Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swarna Vetkai
Swarna Vetkai
Swarna Vetkai
Ebook304 pages3 hours

Swarna Vetkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பேராசைதான் எல்லாம். ஒருவனின் உயர்வுக்கும் அழிவுக்கும் பேராசைதான் காரணம். மனிதர்கள் தந்திரமானவர்கள். ஒருவரை ஒருவர் தந்திரத்தாலேயே தாண்டிவிட வாழ்நாள் முழுவதும் முயலுகிறார்கள். இந்த தங்க வேட்கையும் அந்தப் பேராசையில் விளைந்ததுதான். வாசிப்போமா...

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580156808758
Swarna Vetkai

Read more from Balakumaran

Related to Swarna Vetkai

Related ebooks

Reviews for Swarna Vetkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swarna Vetkai - Balakumaran

    http://www.pustaka.co.in

    ஸ்வர்ண வேட்கை

    Swarna Vetkai

    Author :

    பாலகுமாரன்

    Balakumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balakumaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    முன்னுரை

    ‘அடப்பாவி! இது எண்ணூறு பக்க நாவலுக்கான சமாச்சாரம். இதைப்போய் சிறுகதையாவா எழுதினே? போ போ போய் நாவலா எழுதிக்கொண்டு வா!’

    எண்ணூறு பக்க நாவலா? நானா? அதெல்லாம் உங்களால்தான் முடியும்!

    எடுத்த சரித்திரக்குறிப்புகள் வெச்சிருக்கியா? கொடுத்தேன்.

    இரண்டு வாரங்களுக்கு எந்த பின்னூட்டமும் இல்லை.

    லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டு காவேரி ஆஸ்பிடலுக்குப் போய் வந்ததாகச் செய்தி வந்தது. அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரது உதவியாளரிடம் பேசினேன். இப்போது தேவலை என்றார்கள். மூன்றாம் வாரம் அவரிடமிருந்தே ஃபோன் வந்தது. குரலில் ஒரே உற்சாகம்.

    ‘அந்தப் பெட்டி என்னமா இருக்கு தெரியுமா? ஏழடி நீளம்! ரெண்டு பக்கமும் இரும்பால் வளையம் போட்டு ரிவெட் அடிச்சு...!’

    ‘சார்! என்ன பெட்டி? எதைச் சொல்றீங்கன்னு புரியலையே!’

    நீதானே உன்னோட சிறுகதையில் எழுதியிருக்க! கும்பினி துரையும் குமாஸ்தாவும் மெட்ராசிலேர்ந்து கூடலூருக்குப் போகும்போது பெரிய பெட்டியில ஃபைலெல்லாம் எடுத்துண்டு போறாங்கன்னு! அந்தப்பெட்டிதான்!

    ‘அத எங்க பாத்தீங்க சார்?’

    ‘நேத்துதான் கோட்டை மியூசியத்துல போய்ப்பார்த்தேன்!’

    ‘சார் உங்களுக்கு இப்பதான் உடம்பு சரியாகி இருக்கு. இப்ப ஏன் அலையறீங்க?’

    அது இருக்கட்டும் ரகு! பொட்டிய நேர்ல பாக்காம எப்படி விவரிக்கறது, சொல்லு! அதோட வயநாட்டுக்கும் ஒரு டிரிப் போணும்!

    தொபக்கென்று மொபைல்ஃபோனை கீழே தவறவிட்டு விட்டேன்.

    என்ன அர்ப்பணிப்பு இது? என்ன நேர்மைத்தன்மை!

    இந்த நாவலில் நீங்களே பாருங்கள், ஒரே ஒரு வரி வரும் அந்த விவரணைக்காக தன் உடல் அசௌகரியத்தையும் மீறி கோட்டை மியூசியத்துக்குப்போய் கண்ணால் பார்த்துவிட்டு வந்துதான் விவரிக்க வேண்டும் என்னும் professionalism!

    இதுதான் பாலகுமாரன்!

    லகுவலீசரைப்பற்றி ஒரு வரி கூட இல்லாத சோழர் சரித்திரமாம் என்று உடையாரைப்பற்றி சில ஆரோக்கியமில்லாதவர்களால் சில வருடங்களுக்கு முன் ஒரு கேலி எழுப்பப்பட்டது.

    Frederick Forsyth எழுதிய Afghan நாவல் படித்துப்பாருங்கள். Day of the Jackal, Odessa File என்று பல சமீபத்திய சரித்திரப்பின்னணியில் அபார நாவல்கள் எழுதியவர். துல்லியமான ஆராய்ச்சிக்குப் பெயர் போனவர். இன்று நடக்கும் தீவிரவாதத்தின் ஆரம்பகால கட்டங்கள் பற்றியும் 9/11 என்று நாம் இப்போது சொல்லும் அந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கான தூண்டல்கள் பற்றியும் விலாவரியாக அலசி ஆராய்ந்து எழுதின கதைதான் Afghan. கவனியுங்கள், கதை. கதை என்றால் சரித்திர ஆராய்ச்சிக் கட்டுரை இல்லை. கதை, நாவல், முற்றுப்புள்ளி.

    ஆனால் ஒஸாமா பின் லேடன் பற்றி ஓரிரு இடங்களில் லேசான reference மட்டுமே கொடுத்திருப்பார்.

    இப்ப என்ன, Frederick Forsyth இன்றைய சரித்திரம் தெரியாதா? ஒஸாமா பி லேடன் பத்தி ரெண்டு வரிகூட இல்லை, என்னய்யா சரித்திரக்கதை என்பீர்களா?

    உடையார் எழுதின சமயத்திலேயே பாலகுமாரன் பல இடங்களில் சொல்லியிருந்தார். "இந்த உடையார் ஒரு நீண்ட நாள் ஆவல், ஏக்கம், யோசனை, கிட்டத்தட்ட தவத்தினையொட்டிய தவிப்பின் வெளிப்பாடு!’

    உடையாரும் நாவல்தான். கற்பனைகள் சேர்ந்ததுதான். கல்வெட்டுக்கள் மூலமாகவும், பல சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பாலும், இங்கே கண்டுபிடிப்பு என்று நான் சொல்லுவது அவர்களின் உண்மையையொத்த interpretationகளின் மூலமாகவும் அந்தக்கால கட்டத்தின் நிகழ்வுகளை ஓரளவுக்கு அதே காலத்தின் ஓட்டத்தில் புரிந்துகொண்டு கற்பனையைச் சேர்த்து, மறுபடியும் சொல்கிறேன் கற்பனையைச் சேர்த்து, சுவாரஸ்யமான புதினமாக ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதின உடையார் நாவலில் நாம் நியாயமாக என்ன எதிர்பார்ப்போம்?

    சோழர் கால வாழ்வியலும் மக்களின் நடைமுறைகளும் மன்னனின் சாதுரிய சாமர்த்தியங்களும் வீரமும் அன்றைய தமிழ் நாகரீகத்தின் முதிர்ச்சியும் சுவாரஸ்யமாக கதையின் ஊடே சொல்லப்பட்டிருக்கும் நேர்த்தியையும், எழுத்தாளரின் திறமையும் மொழி வன்மையையும் வீச்சையும் தானே!

    சோழர் கால சரித்திரம் மட்டுமே தெரிய வேண்டுமானால் நீலகண்ட சாஸ்திரியோ, மஜும்தாரோ குடவாயில் பாலசுப்ரமணியமோ எடுத்துப்படிக்க வேண்டும். அதற்கான களம் உடையார் அல்ல. எத்தனை பேரால் இந்த அபார ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும்?

    ஆனால் இன்று பொன்னியின் செல்வம் மூலமாகவும் உடையார் மூலமாகவும் ஓரளவுக்கு சோழர் நாகரீகம் பற்றித் தெரிந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்களே! சோழர் கால தமிழ் வாழ்வு பற்றிய பல செய்திகள் நமக்குத்தெரிய வந்திருக்கின்றனவே!

    ‘வந்தியத்தேவன் சேந்தன் அமுதனின் தாயார் இட்ட புளி அன்னத்தையும் கறிகாய் வகைகளையும் உண்டான். பிறகு இரண்டு படி தயிரை நுங்கிவிட்டுத்தான் எழுந்திருந்தான்’ - பொன்னியின் செல்வன்

    ‘உடையார் ராஜராஜத்தேவர் எழுந்து பின் பக்கம் போய்விட்டு வந்து முகம் கழுவிக்கொண்டார். பட்டுத்துணியால் முகம் துடைத்துக்கொண்டவுடன் வெள்ளிக்கிண்ணத்தில் அளிக்கப்பட்ட அரிசிக்கஞ்சியை பருகிவிட்டு இரண்டு கொட்டைப்பாக்கை வாயில் அதக்கிக்கொண்டார்.’ - உடையார்.

    இதைப்படித்தவுடன் என்னய்யா எழுத்து இது? முதல்நாள் சேந்தன் அமுதனின் தாயார் இரண்டு படி பால் புரை குத்தினார்களா என்று எழுதவே இல்லை. அதெப்படி அடுத்த நாள் அவர் வீட்டில் இரண்டு படி தயிர் வரும் என்றோ.

    ‘அரண்மனையின் முந்தைய தினம் அரிசி புடைத்தது பற்றி எழுதாமல் அடுத்த நாள் அரிசி கஞ்சி எங்கேயிருந்து வந்தது’ என்றோ கேட்கப்போனால், என்னத்தச்சொல்ல!

    அய்யா! பாலகுமாரன் எப்போதாவது சோழர் காலம் பற்றிய முழு சரித்திரமும் உடையாரில் இருக்கிறது. அதை மட்டும் போய் படியுங்கள் என்று சொல்லியிருக்கிறாரா?

    உடையாரைப் படியுங்கள். தஞ்சைக்குப் பயணப்படுங்கள். கோவிலில் கல்வெட்டுக்களைப் பாருங்கள். இன்னும் இன்னும் சோழர் நாகரீகம் பற்றிப்படியுங்கள். இது நம் வரலாறு. நமக்குத் தெரிய வேண்டும் என்றுதானே கதறுகிறார்!

    இப்படி கேள்வி கேட்பவர்களின் ஆதார காரணத்தை நான் Metaphysics of Moralsஇல் தான் தேடுகிறேன்!

    இந்த நாவல் ஸ்வர்ண வேட்கையும் அப்படித்தான்...

    சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இந்த மெட்ராசின் முழு சரித்திரம் தெரியுமா?

    முதல் உலகப்போரில் எம்டன் குண்டு போட்ட கதையைப்பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கும் நமக்கு இரண்டாம் உலகப்போரின் போதுகூட இங்கே துறைமுகத்தில் சில குண்டுகள் விழுந்த கதை தெரியாதே!

    பதினெட்டாம் நூற்றாண்டில் வயநாட்டில் தங்கம் கிடைக்கிறது என்று நடந்த அமர்க்களம் தெரியுமா?

    இதோ இங்கே இருக்கும் ஊட்டி கூடலூர் வயநாட்டுப் பகுதியில் தங்கம் தேடுவதற்கென்று கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்பட்டு, பல பேராசைகளும் துரோகங்களும் உயிர்ப்பலியும் நடந்த வரலாறு தெரியுமா?

    இதோ இங்கே இருக்கும் ஊட்டி கூடலூர் வயநாட்டுப் பகுதியில் தங்கம் தேடுவதற்கென்று கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்பட்டு, பல பேராசைகளும் துரோகங்களும் உயிர்ப்பலியும் நடந்த வரலாறு தெரியுமா?

    அன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறை பற்றி அறிவோமா?

    கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஊழியர்களும், துரைமார்களும், அவர்களுக்குச் சேவகம் செய்த வேலைக்காரர்களும், அவர்களின் ஆசாபாசங்களும், அவர்களின் வாழ்க்கை முறையும் வெறும் விவசாயியாக மட்டுமே இருக்கும் அப்பனுக்குப் பிறந்த பிள்ளை இன்னும் இன்னும் உயரப் பறக்க வேண்டுமெனில் ஊர்விட்டுப் போயாக வேண்டும் என்பது புரிந்து மெட்ராசுக்கு வந்து கும்பினியில் தபால் கொண்டு செல்லும் ரன்னராகச் சேர்ந்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி பல்லாவரம் ஜமீன் அளவுக்கு முன்னேறியதைச் சொல்லும் இந்தப் புதினம் சரித்திரக்கதைதான். இதைப்படிப்பதன் மூலம் பதினெட்டாம் நூற்றாண்டின் மெட்ராஸ் வாழ்க்கை பற்றியும் அந்த நாகரீகம் பற்றியும் பாரத தேசம் வர்த்தக அடிமையாகிப் பின்னர் அரசியல் அடிமையாகிப் போன வரலாறு கண் முன்னே விரிவதைப் படம் பார்ப்பதுபோலப் புரிந்துகொள்ள முடியும். அன்றைய மைலாப்பூரின் வாழ்க்கை, கும்பினிச்சேவகம் செய்யும் பிராமணர்களின் சாமர்த்தியம், அவர்களுக்கு அடிமை வேலை செய்பவர்களின் செயல்பாடு, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப்பிழைக்கும் வழிகள், துரைமார்களின் மெத்தனம் அவர்களின் நேர்மையற்ற எண்ணம், முடிந்தவரை சொத்து சேர்த்து லண்டனுக்குப் போய்விடுவது பற்றின அவர்களின் கவலைகள், எவனோ ஒரு ஆஸ்திரேலியன் கிளப்பிவிட்ட வதந்தியால் கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்ட தங்கத்தேடல் என்று இந்த ஸ்வர்ண வேட்கை களம்மாறிக் களம் புகுந்து நம்மைக் கட்டிப்போடுகிறது.

    இந்த நாவல் முற்றுப்பெறவில்லை. அதற்குள் பாலகுமாரன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

    அவருடன் இந்த நாவல் பற்றி நான் பேசின சமயங்களில் இதை எப்படி முடிக்கப்போகிறார் என்று ஒரு கோடி காட்டியிருந்தார்.

    ‘பேராசைதான் எல்லாம். ஒருவனின் உயர்வுக்கும் அழிவுக்கும் பேராசைதான் எல்லாம். மனிதர்கள் தந்திரமானவர்கள். ஒருவரை ஒருவர் தந்திரத்தாலேயே தாண்டிவிட வாழ்நாள் முழுவதும் முயலுகிறார்கள். பள்ளியில் வீட்டில் மனைவியிடம், முதலாளியிடம், அடுத்த வீட்டுக்காரனிடம், நண்பனிடம் என்று எல்லோரிடமும் தந்திரத்தையே முன்னிறுத்தி எண்ணமும் செயலும் தந்திரமே என்று வாழ்வது பேராசையில்தான். இந்த தங்க வேட்கையும் அந்தப் பேராசையில் விளைந்ததுதான். காபி, தேயிலைத் தோட்டங்களில் அடிமை வேலை செய்துவந்த பரமேச்வரனும் கிருஷ்ணனும்கூட வெறும் தந்திரத்தை வைத்தே வாழ முற்பட்டு நாசமாகிப் போகிறார்கள். கும்பினிக்கு நேர்மையாக உழைக்காமல் துரையின் ஆதரவுக்காய் பொய் பேசி துரோகம் இழைத்து தன் வாழ்க்கையை செல்வந்தராக்கிக்கொள்ள முயலும் கிருஷ்ணமாச்சாரியும் சடகோபனும் அவரது கோச் வண்டி ஓட்டுபவனும்கூட பேராசையில் தவறுகிறார்கள்.

    ஆனால் விதியின் முடிச்சை எங்ஙனம் புரிந்துகொள்ள முடியும்? தப்பு செய்பவனும் வீடு, நகை, குடும்பம் என உயர தப்பே செய்யாதவன் அல்லல்பட்டு ஓய்ந்துபோய் ஒடுங்கிப்போய் விடுகிறான்!

    அவரின் இந்த வார்த்தைகளில் ஸ்வர்ண வேட்கை நாவலின் மீதமுள்ள பகுதியின் திசையைப் புரிந்துகொள்ள முடியும்.

    ஆனாலும் இந்த நாவலைப் படிக்கும் வாசகனுக்கு தங்கத்தேடல் என்னதான் ஆயிற்று, கிருஷ்ணமாச்சாரியும், சபேசனும், கன்னியப்பனும், கோச் வண்டியோட்டியும் பரமேச்வரனும் கிருஷ்ணனும் அர்பத்நாட் கம்பெனியும் சுல்தான் பத்தேரி கிராமும் என்ன ஆனார்கள் என்னும் ஆவல் எழும் என்பதில் சந்தேகமில்லை. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட சில விவரங்களைக்கொண்டு அவரின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முயலுகிறேன். அந்த முயற்சியில் மேலே சொன்ன கதாபாத்திரங்களின் பின்னாளைய நிலைமை என்ன என்பதையும் தங்க வேட்டை எப்படிப்போய் முடிந்தது என்பதையும் ஒரு கேள்வி பதிலாக இந்த நாவலின் இறுதிப்பகுதியில் தர முயன்றிருக்கிறேன். நிகழ்வுகள் சரித்திரத்தின் உண்மைகள், பாத்திரங்கள் பாலகுமாரனின் கற்பனை ஓட்டத்தின் வெளிப்பாடு.

    அது ஏன் கேள்வி பதில்? ஏன் இந்த நாவலை வேறு யாராவது நல்ல எழுத்தாளரால் முடிக்கச் சொல்லலாமே?

    கூடவே கூடாது.

    வீனஸ் டிமெல்லோவின் உடைந்த கைகளை மீண்டும் ஒட்ட வைக்க முயலுவோமா?

    ரோம் நகரத்தின் கொலீஸியத்தின் உடைந்த தூண்களை மீண்டும் நிறுவலாமா?

    மாமல்லபுரத்தின் கடற்கரைக் கோவிலை மறுபடி கட்ட முடியுமா?

    சரித்திரத்தின் உன்னதங்களை அவற்றின் முடிவான நிலையிலேயே விட்டு வைத்திருப்பதில்தான் அந்த அபார சரித்திரச் சின்னங்களுக்கு நாம் செய்யும் மரியாதை, ஆராதனை.

    பாலகுமாரனின் எழுத்தும் உன்னத சரித்திரமே! அதை இன்னொருவர் தொட்டுத் தொடருவதாவது...?

    அபத்தம்!

    பாலகுமாரனின் அன்பைப்போல் குளிர்வான மழைத்தூறல் கொண்ட காலை வேளையில், ஒவ்வொரு தமிழ் வாக்கியம் படிக்கும்போதும் நினைவில் வந்து மனதை நிறைக்கும் அவரையே நினைத்துக்கொண்டிருக்கும்,

    ரகுநாதன் ஜெயராமன்

    9940632646

    1

    வெளிச்சத்தின் முதல் ரேகை வானத்தில் பட்டதும் அவர்கள் இரண்டு பேரும் எழுந்திருந்தார்கள். சோம்பல் முறித்தார்கள். ஒரு வட்டமான மூங்கில் அடைப்புக்குள் படுத்திருந்த முப்பத்து நாலு பேரை தாண்டி படல் திறந்தார்கள். யாரென்று காவல்காரன் பார்த்தான். வானம் பார்த்தான். சரி எழுந்து இயற்கை உபாதைக்கு போகிறார்கள் என்பதை புரிந்துகொண்டான். போர்வையை இறுக்க போர்த்திக்கொண்டு அமர்ந்தபடியே தூங்கத் துவங்கினான். அவர்கள் இயற்கை உபாதைக்கு போவதுபோல போக்கு காட்டினார்கள். ஓடை பக்கம் போனார்கள். முகம் கழுவிக்கொண்டார்கள். திரும்ப பட்டியை பார்த்தார்கள். பட்டி அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. திபுதிபுவென்று ஓடை ஓரமாகவே உள்ள பாதையில் ஓடத் துவங்கினார்கள். யாரோ துரத்துவதுபோல தப்பித்து ஓடுவதுபோல அவர்கள் ஓடத் துவங்கினார்கள். பாதையிலிருந்து விலகி ஒரு மலைச்சரிவில் நின்றார்கள்.

    அங்கே ஒளித்து வைத்திருந்த கயிறை எடுத்து சரிவில் நீட்டியிருந்த ஒரு மரக்கிளையில் கட்டி கயிறை உறுதியாகப் பற்றி கீழ் இறங்கினார்கள். ஒருவர் பின் ஒருவராக வேறொரு பாறை தொட்டார்கள். கயிற்றை அசைத்து அந்தச் செடியை வேரோடு பிடுங்கினார்கள். முடிச்சை அவிழ்த்துவிட்டு அருகே உள்ள இன்னொரு கிளையில் கட்டி கயிறில் ஒருவர் பின் ஒருவராக மற்ற மரக்கிளையில் கால் இறங்கி வேறொரு பாதையில் குதித்தார்கள். அது பாதையில்லா பாதை. மிருகங்கள் போகின்ற பாதை. இப்போது வெளிச்சம் அதிகமாக இருந்தது. அவர்கள் வேகமாக ஓடினார்கள்.

    போனவர்கள் வரவில்லையே என்று காவல்காரன் எழுந்தான். சந்தேகம் வந்தது. அவர்கள் போன திக்கை நோக்கி வேகமாக நடந்தான். அவர்கள் அங்கு இல்லை என்று தெரிந்ததும் ஊதல் ஊதி மற்ற காவல்காரர்களை எழுப்பினான். அவர்கள் போன வழியை காட்டினான். அவர்கள் நாய்களோடு அந்த இடத்தை நோக்கி ஓடினார்கள். நாய்கள் மலைச்சரிவின் பக்கம் திரும்பின. சரிவு பக்கம் போய் பார்த்தார்கள். எந்தத் தடயமும் தெரியவில்லை. நாய்களை அதட்டி பாதைக்கு வந்தார்கள். நாய்கள் மறுபடியும் மலைச்சரிவை நோக்கியே குரைத்தன. அந்த வழியே எப்படி போயிருக்க முடியும். போனால் மரணம்தான் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். பாதையில் தேடி ஓடி வந்தார்கள். என்ன தேடினாலும் அந்தப் பாதையில் அவர்கள் இரண்டு பேரும் தேடியவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. விலங்குகள் போகும் பாதையாக மூச்சைப் பிடித்து ஓடியவர்கள் வேறொரு ஓடையின் பக்கம் நின்றார்கள். நீர் குடித்தார்கள்.

    இடுப்பிலிருந்த துணிப் பொட்டலத்திலிருந்து இரண்டு பொறைகள் எடுத்து ஒன்றை பரமேஸ்வரன் கிருஷ்ணனுக்கு கொடுத்தான். கிருஷ்ணன் அதை நன்றியுடன் வாங்கிக் கொண்டான்.

    பரமேஸ்வரன் உயரமாய், அகலமாய், உறுதியாய் இருந்தான். அவன் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. கிருஷ்ணமூர்த்தி கொஞ்சம் குள்ளமாய், கச்சலாய், குழந்தைத்தனமாய் இருந்தான். பரமேஸ்வரன் என்ன சொன்னாலும் செய்கின்ற புத்தி அவனிடம் இருந்தது. இன்னொன்னு கொண்டாந்திருக்கேன் என்று சொன்னான். என்ன என்று கேட்டபோது, முதுகு பக்கம் வேட்டியில் சொருகியிருந்த உள்ளங்கை நீள குப்பி எடுத்தான். அதில் தேன் இருந்தது. இந்த நேரம் பொறையைவிட தேன் அதிக சக்தியை கொடுக்கக் கூடியது. அடிசக்கை, உனக்கு கூட இது தோன்றியிருக்கிறதே என்று பரமேஸ்வரன் அவனை கொண்டாடினான்.

    பொறைமீது தேன் ஊற்றினான். நக்கித் தின்றான். ஊறின பொறையை கடித்து சுவைத்தான். அதே வண்ணம் கிருஷ்ணமூர்த்தியும் உண்டான். இப்போது நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது. இந்த வெளிச்சத்தில் மிருகங்கள் வராது. ஆனால் கொடிய மிருகங்கள் உணவுக்காக இவர்களை துரத்தக்கூடும். சுற்றும் முற்றும் பார்த்து நல்ல மரக்கிளையை பற்றி இழுத்து வலிவோடு பரமேஸ்வரன் உடைக்க, தனக்கும் ஒன்று கொடுக்குமாறு கிருஷ்ணமூர்த்தி கேட்க, அவனுக்கு ஒரு சிறு குச்சியை கொடுத்தான். கையில் கோலோடு அவர்கள் இரண்டு பேரும் சரிவான பாதையில் ஓடத்துவங்கினார்கள்.

    உச்சியிலிருந்து இறங்கி சுல்தான் பர்த்தேரி என்ற சிறிய கிராமத்திற்கு வந்தார்கள். இந்த கிராமத்தில் ஒன்று சேர்க்க வைத்துதான் கங்காணி மலைக்கு அழைத்துப் போனான். அந்த மலைக்கு போக ஒருநாள் ஆகியது. ஆனால் சரிவில் இறங்கி இறங்கி மூன்று மணி நேரத்தில் சுல்தான் பர்த்தேரியை தொட்டுவிட்டார்கள். குடிக்க ஏதோ தேவையாக இருந்தது. நீர் போதாது என்று தோன்றியது. கடைக்குப் போய் ஒரு கிழவியிடம் புட்டு வாங்கினான். அரையணாவுக்கு இலை நிறைய போட்டுக் கொடுத்தாள். இன்னும் நகர்ந்து ஒரு டீக்கடையில் இரண்டு பேரும் ஆளுக்கு இரண்டு காலணா காசுகள் கொடுத்து டீ வாங்கிக்கொண்டார்கள். உறிஞ்சி குடித்தார்கள். உயிர் வந்தது. பிறகு ஒரு மரத்தடியில் போய் புட்டு தேன்விட்டு நிதானமாக சாப்பிட்டார்கள். தேங்காயும், கேழ்வரகும் நன்றாக கலந்திருந்தன. புட்டு சுவையாக இருந்தது. உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்கு போவது தெரிந்தது. ஒரே இலையில் இரண்டு பேரும் உண்டார்கள். மறுபடியும் போய் காசு கொடுத்து டீ குடித்தார்கள்.

    எந்த ஊரப்பா? டீக்கடைக்காரன் மலையாளம் கலந்த தமிழில் கேட்டான்.

    மலையிலிருந்து வருகிறோம்.

    தெறிச்சு ஓடி வருகிறீர்களா?

    தப்பித்து வருகிறீர்களா என்பதுபோல் கேட்க, ஆமாம் என்று தலையசைத்தார்கள்.

    காசு இருக்கா. இருந்தா இங்க தங்கிக்க. நான் சோறு போடுவேன். விறகு வெட்டிக் கொடு. பரமேஸ்வரனைப் பார்த்து சொன்னான்.

    இவனும் கூட இருப்பான்.

    இருந்துட்டு போகட்டுமே.

    அவர்கள் உடனடியாக ஒப்பந்தத்துக்கு வந்தார்கள். திருட்டு ஆளை வேலைக்கு வைத்துக்கொள்வது நல்லது. உண்மையாக உழைப்பார்கள். எகிறினால் காட்டி கொடுத்து விடலாம். கொஞ்சம் தொலைவில் இருக்கின்ற கலெக்டர் ஆபீஸ் போய் அங்கிருக்கும் சிப்பந்திகளிடம் சொன்னால் போதும் காவல்காரர்களை அழைத்து வந்துவிடுவார்கள். இரவு நேரம் தூங்கும்போது காட்டிக் கொடுத்தால் போதும் எழுப்பி முதுகில் அடித்து கயிறால் கைகளை பிணைத்து இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள். முதலில் அடி. பிறகுதான் விசாரணை.

    அடுத்தவன் வரவில்லை என்று சொன்னாலும் கூட இந்த பரமேஸ்வரன் உயரத்திற்கும், அகலத்திற்கும் அவனை மலைக்கு வேலை செய்ய இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள். ஒரு வேளை சோறு விறகு உடைக்க ஆள். நன்றாகத்தான் இருக்கும். ஆனால் சோறு விறகு உடைக்கத்தான். தங்குவதற்கு காசு வாங்கிவிட வேண்டும். அந்த மலையாளி வேகமாக கணக்கு போட்டுக் கொண்டான்.

    கீழே விழுந்த மரங்களை வழியில் போகிற யானையை வாடகைக்கு எடுத்து இழுத்து வீட்டுக்கு அருகே போட்டுக் கொண்டான். அந்த மரங்களைத்தான் வெட்டி விறகாக்கித் தரவேண்டும். அந்த மரங்களை வெட்டி கட்டி வைத்தால் போதும். ஊர் இந்த விறகு கட்டைகளை நல்ல விலை கொடுத்து வாங்கிக்கொண்டு போகும். நல்ல மரமாக இருந்தால் துண்டு போடச் சொல்லி விடலாம். அவை பலகை அறுக்க போகும். சுற்றுமுற்றும் இருக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் விறகு வாங்கவும், தொலைவிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1