Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Paartha Pinbu Naan...
Unnai Paartha Pinbu Naan...
Unnai Paartha Pinbu Naan...
Ebook89 pages29 minutes

Unnai Paartha Pinbu Naan...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கடற்கரையில் இளம் பெண்ணின் பிணம். நெற்றிப் பொட்டில் அடிவாங்கி இறந்திருந்தாள். போலீஸ் விசாரணை துவங்கியது. அதேபோல் தலையில் அடிவாங்கி இறந்துபோன நடுத்தர வயது ஆணின் பிணம் அடுத்த ஸ்டேஷன் எல்லையில், கடற்கரையில் கிடந்தது. இரண்டும் வெவ்வேறு குற்றங்களா, ஒற்றைக் குற்றத்தின் இரு பகுதிகளா? கதைக்குள் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateApr 16, 2024
ISBN6580131010447
Unnai Paartha Pinbu Naan...

Read more from S. Kumar

Related authors

Related to Unnai Paartha Pinbu Naan...

Related ebooks

Related categories

Reviews for Unnai Paartha Pinbu Naan...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Paartha Pinbu Naan... - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உன்னைப் பார்த்த பின்பு நான்...

    Unnai Paartha Pinbu Naan...

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    பறவைகள் அபூர்வமாகக் கிறீச்சிட்டன. கொஞ்சம் மனித நடமாட்டம் துவங்கி விட்டது, பால்காரர்கள், பேப்பர் பையன்கள், கடற்கரை நோக்கிச் செல்லும் ஜாகிங் மனிதர்கள் என்று.

    சென்னை காலை விடியத் துவங்கிவிட்டது.

    முற்றிலும் வெளிச்சம் வரவில்லை. தெருவிளக்குகள் அணைக்கப்படாததால் இன்னும் இருளும் வரவில்லை.

    ராமபத்ரன் எழுந்து தலை மாட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து அணிந்தார். ஷெல்பிலிருந்த பால் கார்டையும் எடுத்துக் கொண்டார். தனது மேல் சட்டையில் பிரம்மாண்ட பைக்குள் கார்டைத் திணித்துக் கொண்டார்.

    இப்பொழுது வாக்கிங் போய்விட்டுத் திரும்பினால், வரும்பொழுது பால் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிவிடலாம். ராமபத்ரனுக்கு ரொம்பப் பிரியமான விஷயங்கள் இரண்டு. ஒன்று அவரது உயிர். மற்றொன்று டிகிரி காபி.

    நல்லவேளை, இன்று நேரத்தோடு எழுந்தாயிற்று. வாக்கிங் போய் வரும்பொழுது தவறாமல் பால் கிடைத்துவிடும். மூன்று நாட்களுக்கு முன்னால் பால் பாக்கெட் கிடைக்காமல் வீடு வந்து சேர்ந்தார். அன்றைக்கு அவர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது. மகனும் மருமகளும் காலை எட்டரைக்கே ஸ்கூட்டரில் கிளம்பிவிட்டார்கள். வழியில் காபி. அவர் பாடுதான் திண்டாட்டம்.

    பாத்ரூம் போய்விட்டு வந்தார்.

    இன்னமும் மகன், மருமகளின் அறைக் கதவு திறக்கப்படவில்லை.

    மூலையில் இருந்த செருப்பை அணிந்து கொண்டார். கதவைத் திறந்துகொண்டு வெளியில் காலடி எடுத்து வைத்தார்.

    சென்ற வருஷத்தில் ஒருநாள் திடீரென்று நெஞ்சை அடைத்தது. மதியச் சாப்பாட்டில் வாழைக்காய்ச் சேர்த்துக் கொண்டதுதான் தப்பென்று ஒரு சுய வியாக்கியானம் செய்துவிட்டு, ஒரு ப்ளெய்ன் ஜெலுசில் போட்டுக்கொண்டு போய்ப் படுத்தார்.

    அப்படியே தலை சுற்றக், கண் மறைக்க மயங்கிப் போனார். படுத்த வாக்கில் பார்ப்பவருக்குத் தூக்கமென்று தோற்றமளிக்கும் நிலையில். நேரம் அகாலம், என்பதைத் தவிர வித்தியாசமாய் எதுவும் இல்லை. மருமகள் வந்து காபியுடன் எழுப்பிப் பார்த்துவிட்டு அடுக்களைக்குப் போய்விட்டாள்.

    அதன்பின் மகன் மனோகரன் வந்தான்.

    ஷூவைக் கழற்றி, சாக்ஸை உருவி அதில் திணித்தான். சோபாவில் வந்து உட்கார்ந்ததும் ராமபத்ரன் தெரிந்தார்.

    என்னதான் அசதியென்றாலும் இப்படியா ஹாலில் என்று எரிச்சலுற்றான்.

    வைதேகீ

    வந்தாள்.

    என்ன இது?

    எது?

    அப்பாவைக் காட்டினான்.

    உங்கப்பா

    அது தெரியாதா... ஏன், இப்படி ஹால்ல படுத்துட்டிருக்காரு? எழுப்பி காபி கொடுக்கறதுதானே?

    கொடுத்தேன். அவர் எழுந்துக்கலை

    அவன் தன் காபியை உறிஞ்சினான்.

    பிறகு உள்ளே போய் பேண்ட், சட்டையை உரித்துப் போட்டுவிட்டு லுங்கிக்கு மாறினான். மீண்டும் சோபாவில் வந்து உட்கார்ந்தான்.

    மீண்டும் அப்பா அப்படியே கட்டையாய்க் கிடப்பது மனதை உறுத்தியது. எழுந்து சென்று அவரருகில் உட்கார்ந்தான்.

    அப்பா

    தொட்டு லேசாக உலுக்கினான்.

    கொஞ்சம் புரண்டார்.

    பிறகு விழித்தார்.

    அப்பா

    என்னப்பா? என்று எழுந்தார்.

    இந்த நேரத்தில் தூங்க மாட்டீங்களே! உடம்பு சரியில்லையா?

    ஆமாம்பா... தூங்கலை, மயக்கமா விழுந்துட்டேன்.

    மயக்கமா?

    ஆமாம், நெஞ்சை அடைக்கிற மாதிரி இருந்தது. வாயுவா இருக்கும்னு ஒரு மாத்திரையைப் போட்டுக்கிட்டு சாஞ்சேன். அப்படியே கண்ணை இருட்டி, மயக்கம் வந்துடுத்து

    சரி, டாக்டர்கிட்ட போகலாம்

    என்னத்துக்கு, எல்லாம் சரியாயிடும்...

    இல்லைப்பா... நெஞ்சை அடைச்சிதுன்னு சொன்னீங்களே! நீங்க படுத்திருங்க. இதோ வந்திர்றேன்

    சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு தெருமுனைக்குப் போனான். திரும்புகையில் ஆட்டோ.

    அவசரமாக அவரை ஆட்டோவில் ஏற்றி டாக்டரிடம் அழைத்துப் போக,

    டாக்டர் நர்சிங் ஹோமிற்கு வழி காட்டினார்.

    ஒரு வாரம் அப்சர்வேஷனில்.

    எடுக்கப்பட்ட ஈ.சி.ஜி. அபாயம் அருகே என்றது. அதை வைத்து டாக்டர் சொன்னார்.

    நெஞ்சு வலிக்கிற மாதிரி இருந்தா இந்த மாத்திரையைக் கடிச்சிக்குங்க. வந்தது ஃபர்ஸ்ட் அட்டாக். இனி அட்டாக் வராமலே பார்த்துக்கலாம். காலையில ஒரு வாக் போங்க. காபியெல்லாம் அதிகம் சாப்பிடாதீங்க... கண்ட்ரோல்லியே வச்சிருங்க

    டிஸ்சார்ஜ் ஆகி வந்தபோது கொஞ்சம் மாத்திரையும் நிறைய அறிவுரையையும் சுமந்து வந்தார். மனோகரனின் ஜி.பி.எஃப் வைத்திய செலவுக்குப் போயிற்று.

    முதல்

    Enjoying the preview?
    Page 1 of 1