Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engey Andha Iruvar?
Engey Andha Iruvar?
Engey Andha Iruvar?
Ebook97 pages33 minutes

Engey Andha Iruvar?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெளிப்பார்வைக்கு பாடும் திறன் பெற்ற அலுவலக ஊழியனாகத் தோன்றும் ரகு, உள்ளே வேறு ஒருவன். தன் காதலை அவன் ஏன் நிராகரிக்கிறான் என்பதை மீனா அறிய நேரும்பொழுது அதிர்ச்சி தரும் அந்த நிகழ்ச்சி… பழிக்குப் பழி என்றும் சங்கிலித் தொடரின் ஆபத்தைப் பேசும் கதை இது.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580131008706
Engey Andha Iruvar?

Read more from S. Kumar

Related authors

Related to Engey Andha Iruvar?

Related ebooks

Related categories

Reviews for Engey Andha Iruvar?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engey Andha Iruvar? - S. Kumar

    http://www.pustaka.co.in

    எங்கே அந்த இருவர்?

    Engey Andha Iruvar?

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஒன்று

    இரண்டு

    மூன்று

    நான்கு

    ஐந்து

    ஆறு

    ஏழு

    எட்டு

    ஒன்பது

    பத்து

    பதினொன்று

    ஒன்று

    ரகு கட்டிடத்தைப் பார்த்தபோதே அந்தக் கலகலப்பை உணர்ந்தான். வாசலில் மிகப் பெரியதாக பேனர் கட்டியிருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாகத் தோரணங்கள்.

    சில வருடங்கள் சிறப்பாக அமையும். சில வருடங்கள் சாதாரணமாக இருக்கும். இந்த ஆண்டு ஏற்பாடுகள் சிறப்பாகவே இருக்க வேண்டும்.

    அது அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் கலாசார விழா.

    தமிழகம் முழுவதும் கிளைகள் கொண்ட அந்த நிறுவனம் வருடத்தில் ஒருநாள் ஏதேனும் ஒரு கேந்திர நகரத்தில் கூடி இப்படி விழாக் கொண்டாடும். பல்வேறு கிளைகளிலிருந்தும் சிறப்புத் தகுதிகள் வாய்க்கப்பெற்ற ஊழியர்கள் வந்து கலைவிழாவில் பங்கு பெறுவார்கள்.

    நாடகம், இசைப்போட்டி, மெல்லிசைப் போட்டி, ஒரு நபர் நடிப்பு. பலகுரல் திறமை, நடனம் என்று அமர்க்களப்படும்.

    ரகு நன்றாகப் பாடுவான்.

    உள்ளே போய் ரிசப்ஷனில் தன் அலுவலக முகவரி கொடுத்துப் பதிவு செய்தான்.

    ஹலோ... மலர்ந்த முகத்துடன் தன் முன்னே நிற்கும் அவளைப் பார்த்து ஒரு கணம் திகைத்தான்.

    அவள் தலைமை அலுவலகத்தில் மார்க்கெட்டிங் டிவிஷன் உதவி மானேஜர் மீனா.

    இளம் வயதில் பொறுப்பு வாய்ந்த பதவி. எப்பொழுதும் புன்னகை பொருந்திய முகம். மெல்லிய உடம்பு. என்றாலும் சிற்ப வடிவ அங்கங்கள். மலராத மல்லிகை போன்ற முகத்தில் கூர்மையான எக்ஸிக்யூடிவ் நாசி. ‘பொம்பளை சிரிச்சா போச்சு.’ என்பதை ஒப்புக்கொள்ளாத பாரதி யுகத்துப் பெண்.

    ஹலோ, என்றான் தயங்கி.

    என்னை நினைவிருக்கா?

    மறக்க முடியுமா?

    சம்பிரதாயமாச் சொல்றீங்க. உங்களால என்னை ரெக்கனைஸ் பண்ண முடியலேன்னு நினைக்கிறேன்.

    யூ ஆர் ராங், மிஸ் மீனா.

    மீனா நன்றாகச் சிரித்தாள். அப்போ உங்களுக்கு நினைவிருக்கு.

    பேரைச் சொன்னதும்தான் நம்பிக்கை வருதா?

    வருஷத்தில் ஒரே ஒருநாள் தான் கல்சுரல் மீட். அன்னிக்கு நீங்க பாடறதை வச்சே ஹெட் ஆபீஸ்ல உங்களைப்பத்தி ஒரு மாசம் பேசுவாங்க. அந்த மாதிரி நினைவு வச்சிக்க என்கிட்ட எதுவும் பிரத்யேகத் திறமை கிடையாதே!

    மார்க்கெட்டிங் டிவிஷன்ல நிர்வாக அதிகாரியா இருக்கிறதே நிச்சயமா ஒரு பிரத்யோகத் திறமைதான்!

    அவள் சற்று வெட்கப்பட்டாள். பிறகு, உங்களுக்கு அக்காமடேஷன் எங்கே? என்று கேட்டாள்.

    வழக்கம் போல கெஸ்ட் ஹவுஸ்ல நாலு பேருக்கு ஒரு ரூம். ஆண்களுக்குச் சிறப்பு மரியாதைகள் கிடையாது.

    தேவையுமில்லையே!

    புதுமைப் பெண்கள்னு சொல்லிக்கிட்டாலும் இந்த மாதிரிச் சலுகைகளை விட்டுக் கொடுக்காம இருக்கிறது உங்க வர்க்கத்தின் சாதனைதான்.

    நாங்க கேட்கலே.

    கொடுக்கலன்னா கேட்பிங்க.

    வாட் எபவுட் எ காஃபி?

    சாப்பிடுவோம்.

    வெளியே வந்தார்கள். அந்த நீளமான சாலையின் இறுதியில் அமைந்திருந்த ஹோட்டலுக்குச் சென்றார்கள்.

    வேறென்ன சாப்பிடறீங்க? என்று கேட்டாள்.

    நீங்க விரும்பறதை ஆர்டர் பண்ணிக்கங்க. எனக்குக் காஃபி போதும்.

    ஏன், குரல் கெட்டுடுமா?

    ஆமாம், நான் பெரிய சங்கீத வித்வான்.

    மெல்லிசையும் பாட்டுத்தானே?

    வருஷத்தில் ஒருநாள் பாடறதுக்காக நான் எதுவும் ஸ்பெஷல் கேர் எடுக்கறதில்லே.

    அப்போ சாப்பிடறீங்க, என்றவள் சர்வரிடம், ரெண்டு பாசந்தி, என்றாள்.

    வந்தது.

    சாப்பிட்டார்கள்.

    ரகு, இன்னிக்கு என்னென்ன நிகழ்ச்சிகள்ல பங்கு பெறப்போறீங்க?

    பாட்டு மட்டும்தான்!

    ஏன், மோனோ ஆக்டிங்கெல்லாம் பண்ணுவிங்க, இல்லே?

    முந்தி செஞ்சிட்டிருந்தேன்.

    இப்ப வயசாசி ரிடையராயிட்டிங்களா?

    சிரித்தான். இல்லே... இப்பல்லாம் பாட்டில மனசுலயிக்கிற அளவுக்கு வேற எதிலயும் இன்ட்ரஸ்ட் இல்லே.

    ஏன்?

    தெரியலே.

    ஆல்ரைட், எப்படியும் உங்க பாட்டையாவது கேட்டு ரசிக்க முடியுமில்லையா?

    கேட்க முடியும். ரசிக்க முடியுமான்னு தெரியாது.

    காரம் சாப்பிட்டுவிட்டுக் காப்பிக்கு வந்தார்கள்.

    பில் கொடுக்கப் போட்டி போட்டார்கள்.

    இன்வைட் பண்ணது நான்தான். அதனால நான்தான் கொடுப்பேன், என்றாள் மீனா.

    அவன் மறுக்கவில்லை.

    வெளியே வந்தார்கள்.

    ஆமாம், என்ன பாட்டுப் பாடப்போறீங்க?

    சினிமாப் பாட்டுத்தான்!

    அது தான், என்ன பாட்டு?

    சஸ்பென்ஸ்.

    சும்மா சொல்லுங்க சார்

    எனக்கே சஸ்பென்ஸ். இன்னும் முடிவு பண்னலே.

    எந்த லைன்ல? தத்துவமா, அறிவுரையா, காதலா?

    ஆடியன்ஸ் இன்வால்வ் ஆகணும்னா...

    காதல் பாட்டுத்தான்.

    Enjoying the preview?
    Page 1 of 1