Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saathanin Kadal
Saathanin Kadal
Saathanin Kadal
Ebook49 pages20 minutes

Saathanin Kadal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திகிலும், பயங்கரமான மர்மங்களும், புத்திக்கு எட்டாத மறைக்கப்பட்ட உண்மைகளும் அடைக்கப்பட்டு.. திறக்க முடியாத விடைகளின் பெட்டி போன்ற மனித வாழ்க்கையில் மரணம் ஒன்றே அனைத்திற்கும் திறவுகோல்!

Languageதமிழ்
Release dateJan 8, 2021
ISBN6580148407688
Saathanin Kadal

Read more from Yamuna

Related to Saathanin Kadal

Related ebooks

Reviews for Saathanin Kadal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saathanin Kadal - Yamuna

    https://www.pustaka.co.in

    சாத்தானின் கடல்

    Saathanin Kadal

    Author:

    யமுனா

    Yamuna

    For more books

    https://www.pustaka.co.in/home/author/yamuna

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    திகிலும், பயங்கரமான மர்மங்களும், புத்திக்கு எட்டாத மறைக்கப்பட்ட உண்மைகளும் அடைக்கப்பட்டு... திறக்க முடியாத விடைகளின் பெட்டி போன்ற மனித வாழ்க்கையில் மரணம் ஒன்றே அனைத்திற்கும் திறவுகோல்!

    கி.பி பத்தாம் நூற்றாண்டு...

    அமானுஷ்யத்தின் அதிகாரம் ஆட்சி செய்யும் அடர் இருள் சூழ்ந்த நடு இரவு வேளை, இதயம் கொல்லும் நிச்சலனமான பேரமைதி எங்கும் பரவி மயான நடுக்கத்தின் நடுவே நீரின் மேல்மட்ட ஓட்டத்தில் சிறுசிறு அலைகள் தோன்றி கொள்ளை அமைதியைக் கருவறுக்கும் வகையில் சலசலப்புடன் ஈரல்களில் நடுக்கத்தையும் திகிலையும் தோற்றுவிக்கும் வண்ணம், நீலமும் கருமையும் கலந்த வண்ணத்தில் திண்ணமாய்ப் பரவிக் கிடந்த பேராழியின் மேலே, தன்னுள் கருவூலத்தில் தங்கமும், வெள்ளியும், இரும்பும், தந்தங்களும் நிறைத்ததால் நிறைமாத கர்ப்பிணிப் போல மெல்ல ஆடி அசைந்து மிதந்து வந்து கொண்டிருந்தது பாண்டிய நாட்டின் வணிகக் கப்பல் ஒன்று.

    பத்து சதுர மைல்கல் பரப்பு கொண்ட இந்த கப்பலானது முன் முகப்பு உச்சியில் பாண்டிய மன்னனின் கயல் கொடி கம்பீரமாய்ப் பறக்க, கொடிமரத்தின் முனைமுதல் அடிவரை தொடங்கி கப்பலின் சுற்று பாகங்களில் பிரம்மாண்டமாய்ச் சேர்த்து இழுத்துக் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வடங்களின் முடிவில் மிகப்பெரிய சுறா மீன்களின் கத்தி போன்ற செவுள்களின் மிகப்பெரிய உருவத்திலும், காற்றை கிழித்துச் செல்லும் பருந்துகளின் இறக்கைகள் ஒன்றாய்க் கோர்த்துப் பறக்க விட்டது போலவுமான தோற்றத்தில் இருந்தது.

    கப்பலின் முன் முகப்பின் கூர்நுனியில் நீருக்கு நேர் குத்தாக தொங்கிக் கொண்டிருந்த பாண்டிய குலத்தவரின் வெற்றி மலராம் வேப்பம் பூக்களில் கோர்க்கப்பட்ட மிகப் பெரிய வேப்பம்பூ மாலை கடலின் வெப்ப உப்புக் காற்றில் கருகி பொலிவிழந்து சருகாய் ஆடி கொண்டிருந்தது. கப்பலின் உட்புறத்தில் இருபதுத் தனித்தனி அறைகளுடனும் அவற்றில் மூன்று அறைகளில் சிறிய பெரிய அளவிலான பல மீட்புப் படகுகள் நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டும் மீதமுள்ள அறைகள் தங்குவதற்கு ஏதுவாக வசதியுடனும் கலை நயத்துடனும் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பட்டிருந்தது.

    மேல்புறம் வெள்ளிமுலாம் பூசப்பட்டு தங்கத்தின் இழைகளால் விளிம்பில் கோடுகள் இடப்பட்டிருந்த கப்பலின் பளபளப்பு அந்தக் காரிருள் வேளையில் வானத்து நட்சத்திரங்களின் வெண்ணொளி பட்டு இன்னும் அதிகமாய் மின்னல் போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி கப்பலின் சுற்றுவட்டப்

    Enjoying the preview?
    Page 1 of 1