Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalam Thaandum Kaadhal Thoothuvan
Kaalam Thaandum Kaadhal Thoothuvan
Kaalam Thaandum Kaadhal Thoothuvan
Ebook411 pages1 hour

Kaalam Thaandum Kaadhal Thoothuvan

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

கவிச்சக்கரவர்த்தி கம்பர் அருளிய கம்பராமயணத்தின் “சுந்தரகாண்டம்” எனும் இப்பகுதி தற்காலத்து ஆண் பெண் புரிதல்களை நேர்செய்ய நிகழ்ந்த தமிழர்களுக்கேயான படைப்பிலக்கியச் சொத்து. இதனை இறைமைக்கே நிகழ்ந்த சோதனையாக எண்ணி விலகாமல் அனுமன் எனும் மகா இணைப்புப் பாலம் “காலம் தாண்டும் காதல் தூதுவனாக” செயல்பட்டதை புதுக்கவிதை வடிவில் இந்நூலின் வழியே அனுபவிக்கலாம்.

பலவிதமான சோதனைகளையும் இரணங்களையும் இராம பக்தி எனும் ஒரே ஒரு கவசம் தரித்தே அனுமன் எளிதாக தாண்டி விடுவது பக்தியின் சத்திய விலாசம். இப்படி ஓர் தூதுவன் கிட்டியதால் அன்றோ இராமபிரானின் பிரிவும் சீதையின் துயரமும் வலி தாங்கக் கூடிய, தங்க உலோகமாக மாறிற்று. கம்பனோ அந்த பிரிவுத்துயரை தமிழ் மொழியின் அணிகலனாக்கிவிட்டான்!

Languageதமிழ்
Release dateJan 9, 2023
ISBN6580161009457
Kaalam Thaandum Kaadhal Thoothuvan

Read more from P. Sathiyamohan

Related to Kaalam Thaandum Kaadhal Thoothuvan

Related ebooks

Reviews for Kaalam Thaandum Kaadhal Thoothuvan

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalam Thaandum Kaadhal Thoothuvan - P. Sathiyamohan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காலம் தாண்டும் காதல் தூதுவன்

    Kaalam Thaandum Kaadhal Thoothuvan

    Author:

    பா. சத்தியமோகன்

    P. Sathiyamohan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-sathiyamohan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. கடல் தாவு படலம்

    2. ஊர் தேடு படலம்

    3.உறக்கம் தீர்ந்து விட்டது

    4. காட்சிப்படலம்

    5. நிந்தனைப் படலம்

    6. உருக்காட்டுப்படலம்

    7. சூளாமணிப்படலம்

    8. பொழில் இறுத்த படலம்

    9. சம்புமாலி வதைப் படலம்

    10. பஞ்ச சேனாதிபதி வதைப்படலம்

    11. அக்ககுமாரன் வதை படலம்

    12. பாசப்படலம்

    13. பிணி வீட்டுப் படலம்

    14. இலங்கை எரியூட்டும் படலம்

    15. திருவடி தொழுத படலம்

    காலம் தாண்டும் காதல் தூதுவன்

    (மகாகவி கம்பர் அருளிய சுந்தர காண்டம் புதுக் கவிதை வடிவில்)

    ஓம் சிவாயநம

    ஓம் சிவசக்தி

    காலம் தாண்டும் காதல் தூதுவன் அனுமனே!

    அன்றுமுதல் இன்றுவரை மனிதகுலத்தின் ஒவ்வொரு மனித உயிரும் அங்கீகாரமும், தனக்கு ஏற்ற துணையும் தேடி, இந்த பூமியில் வாடுகின்றது. இதனை அறிந்த தெய்வசக்தி இராமபிரானும் சீதையுமாக அவதரித்தது.கணவனுக்கும் மனைவிக்கும் ஊடாடும் கற்பு நிலை மூலமாக அனுமன் என்கிற மிகச்சிறந்த, பலம் பொருந்திய, துணை சக்தியின்மூலமாக உலகுக்குத் தம்மை அறிவித்தது.அதுவே சுந்தரகாண்டம். கவிச்சக்கரவர்த்தி கம்பர் அருளிய இராமாயணத்தின் அழகிய பாகம் இது எனப் போற்றி, சுந்தரகாண்டம் என்ற பெயர் நிலவிற்று என்பர்.

    அனுமனின் பலம் அளவில்லாதது. அனுமனின் சக்தி நம்மிடமும் உள்ளது என இளைய தலைமுறை நம்புவதற்கேசுந்தரகாண்டம் தமிழின் சொத்தாக கவிச்சக்ரவர்த்தி கம்பன் தமிழர்களிடம் விட்டுச்சென்றான் .

    ஆண்வம்சம் இராமபிரானின் வடிவம். பெண்குலம் கற்பரசி சீதையின் வடிவம். இன்று கலியுகத்தில் இருவரும் இரண்டு முனைகளில், தத்தம் சுய பெருமைகளின் உச்சியில், இரண்டு முனைகளும் பிரிவது அழகல்ல.

    இருவரையும் இணைக்கும் பராக்ரமம் -வலிமை -ஆண்மை -துணிச்சல் -முயற்சி -அலைச்சல் - சோர்விலாமை - தன்னம்பிக்கை - பேச்சாற்றல் - எல்லாம் தாண்டி இராமநாமம் ஒன்றே போதும் என்கிற மனோசக்தி -அனுமனிடம் காணலாம். அவ்வழியில் இந்நூல் இளைஞர்களுக்கான இலக்கியமாகவும் உள்ளது. நம்மிடையே வாழ்ந்த மகாத்மா காந்திஅடிகள் இராமநாமம் ஒன்றினாலேயே ஆன்ம சக்தியைப் பெருக்கி சமுதாயச் சிக்கல்களுக்கு வழி கண்டவர் என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.

    திருமண வரன் தேடி தங்களது பெண்ணுக்கும் பிள்ளைக்கும் அலைந்து தேடுபவர்களுக்கு சுந்தரகாண்டம் மன நிம்மதியும் ஆறுதலும் தடவும் அருமருந்து என்பதும், விரைவில் நல்ல வரன் கூடும் என்பதும் நின்றுலவும் தமிழர் நம்பிக்கை.

    நம்புவதே வழி என்ற மறை தன்னை நாம் இன்று நம்பி விட்டோம் என்பது கம்பன் வாக்கு. அவர்தம் கவிதைவரிகளின் பொருளை,புதுக்கவிதை வடிவில் எழுதியுள்ளேன்.

    மேட்டுக்குப்பம் வாழ் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகளின்வாழையடிவாழை இதழில் இப்படைப்பு தொடராக வெளிவந்து சுவாமிகளின் ஆசி பெற்றது. தயவின் வடிவம்,வள்ளல் பெருமானின் அருள் இரண்டும் மிக்க சுவாமிகளின் அருளைச்சிந்தித்து அனைவருக்கும் நலம் சூழ வேண்டுகிறோம்.

    அடிச்சிறியேன்

    பா.சத்தியமோகன்,

    மார்கழி-2

    17.12.2022

    கடவுள் வாழ்த்து

    காண்பது

    மாலையா? பாம்பா? என்று

    மனதிற்கு திரிபு தருகிறது பிறவி

    மயங்க வைத்து உண்மை மறைப்பது பிறவி

    பஞ்சபூதங்களின் சேர்க்கை இந்தப் பிறவி

    வேறுபாடுகளையே காண்பது இந்தப் பிறவி

    இப்பிறவியால் வீங்கிபோய் விட்டேன் ஐயா

    எந்தவினையும்

    உனது வில்லினைக் கண்டால் கலங்கும் ஐயா

    வேதங்களின் எல்லையே உமக்கு வணக்கம்!

    1. கடல் தாவு படலம்

    மகேந்திர மலை மீது நிற்கிறான் அனுமன்

    தேடுகிறான்

    சிந்தனைக் குதிரை தேடுகிறது இலங்கையை

    நிற்பதோ மகேந்திர மலை உச்சியில்

    இது இலங்கை அல்ல

    தீர்மானிக்கிறான்

    மயில் போன்ற சீதை இங்கே இல்லை-

    பயணம் தொடர்கிறது

    தேடுகிறவர்களின் சிகரம் அனுமனே!

    எது வேண்டும் என்பதையே

    சிந்திக்க வல்ல அனுமனால் மட்டுமே முடிகிறது

    வேண்டாம் இந்த மலை என விலக்கிட!

    மகேந்திர மலை உச்சியிலிருந்து இலங்கை தெரிகிறது

    நகரத்தின் சோலைகள்

    மிகப்பெரும் மதில்கள்

    மாடவீதிகள்

    வந்துவிட்டது குஷி!

    அனுமன் தோள்கள் கொட்டி குதித்தான் -

    வானுலகும் எட்டுத்திசைகளும் நடுங்கிவிட்டன!

    அழிவில்லாதவன் அனுமன்

    மகேந்திர மலையில் குதிக்கிறான்

    என்ன ஆயிற்று!

    நீல நிற மலை அது நொறுங்கியது

    மலை அடிவாரத்திலிருந்த விஷப்பல் பாம்புகள்

    குடல் அமுக்கப்பட்டவன் வாயிலிருந்து

    வெளிவருவதுபோல வெளியேறி ஓடின!

    மலையின் அடிவார குகையில்

    உறங்கிய சிங்கங்கள்

    அனுமன் குதிப்பால் இரத்தம் கக்கி

    குகை உள்ளேயே இறந்தன

    பறவைகளெல்லாம்

    என்ன செய்தி என்று அறியாமல் அலறின

    உலகம் அழியும்போது பொங்கும் கடல் ஒலியும் தாண்டி

    அந்த சத்தம் கேட்டது

    பறவைகள் பறந்தன

    பயந்து பயந்து பறந்தன

    வானத்தின் பரப்பு முழுதும் பறவைகளே நிரம்பின

    வான் பறவை என்பது மாறி

    பறவை வானம் ஆயிற்று!

    மெல்லிய

    பெண்யானைகள் அஞ்சி ஓடின

    வால் உயர்த்தி ஓடி வந்து

    களிறுகளின்

    மேகநிற உடம்பை இறுகத் தழுவின

    காதலால் அல்ல பயத்தினால்!

    ஆண் யானை என்றாலும்

    களிறு என்ற பெயர் கொண்டாலும்

    பயம் வரும்போது-

    ஆண் என்ன! பெண் என்ன!

    செவிகளை அசைத்து அசைத்து

    முதுகுப்பக்கம் அடித்து அடித்து

    காற்றைக் கிளப்பும் களிறுகள்

    பயம் தீராமல்-

    அங்கிருந்த மரங்களை

    துதிக்கையால் இறுகப்பற்றின! சுற்றின!

    ஒளி வீசும் மகேந்திர மலை உச்சியில்

    தீப்பொறி பறக்கிறதே!

    ஆம்! அனுமன் களிப்பும் குதிப்பும்!

    சிகரம் பொடியாகிறதே...

    ஆம்

    சிகரத்துக்கே இப்போது

    முதுகு பிளக்கும் வலி!

    சிறிய குட்டிகளை

    கண்கள் திறக்காத குட்டிகளை

    உடம்பில் முடி முளைக்காத குட்டிகளை

    புலி இனங்கள்

    கவ்விக்கொண்டு ஓடுகின்றன.

    போர்க்களத்தில்

    கால்கள் வெட்டப்பட இருக்கும் நிலையில்

    அதிலிருந்து தப்பி ஓடும் வீரர்கள் போல்

    வானை நோக்கி ஓடினர் -

    மலையில் வசித்த வித்யாதர அரசர்களும்!

    கேடயமும் வாளும் சுமந்த பூச்சி போல் ஆனார்கள்!

    மலை மட்டுமா அழுத்தப் பெற்றது?

    நட்சத்திரங்களும் சூரியனும் அழுந்தின

    சந்திரனும் மேகங்களும் பூமியில் அழுத்தப்பட்டன

    மலையின் மேல் -

    மலை போல் அனுமன் நிற்கும் காட்சி அடடா!

    மலை எனும் பாய்மரக்கப்பலை

    கடல் வெள்ளத்தில்

    அனுமன் செலுத்துவது போல் காட்சியளிக்கிறது.

    அனுமனின் பாத பலத்தால் -

    மலையின் உச்சியில்

    மகா அழுத்தம்!

    அங்குள்ள சுனைநீர்ப் பெருக்குகள் மிதிபட்டன

    காவிக்கற்களில் மோதி சிவப்பானது சுனைநீர்

    சிவப்பு சந்தனக் கட்டைகளாலும் சிவப்பானது.

    குங்குமப்பூக்களும் மகரந்தப்பூக்களும் சிவப்பு

    குலிகம் சிவப்பு

    எல்லாம் கலந்து சுனை நீரும் சிவப்பு

    மகேந்திரமலையின் வயிறு கிழிந்து

    இரத்தம் சொரிகிறதுபோல் உள்ளதே!

    அனுமன் -

    மிதிபட்டு மிதிபட்டு

    கலங்கிய மலை

    இப்போது-

    அனுமனின் குதிப்பினால்

    அன்று பாற்கடல்கலக்கிய மத்துபோல் சுழல்கிறது.

    மகேந்திரமலை -

    இப்போது

    வெடித்தே விட்டது.

    மயில் போன்ற அழகிய மனைவிகள்

    தத்தம் கணவராகிய தேவர்களைத் தழுவும் காட்சி

    இராவணன் கயிலை மலை தூக்கிட

    அஞ்சிய பார்வதி தழுவிய சிவபெருமானுக்கு நிகர்த்தது!

    தேவமகளிர்

    முதலில் -

    கணவரிடம் ஊடல் கொண்டது

    மது அருந்திய மயக்கத்தாலும்

    கணவர் செய்த பிழையாலும்.

    இப்போது -

    தேவமகளிர் அச்சம் அடையக் காரணம் -

    மலையில் ஏற்படும் அதிர்ச்சியால்!

    அதிர்ச்சியும் பயமும் அவர்களை

    தத்தம் கணவரைத் தழுவிக் கொண்டே

    வானம் செல்ல வைத்தன

    செல்லும்போது

    அந்த மென்மனங்கள் நினைத்துக் கொண்டன -

    மலையிலேயே பைங்கிளிகளை விட்டுவிட்டோமே!

    காலூன்றிய அனுமனால்

    இத்தனை விளைவுகள் கண்டனர்

    தேவர்களும் முனிவர்களும்

    மூவுலகச் சான்றோர்களும் விரைந்து மொய்த்தனர்

    மலர்க்கொத்து

    மணம் வீசும் பொடிகள் மணிகள் தூவினர்

    வித்தகனே சென்று வருக என்றனர்

    விரைந்தான் அனுமன் -

    விரைவு வேறு அனுமன் வேறல்ல எனப்படும் அனுமன்!

    அனுமனின் துணைவர்கள்

    அப்போது ஒரு வார்த்தை சொல்லினர்:-

    "மலை போன்ற வெற்றித் தோள் உனக்கு

    வெற்றி மாலை உனக்கே உனக்கு

    எனினும்

    அகத்தியர் தாண்டிய கடல்

    நம் வலிமைக்கு மிகவும் எளிய கடல் என இகழாமல்

    கருத்துடன் பயணம் புரிக"

    மனதை ஒருமைப்படுத்தி

    ஒப்புக் கொண்டான் அனுமன் எனும் சத்தியசீலன்!

    "அனுமனின் மிகப் பெரும் உருவம்

    இலங்கைக்கும் அப்பால் செல்லும்"

    விண்ணவர் கணிப்பும் வியப்பும் இப்படி!

    கடல் தாண்ட முடிவு செய்து

    முன்புறம் சாய்ந்து

    கால்களை அழுத்த

    அனுமன் திருவடியால்

    மகேந்திரமலை அழுந்திப் போனது பூமியும் அழுந்தியது

    வாலை உயர்த்தி

    வலிமையான கால்கள் மடக்கி

    மார்பை குறுக்கி

    பெருமையான தோள்கள் பொங்கிட

    தோள்கள் பூரிக்க

    கழுத்தினைச் சுருக்கிக் கொண்டான்

    காற்றின் விரைவைக் கொண்ட கைகள் நீட்டினான்

    அனுமனின் தலை பிரம்மலோகம் அளாவியது

    மற்றவர் கண்கள் காண முடியா உயரத்தில்

    இப்போது

    வேகமுடன் தாவுகிறான் அனுமன்.

    அனுமனின் அந்த எழுச்சி

    பெரிய மரங்களை

    வான் நோக்கி எழுப்பியது

    ஓங்கிய மலைப்பாறைகளை பறக்கவிடுகின்றது

    வெல்லும் வேழங்களை எழுப்பியது

    இராம நாயகன் பணி இது என எண்ணி -

    அனுமனுடன் அவையும் பறப்பது போல

    யானைகளும் வானில் பறந்தன! படர்ந்தன!

    "வாழ்வில் ஒருவர் உயரும் வேகமும் எழுச்சியும்கண்டு

    நாமும் அவருடன் சேர்ந்து உயர்ந்துவிடலாம்"

    எனும் நினைப்பு தவறு என்பதை உணர்த்துவது போல

    அனுமன் தாவிச் செல்லும் வேகமுடன்

    உயரே புறப்பட்டு எழுந்தன

    பாறைகள் - பச்சை மரங்கள்- பசுக்கள்-

    பல்வகை உயிர்கள்!

    அனைத்தும் தெற்குத் திசை சென்று உயர்ந்தன

    ஆனால் அவை குறிக்கோள் இல்லாமையால்

    கடலில் வீழ்ந்தன!

    எண்ணவியலா எண்ணிக்கையில்

    அனுமனுடன் எழுந்த பாறைகள்

    பச்சை மரங்கள்

    பலவகை உயிர்கள்

    ஒரே நேரத்தில் கடலில் விழுந்து

    அதனால் தூர்ந்து விட்டது கடல்!

    அப்போது எழுந்த கடலின் அலைகள்

    வேதங்கள் போன்ற இராமன்

    சீற்றம் கொள்வதற்கு

    முந்தைய நிலை போலிருந்தன!

    முன் அறிவிப்பு!

    அனுமன் செல்லும் வேகத்தால் கடல் கிழிறது

    அதனால்

    நாகர்கள் வாழும் பாதாள உலகமே தெரிகிறது

    நாக மாணிக்கங்கள் மின்னின

    நாகங்களில் சிறந்த நாகலோகம் காணும் தவம் செய்தேன்

    என கருதிக் கொண்டான் அனுமன்.

    கடலில் வாழும் நாகர்கள்

    கருடர்களின் மிகப்பெரிய சிறகுகள் மட்டுமே

    கடலைப் பிளக்கும் என அறிந்திருந்தனர்

    இப்போது -

    அனுமனின் வலிமை கண்டு

    கருடர்களே கலங்கிப் போனார்கள்

    இனி நாம் பிழைப்பது உறுதியில்லை என ஓடினர்.

    அனுமனின் தாவுதல் -

    ஊழிக்காற்றின் வேகத்தோடு மோதியதால்

    கடலில் உண்டான அலைகள்

    அனுமனுக்கு முன்னரே பயணித்து இலங்கையில் மோதின

    கடலில் துள்ளிய மீன்களும் முதலைகளும்

    சுறாமீன்களும் அடங்கின

    வேதனையில் தத்தளித்தன.

    இந்த உலகை

    எட்டுத்திசைகளிலும் தாங்கும் எட்டு யானைகள்

    அனுமனின் வேகம் கண்டு நடுங்கின

    உலகின் பொருட்கள் நடுங்கின

    அதுமட்டுமல்ல -

    இராமதூதனின் வேகம் இப்போது அதிகரிக்கிறது

    ஆதிசேஷனோடு முன்பு போர் செய்தபோது

    மேருமலையின் மூன்று சிகரங்கள் ஒடிந்தன

    அப்போது

    திரிகூட மலை பறந்து சென்று

    தென்கடலில் விழுந்தது

    அந்த மலையின் வேகத்திற்கு சமம் -

    தற்போது அனுமனின் வேகம்!

    உச்சை சிரவம் எனும் வெள்ளைக்குதிரை!

    கூரிய வச்சிராயுதம்!

    இரண்டும் கொண்ட தேவேந்திரனாலும்

    கண்களால் காண முடியா வேகம்!

    பூமியும் கடலும்

    அனுமனின் கால்களின் கீழே அடங்கும்படி

    அண்டம் கடந்த வேகம்

    எப்படியிருக்கிறதெனில் -

    இலங்கை நோக்கிய

    தனித்துவமான

    புஷ்பக விமானம் போல உள்ளது!

    அனுமனின் விரைவு பயணம் கண்டு

    தேவர்கள் துதித்தனர்

    வேத முனிவர் வியந்து வாழ்த்தினர்

    மண் உலகினர் வணங்கினர்

    அனுமனது மனதிலோ -

    அறச்சீற்றம் இருந்தது

    "அரக்கர் தலைவன் இராவணனை

    இன்னமும் அமுக்க வேண்டும்" என்று கயிலாய மலை

    சிவபெருமானை விட்டுப் புறப்பட்டது போன்ற மனநிலையே

    இப்போது அனுமன் மனநிலை.

    அனுமன் -

    ஒரு பிரம்மச்சாரி

    அனுமன் -

    பிரம்மனை விடவும் அறிவில் மிக்கான்

    அனுமன் -

    உலகுக்கு அச்சாக நிற்கும்

    அறம் தழைக்கச் செய்பவன்

    அத்தகைய அனுமன் எனும் மேருமலை

    நீண்ட நாளாய்ப் பிரிந்துள்ள

    மகன் என்னும்

    திரிகூட மலையை

    சந்திக்க விரைவது போல உள்ளதே!

    தந்தைக்கு ஒத்த வேகம்

    தனயனுக்கு வருவதில்லை ஒத்திருப்பதில்லை

    அனுமனோ

    தன் தந்தை வாயுதேவனுக்கே சமம் ஆனான்.

    ஆம்-

    அனுமன் வேகத்தால்

    நட்சத்திரங்கள் உதிர்ந்தன

    மேகம் கிழிந்தது! கடல் பொங்கிற்று

    வானம் குழைந்தது திசைகள் வெடித்தன

    மேருமலை நடுங்கியது.

    எவன் ஒருவனுக்கு

    தனது தவப்பயன் தீர்கிறதோ

    அவன் அழிவான்!

    இதற்கு நிரூபணம் இராவணனே!

    அவன் அழிவைத் தடுக்க -

    இருபது கரங்களலும் இயலாது

    பத்துத் தலைகளாலும் இயலாது

    இதற்கு அறிகுறி ஒன்று நடக்கிறது

    அன்று

    கிழக்கில் எழுந்து சூரியன் மேற்கில் மறையவில்லை

    அனுமன் என்ற சூரியனாகி

    வடக்கில் உதித்தது! ஆம்!

    தெற்கில் உள்ள இலங்கை நோக்கி செல்கிறது!

    அரண்டு மிரண்ட

    பாவத் தொழில் புரியும் அரக்கர்களுக்கு

    இலங்கை நகர் விட்டு

    வெளியேற முடியவில்லை

    தனியே வாழவும் முடியவில்லை

    இராமனே துணை என்றனர்

    இராமனின் கரங்களில் உள்ள அறச்சக்கரமாகிய

    அனுமனைக் கண்டனர்.

    அனுமனின் உடல் -

    முழு நிலவாகி

    இருளை அழித்தது

    மகா மேரு மலையும்

    வெட்கப்படும்படி பறக்கிறான் அனுமன்

    பெருந்தீ -

    கடல் சூழ்ந்த உலகம் முழுதையும் அழிக்கின்ற

    யுகத்தின் முடிவு நாளில்

    வட திசையில் தோன்றும் பவுர்ணமி நிலவு ஒத்துள்ளான் அனுமன்

    சக்ரதாரியான திருமாலுக்கு

    தன் வலிமை முழுதும் காட்டியதில்லை கருடன்

    எனினும்

    தேவர்களுக்கு புரிய வைக்க

    அசுரர் குடல்கள் சரித்தான் ஒருநாள்

    மலைகளைப் பொடி செய்து

    ஏழு கடல்களையும் நிலைகுலையச் செய்தான் ஒருநாள்

    அடடா! அனுமனின் பலம் -

    இப்போது பெரிய திருவடியான

    கருடனையும் ஒத்திருக்கிறது

    தேவர்களின் உலகையே

    திருமால் -

    அன்று

    காலினால் அளந்தான்

    வான்முகடும்

    ஏழு உலகங்களும் அஞ்சிட

    அனுமன் கடக்கிறான்

    "எமனது பாசக்கயிறு போல்

    அனுமனது வால் அளக்கிறது"

    என்று தேவர்கள் திகைத்தனர்.

    சிலிர்த்துப்புறப்பட்டான் அனுமன்

    அனுமனது வாலும் புறப்பட்டது!

    இராமனின் கருணை அறமும்

    அனுமனைத் தொடரும் அல்லவா

    அதுபோல் -

    அனுமன் வால் தொடர்கிறது

    அதுமட்டுமா

    "இழி தொழில் அரக்கர்கள்

    பார்க்க நேரலாம்" என

    ஒளிந்து ஒளிந்து

    வானில் செல்கிறது வால் -

    எமனது பாசக்கயிறு போல்!

    அன்று -

    மேருமலைலைச் சுற்றியிருந்தது

    ஆதிசேஷன்!

    திருமால் ஆணையினால்

    கருடன் வந்து சேர்ந்ததும்

    தளர்ச்சி அடைந்தது ஆதிசேஷன்!

    மலையை இறுக்கிப் பிடித்து

    ஆதிசேஷன்

    தளர்ச்சி செய்தது போல

    அனுமனது வால் இப்போது உள்ளது!

    அனுமனின்

    மலைத்தோள்களாம் வெற்றித் தோள்கள் பறக்கும்போது

    உண்டான காற்று வீசி

    தேவர்கள் செல்லும் விமானங்களில் மோதியது

    அதனால்

    தமக்குள் மோதிக்கொண்ட விமானங்கள்

    உடைந்து கடலில் வீழ்ந்தன.

    கடல் தாவும் அனுமனின் வேகம்

    வச்சிராயுதம் தாங்கிய

    இந்திரனையே கவலை அடைய வைத்தது

    அதிகரிக்கும் அனுமனின் வேகம்-

    இலங்கையும் தாண்டுமே என எண்ணி

    இலங்கைக்கு அப்பாலுள்ள நாடுகள் விலகி ஓடின.

    பல யோசனை தூரம் நீளமுடைய

    அனுமனின் உடம்பு உற்பத்தி செய்த காற்று

    திசை முழுதும் பரவிய கடலை

    கலங்க வைத்தது மீன்கள் இறந்தன

    திமிங்கலத்தையே உண்ணும் திமிங்கிலகிலங்கள்

    இறந்தன செத்து மிதந்தன.

    அனுமனின் கைகள்

    வேகம் தந்தன

    தளராமல் நிமிர்ந்துள்ளன

    அனுமனின் கைகளை

    அனுமனின் கைகளோடுதான் ஒப்பிட வேண்டும்.

    அந்தக் கைகள் எப்படி உள்ளன?

    அருங்குண வள்ளல் இராமன்

    உயிர்த்தம்பி இலக்குவன்

    அனுமனுக்கு இருபுறமும்

    முன்னே செல்வது போல் உள்ளன!

    கிழக்குத்திசையை தாங்கி நிற்கும்

    ஐராவதம் எனும் யானை

    பாற்கடல் கடைந்தபோது உண்டானது போல

    மைந்நாகம் எனும் மலை உண்டானது

    வானைத் தொடுவது போல

    கடலின் நடுவே உண்டானது

    அனுமனின் பாதையை மறித்தது!

    செம்பொன் மயமான ஆயிரம் சிகரங்கள்

    மின்னிட வந்தது மைந்நாக மலை!

    ஓயாத அருவித் தொகுதிகளை

    மேலாடை என அணிந்திருந்தது மைந்நாகமலை!

    திருமாலே-

    இராவணன் போன்ற தீயோரைத் தீர்க்க

    மீன்கள் நிறைந்த கடலிலிருந்து எழுந்ததுபோல

    மறித்து நின்றது மைந்நாகமலை!

    ஞானநூல்களின் கருத்துகளை அறிந்து கற்காமல்

    ஐம்புலன் காட்சிகளில் மூழ்கியோரை

    முதலில் தாங்கிய பூமாதேவி

    பிறகு -

    வலிதாளாமல் விலகியதால்

    கடலில் மூழ்கிப் போனாள்

    ஆமை வடிவம் தாங்கி

    கூர்ம அவதாரம் கொண்டு

    பூமியைத் தாங்கினான் திருமால்

    அப்போது-

    மந்தரமலை மீண்டும் மலையாக உயர்ந்ததே

    அது போல் நிற்கிறது இப்போது உண்டான மைந்நாகமலை.

    மைந்நாக மலையின்

    வளர்ச்சியும் அதிகமே

    கடலைக் கிழித்து

    பாதாள லோகம் வரை பறந்து

    அமுதம் கவர்ந்து மீண்டும் அங்கிருந்து

    அழகிய நிறமுடன் கருடன் மேலெழுந்து விரைவு போல்

    மைந்நாகமலை வானைத்தொட வளர்கிறது!

    திருமாலே-

    எல்லா உலகமும் படைப்பவன்

    அழிப்பவனும் அவனே

    ஒருவராலும் உணர முடியாதவன் அவனே

    அவனது அருளாலே

    நெடுநீரிலே

    மூன்று உலகங்களும் தோன்றின

    பிரம்மனும் தோன்றினான்

    பிரம்மனைப் பெற்ற

    பொன்மயமான அண்டம் போல

    மைந்நாக மலை வளர்ந்தது! வானைத் தொட்டது!

    திருமால் படைத்த நீரினுள்

    பிரம்மன் மூழ்கித் தவம் இருந்தான்

    "இந்நீரில் என்னைப்படைந்த

    என் தந்தையாகிய திருமாலை

    நான் காணாமல்

    என் பணி தொடங்கமாட்டேன்"

    என்று தன் தவம் முடித்து

    நீரிலிருந்து பிரம்மன் எழுந்தது போல்

    மைந்நாக மலை

    வானைத் தொட எழுந்தது!

    இலக்குமியின் மலர்மாலையால்

    இந்திரன் பவனி வந்தான்

    அப்போது நேர்ந்தது தீயசெயல்

    பொறுக்க முடியாமல் சபித்தார் துர்வாசர்

    அதனால் எல்லாமும் கடலில் மூழ்கி மறைந்தன

    மீட்பதற்கு திருமால் முயற்சித்தார்

    அசுரர்களும் தேவர்களும் கடைந்த

    திருபாற்கடலிலிருந்து

    எழுந்த சந்திரன் போல

    மைந்நாக மலை -

    வானைத் தொட எழுந்தது

    செம்பொன் பொருந்திய சிகரங்கள்-

    ஒருபுறம் குங்குமப்பூ போல் உள்ளன

    ஒருபுறம் பவளக்கொடி சுற்றியுள்ளன

    ஒருபுறம் நீலநிறமாய் உள்ளன

    பெண் துணையுடன் தூங்கிய சுறாமீன்கள்

    உறக்கம் கலைந்து

    பெருமூச்சுடன் உலவும்படி

    மைந்நாக மலை வளர்கிறது

    வளைந்த

    கர்ப்பம் முதிர்ந்த முத்துச்சிப்பிகள்

    ஒலித்தன.

    அடர்த்தியான பாசிகள்

    வானைச் சூழ்ந்த மேகங்கள் போலத் திகழ்ந்தன

    பளிங்குப் பாறைகளில்

    பெரிய முத்துக்களைப் பிரசவிக்கும் சங்கு

    அழகிய நட்சத்திரங்கள் சூழ்ந்த

    நிலவின் பெருமையைப் பரிகாசம் செய்யும்படி

    மைந்நாக மலை

    வானைத் தொட வளர்கிறது.

    ஒன்றல்ல

    இரண்டல்ல

    ஆயிரமல்ல

    பல்லாயிர மணிவகைகள்

    பக்கமெல்லாம்

    கைகள் போலத் தோன்றின

    அதனால் -

    கடலில் முத்துக் குளிப்பவன்போல்

    வளரும் மைந்நாக மலை தெரிகிறது.

    Enjoying the preview?
    Page 1 of 1