Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malaikkum Kolai Kangal
Malaikkum Kolai Kangal
Malaikkum Kolai Kangal
Ebook368 pages2 hours

Malaikkum Kolai Kangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குலத்தையே வேரோடுக் கருவறுத்து அடியோடு அழிக்கும் இரக்கமற்ற கொலை பாதகர்களின் கண்களையே திகைத்து மலைத்துப் போய் நடுநடுங்கி நிற்க வைக்கும் கொலைக் களமான ஒரு பேய் மலைக்குள் நடக்கும் மர்மங்களையும் கொலைகளையும் அவர்கள் சந்திக்கும் திக்திக் தருணங்களையும் அதே கொலை பாதகர்களுடன் சேர்ந்து நாமும் கூடவே பயணித்து திகிலுடன் அனுபவிப்போமா ஃப்ரென்ட்ஸ்.

வாங்க போகலாம் கொலைக் களத்திற்குள்.

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580148408289
Malaikkum Kolai Kangal

Read more from Yamuna

Related to Malaikkum Kolai Kangal

Related ebooks

Related categories

Reviews for Malaikkum Kolai Kangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malaikkum Kolai Kangal - Yamuna

    https://www.pustaka.co.in

    மலைக்கும் கொலைக் கண்கள்

    Malaikkum Kolai Kangal

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    1

    ஓடி வாங்க, ஓடிவாங்க, ஐயய்யோ! கொலை! கொலை! யாராவது ஓடி வாங்களேன். ரத்தம்! ரத்தம்!

    காட்டேரிக்குப் பிறந்த செங்குரங்கே! உன்னை எல்லாம் பெற்றாங்களா? இல்லை அந்த கரடி வயிற்றிலிருந்து உருவி எடுத்தாங்களா?

    கடிநாயே! வெறிப்புடிச்ச டாபர்! ஏன்டா கையை கடிச்ச?

    நீ ஏண்டி கத்தினே?

    நீ தூங்கிட்டிருந்த போசிஷன் பாக்கறதுக்கு செத்தப் பொணம்போலதான்டா இருந்தது கருமம் புடிச்சவனே, அதனாலதான் ஷாக் ஆகி கத்தினேன். ஆமாம்! அது என்னடா கையில காயம்! பேன்டேஜையும் தாண்டி ரத்தம் கசியிது. சூசைட் அட்டர்ன் பண்ணியா ஷ்யாம். செகென்ட் ப்ரப்போஸல் ஃபெய்லியராடா? சொல்லிடு செல்லக்குட்டி. சமத்தா நானே விலகிக்கிறேன்.

    இதைப் பார்த்து நீ பயந்தியா? நம்பிட்டேன்டி.

    பயந்தேனா? நானா? போடா.. ஏமாந்த சோணகிரி. நீ செத்துட்டதா எல்லாரையும் நம்ப வச்சிட்டா உன் கூட வரவேண்டியதில்லை பாரு! இப்படியே நான் என் ஊரைப் பார்த்து கிளம்பிடுவேன் இல்ல. சொல்லு.. சொல்லு எப்படி இந்த கோழைத்தழும்பு. ஊரிலிருந்து வர்றப்போ எங்க அப்பாகிட்ட மாட்டிக்கிட்டு வீச்சருவாளோட மல்லுக்கட்டினியா ஷ்யாம்

    அடிங்க காளையன் மகளே! உன் மூஞ்சி, நம்ம ஊர் பக்கத்துல ஒரு கருவேலம் காடு இருக்குல்ல, அது வழியாத்தான் பூந்து வந்தேன். அங்க ஒரு எருமை கிட்ட மாட்டிக்கிட்டேன். அது அசல்ல உங்க அப்பா காளையனை மாதிரியேதான் இருந்தது தெரியுமா நிலா!? என்னமா சண்டை போடுது. கள்ளைக் குடிச்சிட்டு கிறங்கி வந்து எதிர்த்தால நின்னது. திடீர்னு கொம்பால வாரி தூக்கிடுச்சு. அந்த வீரப்போர்ல கிடைச்ச கொம்புக் குத்துக் காயம்தான் இது.

    அந்தக் கரிசக்காட்டை நானும் என் ஃப்ரென்ட்ஸும் சேர்ந்து தீ வைச்சி கொளுத்தின பிறகும் அழிய மாட்டேங்குது. எதனால ஷ்யாம்?. எத்தனை ஏக்கர் நிலத்தை முழுங்கிட்டு அம்மாம்மான்னு விரிஞ்சி கிடக்குது. நம்ம மக்களுக்கு குடிசை போட ஒரு சென்ட் மனை இல்லை. இந்தக் காடு ஒரு ஊரையே அடிச்சு அதோட உலையில போட்டு காய்ச்சிது ஷ்யாம்.

    அடி கேனா மூனா! நீ விபரம் தெரியாமல் பேசுற நிலா. அந்த காட்டுக்குள்ள நைட் ஒரு பதினொரு மணிக்கு மேல் போய் பாரு. அப்போ தெரியும்.

    ஏன்டா! காத்துக் கருப்பு காட்டுக்குள்ள குடும்பம் நடத்துதா என்ன? தினமும் நைட்ல அந்த ஏரியா முழுக்க தீப்பந்தமா ஓடும் ஷ்யாம். நான் தூரத்திருந்து கவனிச்சிருக்றேன்.

    ஆமாமா அறிவாளி கண்டுபிடிச்சிட்டா. போடி கரடிக்கு பிறந்தவளே, நம்ம ஊரு மிராசு அங்க அவனோட ஆளுங்களை வைச்சி கள்ளச்சாராயம் காய்ச்சி விக்கிறான்டி. அதனாலதான் அந்தக் காட்டை இதுவரை எந்தப் புடுங்கியாலும் ஒன்றும் அசைக்க முடியல. இதுகூடத் தெரியாமல் மக்கு நிலா

    முதல்ல அந்த கரிசல் மரங்களை நிலத்துல விதைத்தவனை நடுரோட்டில் விட்டு சுடணும் ஷ்யாம். அவன் மட்டும் என் கையில கிடைச்சா, அப்படியே அவன் தலையைக் கிள்ளி அம்மியில வைச்சு நறநறன்னு அரளி விதையை அரைக்கிறமாதிரி அரைச்சு, ஜூஸ் புழிஞ்சு, அவனுக்கு சப்போட் பண்ணுறவனுங்களுக்கு தொண்டையிலியே ஊத்திவிடணும்,

    கழுதைத் தேய்ஞ்சி கட்டெறும்பா போச்சிதாம். ஹா ஹா ஹா அட அறிவுக் கொழுந்தே! அப்போ நீ பிரிட்டனுக்கு தான் கிளம்பிப் போய் ஆகணும். அங்கதான் அவன் தூங்குறான் மண்ணுக்குள்ள.

    ஆமா இல்ல! வெள்ளைக்காரன் இந்தியா வந்து நம்ம மக்களை அடிமை படுத்தி ஆட்சி செய்த போது நம்ம தலைவர்களும் குடிமக்களும் அவனை எதிர்த்துப் போராடின கோபத்துல இயற்கை வளம் கொழிக்கும் இந்தியாவோட எதிர்காலம் மழையே இல்லாமல் பாழடைந்து சுடுகாடா போகட்டும்னு நினைச்சு நிலத்தடி நீரை உறிஞ்சு குடிக்கிற, அதே நேரம் இயற்கையாகவே ஒளிச்சேர்க்கை நடந்து நீராவி ஆகிறதை தடைசெய்கிற கருவேலம் விதைகளை அங்கங்கே சில துரோகிகளை பயன்படுத்தி விளைச்சல் நிலங்கள்ல தூவினதா நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஷ்யாம். அது போகட்டும் கழுதை நீ பேச்சு மாத்தாதே. என்னை ஏன்டா இங்கே வரவைச்ச? உன்னை நான் லவ் பண்ற பாவத்துக்கு என் ஃப்ரெண்டோட அப்பாவை சாவடிச்சிட்டு வரவேண்டியதாப் போயிடுச்சி.

    அடியே... அடியே... அடியே கொலைகாரி! என்னடி சொல்ற நிலா!. அழகான ரம்மியமான கவிஞர்களின் காதலி பெயரை வச்சுக்கிட்டு ராங்கி ரவுடி மாதிரி நடந்துக்கிற. உன்னை கல்யாணம் பண்ண போற எனக்கு தினமும் வாடிவாசல் திருவிழாதான். அம்மாஆஆஆ... அடிக்கிறாளே பேய்... ஏய் நிலா! படாத இடத்தில் பட்டா உனக்குதான்டி ப்ராப்ளம். வாரிசு இல்லாமல் போய்விடும் பாத்துக்கோ. அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக்கூடாது ஆமா. ஐயோ! கொள்ளிவாயி...கொல்லுறாளே... இதைக் கேட்க யாருமே இல்லையாஆஆஆ!???.

    சத்தியமா நாங்க கேட்க மாட்டோம். ஷ்யாம் நிலா சின்னக் குழந்தைங்களா நீங்க ஹாங்?. இதுவே உங்க இரண்டு பேருக்கும் வேலையாப் போச்சு. விறைப்பா முட்டிக்கிறது. அப்புறமா வெடுக்குன்ணு கட்டிக்கிறது. என்னால பஞ்சாயத்து பண்ண முடியாது. இந்த வீட்டுக்கு வந்து அரைநாள்கூட இன்னும் ஆகவில்லை, ஆறுமுறை அலப்பறை பண்ணிட்டீங்க ஷ்யாம். என்று அவர்கள் இருவரின் இழுவலிக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் வந்து நின்றது அவரின் சிம்மக் குரல்.

    யார் என்று கேட்கிறீங்களா... இவர்தாங்க கதையோட மெயின் ஹீரோ தியாகு. சொல்றேன் கவனமா கேளுங்க. நம்மையும் இந்தக் கதையில் நம்மோடு வரப்போகிற இன்னும் மூன்றுபேர், அதாவது ஷ்யாம், நிலா, திலோத்தமா இவங்களையும் புதைகாண்டத்திற்குள் கொண்டு செல்லவிருக்கும் இந்த தியாகு பற்றிதான் முதலில் சொல்லியாகணும்.

    தியாகு! ... ஐம்பதைத் தொடவிருக்கும் கட்டுமஸ்தான ஃபாரஸ்ட் ஆபீசர். ஒரு முக்கியமான ரகசியக் காரணத்திற்காக அரசாங்க வேலையிலிருந்து வாலன்டியரி ரிட்டயர்மென்ட் வாங்கி விட்டு தனது நோக்கத்தை நிறைவேற்ற இதோ! தன்னோடு மற்ற மூவரையும் அழைத்துக்கொண்டு புதைகாண்டத்திற்குள் செல்லத் தயாராய்...

    ஷ்யாமையும் நிலாவையும் இடியோசை கேட்ட நாகம்போல தன் ஓங்கிய அதட்டலால் சிலைபோல் நிற்க வைத்துவிட்டு பெட்டியில் தனது பயணத்திற்கு தேவையான துணி மற்றும் இதர பொருட்களை முறையாய் நிதானமாய் அடுக்கிக்கொண்டிருக்கும் ஒரு கணிப் பொறியாளர் படிப்பாளி. முக்கியமான ஒரு விஷயம், இவர் ஒரு தபுதாரன். அப்படின்னா ஆண் விதவை என்று சொல்லலாம். ஒரு காட்டுத்தீயின் கோர விபத்தில் தன் மனைவி கனகத்தை மணமான மூன்றே வருடத்தில் பறிகொடுத்தவர். அதன்பின் கனகத்திற்கு கொடுத்தக் காதலை வேறு யாருக்கும் பகிர்ந்துத்தர விருப்பம் இல்லாத ஒரு முற்போக்குவாதி. கால ஓட்டத்தின் மாற்றத்திற்கு தன்னையும் மாற்றிக்கொண்டு வெளியே கனலும் உள்ளே தணலுமாய் வாழ்பவர். ஆனால் கடமை விஷயத்தில் தவறு நடந்து, அதன் காரணமாகக் கோபம் வந்தால் மனுஷன் இன்னார் இனியார் என்றெல்லாம் பார்க்கத் தெரியாத மூர்க்கவாதி. அதே நேரம் பாசத்திற்கு பசுவின் பிள்ளையான கன்றுக்குட்டி.

    இந்த கதையில் முக்கியமான மற்ற மூன்று பேரை பற்றி அடுத்து பேசலாம்.

    ஷ்யாம்... கதையின் காதல் நாயகன். 'ஆறடி உயரம் அழகிய உருவம் கிறங்கடிக்கும் கண்கள் ஆப்பிள் போல இருப்பானே' என்று பாட்டில் சொல்லுறது மாதிரி இல்லாவிட்டாலும் ஒரு போல்வால் பிளேயருக்குத் தேவையான கட்டுடல் கொண்டவன். ஐந்தரை அடி உயரமும் ஒரு விளையாட்டு வீரனுக்குத் தேவையான உடற்பயிற்சியால் கட்டிக்காத்து வைத்திருக்கும் உடலமைப்புடன், மாநிறத்தில் வலம்வரும் இருபத்தேழு வயது இளைஞன். மூன்று அக்காக்களுக்கு அடுத்து நான்காவதாய்க் கிடைத்தக் கடைக்குட்டிச் சிங்கம். அடுத்த ஊரிலேயே தன் துணையைத் தேடிப்பிடித்து ஆறுமாதமாகக் காதல் சண்டை போட்டுக்கொண்டிருப்பவன்.

    நிலா... இவளைப் பற்றி உங்களுக்கு முன்னமே ஓரளவு தெரிந்திருக்கும். ஆமாங்க! என்ன சத்தம் இந்த நேரம் கதையின் குழந்தை நட்சத்திரம். கரடியின் தோற்றத்தை கண்டு மோகினி பேய் என்று மிரண்ட இவளின் அம்மா கண்ணம்மாவின் வயிற்றுக்குள் அந்த நடு இரவில் உருண்டு பின் பனிக்குடம் உடைந்து அப்பாவால் பிரசவம் பார்க்கப்பட்டு இரண்டாம் ஜென்மம் எடுத்துப் பிறந்த அதே நிலா தான்.

    இவள் பிறந்த கதை பற்றிய சிறிய ஃப்ளாஷ்பேக்.(ஞாபகப்படுத்துவதற்காகத்தான்).

    போ மாமா ஒனக்கு எப்பையுமே என்னத் திட்றதே வேலயாப் போச்சி.. செல்லமாய்க் கோபித்துக்கொண்ட கண்ணம்மாவின் முகம் திடீரென அஷ்டக் கோணலாய் மாறியது..

    ஏய்.. ஏபுள்ள...ஏய் கண்ணம்மா.. என்னாச்சிடி.. ஏய்...

    மாமா வலிக்கி மாமா.. புள்ளவலி வந்திருச்சி மாமா... அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பனிக்குடம் உடைந்து வீடு நனைந்தது.. காளையன் அவளைக் கைத்தாங்கலாகத் தூக்கி பாயில் கிடத்தினான்... உள்ளங்கைகளையும் கால்களையும் சூடு பறக்க பலமாகத் தேய்த்துவிட்டான்..

    அடுப்படிக்கு ஓடி சுடுநீர் போட்டு எடுத்து வந்து துணியில் நனைத்து உடம்பில் துடைத்து விட விட பெருவலி வந்துக் கதறினாள் கண்ணம்மா.. அவள் கால்கள் இரண்டையும் தூக்கி விரித்துக் குத்தி வைத்தவன் தன் கைகள் இரண்டையும் அவள் மேல் வயிற்றில் வைத்து அமுக்கினான்...

    பயப்டாத கண்ணம்மா.. என் கண்ணுல்ல.. மாமன் இருக்கேன்டி.. பலமா முக்குமா..நம்ம புள்ள இன்னுங்கொஞ்ச நேரத்துல ஒலகத்தப் பாக்கப்போவுதுன்ணு நம்பிக்கையோட காளியாத்தாவ மனசுல நெனச்சிட்டு முக்கும்மா..ம்ம்.. பலமா முக்கித் தள்ளுடி..

    கண்ணம்மாவும் கணவனின் சொல்படியே செய்தாள்..

    பத்தே நிமிடத்தில் நிலவு ஒளியுடன் கூடிய முகம் கொண்ட அழகு தேவதை பிறந்தாள்..முன் ஜென்மத்தில் தன் தந்தை மற்றும் தமையன்களால் ஆறடி குழிக்குள் உயிரோடு புதைக்கப்பட்டு சாகும்போது கதறி அவள் இட்ட சாபம் பல தலைமுறைகளுக்குப் பின் தீர்ந்து காளையனுக்கும் கண்ணம்மாவிற்கும் மகளாகப் பிறந்திருந்தாள் நிலா. இவள் முதல் பெண் வாரிசு காளையனின் வம்சத்தில்.. சிசுவை மேனியின் ரெத்தம் காயாமல் முத்தம் செய்தான்.. உச்சி முகர்ந்து தாயையும் சேயையும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்..வானில் முழுநிலவு முகம் மலர்ந்து இவர்களை ஆசிர்வதித்தது..

    இப்போதும் அந்தத் தென்றலின் ஸ்பரிசத்திற்குள் கேட்டது அதே சத்தம்...

    ச்சல்.. ச்சல்.. ஜல் ஜல ஜல் ஜல...

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்..(நிலா பிறந்த கதை ஓவர்).

    இப்போது இருபத்தைந்து வருடம் கழிந்து, மலர்ந்து உருண்டு திரண்டு இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் நாயகி அனுஷ்கா மாதிரி கலரிலும் ஸ்ட்ரெச்சரில் உரித்து வைத்தாற்போல் இருக்கும், தொல்பொருள் ஆராய்ச்சி படிப்பு முடித்த ஆர்க்கியாலஜிஸ்ட். இவள் பக்கத்து ஊரைச் சேர்ந்த நம்ம ஷ்யாம் ஒருமுறை இவளின் ஊருக்கு ஒரு ஈவன்ட்காக வந்திருந்தபோது அவனின் வலையில் மாட்டிக்கொண்ட குண்டுக்கிளி 'நிலா' என்ற வெண்ணிலா.

    திலோத்தமா... முப்பத்தைந்து வயதாகியும் திருமணமாகாத ஒரு முதிர்கன்னி. திருமணமாகாத என்று சொல்வதைவிட ஆண் வர்க்கத்தின் அடிமைக் கட்டுக்குள் தன் சிறகை அகப்படுத்திக்கொள்ள விரும்பாத புதுமைப்பெண் என்றும் சொல்லலாம். சுதந்திரமாக ஒழுக்கமுடன் வாழும் ஒரு அரசாங்க தொலைத்தொடர்பு நிலையத்தின் பணியாளர் திலோத்தமா. தியாகு தனது ஃபாரஸ்ட் ஆபீஸர் பணியில் இருந்தபோது அவரின் பணி நிமித்தமாக அடிக்கடி அந்த தொலைத்தொடர்பு அலுவலகம் வரும்போது ஏற்பட்டிருந்த ஒரு நல்ல நட்பின் விளைவால் தனது இந்த புதைகாண்ட பயணத்திற்கு தன்னோடு திலோத்தமாவையும் அழைத்திருந்தார் தியாகு. இதோ! இங்கே நால்வரும் தியாகுவின் வீட்டில்.

    இரண்டுபேரும் உங்க லக்கேஜை பேக் பண்ணுங்க. இன்னும் ஒரு மணிநேரம்தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள ரெடி ஆகி என் பக்கத்தில் வந்து நிக்கணும். ம்... கோ ஃபாஸ்ட்... மிஸ். திலோ! உங்களுக்கும்தான். உள்ளே போய் ஃப்ரஷ்ஷப் ஆகிட்டு லக்கேஜோட வாங்க. மூன்றுபேரும் வந்ததும் உங்களுக்கு நாம சந்திக்கப்போற அந்த விசித்திரமான சவால்களுக்கான வரைபடத்தைக் காட்டுகிறேன்.

    சரி தியாகு!. இதோ வர்றேன்..திலோத்தமா உள்ளே சென்றார். தியாகு அந்த மிகப்பயங்கரமான இடத்தின் வரைபடத்தை தன்முன் இருந்த மேஜைமீது நான்கு புறமும் கொக்கிகள்போட்டு விரித்து பரப்பிவிட்டு குறிப்பிட்ட அந்த மலையை மட்டும் கூர்ந்து நோக்க, அவரின் இரு நெற்றிப் புருவங்களும் மேலேறிச் சுருங்கின.

    2

    "கவனமா கேளுங்க. இதோ இதுதான் அந்த இடத்தோட வரைபடம். நம்ம டார்கெட் பாயிண்ட் பதுங்கி இருக்கிற ரகசியக் குறிஞ்சிப் பகுதி. இதோ இது அந்த உச்சிப் பகுதி. இந்தப் பகுதியை அடைவது அவ்வளவு சுலபமான ஒன்று அல்ல. பிகாஸ் அந்த பாயின்ட்டை நாம ரீச் ஆகுறதுக்குள்ள இங்க இருக்கிற நம் நான்கு பேரில் யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பட் யாரையும் நான் அவ்வளவு சீக்கிரம் இழந்து விடவும் மாட்டேன். என் உயிரைக் கொடுத்தேனும் உங்க உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்ற வேண்டியது என் கடமை. டிரஸ்ட் மீ. குறிப்பாக உங்க மூன்று பேரையும் நான் செலக்ட் பண்ணிய காரணம் ஒன்று உண்டு. அது இனி நாம் மேற்கொள்ளப் போகிற இந்த ஆபத்தான பயணத்தின் முடிவில் உங்களுக்குப் புரிய வரும்.

    நல்லா பாருங்க, இதோ இங்கே இருந்து பதினான்கு கிலோமீட்டர் தாண்டிய பிறகு வருகிற மலையடிவாரத்தில் தொடங்குகிற காட்டுப் பகுதியிலிருந்து நம் டார்கெட் இருக்கும் இடம் வரை மொத்தம் நூறு கிலோமீட்டர் சுற்றளவுக்கு புதைகாண்டம் பரவியிருக்கு. காடு தொடங்கி உச்சிவரை எந்த வகை வாகனங்களும் போக முடியாத தடை செய்யப்பட்ட பகுதி. இந்த வழியா நாம் கால் நடையா நடந்தே தான் போயாகணும். குறிப்பா இந்தப் பகுதியில் பாத்தீங்க அப்டீன்னா நைட் கடும் பனிமூட்டம் அடர்ந்து இருக்கும். ஆறு மணிக்கு மேல் பக்கத்தில் நடந்து வருபவரையோ இன்னும் சொல்லப் போனால் நம்மையே கூட நம் பார்வைக்குத் தெரியாது. ஆனால் பகலில் சூரிய வெளிச்சம் தெளிவாய் கிடைக்கும். ஒரு முக்கியமான விஷயம் இருக்கு ஷ்யாம்,.. அங்கே இன்டீரியரா போகப்போக நம் மொபைலுக்கு வேலையே இருக்காது. நமக்கு என்ன நடந்தாலும் வெளியே யாருக்கும் தெரியவர வாய்ப்பே இல்லை".

    ஹையாஆஆஆ. ..ஜாலி. அப்போ ஒரே என்ஜாய்மென்ட் தான் இல்ல ஷ்யாம்!?

    லூசாடி நீ, தியாகு சார் சொல்கிறதைக் கேட்க கேட்க சிறுகுடல் வெட வெடங்குது, ஈரல் நடுநடுங்குது. ஜாலியா இருக்கா உனக்கு? நிலாவின் சுட்டிப்பேச்சில் ஷ்யாமே கடுப்பாகினான்.

    ஆமான்டா டால்டா, அப்பதானே உன் கண்ணில் மண்ணைத் தூவிட்டு அங்க வர்றவன்கள்ல ஃபேரா ஒயிட்டா இன்னொரு பாய்ஃபிரெண்ட் செட் பண்ண முடியும். உங்கிட்ட சண்டைப் போட்டு போர் அடிச்சிப்போச்சி நல்லெண்ணை.

    நிலா! நாம கடந்துபோகப்போற இந்த இடம் ஆள் நடமாட்டமே, அவ்வளவு ஏன்... மனித வாடையே வீசாத பகுதி. முதலில் அதைத் தெரிஞ்சுக்கோ நீ. அங்கு யாரைப் போய் செகண்ட் பாய்பிரெண்ட்டா செட் பண்ணுவே? உன்னை அந்த காட்டுக்குள்ள இருக்கிற யானை இல்ல சிங்கமோ புலியோ தான் அதோட கேர்ள் ஃபிரண்டா செட் பண்ணி ஆகணும். அதுங்க உன்னை பொறுக்க முடியாமல் தாக்கினால் கூட உதவிக்கு எங்களைத் தவிர வேறு எவரும் அங்கே வரமாட்டாங்க. புரியுதா? இந்த சின்ன புள்ள தனத்தைக் கொஞ்சம் குறைச்சுட்டு வயசுக்கேத்த மெச்சூர்டோட யோசிடி. ஷ்யாம் இப்போது அவளை அடிக்காத குறையாக குரலுயத்திச் சொன்னான்.

    நிலா! இதோட உன் விளையாட்டுத்தனத்தை நிறுத்திக்கிட்டா மூளை கொஞ்சம் வேலைசெய்யும். மைன்ட் இட். இது தியாகுவின் கட்டளை.

    ம்ம். ஓகே தியாகு சார். பெயருக்கு சொல்லிவைத்தாள் நிலா.

    "நல்லா மண்டையிலேயே கொட்டிக் கொட்டி இதை சொல்லுங்க தியாகு சார். இவளோட மெட்டல் ப்ளேட் மண்டையில ஏறுதா பாக்கலாம். எப்ப பாரு என்னை கழட்டி விடுவதிலேயே கவனமா இருக்றா. நான் உனக்கு என்னடி குறை வச்சேன்? நீ அடிக்கிறப்ப அதையும் வாங்கிக்கறேன். சகட்டு மேனிக்குத் திட்டுற. அதையும் சொரணையே இல்லாம கேட்டுக்கிட்டிருக்றேன். ரொமான்ஸ் பண்றதா நினைச்சிட்டு கண்ட கண்ட கருமாந்திரத்தையும் தூக்கிட்டு வரும்போது அதையும் வெக்கமே இல்லாமப் பல்லை கடிச்சுக்கிட்டு வாங்கிக்கிறேன்.

    உன் பரங்கிக்காய் உடம்புக்கு இந்த பாடி பில்டர் போதாதா பக்கி. இன்னொருத்தனை செட் பண்றதிலேயே இப்படி குறியா நிக்கிறியே. ஒன்று மட்டும் தெரிஞ்சுக்கோங்க மிஸ் நிலா மேடம், என்னை விட வேற எவனும் உங்களை கட்டிக்க குதிரை மேல ஏறி வரமாட்டான். வெவ்வெவ்வெவ்வ... முறைக்காதடி, கண்ணாமுழி வெளியே விழுந்துடப்போகுது. உன்கிட்ட அடி வாங்குற தெம்பும் உன் மொக்கையை சகிச்சிக்கிற பரந்த இதயமும் என்னைவிட வேற எவன் கிட்ட இருக்கு".

    அடேய்.. அடேய்... நாதாரி உன்னை அப்படியே கழுத்தை நெரிச்சு இங்கேயே கொன்னுடுவேன். கிண்டலா பண்ற என் உடம்பைப் பார்த்து. நல்லா கேட்டுக்கோ, போகிற இடத்துல என்னாலதான் உனக்கு எல்லாமே நடக்கப்போகுது. வேணா பாரேன்!

    எல்லாமேவா? பாப்பா என்ன சொல்ற? புரியலையே. நிலா சொன்னதிலும் ஒரு அர்த்தம் இருப்பது இப்போது ஷ்யாமுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் கூட புரியவில்லைதான்.

    ச்சூ. ஸ்டாப் இட். மேப்பை கிளோஸ்ல பாருங்க. இதோ, இந்த உச்சியின் கூம்புக்கு நம் கணக்குப்படி சரியா இன்னும் ஏழே நாட்கள்ல போய் சேர்ந்தாகணும். இந்த நாள் கணக்கை நாம் தவறவிட்டால், ஒரு பெரிய இழப்பை இந்த உலகம் சந்திக்கவேண்டியிருக்கும். இந்த உலகத்தின் அழிவு இந்த ஏழு நாட்களின் இறுதி நொடியில் எழுதப்பட்டிருக்கு. சோ, நீங்க இரண்டு பேரும் உங்க நேரத்தோட சேர்த்து என் நேரத்தையும் வீணடிக்காம உங்க பொறுப்பில் இனி நான் ஒப்படைக்கப்போகிற வேலையில் கவனம் செலுத்தினால் எனக்குக் கோபம் வராமல் பாத்துக்கலாம். என்ன சொல்றீங்க?.

    ம்ம்..சேட்டை பண்ணமாட்டோம் சார். இருவரும் கோரஸ் பாடினார்கள்

    மிஸ். திலோ இவங்க ரெண்டு பேரும் அங்க வைச்சு இப்படியே சண்டை போட்டாங்க என்றால் உங்களுக்குத்தான் நான் ஹெவியா பனிஷ்மென்ட் தரவேண்டி இருக்கும். இவங்களை கையையும் காலையும் வாயையும் வாலையும் மடக்கி வைச்சிட்டு அமைதியா வரவைக்க வேண்டியது உங்கக் கடமை. அண்டர் ஸ்டுட். தியாகு திலோவிற்கு இட்டக் கட்டளையைக் கேட்டபோது, இறக்கை வெட்டப்பட்ட கிளிகளைப் போல ஆயினர் நிலாவும் ஷ்யாமும்.

    கையையும் காலையும் மடக்கி வெச்சிட்டு நடந்துவர எங்கம்மா சொல்லித்தரலியே. (இவ அடங்கமாட்டாபோலிருக்குதே)..

    ஸ்டாப் திஸ் இடியாட்டிக் நிலா. கணீரென போட்ட அரட்டலில் காதுச் செவி கிழிந்து விட்டது நிலாவிற்கு. தலையை பவ்யமாய்க் கவிழ்த்துவிட்டாள்.

    தேவையா உனக்கு இது ஷ்யாம் நக்கலாய் விக்கினான்.

    அடிங்க கருவாயா...நிலா உதடுக்குள் ஷ்யாமைக் கடித்தாள் முணுமுணுப்பில்.

    திலோத்தமாவுக்குப் பாவமாய் இருந்தது. அவர்கள் இருவரின் பார்வையிலும் ஒரு குழந்தை தான் ஆசையாய் ஆசையாய் மடியில் வைத்து விளையாடிக்கொண்டிருந்த பொம்மையை யாரோ தன் கையிலிருந்து பிடிங்கியதால் ஏற்பட்ட ஏமாற்றமும் பரிதவிப்பும் நிழலாடியது. அவர்கள் முகத்தின் சுடர் அணைந்து போனது என்பது அப்பட்டமாக வெளிச்சமானது. திலோத்தமா அவர்கள் இருவருக்கும் தன் கண்களாலேயே பதில் சொன்னார் 'கவலைப்படாதீங்க செல்லங்களா பாத்துக்கலாம். நான் இருக்கிறேன்ல'. என்ற ஆறுதல் சமிஞ்சையை பார்த்த பின்தான் கொஞ்சம் புன்னகை பூத்தது இருவர் உதடுகளிலும்.

    தியாகு! நீங்க சொல்வதைப் பார்த்தால் நாம் நேர்வழியை பயன்படுத்தாமல் குறுக்கு வழியில் போகிறது மாதிரி தெரியுது. சரியா? என்று கேட்டார் திலோத்தமா.

    "ஆம். சரியாகச் சொன்னீர்கள் மிஸ்.திலோ. இந்த இடத்தை நாம் நேர்வழியில் போய் அடைய நினைத்தால் மூன்று பிரச்சினைகளை இப்பவே சட்டப்படி சால்வ் பண்ணாதான் நடக்கும்.

    சட்டப்படியாஆஆஆஆ.. அன்டர் க்ரவுன்ட் வேலையா பாக்கப்போறோம் நாம. (தொறந்துட்டாய்யா தவளை வாயை).

    "ஷட் அப் நிலா. ஷ்யாம் அந்த ப்ளாஸ்டர் எடுத்து இவ வாயில் ஒட்டிவிடு. ஏழுநாள் அது கழன்டு வரக்கூடாது. நானும் பாத்துகிட்டுதான் இருக்கிறேன். நீஈஈளமா போகுது நாக்கு.. ம்ம்... அது... வாயை மூடிகிட்டு இதே மாதிரி நின்று நான் சொல்றதை கவனி நிலா. இப்போ பிரச்சனை என்ன என்றால்...முதலில் நாம் அந்த காட்டுக்குள்ள ஏன் போகிறோம் என்ற கேள்விக்கு பதில் சொல்லியாகணும். அடுத்து எப்போது திரும்பி வருவோம் என்ற கேள்விக்கு பதில்... இரண்டாவது ப்ராப்ளம் ஃபாரஸ்ட் ஆபிஸர்ஸ்கிட்ட பெர்மிஷன் வாங்குறது. அது கண்டிப்பாகக் கிடைக்காது. மூன்றாவது அவங்க கேட்கிற குறுக்குக் கேள்வியில் நாம் வாய் தவறி நம்முடைய இலக்கு பற்றி சொல்ல நேரிடும். அப்போ அந்த நாட்டு மிருகங்கள் நம்மைப் பழி வாங்க தயாராகும். நம் பயணத்தை தடைசெய்ய வேண்டி எது வேண்டுமானாலும் செய்யும்.

    சோ இதெல்லாம் ஃபேஸ் பண்றது நாட்பாஸிபிள். அதுக்கு நம்மகிட்ட இப்போ டைம் இல்ல. நேர்மையா இருந்து என் வாழ்க்கையில நான் இதுவரை அடைந்ததை விட இழந்ததுதான் அதிகம். லீவ் திஸ் இடயாடிக் சென்டிமென்ட்.

    இந்த வரைபடத்தை மூன்று பேரும் உற்றுப் பாருங்க. இங்கே, இதோ பத்து மார்க்கிங் ஏரியா தெரியுது இல்லையா? இந்த பத்து இடங்களும்தான் நமக்கு அதிகமான ஆபத்தை விளைவிக்கக்கூடிய பகுதிகள். ஒவ்வொரு ஆபத்தையும் சரியான திட்டமிடலோடு கடந்து அடுத்தடுத்து முன்னேறி நடந்து போனால் இதோ இந்த கடைசி உச்சியில் தான் மறைந்து இருக்கு நம்ம டார்கெட்.

    இந்த பத்து இடங்களும் என்னென்ன பேராபத்தைத் தரும் அப்படிங்கிறது நான் ஜஸ்ட் ரேண்டாமா உங்களுக்கு சொல்றேன். இந்த இடங்களில் ஒன்று கொடியக் காட்டு விலங்குகள் அதிகமாக

    Enjoying the preview?
    Page 1 of 1