Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharatham Part - 2
Mahabharatham Part - 2
Mahabharatham Part - 2
Ebook799 pages5 hours

Mahabharatham Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வனவாசத்திலும், அஞ்ஞான வாசத்திலும் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் மனநிலையையும், அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்ட உதாரணக் கதைகளையும், வாழ்வின் நீதிநெறிமுறை விளக்கங்களையும், ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணமும், மனநிலையும் திரு. பாலகுமாரன் அவர்களின் வித்யாசமான, ஆழ்ந்த, தெளிந்த பார்வையில் மனதை கவரும்படி எழுதப்பட்டுள்ளது. மகாபாரத போர் தொடங்கும் முன் அங்கு நிலவிய சூழ்நிலையை உணர வாருங்கள் வாசிக்கலாம் இப்பகுதியை...

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580156808791
Mahabharatham Part - 2

Read more from Balakumaran

Related to Mahabharatham Part - 2

Related ebooks

Reviews for Mahabharatham Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharatham Part - 2 - Balakumaran

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மகாபாரதம் பாகம் – 2

    Mahabharatham Part – 2

    Author:

    பாலகுமாரன்

    Balakumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balakumaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    32

    அரசமரத்தின் கீழ் இருந்து பீமசேனன் தன்னுடைய ஆயுதங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தான். வில்லின் நாணை இன்னும் இழுத்து கட்டினான். கட்டிய சுற்று இறுக இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான். நாணை இழுத்து டீங்காரம் செய்தான். இலக்கில்லாத நாணை இழுத்து வில்லை வளைத்து பளிச்சென்று அனுப்பினான். வில்லை மரத்தில் சார்த்திவிட்டு அம்புகளின் கூர்மையை, அடிச்சிறகை அதன் உறுதியை பரிசோதித்தான். கதையை எடுத்து அதன் தலைபாகத்தை உள்ளங்கையில் தாங்கினான். நிற்க வைத்தான். கதை உள்ளங்கையில் ஒரு சிறுவனைப் போல அமைதியாக நின்றது. எல்லா பக்கங்களிலும் எடை சரியாக இருப்பதால்தான் அந்த உலோகம் இப்படி நேராக நிற்கிறது. இல்லையெனில் கதை கொஞ்சம் கோணலாகி கீழே விழும்.

    கத்தியை உருவி உயரே பிடிக்கும் பொழுது ஒரு அந்தணன் அருகே வந்து நெருங்கி இருந்த பாறை மீது உட்கார்ந்து கொண்டான். பீமனுக்கு இந்த நேரத்தில் ஒருவர் அருகே வந்து இருப்பது பிடிக்கவில்லை. ஆனாலும் வந்தது அந்தணன் என்பதால் மறுக்கவில்லை. தொடர்ந்து தன் வேலையிலேயே கூர்மையாக இருந்தான். அகலமான மார்பும், உயரமும், நீண்ட கைகளும் கொண்ட அந்த அந்தணன் அருமையான கத்தி என்று பாராட்டினான். பீமன் திரும்பி அவனைப் பார்த்துவிட்டு தன் வேலையில் கூர்மையானான்.

    ‘எனக்கு ஆயுதங்களைப் பற்றித் தெரியும். அஸ்திரங்களின் இரகசியங்களையும் அறிவேன். நீ வைத்திருக்கின்ற அம்பராத் துணியில் எது அஸ்திரம் என்பதையும் புரிந்து கொண்டேன்’ என்று சொல்லி சிரித்தான்.

    ஒவ்வொரு பேச்சுக்கு இடையேயும் சிரிப்பது சிலர் வழக்கம். அது ஒன்றும் நல்ல குணம் அல்ல. அதிக நைச்சியம் உடையவர்கள் தான் இப்படி பேச்சுக்கு இடையே சிரித்துக் கொண்டிருப்பார்கள். தேவையற்று பல் காட்டுவார்கள். பீமனுக்கு அதிகம் சிரிப்பவர்களை பிடிக்காது. ‘பதினாறு வருடங்கள் மிக கவனமாக வில் வித்தை பயின்றேன்.’ அந்த அந்தணன் பெருமையோடு சொன்னான்.

    ஏன்? ஒற்றைக் கேள்வியில் முகம் சுருக்கி அவரைப் பார்த்தான்.

    ஒரு அந்தணன் எது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். சமையல் தெரிந்து சாப்பிட மட்டும் தெரிந்த அந்தணனாக என்னை நினைக்காதே. எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அந்தணருடைய மூளை இருக்கும். யுத்தத்தில் அந்தணர் இல்லாது போனாலும் அவன் செய்து கொடுத்த அஸ்திரம் இருக்கும். சொல்லிக் கொடுத்த தந்திரம் இருக்கும். உலக வாழ்க்கையில் எல்லா பகுதிகளிலும் அந்தணனுடைய செயல் திறன் மின்னத்தான் செய்யும். அரசர்கள் பளுவை குறைக்க வேண்டி அந்தணர்கள் யுத்தப் பயிற்சியும், அஸ்திரப் பயிற்சியும் மேற்கொள்வார்கள்.

    சரி, சந்தோஷம்.

    மேற்கொண்டு பேச விருப்பமில்லை என்பதாக பீமன் அவரை தடுத்து நிறுத்தினான். ஆனால் அந்தணர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

    அன்று துருபதன் சபையில் அர்ஜுனன் எழுந்திருக்காது போனால் நான் எழுந்திருப்பேன். அந்த இலச்சினை அடித்து நொறுக்க என்னால் முடியும். அட, ஒரு அந்தணன் எழுந்திருக்கிறானே என்ற ஆச்சரியத்தில் நான் அமைதியாகிவிட்டேன். நம்மைப் போலவே வேறொரு அந்தணனும் வில் வித்தை பயின்றிருக்கிறாரா என்று திகைத்து விட்டேன். இல்லையெனில் திரௌபதி எனக்கான ஆளாக இருந்திருப்பாள்.

    ஹும்…

    ஒரு சீறல் வந்தது.

    அது முடிந்த கதை. திரௌபதி எங்கள் சொத்து.

    மறுக்கவேயில்லை அந்தணன் அந்த அதட்டலுக்குப் பிறகும் வெட்கமின்றி பேசினான்.

    பல சக்கரங்களுடைய ஒரு இலச்சினையை அடிப்பதற்கு இலச்சினையின் நடுப்பகுதியே சிறந்தது. அத்தனை பேரும் வெளிவட்டத்தை குறி வைத்தார்கள். அர்ஜுனன் உள்வட்டத்தை குறி வைத்தான். அடித்துவிட்டான். அப்படித்தான் செய்ய வேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன்.

    போதும். நான் கத்தியை வீசப் போகிறேன். மேலே பட்டுவிடப் போகிறது. தள்ளிப் போங்கள்.

    அந்தணன் எழுந்தான். அவன் எழுந்து நகர்வதற்குள் பீமன் கத்தியை எழுந்து நின்று வேகமாக சுழற்றத் துவங்கினான். காற்றை கிழித்துக் கொண்டு கத்தி பெரும் ஒலியை எழுப்பியது. துணி கிழிந்துவிடும் என்ற பயத்தில் அந்த அந்தணன் நகர்ந்து கொள்ள, தாவி நான்கு பக்கங்களிலும் எகிறி குதித்து கத்தியை காற்றில் பாய்ச்சி இழுத்து வெட்டி தூக்கி அடித்து பல்வேறு வித்தைகளை பீமன் செய்தான். ஒரு பெரிய நடனம் போலும் அது இருந்தது.

    பீமன் கத்தியை உறையில் போடும்போது,

    அந்தக் கத்தியை என்னிடம் கொடு. அந்த வித்தையை நானும் செய்து காட்டுகிறேன்.

    பீமனுக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. கத்தியை உறையில் இட்டான். மகன், மகள், மனைவி, ஆயுதம், வீடு, வயல் இவற்றை மற்றவரிடம் கொடுக்கக் கூடாது. அவன் அந்தணனாயினும் இதை செய்யக்கூடாது. வித்தை காட்ட வேண்டுமெனில் உங்கள் கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நான் ஆயுதம் எதுவும் கொண்டு வரவில்லையே.

    கடன் வாங்கி எதற்கு வித்தை காட்டுகிறாய். உன் வித்தையை நான் பார்க்க விரும்பவில்லை. நீ போகலாம்.

    ஒருமையில் அந்தணனை விரட்டிவிட்டு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு யுதிஷ்டர் இருக்கின்ற இடம் நோக்கி நகர்ந்தான். அந்த அந்தணன் பின்னாலிருந்து பார்ப்பது உணர முடிந்தது.

    இவன் அந்தணனா. எவ்வளவு வெட்கமின்றி கை நீட்டி கத்தியை கொடு என்று கேட்கிறான். என்ன கேவலம் இது. பன்றியைப் போல் இருக்கிறான். இவன் எதற்கு என்னிடம் வந்து பேசுகிறான். தருமருடைய செய்கையில் தவறு பலதும் இருக்கிறது. இம்மாதிரியான அந்தணர்களை ஏன் அருகே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. நல்ல வார்த்தை சொல்லி ஊருக்கு அனுப்பியிருக்க வேண்டும். அல்லது என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். ஓரமாக இழுத்து இரண்டு கன்னத்திலும் அறைந்து, காதுகளில் ரத்தம் வரச் செய்து திருப்பி அனுப்புவேன்.

    விரல்களுக்கிடையே குச்சிகளை கொடுத்து அழுந்த பிடித்துக் கொண்டால் வலி உயிர் போய்விடும். இரண்டு கைகளையும் பற்றி விடை கொடுப்பது போல் அது இருக்கும். ஆனால் வேதனை சொல்லி மாளாது. மறுபடியும் இங்கே எங்களோடு பார்த்தால் உன்னை அக்னிப் பாறையில் படுக்க வைத்துவிடுவேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட முடியும். ஆனால் தருமர், அந்தணர் வரட்டுமே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தொடரட்டுமே என்று தேவையற்ற கருணையோடு பேசுவார்.

    மறுபடியும் சந்தேகம் வருகிறது. இவன் அந்தணனா? பின் குடுமியும், பூணூலும், துளசி மாலையும், பஞ்ச கச்ச வேஷ்டியும், மேல் துண்டும், விரலில் பாம்பு மோதிரமும், அக்குளில் தர்ப்பை கட்டும் இருந்தால் அந்தணனாக முடியாது. இவர்கள் வேதத்தில் இந்த சாகை சொல் என்று சொன்னால் சொல்லிவிடுவார்கள். அதையும் பயின்றிருப்பார்கள். எனவே, ஒருவன் உண்மையில் அந்தணனா என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இவன் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். பீமன் தன்னுள் தீர்மானம் செய்து கொண்டான். அந்தணன் பின்தொடரவில்லை என்று தெரிந்ததும் தருமரோடு சேர்ந்து கொண்டான்.

    சாப்பிடும்போது சகாதேவனுக்கு அருகே உட்கார்ந்து உணவு உண்டான்.

    நேரே ஒரு வாகை மரம் இருக்கிறது. அதற்குக் கீழே உள்ளவனுக்கு திரௌபதி அட்சய பாத்திரத்திலிருந்து அன்னம் இடுகிறாள். கவனித்தாயா.

    கவனித்தேன்.

    அவன் மீது ஒரு கண் வைத்துக் கொள் சகாதேவா.

    ஏன்?

    அந்தணன் இல்லையோ என்று ஒரு சந்தேகம்.

    வேறு யாராக இருக்கக் கூடும்?

    தெரியவில்லை. துரியோதனன் அனுப்பி வைத்த ஒற்றனாக, க்ஷத்திரியனாகக் கூட இருக்கலாம்.

    எதனால் அப்படி சொல்கிறீர்கள் அண்ணா.

    அஸ்திரவித்தை தெரியும் என்று சொல்கிறான். உன் கத்தியை கொடு நான் வித்தை காட்டுகிறேன் என்கிறான். இவனிடம் கத்தியை கொடுத்துவிட்டு நான் கை கட்டி இவன் செய்கிற வித்தையை பார்க்க வேண்டுமாம். என்னை என்ன முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானா. கை நீட்டி இன்னொருவர் கத்தியை கேட்பது எவ்வளவு கேவலம். இதை நல்லவன் செய்ய மாட்டான்.

    புரிகிறது அண்ணா. மற்றவரை விட அதிகம் சாப்பிடுகிறான். உண்மையில் நம்மைவிடவும் அதிகம் சாப்பிடுகிறான். அதனால் இவன் அந்தணனாக இல்லாது போகலாம். நீங்கள் சொல்வது போல க்ஷத்திரியனாக இருக்கலாம். தாமரை இலை முழுவதும் சோறு. சுற்றி வெஞ்சினம். கலந்து கலந்து உண்ணும் வேகத்தைப் பார்த்தால் ஏதோ மிருகம் இரையை உண்பது போலல்லவா இருக்கிறது என்று சொல்லிச் சிரித்தான். பீமனும் அதைப் பார்த்துவிட்டு சிரித்தான்.

    தொலைவிலுள்ள அந்தணனுக்கு அவர்கள் இருவரும் தன்னைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பது புரிந்தது. உண்ணலை அந்த அந்தணன் நிதானப்படுத்தினான். அதற்கும் பீமனும், சகாதேவனும் சிரித்தார்கள். உணவின் வாசனையையும் மீறி அந்த அந்தணன் மூக்கில் திரௌபதியின் வாசனை மிதந்து கொண்டிருந்தது. காற்றினூடே அந்தப் பெண்ணின் வாசனையை கண்டுபிடித்து அவனால் இழுக்க முடிந்தது.

    என்ன சௌந்தர்யம், என்ன அழகு. ஐந்து பேரோடு கூடிய பிறகும் இன்னும் கட்டுக்குலையாத மேனி. அந்த அந்தணன் வியப்போடு மற்றவருக்கு பரிமாறுகின்ற திரௌபதியை ஆவலோடு பார்த்தான்.

    பொழுது சாய்ந்தது. அந்த வனத்தில் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்கி இளைப்பாறலாம். பிறகு தொடர்ந்து நடக்கலாம் என்று தரும புத்திரர் கட்டளையிட்டிருந்தார். நல்ல கனிமரங்கள் நிறைந்ததும், நீரோடை ஓடுவதும், வரை ஆடுகளும், மான்களும், முயல்களும் திரிவதுமான அந்த வனப்பிரதேசம் உணவுக்கு குறையில்லாத இடமாக இருந்தது.

    கங்கையின் கிளை நதி ஒன்று சிறிய ஓடையாக அந்த வனத்தினூடே வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் விடியும் நேரத்தில் திரௌபதி அந்த ஓடையில் அச்சமின்றி முங்கி குளித்தாள். தன் துணியை அலசி பிழிந்தாள். தருமருடைய வேட்டியையும், பீமனுடைய வேட்டியையும் சுத்தமாகத் துவைத்தாள். அந்தணன் புதருக்கு நடுவே அமர்ந்து திரௌபதியை வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

    பகல் வேளையில் அட்சய பாத்திரத்திலிருந்து நல்ல உணவு கிடைக்கும். சகலருக்கும் கிடைக்கும். ஆனால் காலையில் எழுந்ததும் ஏதேனும் உண்பதற்கு இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. பழங்கள் வயிற்றை இளக்கும் அல்லவா. சுத்தப்படுத்தும் அல்லவா. எனவே, மாந்தளிர்களும், அத்திப்பழங்களும், உடலுக்கு வலுவூட்டும் நாகப்பழமும் வேண்டுமென்று திரௌபதி கேட்க, பீமன் அவைகளை தேடிப் போனான். அந்த காட்டில் இல்லாத மரங்கள் இல்லை. இவைகள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, தருமபுத்திரர் துணைக்கு இங்கே இருக்கிறார் என்ற எண்ணத்தோடு நகர்ந்து போனான்.

    உச்சி வேளை உணவுக்கு முன்பு அவரோடு வந்த அந்தணர்கள் வெவ்வேறு திக்கில் நகர்ந்து மௌனமாக ஜபம் செய்யத் துவங்கினார்கள். இருபது, இருபத்தைந்து அந்தணர்கள் அஸ்தினாபுரம் விட்டு கிளம்பிய நாளிலிருந்து இன்று வரை அலுக்காமல் தொடர்கிறார்கள். ஒரு அரசன் சேனை இல்லாமல் இருக்கலாம். அந்தணன் இல்லாது இருக்கக்கூடாது. என்ன செய்தல் தகும், எது தகாது என்று சொல்வதற்கு அந்தணர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அரசனாகிய உங்களோடு நாங்கள் வருவது நல்லது. மறுக்காதீர் என்று சொல்லி தொடர்ந்தார்கள்.

    அதுவும் தவிர, ஒரு அரசன் துணைக்கு வர, பீமன், அர்ஜுனன் போன்ற வீரர்களும், நகுல சகாதேவர்களும் வர, பரதகண்டத்தின் பல வனங்களை கடந்து நல்ல க்ஷேத்திரங்களை தரிசிக்க இப்படி ஒரு வாய்ப்பு எவருக்கும் கிடைக்காது. அதை முன்னிட்டும் அந்தணர்கள் வந்தார்கள். க்ஷேத்திராடனம் என்று சொன்னதால் தருமபுத்திரர் அதை ஏற்று அவர்களை மறுக்காது வரவேற்றார். உணவுக்கு குறைவில்லை என்பதால், ஒரு வேளை உணவு அவர்களுக்கு இட முடியும் என்பதால், அந்த ஒரு வேளை நல்ல உணவு அவர்களுக்கு போதும் என்பதால் அவர் சந்தோஷமாக அவர்களோடு பேசி சிரித்த வண்ணம் வந்தார்.

    அட்சய பாத்திரத்தில் உணவு கேட்க இன்னும் நேரம் இருந்தது. அந்த அந்தணன் எழுந்திருந்தான். சுற்றியும் கவனித்தான். தரும புத்திரர் கண்கள் மூடி மரத்தில் சாய்ந்து ஒரு அரைதூக்கத்தில் இருந்தார். நகுல, சகாதேவர்கள் தாவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். திரௌபதி கூந்தலை இழைய பின்னி பாட்டு பாடிக் கொண்டிருந்தாள். மற்ற அந்தணர்கள் சற்று தொலைவில் கூப்பிடு தூரத்தில் அவர்களுடைய ஜபத்தில் ஆழ்ந்திருந்தார்கள். இதுதான் சமயம் என்று அந்த அந்தணனுக்கு தோன்றியது.

    எழுந்து நின்று கைகளையும், கால்களையும் உதறினான். சட்டென்று வேறு ஒரு வடிவம் அவன் உடம்பிலிருந்து வெளிப்பட்டது. அடர்ந்த ரோமங்களும், பருமனான கைகளும், குறுகிய வயிறும், அகன்ற மார்பும், புதர் போன்ற மீசையும், பெரிய சடை முடியும். ரோமம் நிறைந்த காலுமாய் ஒரு பெரிய கரடி போல அந்த அந்தணன் அரக்க வடிவம் எடுத்தான். அதுதான் அவனுடைய இயல்பான உருவம். அந்தணன் என்பது ஒரு வேடம்.

    முகத்தை மாற்றிக் கொண்டும், அங்கங்களை மாற்றிக் கொண்டும், பெருக்கிக் கொண்டும் குறைத்துக் கொண்டும் இருக்கின்ற வித்தையை அப்போது இருந்த மனிதர்கள் தெளிவாக கற்றிருந்தார்கள். அது ஒரு பாடமாகவே பலருக்கு இருந்தது. மிக கவனமாக பயிற்சி செய்ய எளிதாக பலருக்கு வந்தது. உருமாறுதல், உரு எடுத்தல் என்பதெல்லாம் அங்கு சர்வ சாதாரணமான விஷயங்கள்.

    அரக்கன் முன்னேறினான். திரௌபதியை பார்த்தான். சிரித்தான். பூதாகரமான ஒரு விஷயத்தைப் பார்த்து அவள் அலற, தருமர் விழித்துக் கொண்டார். நகுல சகாதேவர்கள் எகிறினார்கள். சட்டென்று திரௌபதியை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். இரண்டு கைகளாலும் நகுல, சகாதேவர்களை பிடித்துக் கொண்டான். அக்குள் இடுக்கில் தருமபுத்திரரை வைத்துக் கொண்டான். அந்த இடத்தை விட்டு வெகு வேகமாக ஓடத்துவங்கினான். அவன் காலடியில் குத்துச் செடிகள் நசுங்கின. முள் செடிகள் உடைந்தன. அவன் போகின்ற பாதை யானை போகின்ற பாதை போல ஒரு வழித்தடம் ஏற்பட்டது.

    திரௌபதி அலறினாள். நகுல, சகாதேவர்கள் வீரத்துடன் திமிறினார்கள். ஆனால் அவன் பிடி உறுதியாக இருந்தது. தருமர் அவனைப் பார்த்து கேவலமாகச் சிரித்தார். நீ அந்தணன் அல்லவோ. எதற்கு இந்த வேடம் பூண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

    இதுதான் என் உண்மையான உருவம். நான் அந்தணன் இல்லை.

    அப்போது எதற்கு அந்தண வேடம் பூண்டாய்.

    எனக்கு திரௌபதி வேண்டும். திரௌபதி மீது வெகு நாளாக ஆசை.

    உனக்கு அழிவு காலம் வந்துவிட்டது.

    எப்போதோ செத்திருக்க வேண்டிய நீ இந்தப் மானிடப் பெண்ணை தொட்டதால் மரணமடையப் போகிறாய். உனக்கு இறப்பு வந்துவிட்டது என்று அக்குள் பக்கம் இருக்கின்ற உன் நாடி சொல்கிறது. மரணம் நேரும்போது அந்த நாடி வேகமாகத் துடிக்கும். உன் நாடி துடிக்க ஆரம்பித்துவிட்டது. உனக்கு மரணம் இன்னும் அரை நாழிகையில் ஏற்படும். அதற்குள் உன்னை காப்பாற்றிக் கொள். தயவுசெய்து திரௌபதியையும், எங்களையும் இறக்கி விடு. இது அநீதி.

    எனக்கு நீதி போதிக்க வேண்டாம். இதைப் போல ஒரு நல்ல நேரம் எனக்கு கிடைக்காது.

    "இது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பதை நீ அனுபவித்துதான் அறிய வேண்டும். உனக்கு அப்போதுதான் புத்தி வரும். ஆனால் ஒரு அந்தணன் போல வேடம் பூண்டு, திரௌபதி கையால் உணவு உண்டுவிட்டு, அந்த திரௌபதியை தூக்கிக் கொண்டு எனக்கு வேண்டும் என்று சொல்கிறாயே இந்த துரோகத்தை நீ யாராக இருந்தாலும் செய்வது அபத்தம். நீ அந்தணனோ, அரக்கனோ அதைப்பற்றி எனக்கு முக்கியம் இல்லை. ஆனால் இது முதுகில் குத்துவதுபோல் அல்லவா. தூங்கும் போது தலையில் கல்லை போடுவது போல் அல்லவா. பீமன் இல்லாதபோது நீ இந்த காரியத்தை செய்கிறாய் என்றால் வெகு நாள் திட்டமிட்டிருக்கிறாய் அல்லவா.

    அப்போது நீ இங்கு சோறு உண்டிருக்கக் கூடாது. என்னிடம் அடைக்கலம் கேட்டிருக்கக் கூடாது. உரக்க கத்தி பீமனை அழைத்து, அவனோடு சண்டை புரிந்து அவன் கை, காலை உடைத்து விட்டு திரௌபதியை தூக்கிக் கொண்டு போக வேண்டும். அப்படி செய்யாமல் இந்த தந்திரம் செய்யும்போது இதைவிட ஆபாசம் எதுவும் இல்லை. உன்னைவிட ஆபாசமானவன் எவரும் இல்லை. யார் வீரன் என்பதை எல்லா வகையினருக்கும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நீ செய்வது வீரம் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய். திருட்டுத்தனமாக ஒரு பெண்ணை கவர்ந்து போவது வீரம் என்றா சொல்கிறாய். உறங்கும் நேரத்தில் அவளை பலாத்காரம் செய்வது சரி என்றா நினைக்கிறாய்."

    அவளுடைய மூன்று புருஷர்கள் இருக்கும்போது அவளை நான் கவர்ந்து போகிறேன். பெண்ணை கவருவது என்பது சாஸ்திரத்தில் உள்ளதுதானே. நீங்களெல்லாம் கவரவில்லையா. அவன் எக்காளமாகப் பேசினான்.

    திரௌபதிக்கு மொத்தம் ஐந்து புருஷர்கள். ஐந்து புருஷர்களை கொன்று விட்டல்லவா நீ இதை செய்திருக்க வேண்டும். என்னை சண்டைக்கல்லவா கூப்பிட்டிருக்க வேண்டும். நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது தூக்கிக் கொண்டு போகிறாயே. நான் ஆழ்ந்து மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டிருக்கும் போது என்னை இறுக்கிக் கொண்டு ஓடுகிறாயே. இது எந்தவிதமான காந்தர்வத்தில் சேர்த்தி. அட முட்டாளே. உன்னைக் கொல்ல எங்களால் முடியும். ஆனாலும் அந்தணனாக வேடமிட்டிருக்கிறாய். எங்கள் சோறு தின்றிருக்கிறாய். அதனால் சொல்கிறேன். பிழைத்துப் போ. உனக்கு நான் ஒரு சிறிய இடைவெளி தருகிறேன்.

    அவன் காது கொடுத்து கேட்கவில்லை. தருமபுத்திரர் மூச்சு அடக்கி தன் உருவத்தை பெரிதாக்கினார். அவன் அக்குள் விசாலமாயிற்று. இன்னும் பெரிதாயிற்று. அவரை இடுக்கிக் கொள்வது சிரமமாயிற்று. அவர் கனம் மிகுந்து காணப்பட்டார். அந்த கனத்தை தூக்க முடியாமல் அவன் மெல்ல தடுமாறினான். திசை தெரியாமல் நாலாபக்கமும் அலைந்தான். மரங்கள் மீது மோதினான்.

    அந்த சலசலப்பு சத்தம் தொலைவிலிருந்த பீமனுக்கு கேட்டது. யானைகள் வரும் போதுதான் இப்படி மரங்கள் முறியும். எந்த யானை எந்தப் பக்கமிருந்து வருகிறது என்று வில்லை தயாராக வைத்துக்கொள்ள, அரக்கன் ஒருவன் தன் குடும்பத்தை இடுக்கிக் கொண்டு போவது தெளிவாகத் தெரிந்தது. மின்னலென ஓடிப்போய் அந்த அரக்கன் முன்பு நின்றான்.

    என் குடும்பத்தாரை இறக்கி விடு. என்னோடு சண்டை செய்துவிட்டு அதற்குப் பிறகு உன்னுடைய காரியத்தை பூர்த்தி செய்துகொள். என்னை கொன்றுவிட்டு இதற்குமேல் கடந்து போ. ஆனால் உன்னால் கொல்ல முடியாது. நீ என்னால் கொல்லப்படப் போகிறாய் என்று தெளிவாகச் சொன்னான்.

    பாண்டவர்களுடைய கருணை மிகப் பெரியது. மோசமான, கேவலமான எதிரியானாலும் அவனை சிறிது தாமதிக்க வைத்து நல்ல வார்த்தை சொல்லி, சரியானபடி யுத்தத்திற்கு அழைப்பது அவர்கள் இயல்பாக இருந்தது.

    யுத்தம் என்று வந்து விட்டால் பீமனுடைய குழந்தை சுபாவம், இளகிய மனோபாவம் முற்றிலும் மறைந்து வதைக்கிற வேகத்தோடு, இம்சைப்படுத்தி சாகடிக்கின்ற வெறியோடு மாறி விடுவான். தொடை தட்டி பௌருஷத்தை வெளியே சொல்கிறவன் கண்டிக்கப்பட வேண்டியவன் என்பது பீமனுடைய எண்ணம்.

    சண்டைக்கு வா என்று முஷ்டியை மடக்கி அழைத்துவிட்டால் குத்து வாங்க தைரியம் இருக்க வேண்டும். கன்னத்தில் அறைந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டும். கால் இடறி கீழே விட்டால் எழுந்திருக்க வேண்டும். அதற்கு வலு இல்லாதவன் யுத்தத்திற்கு அழைக்கக்கூடாது. எதிரே இருப்பவன் வலு தெரியாது தன் வலுவை பெரிதாக நினைத்துக் கொண்டு கொக்கரிக்கறவன் எந்த பாவமும் செய்ய வல்லவன். வாழ்வின் நிதர்சனத்தை புரிந்து கொள்ளாதவன். வெகு எளிதாக தவறு செய்யக்கூடிய சுபாவம் உள்ளவன்.

    எனவே, அடித்து, நசுக்கி விரல்களை பிழிந்து, உச்சகட்ட வலியில் அலற வைத்து உபதேசம் செய்வதுதான் சரி. அந்த நேரமும் உபதேசத்தை செவிமடுக்கவில்லையெனில் அவன் உயிரோடு இருந்து எந்தப் புண்ணியமும் இல்லை. அவனுக்கு மரணம் தான் சரி.

    பீமன் கண்ணிடுக்கி மிகுந்த கோபத்தோடு அந்த அரக்கனை பார்த்தான்.

    பெண் மீது ஆசைப்பட்டு திரௌபதியை தூக்கிக் கொண்டு போவது என்கிற விஷயத்தை எனக்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் என் தமையனையும், என் இரண்டு தம்பிகளையும் கூட்டிக் கொண்டு போகிறாயே. உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். எங்கேனும் கொண்டு போய் நசுக்கி சாகடிக்கலாம் என்றா. எங்களை அவ்வளவு எளிதாக அடித்துவிட முடியுமா. தருமபுத்திரர் அக்குளில் இருந்தபடியே உன்னை தள்ளாட வைக்கிறாரே. இறங்கி நின்றால் உன்னை எப்படி வதை செய்வார் என்பது புரியவில்லையா. முட்டாள். அகங்காரமும், அசூயையும் உன் கண்களை மறைத்து விட்டன.

    உன் கத்தியை எனக்கு கொடு வித்தை காட்டுகிறேன் என்று வெட்கமில்லாமல் நீ கேட்டபோதே நீ அந்தணன் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அப்போதே நீ யார் என்று விசாரித்திருக்க வேண்டும். நான் சபையில் நிறுத்தி உன்னை விசாரிக்கத் துவங்கினால் உன் சுயரூபம் வெளிப்பட்டிருக்கும்.

    ஆனால் தருமபுத்திரர் அதற்கு சம்மதித்திருக்க மாட்டார். அந்தணரை எப்படி விசாரிக்கலாம். அந்தணன் என்பவன் அந்தணன் தானே. அவன் குலத்தைப் பற்றி உனக்கு என்ன கவலை என்று நிறுத்தி விடுவார். அவன் சுயகுணம் என்ன என்று ஆராய்ந்து பார்க்க தருமபுத்திரருக்கு மனம் ஒப்பாது. எதிரே நின்று பேசுபவர் அத்தனை பேரும் உண்மையைத்தான் பேசுகிறார் என்று அவர் நினைத்துக் கொள்கிறார்.

    ஆனால் நானோ, அர்ஜுனனோ அப்படிப்பட்டவர்கள் இல்லை. எவன் நெருங்கி வணங்குகின்றானோ அவனை நாங்கள் சந்தேகத்துடன்தான் பார்ப்போம். இது எங்கள் குணம். க்ஷத்திரிய குணம். யாரையும் எந்த நேரத்திலும், எதற்காகவும் நாங்கள் நம்புவதில்லை. துரியோதனனை நம்பியதுதான் இந்த சண்டைக்கு காரணம், ஆனால் துரியோதனன் பகைவன் என்று தெரிந்ததுதான் இன்று எங்களுடைய வனவாசத்திற்கு காரணம். இந்த சந்தேகம் இல்லையெனில் நாங்கள் துரியோதனனை சகோதரனாகவே நினைத்திருப்போம். எதிரியாக பார்த்திருக்க மாட்டோம். எங்கள் க்ஷத்திரிய சந்தேக குணம் எங்களை காப்பாற்றியிருக்கிறது. உன்னையும் அப்படித்தான் நான் பார்த்தேன்.

    ஆயுதங்களைப் பற்றி எனக்குத் தெரியும் என்று சொல்கிறாயே. அப்பொழுதே சந்தேகப்பட்டேன். உன்னை விசாரித்தால் நீ என்ன செய்வாய். அரசர்களுடைய ஆயுதங்கள் மொத்தமும் அந்தணர்கள் தானே செய்திருக்கிறார்கள். அத்தனை அஸ்திரமும் அந்தணர்களும், ரிஷிகளும் செய்து கொடுத்ததுதானே என்று தந்திரம் பேசுவாய். அஸ்திரம் செய்தவனுக்கு அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று தெரியாதா என்று வாக்குவாதம் செய்வாய். தருமருக்கு அதில் கிஞ்சித்தும் விருப்பம் இருக்காது. எதற்கு ஒரு அந்தணனை இம்சிக்கிறாய் என்று என்னை சீற்றத்துடன் பார்ப்பார். என் தமையனை நான் வருத்தப்பட வைக்க முடியாது.

    ஆனால் இன்று உன் முகம் தெரிந்துவிட்டது. நாய் சிங்க வேடம் போட்டாலும் அது குரைக்கும்போது கர்ஜனையா வரும். குரைப்பு தானே வரும். நாயின் குரைப்பு போல உன்னுடைய விகாரமான முகத்தை இதோ காட்டிவிட்டாய். விடு என் குடும்பத்தை. இல்லையென்றால் உன் வலிவு மீது உனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் என்னை அடித்து நசுக்கிவிட்டு என் மனைவியை எடுத்துப் போ.

    ஆனால் உனக்கு மரணம் நெருங்கிவிட்டது. என்னுடைய ஒரு ரோமத்தைக் கூட உன்னால் அசைக்க முடியாது. நீ அடிபட்டு துடித்து சாகப் போகிறாய். உன் அங்கங்களை பிய்த்து எறியப் போகிறேன். இப்படி யுத்தம் செய்து நாளாயிற்று. பிரபஞ்ச சக்தி என்னுடைய பலத்தை புதுப்பித்துக்கொள்ள, என்னுடைய யுத்த தந்திரங்களை சீராக்கிக்கொள்ள உன்னை அனுப்பியிருக்கிறது. க்ஷத்திரியனுக்கு போர் மிகப் பெரிய விருந்து. சந்தோஷம். கொண்டாட்டம். ஆனந்த நடனம். வா. என் ஆட்டத்தைப் பார். அதன் ஆவேசத்தைப் பார்."

    பீமன் பூமியை காலால் உதைத்து, புழுதியை எழுப்பி, கைகளால் தட்டி மேலும் பல கோப வார்த்தைகள் சொல்லி அரக்கனை வெறி ஏற்றினான். அரக்கன் சற்றுத் தடுமாற சகாதேவன் கீழே குதித்தான். கத்தியை உருவிக் கொண்டான். வெட்டத் துவங்கினான்.

    வேண்டாம் சகாதேவா. இவனை என்னிடம் விட்டு விடு. நான் அடித்து நொறுக்குகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து இவனை கொன்றதான பெருமை இவனுக்கு கிடைத்துவிட வேண்டாம். பீமனுடைய ஒற்றை அடியை இவனால் தாங்க முடியாது என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும். என் வெறிக்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது. இவனை என்னிடம் விடு. என்று சொல்ல. தருமபுத்திரர் சைகை செய்ய, நகுலனும், சகாதேவனும் பின்னடைந்தார்கள்.

    இடுப்பில் சொருகியிருந்த திரௌபதியை அரக்கன் இறக்கி விட்டான். திரௌபதி துள்ளி குதித்து தருமருக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். தன் புருஷனான பீமனை வியப்புடன் பார்த்தாள்.

    அரக்கன் நெருங்க பீமனுடைய கோபம் தலைக்கு ஏறியது. அந்தணன் வேடமா. அசிங்கமாக இல்லை. உன்னுடைய இயல்பான குணத்தை விட்டு எங்கள் சோறை கையேந்தி தின்றாயே வெட்கமாக இல்லை. திரௌபதி உணவு போட்டபோதெல்லாம் அவளை தவறாகத்தானே நீ பார்த்திருப்பாய். அது ஆபாசமாக இல்லை.

    பீமனுடைய பேச்சு அந்த அசுரனுக்கு கோபமூட்டியது. அந்தணனாக தன்னை மறைத்துக் கொண்டு பாண்டவர்களை பின்தொடர்ந்த அவனுக்கு உண்மை பெயர் ஜடாசுரன். பெரும் காம மயக்கத்தில் துருபத தேசத்திலிருந்து அவன் திரௌபதியை பின்தொடர்ந்து வருகிறான். தன்னை அடக்க முடியாதவனாய் அவளை அபகரிக்கவே அமைதியான அந்தணனாக இருந்தான். பேராசையும், கெட்டிக்காரத்தனமும் கொண்டவர்கள் தங்களுக்கான நேரம் வரும்வரை எல்லோரோடும் இனிமையாக இருப்பார்கள். உண்மையான குணத்தை மறைத்துக் கொண்டிருப்பார்கள். பீமனை ஜெயிக்க முடியாது என்று தெரிந்ததால்தான் இந்த திருட்டுத்தனத்தை கைக்கொண்டான்.

    இப்போது வேறு வழியில்லை. யுத்தம் செய்துதான் ஆக வேண்டும். இழிபிறப்பு என்று சொன்னது கோபம் வந்தது. அசுரர்கள் பலம் பொருந்தியவர்கள். அவர்கள் நீதி வேறு. வன்முறை இயல்பு. வழிப்பறி சுபாவம். அசுரபலத்திற்கு முன்னால் மானுடர்கள் பூச்சியைப் போன்றவர்கள்.

    ஆனால் இந்த பீமன் மானிடரில் சிறந்தவன். முயற்சியினாலும், தவத்தினாலும் தன் பலத்தை பெருக்கியவன். எகிறி ஓடி பீமனை தாக்க முயற்சிக்க, பீமன் நகர்ந்து ஜடாசுரனின் பிடரியில் அறைந்தான். சிகையை இழுத்து திருப்பி முகத்தில் குத்தினான். தோள்களை தாக்கினான். நெஞ்சில் குத்தினான். விலா எலும்புகளை உடைத்தான். காலால் காலை அடித்து நெஞ்சைப் பிடித்து தள்ளினான். தரையில் மோதிய தலையை தூக்கி மறுபடியும் தரையில் அடித்தான். கைகளை இழுத்து சுழற்றி வானத்தில் வீசினான். மல்லாந்து கிடந்தவனின் தொடைகளை மிதித்தான். முறித்தான்.

    சகோதரர்கள் ஆனந்த களியாட்டம் செய்தனர். திரௌபதி திகைத்து நின்றிருந்தாள். அமைதியான பசுவைப் போல குணம் கொண்ட பீமன் ரௌத்திரமாக சண்டையிடுவதைப் பார்த்து வியந்தாள். தான் தலைமுடியை விரித்த சபதம் நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்று நம்பினாள். தன் மனம் குழம்பும்போதெல்லாம், வெற்றி கிடைக்காதோ என்று வேதனைப்படும்போதெல்லாம் அவள் புருஷர்களுடைய பராக்கிரமம் அவளுக்குத் தெரிய வருகிறது. இப்படிப்பட்ட புருஷர்கள் இருக்கும்போது, அன்பும், அரவணைப்பும் அற்புதமான வீரமும் அவர்கள் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண்ணுக்கு எது குறித்தும் கவலையில்லை. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அச்சமில்லை. இன்னும் பல நூறு வனங்களுக்கு போவதாக இருந்தாலும் அவள் மனம் அதற்குத் தயாராயிற்று.

    படுத்துகிடந்தவனை உதைத்து எழுப்பி அவன் தலையை திருகி தனியே பிய்த்து பீமன் தொலைவே வீசினான். அசுரன் உடம்பிலிருந்து ரத்தம் பீய்ச்சி அடித்து பீமனை நனைத்தது. ஜடாசுரன் இறந்து போனான்.

    அசுரர்கள் மனிதர்களே ஆயினும் பிறப்பாலும், பழக்கத்தாலும் மிகுந்த பலம் கொண்டவர்கள். அதிகமான மாமிசம் உண்டு கொழுத்துப் போனவர்கள். அந்தக் குலமே இருக்கக்கூடாது என்பதுதான் இயற்கையின் அன்றைய முடிவாக இருந்தது. பாண்டவர்கள் அதை முன்னின்று நடத்தினார்கள்.

    உடம்பெல்லாம் புழுதியும், ரத்தமுமான பீமனை சிறிய ஓடைக்கு நகுல, சகாதேவர்கள் குளிக்க அழைத்துப் போனார்கள். தலை முழுக வைத்து உடம்பு தேய்த்து விட்டார்கள். கணுக்கால் தண்ணீரில் நின்றபடி தருமபுத்திரர் அவர்களோடு பேசினார்.

    "அருகே இருப்பவர்கள்தான் எதிரி. நம்மை அறிந்தவர்கள்தான் நமக்கு துரோகம். அமைதியானவர்களை முற்றிலும் நம்ப முடியாது. எவர்மீதும் எப்போதும் சந்தேகம் இருப்பது க்ஷத்திரியர்களுக்கு நல்லது. போர் வீரன் அலட்சியமாய் இருந்துவிடக் கூடாது. எவரையும் முற்றிலும் நம்பிவிடக் கூடாது.

    ஆனால் க்ஷத்திரியன் அவசரமான விசாரணையிலும் இறங்கி விடக்கூடாது. அது நல்லவர்களை காயப்படுத்தும். இரண்டு நல்லவர்களுக்காக நூறு அயோக்கியர்களை பொறுத்துக்கொள்ளலாம். நல்லவர்களுக்கு துணையாக இருக்கும் க்ஷத்திரியனுக்கு கடவுள் உதவியாக இருப்பார்."

    தருமருடைய அமைதியான பேச்சு பீமனின் கோபத்தை தணித்தது - நகுல, சகாதேவர்கள் நெகிழ்ந்தார்கள். எப்பேர்பட்ட உத்தமர்கள். எவ்வளவு அற்புதமான வீரர்கள். இவர்களெல்லாம் என் புருஷர்கள். இவர்களைப் பெற நான் என்ன தவம் செய்தேன். ஓடையின் மேற்புறம் புல் தரையில் அமர்ந்தபடி திரௌபதி யோசனை செய்தாள். அவளுக்கு அவள் உலகம் சந்தோஷமானதாக இருந்தது.

    33

    பலவிதமான மரங்கள் நிறைந்த வனப்பகுதிகளும், எல்லையே தெரியாத புல்வெளிகளும், சிகப்பும், பச்சையுமான மலைக்குன்றுகளும், அதில் இருக்கின்ற பழமர தோப்புகளும் தாண்டி அவர்கள் இமயமலையின் அடிவாரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். இயற்கையின் வினோதங்களைக் கண்டு வியந்து வியந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

    உலகம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை ஒரு சிறு பிரதேசத்தை ஆளுமை செய்யும் ஒரு அரசன் புரிந்துகொள்ள வேண்டும். அரசனைச் சார்ந்தவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அட்சய பாத்திரத்தின் மூலம் உணவு இருக்கிறது என்பதாலேயே இத்தனை அந்தணர்கள் பின்தொடர்கிறார்கள். இத்தனை அந்தணர்கள் பின்தொடர்வது அவசியமா.

    கந்தமான பர்வதம் செங்குத்தானது. இவர்களால் ஏற இயலுமா. வனங்களை கடந்து விட்டதுபோல கந்தமான பர்வதத்தில் ஏற முடியாது. எனவே, மலையின் அடிவாரத்திலேயே இவர்களை தங்கச் சொல்வது நல்லது என்று பீமனும், சகாதேவனும், நகுலனும் சொல்ல, தருமர் சரி என்று சொன்னார்.

    சில அந்தணர்களை கூப்பிட்டு, என்னை நீங்கள் அரசன் என்று கொண்டால் என் கட்டளையை நீங்கள் ஏற்க வேண்டும். உங்களில் சிலரை நான் இங்கேயே நிறுத்தி விடப்போகிறேன் என்று விளக்கினார்.

    விருஷபார்கவா என்கிற முனிவரின் ஆசிரமத்தில் அவர்கள் போய் சேர்ந்தார்கள். விருஷபார்கவாவிடம் அந்தணர்களை ஒப்படைத்தார். அங்கேயே அமைதியாக இருக்கச் சொன்னார். மிக அற்புதமான அந்த ஆசிரமம் இன்னும் பலபேர் வந்தாலும் தங்குவதற்கு ஏதுவாக இருந்தது.

    விருஷபார்கவா, தருமரையும், மற்றவர்களையும் அமரச் சொன்னார். தருமரைப் பார்த்து வனத்தில் இருந்தாலும் அரச நியதியை பின்பற்றுகிறாயா, அந்த தருமத்தோடு வாழ்கிறாயா. உன்னை அண்டியவர்களை காப்பாற்றுகிறாயா என்று விவரமாகக் கேட்டார். கந்தமான பர்வதம் போக வேண்டும் என்ற ஆசையை தருமர் சொல்ல அதை அங்கீகரித்தார்.

    "ஒரு இடத்திற்கு மேல் தாண்டிவிட வேண்டாம். அது நம்முடைய இடம் அல்ல. அது யட்சர்களுடைய, ராட்சஸர்களுடைய இடம். யட்சர்களுடைய தலைவன் குபேரன் அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். மனிதர்களை மதிப்பதில்லை. அவர்களை கீழாகத்தான் பார்க்கிறார்கள். கந்தமான பர்வதம் வரை ஒரு மனிதனால் வரமுடியும் என்றால் அவன் சாதாரணன் அல்ல என்று தீர்மானித்து யுத்தத்திற்கு அழைக்கிறார்கள். திரும்பப் போ என்று விரட்டுகிறார்கள். எனவே, மனிதர்களுடைய நடவடிக்கை இந்த எல்லையோடு முடிகிறது. இதைத் தாண்டி மலைமீது ஏறுவது என்பது எல்லோருக்கும் எளிதானது அல்ல. கடினமான காரியம். நீ இங்கே இவர்களை அடைக்கலமாக கொடுத்தது ஒரு நல்ல காரியம். இதை இந்த அந்தணர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    இமயமலைக்கும் மேருமலைக்கும் இடையே உள்ள இந்த பெரும் வனப்பிரதேசத்தை, வயல்வெளியை இந்தப் புல்வெளியை இவர்கள் பார்த்து விட்டார்கள். நதிகளின் போக்கை புரிந்து கொண்டார்கள். இப்போது இமயமலை துவங்குகிறது. அந்த மரங்களே வேறு. அங்குள்ள உயிரனங்களே வேறு. உற்று கவனித்தால் யட்சர்களுடைய ஆட்டமும், பாட்டமும், மேள சத்தமும், துந்துபியின் ஒலியும் கேட்கும். அது வராதே என்பதற்கான எச்சரிக்கை. மனிதர்கள் மேலே ஏறக்கூடாது என்பதற்கான அறிவிப்பு. எனவே, எதையும் யோசித்துச் செய்யுங்கள்" என்று சொல்ல,

    பீமன் கந்தமான பர்வதம் பார்க்க ஆசைப்பட்டான். தருமருக்கும் அந்த எண்ணம் இருந்தது. அங்குள்ள மலர்களும், பறவைகளும் விசித்திரமானவை என்பது தெரிந்து திரௌபதியும் ஆசைப்பட்டாள். போக விருப்பம் உண்டு என்று மெல்லிய குரலில் முனிவரிடம் சொல்ல, முனிவர் ஆமோதித்தார். வெகு சில அந்தணர்களோடு அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். கந்தமான பர்வதத்தில் ஏறினார்கள்.

    கூதற்காற்று. பெரிய இலைகள் உள்ள உயரமான மரங்களின் சலசலப்பு. பாறையின் உச்சியில் இருக்கின்ற மான்கள். செங்குத்தாக ஏறும் ஆடுகள். அந்த ஆடுகளை துரத்தி அடித்து வீழ்த்தும் கழுகுகள். அந்த ஆடுகள் உருண்டு விழ, அவைகளை கொத்தி பெரும் துண்டு மாமிசத்தை எடுத்துப் போகின்ற பறவைகள். உலவிக் கொண்டிருக்கின்ற புலிகள், சிங்கங்கள், கரடிகள் போன்றவற்றை பார்த்தார்கள். உயரத்திலிருந்து காற்று கீழே தவழ்ந்து பள்ளத்தில் இறங்கி, மேடேறி, மறுபடியும் சரிந்து திரும்பவும் மேலேறி பொத்தென்று முகத்தில் தாக்கியது. தொலைவிலிருந்து அந்தக் காற்று சுழன்று ஒரு பனை மர உயரத்திற்கு வருவதை பார்க்க முடிந்தது. இதோ ஒன்று இதோ ஒன்று, அங்கே வருகிறது இங்கே வருகிறது என்று ஆரவாரமாக இடமும், வலமும் நடந்து அந்தக் காற்றை எதிர்கொண்டார்கள்.

    சுத்தமான மூலிகையும், குளிரும் கலந்த அந்தக் காற்று அவர்களுடைய நுரையீரலை விரிவுபடுத்தியது. முழுவதுமாக சுவாசிக்க முடிந்தது. முற்றிலுமாக ஜீரணிக்க முடிந்தது. அதனால் இருதயம் பலப்பட்டது. அதனால் ரத்த ஓட்டம் பெருகியது. அதனால் உடம்பு சூடு அதிகரித்தது. அதனால் மேனியின் மீது ஒரு திரவம் படர்ந்தது. குளிரை தாங்க முடிந்தது. இமயமலையின் ஆரோக்கியத்தால் உடம்பு ஆரோக்கியம் பெறுவதை அவர்கள் உணர்ந்தார்கள். இப்படிப்பட்ட நல்ல விஷயத்தை மனிதர்களுக்கு ஏன் யட்சர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். இமயமலை எப்படி யட்சர்களுடைய பூமியாகப் போகும். மனிதருக்கு உரிமை இல்லாத இடம் உலகத்தில் உண்டா. உலகம் மனிதருக்குத்தானே என்று அவர்கள் பேசிக் கொண்டு நடந்தார்கள்.

    நகுலனின் கன்னங்கள் சிவந்து விட்டன. கன்னத்தை விட உதட்டின் சிவப்பு அழகாக இருக்கிறது. கண்களும் மலர்ந்து விட்டன. புஜங்களும் பெருத்துவிட்டது போல் தோன்றுகிறது. அவன் நடையே மிக கம்பீரமாக இருக்கிறது. காற்றில் தலை சிலும்ப, மூக்கு விடைத்து அவன் கோல் ஊன்றி மேலே நடப்பது அழகாக இருக்கிறது. எவ்வளவு ஆரோக்கியமாக நகுலன் ஆகிவிட்டான் என்று திரௌபதி வியந்தாள். பீமனுக்கு சுட்டிக்காட்டினாள். பீமனும் அதை புரிந்து கொண்டான்.

    விருஷபார்கவா முனிவருக்கும் கந்தமான பர்வதத்திற்கு போக வேண்டும் என்று ஆசை. தன்னால் வம்பு வரக்கூடாது என்று இமயமலையின் அடிவாரத்தில் தங்கி இருக்கிறார். பரதகண்டத்திலேயே மிக ஆரோக்கியமான இடத்தில் அவர் ஆசிரமம் அமைத்திருக்கிறார். யட்சர்கள் அனுமதித்தால் கந்தமான பர்வதத்திலும் அவர் ஆசிரமம் அமைக்கக் கூடும். யட்சர்களிடம் பேச வேண்டும். ஆனால் யட்சர்கள் காது கொடுத்து எதையும் கேட்பவர்கள் அல்ல. அவர்கள் ராட்சஸர்களுடைய துணையோடு மனிதர்களை ஓட ஓட விரட்டுபவர்கள் என்று தருமர் சொல்லிக் கொண்டு வர, பீமன், நம்மை யார் துரத்துகிறார்கள் என்று பார்த்து விடுவோம் என்று சிரித்தான்.

    மரங்கள் அடர்ந்து வனங்களெல்லாம் போய் நல்ல புல் முளைத்த பல திக்குகளிலும் ஆறுகள் பாய்கின்ற மலை முகடுகள்தான் எதிரே இருந்தது. மனிதர்களை பார்த்திராத புலிகள், சிங்கங்கள் உறுமலுடன் அருகே வந்தன. பீமனுடைய கை கோலால் பளிச் பளிச்சென்று அடிக்கப்பட்டு வலி தாங்காமல் வாலை சுருட்டிக் கொண்டு ஓடின. திரெளபதி வியந்து சந்தோஷமாகச் சிரித்தாள். வந்த வேகம் என்ன, போகும் பயம் என்ன என்று வியந்தாள்.

    அழகிய வரை ஆடுகளும், மான்களும் தொலைவிலிருந்து பார்த்துவிட்டு நின்று விடுகின்றன. புலிகளும், சிங்கங்களும் அருகே வந்து அடிக்கின்றன. பதிலுக்கு தாக்கினால் பேசாமல் போய்விடுகின்றன. ஆக, சிலருக்கு தண்டனைதான் தெளிவு தருகிறது என்று தருமர் சொல்ல, நகுலனும், சகாதேவனும் ஆமோதித்தார்கள்.

    மிகப் பெரிய ஏரிகள். அன்னப்பட்சிகள். பெரிய சிகப்பு அலகு கொண்ட கொக்குகள் வெள்ளை மயில்கள் வான் கோழிகள் கட்டி அணைக்க முடியாத அகலத்தோடு உயர்ந்த மரங்கள் இருந்தன. இயற்கையினுடைய செழிப்புக்கு அளவே இல்லை. நீரால் ஆனது உலகம் என்பது எவ்வளவு சரி என்றெல்லாம் பேசிக் கொண்டு நடந்தார்கள்.

    அப்போது ஏரியிலிருந்த பெரிய பாம்பு ஒன்றை, தன் பெரிய சிறகை வீசி கீழ் இறங்கி ஏரிக்குள் நுழைந்து பாம்பை கால்களால் பற்றி, தலையில் கொத்தி ஒரு பெரும் கழுகு உயரே போயிற்று. அதனுடைய சிறகு வீச்சால் மரத்தின் கிளைகள் முறிந்தன. பூமியில் தூசு எகிறியது. காற்று வேகமாக அடித்தது. தொலைதூரத்திலுள்ள மரங்களிலிருந்து பூக்கள் அடித்துக் கொண்டு வந்து தரையில் விழுந்தன. மிகப் பெரிய பூ வாசனை கிளம்பியது. தரையில் விழுந்த புஷ்பங்களை அவர்கள் பொறுக்கி எடுத்து முகர்ந்து பார்த்தார்கள். சௌகந்தி என்கிற ஒருவித தாமரைப்பூ தரையில் இருந்தது. அதை திரௌபதி முகர்ந்து பார்த்தாள்.

    எங்கிருக்கிறது இது? என்று கேட்டாள்.

    இது கந்தமான பர்வதத்திலிருந்து வருகிறது. அதோ அந்த உயரம்தான் கந்தமான பர்வதத்தின் உச்சாணி இடம். அங்குதான் நகரம் இருக்கிறது. குபேரனுடைய பட்டிணம் என்று பீமன் கை காட்டினான்.

    அவள் மீண்டும் முகர்ந்து பார்த்தாள். நெஞ்சில் வைத்துக் கொண்டாள். தலையில் சூடிக் கொண்டாள். இன்னொன்றை எடுத்து காதில் சொருகிக் கொண்டாள். பெரிதாகக் கோர்த்து மாலையாக போட்டுக் கொள்ளலாமா என்று அலைந்தாள்.

    பீமன் தனியாக நின்றபோது கால்களை நீரில் வைத்து இளைப்பாறிய போது பீமனுக்கு அருகே நெருங்கிப் போனாள். எனக்கு இந்தப் பூக்கள் வேண்டும் என்று கொஞ்சினாள்.

    என்ன பூக்கள்?

    சௌகந்திகா என்று சொன்னீர்களே. கந்தமான பர்வதத்தின் உச்சியிலிருந்து அடித்து வந்ததே. குபேர பட்டிணத்தில் ஏகமாக இருக்கும் என்று சொன்னீர்களே. அவைகள் எனக்கு வேண்டும். இவைகளை நாம் உபயோகப்படுத்தக் கூடாதா. இவைகளை சரமாக தொடுத்து உங்கள் நாலுபேர் கழுத்திலும் நான் போடக் கூடாதா. மனிதர்களுக்கு இது ஆகாதா. இதை யட்சர்களும், ராட்சஸர்களும்தான் அனுபவிக்க வேண்டுமா. எவ்வளவு அழகாக இருக்கிறது அந்தப் பூக்கள். எவ்வளவு திடமாக இருக்கிறது. எவ்வளவு மகரந்தம். என்ன நெடி. எவ்வளவு மனதை மயக்குகிறது. உயர்த்தியான பொருள்கள் மனிதருக்கு இல்லையென்று யார் மறுப்பது இது என்ன கூத்து. சௌகந்திகா மலர்கள் அஸ்தினாபுரத்திற்கும், மற்ற இடங்களுக்கும் கிடைக்கட்டுமே.

    பெண்கள் தந்திரமானவர்கள். திரௌபதி நைச்சியமாகப் பேசினாள். பீமன் வாய்விட்டு சிரித்தான்.

    நாம் கந்தமான பர்வதத்திற்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம். நாளை அதன் உச்சியை அடைந்து விடுவோம். குபேர பட்டிணத்தை பார்க்கத்தான் போகிறோம். வேண்டுமென்ற மலர்களும், அதன் செடிகளும் நமக்கு கிடைக்கும். மனிதர்கள் மனம்போல அதை அனுபவிக்கலாம். திரௌபதியின் பெயர் சொல்லி தலையில் சூட்டிக் கொள்ளலாம் என்று அவன் சொல்ல, அவள் சந்தோஷத்தோடு வெட்கப்பட்டாள்.

    மனைவியை குளிர்விப்பதும், மனைவியை புருஷன் சந்தோஷப்படுத்துவதும் உலகத்தின் இயல்பு. வன வாழ்க்கை மேற்கொண்டாலும் அங்கே புருஷன் மனைவி அன்புக்கு சிறிதும் குறைவில்லாமல் அவர்கள் வாழ்க்கை தொடர்ந்தது. போகப் போக மலை உயரமாக இருந்தது. ஒரு பனை உயரத்திற்கு மதில் சுவர்போல மலை சுவர்கள் இருந்தன. பாறைகளில் கை வைத்து பீமன் நிதானமாக ஏறினான். திரௌபதியை தோளில் இடுக்கிக் கொண்டான். சகோதரர்களும் பின்தொடர்ந்தார்கள்.

    பனி படர்ந்த மலை பின்னே இருக்க, முன் பக்கம் இருந்த பசுமையான மலைகளில் பட்டணம் நிறுவப்பட்டிருந்தது. பெரிய மதில் சுவர்கள் இருந்தன. உச்சி வேளையில் மந்தமான சூழ்நிலை இருந்ததால் வெய்யிலும் அற்று, குளிரும் அற்று இருந்ததால் அந்த குபேர பட்டணம் அமைதியாய் அரைத் தூக்கத்தில் இருந்தது.

    பீமன் போர் கவசத்தை உதறி அணிந்து கொண்டான். இடுப்பு வேட்டியை இறுக்கிக் கொண்டான். சங்கு எடுத்து மிகப் பெரிதாய் போர் ஒலியை எழுப்பினான். குபேரப் பட்டணம் அல்லோகப்பட்டது. தடேர் தடேர் என்று கதவுகள் திறந்தன. யார் என்று பார்த்தார்கள். தொலைதூரத்தில் பீமன் கால் அகட்டி யுத்தத்திற்கு தயாராக இருந்ததைப் பார்த்து, ‘மானுடன் மானுடன்’ என்று கூச்சலிட்டார்கள்.

    வீட்டுக்குள் போய் ஆயுதங்கள் எடுத்து வந்தார்கள். குதிரைகளை அவிழ்த்து அதில் ஏறினார்கள். குபேரனுடைய சினேகிதன் மணிமான் என்பவன் முதலில் வெளிவந்தான்.

    என்ன திமிர் ஒரு மனிதனுக்கு. எங்கள் காது பட சங்க நாதம் எழுப்புகிறாயா. போருக்கு அழைக்கிறாயா. உங்கள் ஊருக்குள் வந்து உதைத்தால் ஓடி ஒளிந்து கொள்பவர்கள் நீங்கள். எங்கள் ஊருக்கு வரும் அளவுக்கு திமிர் வந்துவிட்டதா. பாண்டவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கந்தமான பர்வதம் ஏறும் அளவுக்கு திமிர் உள்ளவர்களா நீங்கள். உடைத்து விடுகிறேன் என்று ஆவேசமாக குதிரையை செலுத்தி பீமனை நோக்கி ஓடி வந்தான்.

    பல ஆயுதங்களால் கடுமையான யுத்தம் நடந்தது. சக்தி ஆயுதம் வீசப்பட்டது. அதை பீமன் தன் கதையால் அடித்து நொறுக்கினான். முன்னேறினான். எதிர்ப்பட்டவர் அத்தனைபேரையும் அடித்து சிதைத்தான். உயரத் தூக்கி பந்தாடினான். குத்தியும், கிழித்தும் எலும்புகளை உடைத்தும் யுத்தம் செய்தான். மணிமானுக்கு முன்னால் இருந்த அத்தனை வீரர்களும் சுருண்டு வீழ்ந்தார்கள். பலர் இறந்து போனார்கள். மணிமானுக்கு அருகே போய் அவன் ஆயுதங்களை எடுக்கும் முன் ஓங்கி அவன் மீது கதையை செலுத்தினான். முகத்தில் அடித்தான். மணிமானால் அந்த வேகத்தை, அவன் அடியை தாங்கமுடியவில்லை. பீமனுடைய கதைக்கு மணிமான் பலியானான்.

    மணிமானுக்கு பின்னால் வந்த அசுரர்கள் வேகமாக கலைந்தார்கள். குபேரனிடம் போனார்கள்.

    ஒரு மனிதன் பல ராட்சஸர்களை கொன்று குவித்து வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான். உமது அரண்மனை கதவுகளை உடைத்து விடுவதுபோல நெருங்கிக் கொண்டிருக்கிறான். அரக்கர்கள் பலர் இறந்து விட்டார்கள். யட்சர்களால் தாக்கு பிடிக்கவே முடியவில்லை. என்றெல்லாம் கதறினார்கள்.

    பீமனா, இரண்டாம் முறை தவறு செய்கிறான் என்று சொல்லி, குதிரையை தேரில் பூட்டச் சொன்னான். தேர் பூட்டப்பட்டது. ஏறி அமர்ந்தான். கடும் கோபத்தோடு யுத்தகளம் நோக்கி நகர்ந்தான்.

    என்ன இது யுத்த களமா, இல்லை பலி கொடுக்கின்ற இடமா. பூமியிலேயே மிக வலிவுள்ள ராட்சஸர்கள் பிரிந்து சிதறிக்கிடக்கிறார்கள். முகம் நசுங்கி கிடக்கிறார்கள். வன்முறை என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டது என்று யுத்த சாஸ்திரம் சொல்லும். ஆனால் அதை தவிடு பொடியாக்கி வதைத்தல் என்பதுதான் வன்முறை. அதுதான் உச்சபட்சம் என்று தண்டிப்பது இதுவே அவன் பார்ப்பது முதல் தடவை. இந்த தண்டித்தல் பயமுறுத்தியது. வயிறு குழைய வைத்தது.

    மணிமான் சிநேகிதமானதே அவனுடைய பராக்கிரமத்தை உத்தேசித்து தான். இவ்வளவு பலமா, இத்தனை வேகமா. இவ்வளவு துணிச்சலா என்று நண்பனை வியந்திருக்க, அந்த நண்பன் சின்னாபின்னப்பட்டு கிடக்கிறான். கை எங்கே, கால் எங்கே என்றுத் தேடி சேகரித்து வைத்திருக்கிறார்கள். சேகரிப்பு தான் தன்னுடைய சினேகிதன் என்று பார்க்கும்போது உடம்பு நடுங்கிற்று. அவன் நிமிர்ந்து தருமபுத்திரரை பார்த்தான்.

    பாண்டவர்கள் மிகப் பெரிய வீரர்கள். அவர்களுக்கு கிருஷ்ணர் துணை இருக்கிறார். கிருஷ்ணர் சத்திய சொரூபம். கடவுளின் ஒரு ரூபம் என்று சொல்லப்பட்டிருந்தது. குபேரன் நம்பினான். ஆனால் எங்கும் பரந்திருக்கின்ற நாராயணர் எதற்கு பஞ்சபாண்டவர்களை நேசிக்கிறார் என்று கேள்வி வந்தது. அதற்கு விடை கிடைக்கவில்லை. இப்போது கிடைத்து விட்டது. உலகத்தை சரிசெய்வதற்கு பஞ்ச பாண்டவர்கள் என்கிற ஆயுதத்தை கிருஷ்ணர் பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஆயுதங்கள் கூர்மையானவை. உறுதியானவை. எவராலும் கட்டுப்படுத்த முடியாதவை.

    பீமன் என்கிறவனுடைய ஆட்டமே இப்படி எனில் அர்ஜூனனுடைய ஆட்டம் எப்படி இருக்கும். பீமனுடைய சரமே பலபேரை கொத்தி தூக்கிப் போட்டது எனில், அர்ஜூனன் சரம் எங்கிருக்கும். அர்ஜுனன் களத்தில் இருந்தால் என் வீட்டு கதவு உடைந்திருக்கும். என்னை அடித்து இழுத்து வந்திருப்பான். என்னை சுவரோடு தைத்திருப்பான். பீமன் ஒருவனுக்கே சர்வநாசம் விளைவிக்கிறது எனில் அர்ஜுனனும் இங்கிருந்தால் இன்னும் மோசமாக இருந்திருக்கும். ஐந்து பேரும் ஆயுதங்களோடு வாசலில் வரிசைப்பட்டிருந்தால் குபேரப்பட்டிணம் அதோகதி என்று தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

    எதனால் இது? ஏன் இது? பாண்டவர்களுடைய பலமா, இல்லை வேறு ஏதாவதா என்று யோசிக்கும் பொழுது அவன் காதருகே அவன் மந்திரி ஏதோ சொன்னான். அவனுக்குப் புரிந்தது.

    இது பாண்டவர்களுடைய பலம்தான். பீமனுடைய பராக்கிரமம்தான். ஆனால் தன்னுடைய நண்பன் இறந்ததற்கு ஒரு சாபம் காரணம். அகத்தியர் காரணம். யட்சன் என்கிற திமிரில், அலட்டலில், அதீத கர்வத்தில் அகத்தியர் என்ற அற்புதமான முனிவர் மீது அவன் எச்சில் உமிழ்ந்தான். அவர் தலையில் தூ... என்று துப்பினான். உயரே பறக்க முடிந்த ஒரே காரணத்தால் காலின் கீழ் இருக்கின்றவர்களெல்லாம் துச்சம் என்று நினைத்தான்.

    ‘எங்கு பறந்தால் என்ன. நீ அடிபட்டு சாகப்போகிறாய். என்னை துச்சம் என்று நினைத்தாயல்லவா, நீ துச்சம் என்று நினைக்கின்ற மனிதனால் வதைசெய்யப்பட போகிறாய். யட்சனா, ராட்சஸனா, ஜெயிக்க முடியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற ராட்சஸ கூட்டம் அழியும். யட்சர்கள் உதை வாங்குவார்கள்’ என்று மிகுந்த கோபத்தோடு இதே கந்தமான பர்வதத்தில் அவர் சொல்லியிருக்கிறார். அது நடந்து விட்டது. இது அகத்தியரின் சாபம்.

    குபேரனுக்கு உடம்பு உதறிப் போட்டது. அவன் தேரை விட்டு இறங்கினான். கைகளை கூப்பியவாறு தருமரை நோக்கி நடந்தான். பீமன் கை கூப்பி வருகின்ற குபேரனை பார்த்து விலகி நின்றான். தருமபுத்திரரை பார்த்து குபேரன் குனிந்து வணங்கினான்.

    உங்கள் வரவு நல்வரவாகுக. கந்தமான பர்வதத்திற்கு நீங்கள் வந்தது எங்கள் பாக்கியம் என்றான்.

    நடு யுத்த களத்தில் அரக்கர்களும், யட்சர்களும் அடிபட்டு முனங்குகின்ற சப்தங்களுக்கிடையே அவன் உரத்து இப்படி சொன்னது திரௌபதிக்கு சிரிப்பை உண்டுபண்ணியது.

    உதை வாங்கியபின்தான் இது தெரிந்ததா என்ற கேள்வி வந்தது. மனிதர்கள் புறக்கணிக்கப்பட தக்கவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தீர்களே அது இப்பொழுது என்ன ஆயிற்று. அங்கே ஒரு மலர்கூட போகக்கூடாது, ஒரு செடி கூட நகரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தீர்களே அது இப்பொழுது என்ன ஆயிற்று. எவனுக்கு கடவுள் அருள் உண்டோ அவரே வலிவு மிக்கவர். எவருக்கு இறையின் அண்மை உண்டோ அவரே தைரியம் மிக்கவர். நீ அகலமும், உயரமும், ஆயுதங்களையும் காட்டி ஜெயித்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். முட்டாள் என்று மனம் பேசிற்று. ஆனாலும் புருஷர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூர்மையாக அந்த அரசியலை அவள் கவனித்துக் கொண்டிருந்தாள்.

    "பீமனின் பராக்கிரமம் மட்டும் அல்ல. இது அகத்தியர் சாபம். மணிமானுடைய இறப்பு எப்போதோ தீர்மானம் செய்யப்பட்டு விட்டது. இவன் இப்படித்தான் இறப்பான் என்று எங்களுக்கு சொல்லப்பட்டு விட்டது. பீமனுடைய வலிவு பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதோ கண் எதிரே பார்த்திருக்கிறோம். நீங்கள் செயற்கரிய செயலை செய்வதற்காக வனம் புகுந்திருக்கிறீர்கள். க்ஷத்திரியர்களின் கொட்டம் அடங்குவதற்காக நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். ஆமெனில் உங்களுக்கு யட்சர்களோ, ராட்சஸர்களோ இணையே இல்லை.

    இந்த கந்தமான பர்வதம் உங்களை வரவேற்கிறது. மணிமான் மரணத்திற்காக நீங்கள் பீமனை கோபித்துக்கொள்ள வேண்டாம். இது தவறாயிற்று என்று நினைத்து சஞ்சலப்பட வேண்டாம். யட்சர்கள் உங்களுக்கு எதிரிகள் அல்ல. இந்த குபேரனும் எதிரி அல்ல."

    அந்த கொம்பு சத்தத்தினுடைய அசைவு கண்டு சமாதானம் என்பதை புரிந்து கொண்டார்கள்.

    பீமனை பார்த்து கை கூப்பினார்கள். உள்ளே வருக என்று வரவேற்றார்கள். கின்னரர்கள் பாடினார்கள். அப்ஸர பெண்கள் ஆடினார்கள். யட்சர்கள் அனுபவிக்கின்ற அந்த கானங்கள், நடனங்கள் மனிதர்களுக்கு விருந்தாயின. பீமன் என்கிற ஒரு தனி மனிதன் இதை சாதித்து காட்டினான். மனிதர்கள் புறம்பானவர்கள் அல்ல என்று யட்சர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். வீரர்கள் எதிலும் உண்டு என்று புரிந்து கொண்டார்கள். பீமனுடைய பராக்கிரமம் அவஸ்தைபடுகிற அரக்கர்களின் உடம்பில் தெரிந்தது.

    சௌகந்தி மலர் என்று மெல்ல பீமனுக்கு திரௌபதி ஞாபகப்படுத்தினாள். அது கூர்மையான செவித்திறன் உடைய குபேரனுக்கு கேட்டது.

    அந்த மலரை நினைத்துதான் பலபேர் இங்கு வருகிறார்கள். புறந்தள்ளப்படுகிறார்கள். உங்களுக்கு அந்த மலர் வேண்டுமென்பது கிடைக்கும். செடியும் கிடைக்கும். நீங்கள் உங்கள் தேசத்திற்கு எடுத்துப் போகலாம் என்று குபேரன் பணிவோடும், நிதானத்தோடும் திரௌபதியைப் பார்த்து பேசினான்.

    வெற்றி பெற்ற புருஷனின் தோளை நெருங்கி தொட்ட வண்ணம் திரௌபதி பட்டண பிரவேசம் செய்தாள்.

    தருமரும், நகுலனும், சகாதேவனும் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்ற குபேர பட்டிணத்து யட்சர்களை, சுக சௌகரியங்களை கண்டு வியந்தவாறு, அதன் சுத்தத்தை நேசித்தவாறு பட்டணப்பிரவேசம் செய்தார்கள். அவ்விதமாய் கந்தமானப் பர்வதம் மனிதர்களுக்காக திறந்து விடப்பட்டது.

    அதிகம் அட்டகாசம் செய்கின்ற அரக்கர்களை அடக்கி வைக்கவும், அடர்ந்த வனங்களில் வழி ஏற்படுத்தவும், வனங்களில் உள்ள கொடிய மிருகங்களை

    Enjoying the preview?
    Page 1 of 1