Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Vairam!
Kolai Vairam!
Kolai Vairam!
Ebook74 pages23 minutes

Kolai Vairam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சரித்திர, தொல்பொருள் ஆய்வாளரான டாக்டர் கதிர் நிழல் வேலைகளில் ஈடுபட்டவன். சிலைகளைக் கடத்திக் கொண்டிருந்த அவர் தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ராஜவம்சத்து சஞ்சீவராயரின் வைரத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முனைகிறார். அந்த முயற்சியின் முடிவு...

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580131010446
Kolai Vairam!

Read more from S. Kumar

Related authors

Related to Kolai Vairam!

Related ebooks

Related categories

Reviews for Kolai Vairam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Vairam! - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொலை வைரம்!

    Kolai Vairam!

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    சென்னை விமான நிலையத்தின் தேசிய வருகைப் பகுதி. தூரத்தில் புலப்பட்டு, பெரியதாகி, ரன்வேயில் ஓடி அலுத்து நின்ற ஐ.சி. 171-லிருந்து பிரயாணிகள் கீழே இறங்கினார்கள்.

    உள்நாட்டுப் பயணம் என்பதால் சம்பிரதாயச் சிக்கல்கள் இல்லாமல் முன்னால் லவுஞ்சுக்கு வந்தார்கள். சொந்த வாகனங்களிலோ, வரவேற்க வந்த வாகனங்களிலோ புறப்பட்டபடி இருந்தார்கள்.

    ஃப்ரெஞ்ச் தாடி ஒரு கூடுதல் கவர்ச்சியை வழங்க, லவுஞ்சில் சற்றுநேரம் உட்கார்ந்தார், டாக்டர் கதிர்.

    பார்வைக் கெட்டியவரை ஜீவதாஸ் எங்கேயும் தென்படவில்லை. அவன் வரும்வரை காத்திருக்கத் தீர்மானித்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவருக்கு தொல்பொருள் இலாகாவில் வேலை. அப்பொழுதும் அபூர்வமாக விமானத்திலும் ரயிலிலும் பயணிப்பார். மீனம்பாக்கத்தையோ சென்ட்ரலையோ வந்தடையும்போது அவரை வரவேற்க ஒரு கும்பல் காத்திருக்கும். கார் கொண்டு வருவார்கள்.

    ஆர்க்கியாலஜியை அவர் விரும்பிப் படித்தவர். அதில், விரும்பியே வேலை செய்தார். ஆனால்,

    தன்னுடைய மிதமிஞ்சிய சரித்திர அறிவுக்கும் அகழ்வாராய்ச்சித் திறனுக்கும் அரசாங்கம் போடும் பிச்சைக்காசு தகுதியானதல்ல என்று நினைத்தார்.

    அவருக்கு குடும்பம் கிடையாது. பொறுப்புக்கள் கிடையாது. பணம் சம்பாதித்தே ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தமும் கிடையாது. ஆனால், வாழ்க்கையின் சகல வசதிகளையும் சர்வ இன்பங்களையும் ருசித்துவிட ஆசைப்பட்டதால், நிறைய பணம் தேவைப்பட்டது.

    தொல்பொருள் இலாகாவிலிருந்து விலகினார்.

    தெரிந்தவர்களெல்லாம் தவறாமல் கேட்டார்கள். ‘இவ்வளவு பெரிய சம்பளத்தை விட்டுட்டுப் போறீங்களே, எப்படிச் சமாளிப்பீங்க?’ என்று, அவர் சிரித்தார்.

    எனக்கென்ன, குடும்பமா, குழந்தை குட்டிகளா? நான் ஒரு நாடோடி, பாங்க் பாலன்சை ஒழுங்கா மெய்ன்ட்டய்ன் பண்ணிட்டு, வட்டிப் பணத்தில சாப்பிட்டுகிட்டு காலத்தைத் தள்ளிடுவேன் என்று கூறியதை நம்பினார்கள்.

    கதிர் வேலையை ராஜினாமா செய்த பிறகுதான் மிகவும் சுறுசுறுப்பானார்.

    லண்டன், பாரீஸ், ரோம், நியூயார்க் என்று சுற்றினார்.

    ஆன்டிக் எனப்படும் பழங்காலப் பொருள் சேகரிப்பாளர்களைச் சந்தித்தார்.

    சில நேரம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கன்சல்டண்டாகவும் வேறு சில நேரம் பொருட்களின் வயது, மதிப்பு, ஆன்டிக் மதிப்பு பற்றி கணித்துச் சொல்லும் மதிப்பீட்டாளராகவும் வேலை செய்தார். அதெல்லாம் அவருக்கு நாடுகளைச் சுற்றி வரவும் நிறைய மனிதர்களைத் தெரிந்து கொள்ளவும் தான் உதவின.

    ராபர்ட் ஃப்ரரிஸ்டைச் சந்தித்தது தான் திருப்புமுனை. ராபர்ட்டை அவர் சந்தித்தது நியூயார்க்கில் தான்! ஆனால் அவன் நியூஜெர்சிக்காரன். ஆன்டிக் வைத்தியம்.

    வீடு முழுக்க சிறியதும் பெரியதுமாக பழங்காலப் பொருட்களை நிரப்பி வைத்திருந்தான். சிறிய இறகுப் பேனாவிலிருந்து பெரிய மண்கலங்கள், மரக் கதவுகள், டெரகோட்டா சிற்பங்கள் என்று ஏராளமாய்ச் சேர்த்திருந்தான்.

    ஹவ் இஸ் இட்? என்றான், தன் பூனைக் கண்கள் மிளிர.

    ஃபைன், மிகவும் அருமையான கலெக்ஷன்.

    டாக்டர், எனக்குச் சிலைகள் வேணும்.

    ஸ்டோன்?

    இல்லை, மெட்டல்.

    மெட்டல்? நோ ப்ராப்ளம். மாமல்லபுரம் போனா அருமையான பீஸ் வாங்கலாம்.

    யூ மீன் மெட்ராஸ் மாமல்லபுரம்?

    யெஸ்.

    நோ, எனக்குத் தேவை புதுசு இல்லே.

    பின்னே?

    "பழசு. ரொம்பப் பழசு. ராஜா

    Enjoying the preview?
    Page 1 of 1