Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaaviyamaai Oru Kaadhal
Kaaviyamaai Oru Kaadhal
Kaaviyamaai Oru Kaadhal
Ebook174 pages1 hour

Kaaviyamaai Oru Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாமல்லபுரம் ஜமீன், ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஊர். இப்போது யாரையாவது விசாரித்து கொண்டு தான் அங்கே வந்து சேர முடியும் என்று மகேஷின் மனதில் தோன்றியது. மகேஷ் யார்? அங்கே எதற்கு வந்தான்? மலர்விழிக்கு மணாளனாகும் நோக்கத்திற்காகவா? மலர்விழி இதை விரும்புவாளா...? மனிதனுக்கு வேண்டுமானால் அது மர்மம்; ஆனால் தெய்வத்திற்கு? சந்தக் காளியின் திருவுளம் தான் என்ன...? இன்னும் பல சுவாரசியமான நிகழ்வுகளை வாசித்து அறிந்து கொள்வோம்...?

Languageதமிழ்
Release dateApr 22, 2024
ISBN6580102009661
Kaaviyamaai Oru Kaadhal

Read more from Gauthama Neelambaran

Related to Kaaviyamaai Oru Kaadhal

Related ebooks

Reviews for Kaaviyamaai Oru Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaaviyamaai Oru Kaadhal - Gauthama Neelambaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காவியமாய் ஒரு காதல்

    Kaaviyamaai Oru Kaadhal

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    ‘காவியமாய் ஒரு காதல்’ நவீனம் என் கனவுக் காவியம் என்றே சொல்லலாம். ஒரு சின்னத்திரை நெடுந்தொடருக்கான சகல அம்சங்களும் இதில் பொதிந்துள்ளன. ‘அப்படியானால் இதை நெடுந்தொடர் தயாரிப்பவர்களிடம் அளித்திருக்கலாமே’ என்று நீங்கள் கேட்கலாம். அப்படியொரு முயற்சி நடந்தது. ஒரு தயாரிப்பாளர் என்னிடம் கதைகேட்டு வந்தார். அவரிடம் இக்கதையை விரிவாகச் சொன்னேன். அவரும் இதை நெடுந்தொடராக எடுக்க ஆர்வம் காட்டினார்.

    ஓட்டலில் அறை எடுத்துத்தங்கி, இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்து தருபவர் என ஒரு குழுவாக அமர்ந்து கதை விவாதம் நிகழ்த்தப்பட்டது. அங்கே சென்றிருந்த நான், என் கதை ஏகப்பட்ட காட்சி அமைப்பு அலங்காரங்களுடன் வேறு வடிவம் கண்டிருப்பதை அறிந்து வருந்தினேன். என்னையே உரையாடலும் எழுதச் சொன்னார்கள். எப்படியோ நம் கதையும் ஒன்று சின்னத்திரை வெளிச்சம் காணப்போகிறதே என்னும் மகிழ்வில் நான் இயன்றவரை பொறுமையோடு வளைந்து கொடுத்தே ஒத்துழைத்தேன். இருப்பினும் என் அதிர்ஷ்டம் கைகூடி வரவில்லை.

    கதைப் போக்கையே மாற்றி, இதில் வரும் குறள்சித்தர் பாத்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் தந்து, முன்னிலைப் படுத்தச்சொல்லி, ஒரு பிரபல நடிகரையும் அப்பாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தனர். சமூக அவலங்களை உணர்ந்து, மக்களோடு இயல்பாகப்பழகி, நயவுரைகள் மூலம் பலருடைய மனங்களிலும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஓர் அற்புதமான பெரியவரின் பாத்திரம் அது. கதைப் போக்கில் இயல்பாகத் தோன்றி, அருஞ்செயல்களால் உலகின் கவனம் ஈர்க்கும் ஒப்பற்ற பாத்திரம் அது. அவரை முன்னிலைப்படுத்திக் கதை சொல்லத் துவங்கினால் ரசனைக் குறைவுகளால் அதன் முக்கியத்துவம் குறைந்து, திகட்டத் துவங்கிவிடும். ஏதோ ஒரு சாமியாரின் சரிதம் போலாகிவிடும்.

    தயாரிப்பாளரின் பிடிவாதத்துக்கு நான் இணங்கிச் சென்றதன் விளைவு தொடரின் முதல் ஐந்து எபிஸோடுகளை அவர்கள் படமாக்கிக் காண்பித்தபோதுதான் புரிந்தது. அதிர்ந்து போனேன்.

    எளிமையாக இருக்க வேண்டிய குறள்சித்தர், ஏதேதோ ஜிகினா உடையில், அவசியமற்ற ஆடம்பர அலங்கரிப்பில் காணப்பட்டார். அவர் கனவில் தோன்றி உரையாடவேண்டிய திருவள்ளுவப் பெருந்தகை, அடிக்கடி எங்கெங்கோ தோன்றினார்; அதுவும் காவி உடையில்! ‘பட்டினத்தில் திருவள்ளுவர்’ என்று தலைப்பு வைத்தால் பொருந்துமோ என்னவோ!

    காவி உடையில் வள்ளுவர் உலவினால் யாராவது ஏற்பார்களா? அவர் ‘இல்லறம்’ போற்றி, இலக்கணங்கள் கூறியவர். வாசுகி அம்மையாரோடு நல்லறம் நடத்தி, வாழ்ந்து காட்டியவர். அவரை காவி உடையில் சித்திரிப்பது, இதுவரை உலகம் காணாத விசித்திரமல்லவா? சிற்பத்திலோ, சித்திரங்களிலோ வள்ளுவப்பெருமான் எங்காவது காவி உடையில் காட்சி தருகிறாரா? ‘குறளோவியம்’ தீட்டிய முத்தமிழறிஞர் - முதல்வர் கலைஞர், மற்றுமுள்ள பேராசிரியப் பெருமக்கள் பலரும் மனம் நொந்து போவார்களன்றோ?

    ‘பெரியோர்கள் காட்டிய மரபை மீறி, வள்ளுவரை வேறுகோலத்தில் காட்டுவது ஏற்புடையதல்ல’ என்று எடுத்துரைத்தேன். அவர்கள் அதைச் செவிமடுக்கவில்லை. மேலும் வள்ளுவப் பெருமானின் வாழ்க்கை சரித்திரத்தைக் காட்சிகளாக எழுதி இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அந்த ‘ஆதி-பகவன்’ பெற்றோர் மற்றும் வள்ளுவரின் பிறப்புச் சரிதம் இங்கே ஆயிரம் விவாதங்களையும் மறுதலிப்புகளையும் உள்ளடக்கியது. எனவே தயாரிப்பாளரின் கோரிக்கையை என்னால் எழுதமுடியாது. நீங்கள் திருவள்ளுவர் சரித்திரம் தேவையெனில் வேறு கதையை, வேறு எழுத்தாளர் வைத்து எழுதிக்கொள்ளுங்கள்...’ என்று கூறி, ஒதுங்கி விட்டேன்.

    தொடருக்கு தலைப்புப்பாடல் எழுதிய கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் இதையெல்லாம் நன்கறிவார். அவரிடம் என் மனக்குமுறலைப் பலமுறை வெளிப்படுத்தியதுண்டு.

    ‘காவியமாய் ஒரு காதல்’ தினத்தந்தி குடும்ப மலரில் தொடராக வெளிவந்தது இதிலும் சூழ்நிலைகள் கருதி, குறள்சித்தர் பகுதிகளை மிகவும் சுருக்க வேண்டியதாகிவிட்டது. விரிவான ஒரு ‘பிளாஷ்பேக்’ சம்பவங்கள் இடம்பெறாது போயிற்று. எனினும் பத்திரிகையில் அச்சான பகுதிகளின் தொகுப்பாகவே இந்நூல் உருப்பெற்றுள்ளது. வாசகர்கள் படிக்கும்போதே இதனை உணரலாம்.

    கௌதம நீலாம்பரன்

    4-D, சாய்சரோவர்,

    100 அடி பைபாஸ் சாலை,

    வேளச்சேரி,

    சென்னை – 42.

    1

    ‘அதோ... அந்த மலைக்கோயில் தெரியத் துவங்கிவிட்டது. அதுதான் மல்லபுரம் ஊர். இன்னும் பத்துப் பதினைந்து நிமிஷங்களில் அங்கே சென்றுவிடலாம்...’ என்று நினைத்தான் மகேஷ்.

    சுசுகி மேக்ஸ்-100 சீரான வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது. அந்த மோட்டர் பைக்கின் வேகத்தை அவன் அதிகரிக்க விரும்பவில்லை. நிதானமாகச் சென்றால், இயற்கை அழகை ரசித்தபடி செல்லமுடிகிறது.

    வளைந்து நெளிந்து செல்லும் ஆறு. அதன்மீது ஓரிடத்தில் நீண்ட பாலம். ஆற்றில் அதிக நீரில்லைதான். ஓர் ஓரமாகக் கணுக்காலளவு நீர் சலசலவென்று, கூழாங்கற்களின்மீது குதித்து எழுந்து எங்கோ விரைகிறது. ஆனாலும் ஆற்றின் பரந்து கிடக்கும் மணற்பரப்பு - சிலுசிலுவென வீசும் காற்று எல்லாமே ஒரு வித சுகம், மன மயக்கம் தருகிறது.

    தொலைவில் கோட்டை மதில் மாதிரி திண்டுதிண்டான எழுச்சியுடன் நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள். அதன் நீட்சியாயும், சற்று கிட்டத்தில் புலப்படுவதாயும் தோன்றும் கொல்லிமலை, கல்வராயன் மலைச்சிகரங்கள். அதிலிருந்து கோபித்துக் கொண்டு விலகி வந்து நிற்பது மாதிரி மிகஅருகில் தெரிந்தது; அந்த ஊர் மலை. அதன்மீது யாரோ ராஜ மகுடத்தைத் தூக்கி வைத்தது மாதிரி இருந்தது; அந்த அழகிய அம்மன் கோயில். அதில் சந்தனக்காளி கொலு வீற்றிருக்கிறாள்.

    கோபுரம் கண்ணில் பட்டதுமே அவன் பைக்கை ஓர் ஓரமாக நிறுத்தி, இருகை கூப்பி வணங்கி விட்டுத்தான் மீண்டும் அதைச் செலுத்தத் துவங்கியிருந்தான். கீழே இறங்கவில்லை; பைக் மீதிருந்தே ஒரு கும்பிடு. அந்த ஊருக்குள் சென்ற பிறகுதான் மண்ணில் கால்பதிக்க வேண்டும் என்பது அவன் எண்ணமாய் இருந்தது. அதை ஒரு பிரார்த்தனை மாதிரி வைத்துக்கொண்டிருந்தான்.

    அப்படியொன்றும் அந்தப் பகுதிகளின் ஊர்கள் எதுவும் ரொம்ப செழிப்பான பூமி என்று சொல்வதற்கில்லை. வறட்சிதான் எங்கும் கண்ணில் பட்டது. பசிய வயல்கள் அபூர்வமாகவே தென்பட்டது. அதுவும் மானாவாரி நிலங்கள்... கிணறு, மோட்டர் உதவியுடன் கொஞ்சம் வசதியான ஆட்கள்தான் விவசாயம் பண்ண முடிந்திருக்கும். மீதி நிலங்கள் அவரை, துவரை, எள்ளு, கொள்ளு, கேழ்வரகு போன்ற தானியங்கள் பயிரிட்ட அடையாளங்கள் தென்பட்டன. சோளக்கொல்லைகளும், கம்பங்கொல்லைகளும் இருந்தன. சில இடங்களில் சூரியகாந்திப் பூக்கள் பூத்துக் கிடந்தன.

    எதையாவது பயிரிட்டுத்தானே ஏழைக் குடியானவ மக்கள் வாழ்ந்தாக வேண்டும்? உழைப்பை நம்பி வாழும் மக்களுக்கு நஞ்சை, புஞ்சை என்கிற பேதமெல்லாம் ஏது?

    ஊர்களில் பெரும்பாலும் குடிசைகளே அதிகம் காணப்பட்டன. ஆங்காங்கே சில ஓட்டு வீடுகளும் இல்லாமலில்லை. சிறுநகரங்களை ஒட்டிய நெடுஞ்சாலை ஓரங்களில் நவீன கட்டிடங்கள் நிறையவே காணப்பட்டன. ஆறுகள், ஓடைகள், குளங்கள் எல்லாம் காய்ந்தே கிடந்தன. வாத நாராயண மரங்கள், பூவரசு, புளி, வேம்பு போன்ற மரங்களே எங்கும் அதிகம் காணப்பட்டன. பனந்தோப்புகள் சிற்சில இடங்களில் இருந்தன.

    இதெல்லாம் அவன் வழி நெடுக கவனித்து வந்த காட்சிகள். ‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது. இந்தியாவின் இதயமே கிராமங்கள்தான். இருந்தும் அவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருவது நிஜம். தேசம் சுதந்திரமடைந்து ஐம்பத்தெட்டு ஆண்டுகள் போயின பின்பும் இந்திய கிராமங்கள் அதன் பலனை அனுபவிப்பது பூஜ்யம் என்கிற நிலைதான் நிலவுகிறது’ என்கிற எண்ணங்கள் ஓடின, மகேஷின் மனசில். சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வழியில், விரைவுப் பேருந்தில் வந்து பெரம்பலூர் அருகே இறங்கி, அழைத்துச்செல்ல வந்த நண்பனுடன் டவுனுக்குச் சென்று, ஓட்டலில் ரூம் போட்டுக்குளித்து, சாப்பிட்டு, நண்பனின் பைக்கை இரவல் வாங்கிக்கொண்டு மாலை நான்கு மணியளவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தான் மகேஷ்.

    ‘மல்லபுரம்’ என்கிற பெயர்ப் பலகை உள்ள கைகாட்டி மரம் சுட்டிக்காட்டிய சிறிய சாலையில் அதோ பைக்கைத் திருப்பிவிட்டான். அந்த ஊருக்கு வரவேண்டும் என்பது அவனுடைய நெடுநாள் ஆசை, கனவு என்றே சொல்லலாம். ஆனால், அந்த ஊர் எங்கு இருக்கிறது என்பதே அவனுக்கு அதுவரை தெரியாதிருந்தது. அதைக் கண்டுபிடிக்க அவன் ரொம்பவே சிரமப்பட்டான் என்றால் நம்புவது கடினம்.

    ஆசை எண்ணங்களை வளர்க்கிறது; எண்ணம் புத்தியைத்தூண்டி வழிகளை ஆராய்கிறது. ஒரு சிறு துரும்பு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி, அடையும் வழியைக் கண்டுபிடித்து விடுகிறது புத்தி.

    அப்படித்தான் மகேஷ் இந்த மல்லபுரத்தைக் கண்டுபிடித்தான். அதற்கு உதவிய துரும்புதான் கண்ணன். அவனை மகேஷ் அண்மையில்தான் சந்திக்க நேர்ந்தது. இருந்தாலும் கண்ணன், ஈர நிலத்தில் விழுந்த விதைபோல நட்பில் உயிராய், பயிராய் சட்டென எழுந்து நின்றான். பாசம் கொட்டிப் பழகினான். சார், நீங்க கண்டிப்பா எங்க ஊருக்கு வந்தேயாகணும். உங்களை வரவேற்று உபசரிக்க நான் காத்துக்கிட்டிருப்பேன். நம்ம நட்பு ரயில் சினேகம், பஸ் சினேகம் மாதிரி இல்லாம தொடரணும்; நீடிக்கணும்... என வற்புறுத்தினான்.

    கண்ணனிடம் வழிகேட்டு வைத்திருந்தபடி பயணம் செய்து, இதோ ஊரை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அங்கேபோய், ‘கண்ணன் வீடு எங்கே இருக்கிறது?’ என்று கேட்பதா... இல்லை, ‘கவிஞர் தணலரசன் வீடு எங்கே இருக்கிறது?’ என்று கேட்பதா என்பதுதான் புரியவில்லை. பார்க்கலாம்... சிறிய ஊர்தான். கண்ணன் பார்ப்பது வாத்தியார் வேலை என்பதால், நிச்சயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எளிதாக விசாரித்தறியலாம். முதலில் ஊருக்குள் நுழைந்ததும் அவன் முன்பே நினைத்திருந்தபடி, மண்ணில் இறங்கி நிற்க வேண்டும்.

    மகேஷ் அவ்வாறே செய்தான்.

    பைக்கை நிறுத்திக் கீழே இறங்கி, செருப்பைக் கழற்றிவிட்டு, மண்ணில் பாதம் பதித்து நின்றான். என்ன காரணத்தாலோ தேகம் சிலிர்த்தது. ஒரு கணம் குனிந்து அம்மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்ளத் தோன்றியது. தயக்கமின்றி அடுத்த கணம் அதைச் செய்தான்.

    அவன் பைக்கை நிறுத்தி இறங்கி, கீழே குனிந்ததும் எதையோ தேடுகிறான், என்றெண்ணிய சில வாண்டுகள், ஓடிவந்து, என்ன சார் தேடுறீங்க... எதுனாச்சும் தொலைஞ்சு போச்சா...? என்று கேட்க, அவன் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கொஞ்சம் திணறி, "ஆமாம் தம்பிகளா... ஆனா, இப்ப எதுவும் தொலையலே...

    Enjoying the preview?
    Page 1 of 1