Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaasalile Vazhai Maram
Vaasalile Vazhai Maram
Vaasalile Vazhai Maram
Ebook109 pages36 minutes

Vaasalile Vazhai Maram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு கிராமத்தில் துவங்கி இன்னொரு கிராமத்தில் முடிந்திருக்க வேண்டிய வாழ்க்கை அவளுடையது.கல்யாணத்திற்கு முன்னால் கடத்தப்பட்ட அவள் வாழ்வில் தான் எத்தனை விருப்பமில்லாத திருப்பங்கள்! காலம் அவளை நடிகையாக்கியது.ஆனால் உள்ளே அமைதியற்று உலவிக் கொண்டிருந்த வன்மம் தீர இயற்கையின் கவித்துவநீதி துணைக்கு வந்ததா? கதையின் முடிவு இதற்கு விடை சொல்லும்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580131005836
Vaasalile Vazhai Maram

Read more from S. Kumar

Related authors

Related to Vaasalile Vazhai Maram

Related ebooks

Reviews for Vaasalile Vazhai Maram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaasalile Vazhai Maram - S. Kumar

    http://www.pustaka.co.in

    வாசலிலே வாழை மரம்

    Vaasalile Vazhai Maram

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    முதலில் அந்தப் படம் முழுவதையும் கேரளாவிலோ தெங்கு மராட்டாலோ எடுப்பதாகத்தான் தீர்மானித்திருந்தார்கள். பிறகு கால்ஷீட் பிரச்சனையால் சில காட்சிகளை இங்கேயே எடுப்பதாக முடிவு செய்தார்கள்.

    அவுட்டோர் யூனிட் வேன்களும் நட்சத்திரக்கார்களும் சாலை ஓரங்களிலே பார்க் செய்யப்பட்டிருந்தன. நட்சத்திரங்களும் டெக்னீசியன்களும் அடர்ந்திருந்த தோப்பில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

    டைரக்டர் தியாகராஜன் சென்னைவாசி. அதனால் அவருக்கு சென்னையிலிருந்து நூறு கிலோ மீட்டரில் இருக்கும் இடைக்கழிநாட்டு லொகேஷன் தெரிந்திருந்தது. கதை, கிராமியக்கதை. எனவே தோப்பும் துரவும் குடிசைகளும் ஆறும் அருவியும் அவசியப்பட்டன.

    தோப்புக்கு ஒரு வீடாக மலபார் சூழல் நிறைந்த இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. சினிமா போட்டோ க்ராஃபர் ஜீவா டைரக்டரோடு வந்து லொகேஷன்களைப் பார்த்து ஓகே சொல்லி விட்டான். தயாரிப்பாளரிடம் சொல்லப்பட்டு, புரொடக்ஷன் மானேஜர் திட்டமிட்டு, கால்ஷீட்டுகள் சமாளிக்கப்பட்டு, ஹீரோ விமல்ராஜும் ஹீரோயின் ஜெயப்ரியாவும் அந்தந்த தேதிகளை தெங்கு மராட்டாவுக்கு பதிலாக இந்தக் குறைந்த தூரத்திற்கு அரைமனதாக ஒப்புக்கொள்ள எல்லாம் தயாராகி விட்டன.

    ஆனால்-----

    ஹீரோவும் ஹீரோயினும் இன்னும் வரவில்லை.

    தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் பதில் சொல்லி மாளாமல் புரொடக்ஷன் மானேஜர் இளநீர் ரெடி பண்ணும் சாக்கில் தலைமறைவானார். இண்டர் நேஷனல் ஹீரோவான சூரியன் எந்த பந்தாவுமில்லாமல் கால்ஷீட் கொடுத்துக் கொண்டிருந்தான். 555 பற்ற வைத்துக் கொண்டிருந்த ஜீவா சலித்துக் கொண்டான்."

    சன்லைட் இருக்கும் போது ஆக்டர் வர மாட்டாங்க. ஆக்டர்ஸ் வரும் போது சன்லைட் இருக்காது. நிச்சயமா திட்டமிட்டபடி நம்மால இந்த படத்தை முடிக்க முடியாது. புதுமுகங்களை அறிமுகப்படுத்தினா இந்தத் தொல்லை இல்லை. சொடக்கு போட்டா ஓடி வருவாங்க. நீங்கதான் அனாவசியமா பயப்படறீங்க

    தியாகராஜன் கிளாப் பாயாக தன் சினிமா வரலாற்றை ஆரம்பித்தவர். பழம் தின்று கொட்டை போட்டு, நெற்றியில் பட்டையடித்து, மூளை மடிப்புகளில் நிறைய அனுபவம் வைத்திருப்பவர். பதட்டப்படாமல் பதில் சொன்னார்.

    ஜீவா! சீட்டு, ரேஸ் மாதிரி இந்த சினிமாவும் ஒரு சூதாட்டம். எப்போ டிக் பண்ணுவோம்னு சொல்ல முடியாது. இதில் ஸ்டார் வால்யூ ஜோக்கர்ஸ் மாதிரி. அதில்லாம ஆட முடியாது. ரிஸ்க் எடுத்து பேரைக் கெடுத்துக்கணுமா?... சூரிய வெப்பம் நம்ம உடம்பை சுட்டாக் கூட பரவாயில்லை. நம்ம கையையும் பேரையும் சுட்டுக்கக் கூடாது. உன்னை மாதிரி இன்ஸ்ட்யூட் ஆளுங்களுக்கு இதெல்லாம் கஷ்டமா தெரியலாம். எங்களுக்குப் பழகிப் போச்சி.

    ஜீவா, தியாகராஜனின் அனுபவரீதியான பேச்சைக் கேட்டுக் கொண்டு அமைதியாக ஒரு முந்திரி மர நிழலில் போய் உட்கார்ந்தான்.

    மிகவும் எச்சரிக்கையாக திட்டமிட்டதால் ஹீரோ, ஹீரோயின் தவிர அம்மா நடிகை மங்களமும், வில்லன் நடிகர் ரஞ்சித்தும் தான் அன்றைய படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்.

    ரஞ்சித் சற்று நிழலான பகுதியில் ஒரு நாற்காலியில் இருந்தான். இன்றைய ஷெட்யூலில் கதாநாயகியை அறைகிற காட்சி ஒன்று இருக்கிறது.

    நன்றாக அறைய வேண்டும்.

    நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனுடன் காத்திருந்தான்.

    மங்களத்துக்கு வேறு ஒரு வேலை இருந்தது. முதல் முதலாக இந்த லொகேஷனைச் சொன்ன போது அவள் சற்று தயங்கினாள்.

    அங்கே போய்த்தான் ஆக வேண்டுமா? ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இந்தப் படத்தையே தவிர்த்து விடலாமா? அப்படிச் செய்வதால் இன்டஸ்ட்ரியில் மிகவும் சிரமப்பட்டுச் சம்பாதித்திருக்கும் இடமும் பெயரும் கெட்டுப் போய் விடுமோ? 

    கிளை கிளையாய் கேள்விகள். அலை அலையாய் யோசனைகள்.

    ஆரம்பத்தில் வடபழனி மசூதித் தெருவில் அவள் ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக குடியேறினாள். அப்பொழுதெல்லாம் எக்ஸ்ட்ரா என்று ஏராளமாக கூப்பிடுவார்கள். அவள் பல படங்களில் கூட்டத்தோடு வந்து கும்மியடித்தாள். இரண்டு, மூன்று படங்களில் வெள்ளை உடையில் கனவுக் காட்சியில் வந்தாள். வேறு இரண்டு படங்களில் அதே வெள்ளை உடையில் நீச்சல் குளத்தில் குதித்துக் கரையேறிய பின் குளோசப்பில் காட்டப்பட்டாள். பின்னாளில் இரண்டொரு வசனம் பேசுகிற வபய்ப்புகள். அதற்குப் பிறகு அம்மா வேஷங்கள்.

    இவளைப்

    Enjoying the preview?
    Page 1 of 1