Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mohini Kottai
Mohini Kottai
Mohini Kottai
Ebook199 pages1 hour

Mohini Kottai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாண்டிய - சேர நாட்டு எல்லைப்புறத்தில் நடந்த ஒரு குட்டிப்போரைப் பற்றித்தான் அந்த நாட்டுப் பாடல் விவரிக்கிறது. வேணாட்டு மன்னர் கேரளவர்மரின் முதலமைச்சராகவும் தளபதியாகவும் இருந்தவர் ரவிக்குட்டி. மதுரை மன்னராக அக்காலக்கட்டத்தில் திகழ்ந்தவர் திருமலை நாயக்கர். மன்னரின் தம்பி முத்தியாலு என்னும் முத்தழகன். இந்த அழகனுக்கு ஏற்ற அழகியாக வருகிறாள் மோகினி. காதலர்கள் சந்திப்பு - காதலியைக் காதலன் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுவது, காதலியைச் சந்தேகிக்கும்படி விரோதிகள் செய்யும் சூழ்ச்சியில் காதலன் சிக்குவது, மந்திரவாதிகளாக ஆனந்தன் நம்பூதிரி - விஸ்வாம்பரன், காதலியின் தந்தை வில்லன்களால் கொல்லப்பட, அவர் உடலை மீட்டுவர முத்தழகன் மேற்கொள்ளும் முயற்சிகள் - எதிரிகளோடு மோதல் - இப்படி படுசுவாரஸ்யமாக, விறுவிறுப்பாகப் போகிறது கதை.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580102010858
Mohini Kottai

Read more from Gauthama Neelambaran

Related to Mohini Kottai

Related ebooks

Related categories

Reviews for Mohini Kottai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mohini Kottai - Gauthama Neelambaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மோகினிக் கோட்டை

    Mohini Kottai

    Author:

    கெளதம நீலாம்பரன்

    Gauthama Neelambaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gauthama-neelambaran-novels

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அணிந்துரை

    சமூக நாவல்களை எழுதி விடலாம். சம்பவங்களைக் கோர்வையாக்கி எழுதும் வல்லமை பெற்றவர்களுக்கு அது சுலபம். சமூகப் புதினங்கள், நம் இன்றைய வாழ்க்கையைப் பின்புலனாகக் கொண்டிருக்கும். சம்பவங்கள், இடங்கள், பழக்க வழக்கங்கள், பாத்திரங்கள் அனைத்தும் நாம் அறிந்தவை - நமக்குப் பழக்கப்பட்டவை. இது தவிர, சம்பவங்களை நம் மனோபாவத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால்...

    சரித்திர நவீனத்தில் இதற்கெல்லாம் சாத்தியமில்லை. பண்டைய நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், மரபு, ஆடை, ஆபரணங்கள், சுற்றுச் சூழல் இவற்றை நம் இஷ்டப்படி உருவாக்க முடியாது - கூடாது. பொதுவாகவே இந்திய வரலாற்றை மையமாகக் கொண்டு புதினங்கள் புனைவதற்கு ஆதாரக் குறிப்புகள் குறைவு. மேல்நாட்டைப் போலத் துல்லியமான வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடம் கிடையாது. பழம் பாடல்கள், ஆலயங்களிலுள்ள சிற்பங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், கர்ண பரம்பரைக் கதைகள் இவற்றைக் கொண்டுதான் - ஊகங்களையும் உத்தேசங்களையும் கற்பனையையும் கலந்து சரித்திர நவீனங்களை உருவாக்கியாக வேண்டும்.

    இது அகழ்வாராய்ச்சியாளர்கள், தாங்கள் தோண்டி எடுக்கும் மண்பாண்டச் சிதறல்கள், எலும்புகள், நாணயங்கள், கட்டுமானப் பகுதிகள் ஆகியவற்றை இணைத்து பண்டைய நாகரிகத்துக்கு எப்படி உருக் கொடுப்பார்களோ அதைப் போன்ற பணிதான், சரித்திர நவீனத்தை உருவாக்கும் எழுத்தாளனின் பணியும்.

    டோடு (TODD) என்ற ஆங்கில சரித்திர ஆராய்ச்சியாளர் ராஜபுதனத்து - ரஜபுத்திர இனத்து வமிசாவழியினரைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு உருவாக்கிய அற்புதமான ஆராய்ச்சிப் பொக்கிஷமான அனல்ஸ் ஆஃப் ராஜஸ்தான்’ (Annals of Rajasthan) (இரண்டு பாகங்கள்) - நமது பிரபல சரித்திர நாவலாசிரியரான திரு. சாண்டில்யனுக்குக் கைகொடுத்தது. அத்தகைய வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. அல்வாத் துண்டுகளாக அதில் சரித்திரக் கதைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் அதே ஆங்கில நூலைக் கொடுத்தாலும் எத்தனை பேரினால் திரு சாண்டில்யனைப் போல அற்புதமான சரித்திர நவீனங்களை உருவாக்க முடியும்?

    அதேபோல, பேராசிரியர் கல்கி, தான் உருவாக்கிய அழியாப் புகழ்பெற்ற சரித்திர நவீனங்களுக்கு ஆராய்ச்சி மேற்கொண்டு இலங்கைக்கும், தென்னிந்தியாவில் பல பகுதிகளுக்கும் - தாம் உருவாக்கப் போகும் சரித்திர நவீனங்களுக்கான நிலைக்களங்களை நேரில் சென்று கண்டு வருவார். அந்த வாய்ப்பும் வசதியும் எல்லா எழுத்தாளர்களுக்கும் கிடைக்கும் என்று கூறமுடியாது. வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளுக்கு விஜயம் செய்பவர்கள் எல்லாராலுமே ‘கல்கி’ அவர்களைப்போல - ஒரு பார்த்திபன் கனவையோ, சிவகாமியின் சபதத்தையோ, பொன்னியின் செல்வனையோ உருவாக்கிவிட முடியுமா?

    அழிந்த சாம்ராஜ்யமான விஜய நகரத்துக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் போய்ப் பார்க்காமலேயே நான் ‘பாமினிப் பாவை’ என்ற சரித்திர நவீனத்தை உருவாக்கினேன். டெல்லிக்கோ, ஆக்ராவிற்கோ, பதேபூர் சிக்ரிக்கோ போகாத நான், மொகலாய சக்ரவர்த்தியும், காதல் மாளிகை என்று உலகோரால் புகழப்படும் தாஜ்மஹாலை எழுப்பியவருமான ஷாஜஹானின் வாழ்க்கையைப் பின்புலனாகக் கொண்டு ‘ஜுலேகா’ என்ற சரித்திர நவீனத்தை பத்தாண்டுகள் உழைப்பில் உருவாக்கினேன். ஆகவே வாய்ப்பும் வசதியும் மட்டுமல்லாமல் - உழைப்பும் கற்பனைத்திறனும் ஊக்கமும் கை கொடுக்க வேண்டும் எழுத்தாளனுக்கு.

    திரு. கெளதம நீலாம்பரன் இந்த ஜாதியைச் சேர்ந்தவர். அரசியல்வாதிகளால் – ‘ஒழிக்கப்பட வேண்டும்’ - என்று கோஷமிடப்படும் ஜாதியல்ல! நான் கூறுவது, எழுத்தாளர் ஜாதி! பிரபல எழுத்தாளர் ஒருவர், பிரபல வாரப் பத்திரிகையிலிருந்து விலகி, புதிதாக ஒரு வார இதழைத் தொடங்கியபோது, கெளதம நீலாம்பரனின் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. பிறகு, ‘தன் திட்டங்களுக்குத் தடையாக இருப்பவர்கள்!’ - என்று கருதப்பட்ட ஒருவரால் நாங்கள் இருவருமே அந்த ஸ்தாபனத்திலிருந்து வெளியேற்றப் பட்டோம். அது தனிக்கதை! உழைப்பும் திறமையும் ஒருவனை என்றும் கைவிடுவதில்லை.

    அதன் பிறகு என் வழியில் நானும், தன் வழியில் கெளதம் நீலாம்பரனும் முனைப்போடு முன்னேறலானோம். சரித்திர நவீனங்களை உருவாக்கும் கடினமான பணியில் அவர் ஈடுபாடு காட்டினார். அதில் இன்று வெற்றி கண்டிருக்கிறார். இப்போது நீங்கள் படிக்கப்போகும் மோகினிக் கோட்டை, ‘இரவிக்குட்டி பிள்ளைப் போர்’ என்ற நாட்டுப் பாடலை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்டது. கல்கி அவர்களுக்கு மோகினித் தீவைப் போல, கெளதம நீலாம்பரனுக்கு இந்த மோகினிக்கோட்டை!

    பாண்டிய - சேர நாட்டு எல்லைப்புறத்தில் நடந்த ஒரு குட்டிப்போரைப் பற்றித்தான் அந்த நாட்டுப் பாடல் விவரிக்கிறது. வேணாட்டு மன்னர் கேரளவர்மரின் முதலமைச்சராகவும் தளபதியாகவும் இருந்தவர் ரவிக்குட்டி. மதுரை மன்னராக அக்காலக்கட்டத்தில் திகழ்ந்தவர் திருமலை நாயக்கர். மன்னரின் தம்பி முத்தியாலு என்னும் முத்தழகன். இந்த அழகனுக்கு ஏற்ற அழகியாக வருகிறாள் மோகினி. காதலர்கள் சந்திப்பு - காதலியைக் காதலன் ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுவது, காதலியைச் சந்தேகிக்கும்படி விரோதிகள் செய்யும் சூழ்ச்சியில் காதலன் சிக்குவது, மந்திரவாதிகளாக ஆனந்தன் நம்பூதிரி - விஸ்வாம்பரன், காதலியின் தந்தை வில்லன்களால் கொல்லப்பட, அவர் உடலை மீட்டுவர முத்தழகன் மேற்கொள்ளும் முயற்சிகள் - எதிரிகளோடு மோதல் - இப்படி படுசுவாரஸ்யமாக, விறுவிறுப்பாகப் போகிறது கதை. மோகினிக் கோட்டையை இன்னும்கூட விரிவாக எழுதி இருக்கலாம். ஆனால் கல்யாணம் செய்பவர் சமையற்காரரிடம் இருநூறு பேர்களுக்கு விருந்து தயார் பண்ணச் சொல்லுவது போல - பத்திராதிபர்கள் இருபது வாரங்களில் முடியும்படி தொடர் எழுதக் கட்டளையிட்டால், அதை மீற எழுத்தாளனால் முடியுமா? அந்த நிலையில் தான், ஒரு சிறப்பான விருந்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்ட சமையலைப் போல பல் சுவையையும் - காதல், வீரம், கோபம், சோகம், வியப்பு - தவிப்பு அளவோடு கலந்து, சலிப்பு ஏற்படாதபடி மோகினிக் கோட்டையை உருவாக்கி இருக்கிறார் கௌதம நீலாம்பரன், நாட்டுப்பாடலை ஆதாரமாகக் கொண்டு, தமிழகத்தின் மண்வாசனையோடு நல்லதோர் சரித்திர நவீனத்தை உருவாக்கியுள்ள ஆசிரியர், பாராட்டுக்குரியவர். அவரது உழைப்பை, கற்பனை வளத்தை - அவரது மற்ற சரித்திர நவீனங்களைப் போலவே இதிலும் காணமுடிகிறது. இதுபோன்ற ரசனைமிக்க வரலாற்று நவீனங்களைத் தமிழக மக்களுக்கு கெளதம் நீலாம்பரன் தொடர்ந்து தரவேண்டும் - தருவார் என்று நம்புகிறேன்.

    தமிழக வாசகர்கள் அதிர்ஷ்ட சாலிகள்!

    சென்னை - 17

    - கௌசிகன்

    என்னுரை

    திருமலை நாயக்கருடைய ஆட்சிக் காலத்தை மையமாக வைத்து நான் எழுதிய ‘சேதுபந்தனம்’ நாவல் ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது, ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னை அழைத்து, மூன்று அத்தியாயங்களை என்னிடம் கொடுத்து, ‘இது ஒரு தனிக் கதையாக உள்ளது. இதை இந்த நாவலுக்குள் நுழைக்க வேண்டாம். பிறகு தனியே வேறு ஒரு நாவலாகவே நீங்கள் எழுதக்கூடிய அளவு விஷய கனம் இருக்கிறது’ என்றார்.

    அவர் கூறியது முற்றிலும் உண்மை. ‘சேது பந்தனம்’ நாவலுக்கான வரலாற்றுச் சம்பவங்கள் ‘இராமப்பய்யன் அம்மானை’ என்னும் நாட்டுப் பாடல் திரட்டினை ஆதாரமாகக் கொண்டவை. அதே நூலில் பின்னிணைப்பாக ‘இரவிக்குட்டிப் பிள்ளைப் போர்’ என்ற பாடல்கள் வெளியாகியிருந்தன. அவற்றை ஆதாரமாகக் கொண்டது இந்தக் கதை.

    தினமலர் ‘வாரமலர்’ இதழ் நெடுநாட்கள் வரலாற்றுக் கதைகளே எழுதாமலிருந்த என்னை மீண்டும் எழுத வைத்து, ஊக்கமூட்டி ஆதரவளித்தது. ‘கதைமலர்’ இதழில் நிறைய வரலாற்றுச் சிறுகதைகள் எழுதிய உற்சாகத்தில் ‘பாண்டியன் உலா’ நாவலை எழுதினேன். வாரமலரில் ‘வெற்றி மகுடம்’ வெளியானது. ‘அடுத்த சரித்திர நாவலையும் எழுதிக் கொடுத்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டார் பொறுப்பாசிரியர் திரு.கி. ராமசுப்பு. உடனே ‘மோகினிக் கோட்டை’யை எழுதி முடித்து அவரிடம் சமர்ப்பித்தேன். வாரமலரின் பல லட்சக்கணக்கான வாசகர்களுக்கு அற்புதமான விஷயங்களை அள்ளித் தரும் அவர் இருபத்தொரு வாரங்கள் இந்த வரலாற்று நவீனத்தை வெளியிட்டு, சரித்திர கவனத்தையும் உருவாக்கியுள்ளார். ஏராள வாசகர்களின் பாராட்டுகளை எனக்குப் பெற்றுத் தந்த திரு.கி.ராமசுப்பு சாருக்கும், அருமையான முன்னுரை வழங்கி என்னை ஆசீர்வதித்துள்ள முதுபெரும் எழுத்தாளர் - மரியாதைக்குரிய திரு.கெளசிகன் சார் அவர்களுக்கும், என் நன்றி என்றும் உரியது.

    ‘மோகினிக் கோட்டை’ பற்றிய வாசகர் கருத்துக்களை வரவேற்கக் காத்திருக்கிறேன்.

    - கௌதம நீலாம்பரன்

    மோகினிக் கோட்டை

    1

    ஒளி விளக்குகள் ஏற்ற ஆரம்பித்திருந்தனர் மதுரை அரண்மனையில்.

    ஒவ்வொரு நாளும் அது ஓர் உற்சவம்போல் நிகழும். இதற்காகவே மாலைப்போது எப்போது வரும் என்று காத்திருப்பார் திருமலை நாயக்கர்.

    பகலில் சோலைவனம் முழுக்க பூத்துச் சிரிக்கும் மலர்களைப் போன்று, இரவு தீப ஒளிமலர்கள் மாளிகை முழுக்க அலங்கரிக்க வேண்டும் அவருக்கு. இருளும் நிழலும் எங்குமே விழக்கூடாது!

    ஐரோப்பிய வணிகர்கள் அளித்த அழகிய வண்ணக் கண்ணாடி விளக்குகள் பல மேலே கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தன. அவற்றைக் கீழிறக்கி ஏற்றத் தோதாக உருளையில் பொருத்தப்பட்ட கயிறுகள் தூண்களில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. பணியாளர்கள் சர்வ ஜாக்கிரதையாக கயிற்றை அவிழ்த்து, எட்டும் உயரத்தில் கண்ணாடி விளக்குகளை இறக்கி நிறுத்த, பணிப் பெண்கள் வந்து அதன் மெழுகுத் திரிகளைக் கொளுத்தினர்.

    ஒளி மிகுந்த பழக் குலைகளைப் போன்ற அந்த தீபக் கொத்துகள் மீண்டும் மேலேற்றப்படும் உருளை ஒலி ‘கிரீச் கிரீச்’ என மெலிதாக அங்குமிங்கும் தாழ்வாரங்களில் கேட்டுக் கொண்டிருந்தன. ‘ஆகட்டும், ஆகட்டும்... அரசர் வரும் நேரமாகிவிட்டது’ என அதிகாரிகள் அதட்டிக் கொண்டிருந்தனர்.

    மதிய உணவுக்குப் பின் சிறிது ஓய்வெடுத்த பிறகு அவர் புறப்பட்டு, வைகை ஆற்றைக் கடந்து தமுக்கம் மைதானம் சென்று விடுவார். மாலை முழுக்க அங்கு மண்டபத்தில் மற்போரும், விற்போரும் நிகழும். புரவியேற்ற வீரர்கள் பல சாகசங்களைச் செய்து காட்டுவர். வித்தைகள் தூக்கக் கூடாது. வீரர்கள் சோம்பியிருக்கக் கூடாது. மன்னரை மகிழ்விக்கும் பேரால் அவர்களுக்கு நித்தமும் பயிற்சிகள் நிகழும், சகலமும் கண்டு களித்து, மாலை மங்கி இருள் போர்த்தும் வேளையில் அரசர் பிரான் அரண்மனை திரும்புவார்.

    அப்போது தீப விளையாட்டுகள் நிகழும்.

    அதோ... துந்துபி முழக்கம் கேட்கிறது. இரட்டைப் புரவி பூட்டிய ராஜரதம் அரண்மனை முக மண்டபத்தில் பிரவேசித்து, நீண்ட பாதையில் உருண்டு வந்து முன்றிலில் நிற்கிறது.

    துந்துபி முழக்கம் அரசர் வருகையை அத்தனை பேர் நெஞ்சிலும் அறைகிறது. நெடிய தாழ்வாரங்களில் நின்றிருந்த காவலர்கள் தொய்வுகள் நீங்கி விறைப்படைகின்றனர். இடக்கரம் ஈட்டியை இறுகப்பற்ற, வலக்கரம் வணக்கம் தெரிவிக்க முகத்தின் குறுக்காக உயர்கிறது; தலை சற்றுத் தாழ்கிறது.

    ராயசமும், பிரதானிகளும் கைகட்டிப் பின்தொடர, நாயக்க மன்னர் முன் நடக்கிறார். காவல் வீரர்கள் வணங்கி நிற்கின்றனர். அந்தப்புரம் அணங்குகளில் சிலர் அழகிய வெள்ளித் தட்டுகளில் சின்னச் சின்ன வெண்கல அகல்களை ஏற்றி ஏந்தியபடி முன் வந்து சிரித்த முகம் காட்டி அரசர் பிரானை வரவேற்கின்றனர். சற்று ஒதுங்கி, கூடவே நடந்து வரும் அவர்களைப் பார்த்து நாகலா, கோகிலா, குந்தளா, திம்மம்மா, சந்திரப் பிரபா எனப் பெயர் சொல்லி அழைத்துக் கலகலப்பாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியபடி நாயக்க மன்னர் நிலா முற்றத்தினுள் பிரவேசித்தார்.

    அங்கே கிடந்த அலங்கார இருக்கை ஒன்றில் அவர் அமர்ந்ததும் தீப விளையாட்டுக்கள் துவங்குகின்றன.

    அந்தப்புர மகளிர் ஐவர் அரச இருக்கையின் பின்னால், வரிசையாக நிற்க, நடன மகளிர் சிலர் வந்து தீபங்கள் உள்ள தட்டுக்களை வாங்கிச் சென்று, அகல்களின் எண்ணெய் சிந்தாமல் நர்த்தனம் புரிகின்றனர். இசைக்கலைஞர்கள் அந்த நர்த்தனத்திற்கேற்ற இன்னிசை முழங்குகின்றனர்.

    அடுத்து ‘தம்... தம்’ என முரசு முழக்கம் அதிர்கிறது. பல்லியங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1