசுகி.

    குஷ்புவுக்கு அடுத்தபடியாக சினிமாவில் பிஸி ஆர்ட்டிஸ்ட் வாசுகி. முதலிடத்துக்கு வர முயன்று கொண்டிருப்பவள். கடுமையான உழைப்பாளி. அழகான, திறமையான நடிகை.

    வாசுகியின் அம்மா அருகில் வந்தாள்.

    இப்படி வா கண்ணு.

    என்னம்மா?

    வாயேன் சீக்கிரமா.

    வாசுகி எழுந்து அம்மாவுடன் நடந்தாள். என்னம்மா?

    அவன் வந்திருக்கான்.

    யாரும்மா?

    அதான்- அந்தச் சோமப்பா.

    யாரு சோமப்பா?

    என்னடீ நீ? பத்திரிகைல பச்சை, பச்சையா உன்னைப்பற்றி எழுதின நிருபர். ‘சந்தனம்’ சினிமா நிருபர்டி.

    சரி. அதுக்கென்னா?

    அவனைச் சும்மா விடலாமா? நான் ஆள் மூலம் ‘கவர்’ தந்தும் அவன் மசியலை. இதே ரீதில உன்னைப் பற்றி அவன் எழுதத் தொடங்கினா, உன் மார்க்கெட்டே அவுட்டாயிரும்.

    கிசுகிசு. விளம்பரம்தான்மா.

    ஓரளவுக்குத்தான்டி. உன் ஆபாசக் கதைகளைத் தொடரா எழுதப் போறானாம் அவன். அரசபுரசலாச் செய்தி வருது.

    ஷாட் ரெடி. குரல்வர-

    டச்சப் முடித்துக் கொண்டு உள்ளே வந்தாள் வாசுகி.

    இது க்ளோஸப் ஷாட்மா. முதல்ல கண்களை அகல விரிச்சு, புருவம் உயர்த்தி படிப்படியா ஷாக்கைக் கொண்டு வர்றீங்க. டைட் க்ளோஸப். உங்க முகபாவத்துல மொத்தக்காட்சியும் பவர்ஃபுல்லா வெளிப்படணும். திரைல முப்பது நொடிகள் ஓடற காட்சி இது.

    சரி சார்.

    ஸ்டார்ட் காமிரா.

    ரன்னிங் சார்.

    ஆக்ஷன். அவர் குரல் கொடுக்க, முகபாவத்தை வெளிப்படுத்தத் தொடங்கினாள் வாசுகி.

    கட் கட்.

    விளக்குகள் அணைய-

    சரியா வரலைமா. நான் செஞ்சு காட்டறேன். அவர் நடித்துக் காட்டினார்.

    சரி சார்.

    லைட்ஸ் ஆன்.

    இந்த முறையும் சரியா வரலை.

    ஆறு டேக்குகள் வாங்கி விட்டாள். டைரக்டருக்குத் திருப்தியே வரவில்லை.

    ஏன் வாசுகி? என்னாச்சு உங்களுக்கு? இதைவிட பெரிய சீனெல்லாம் சரியாச் செய்வீங்க- ஒரே டேக்ல.

    ஸாரி ஸார். இந்தக் க்ளோஸப் இன்னிக்கு வேண்டாமே. ப்ளீஸ்.

    ஓக்கே. லைட்டிங் மாத்து தினேஷ்.

    களைப்புடன் வந்து உட்கார்ந்து கொண்டாள் வாசுகி.

    வணக்கம்.

    நிமிர்ந்தாள்.

    எதிரே -சோமப்பா.

    முகத்தில் சிரிப்பை ரத்து செய்துவிட்டு அவனைப் பார்த்தாள்.

    இடைவேளைல உங்ககிட்ட சின்னதா ஒரு பேட்டி.

    ஸாரி. பத்திரிகைகளை நான் சந்திக்கறதில்லை. நீங்க போகலாம்.

    அதெப்படி மேடம்? எந்தக் கலைஞரா இருந்தாலும் பத்திரிகைப் பலம் இல்லாம எப்படி வளர முடியும்?

    அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்.

    ஒரே ஒரு ஸ்டில்.

    ஸாரி.

    உங்களைப் பற்றி ஒரு தொடர் தீபாவளி இஷ்யுல ஆரம்பிக்கப் போறம்.

    என் அனுமதி இல்லை அதுக்கு.

    அவசியமில்லை. நீங்க பப்ளிக் ப்ராபர்ட்டி.

    என்னது?

    கலைஞர்கள் பொதுச் சொத்துனு சொல்ல வந்தேன். வேற மாதிரி புரிஞ்சுகிட்டீங்க போலிருக்கு. விஷமமாகச் சிரித்தான்.

    கெட் அவுட் ஃப்ரம் ஹியர்.

    Enjoying the preview?
    Page 1 of 1