Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Udanai Nirkindraan
Udanai Nirkindraan
Udanai Nirkindraan
Ebook366 pages2 hours

Udanai Nirkindraan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருவாசகத் தொடர்புடைய கட்டுரைகள் எழுதப்பட்டு மலர்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகப் பெருமான் மீது அளவற்ற காதல் கொண்டு, ஊனாய், உயிராய், உணர்வாய்க் கலந்த பெருமான், உடையனாய் விளங்குதலின் சைவ உலகிற்கு சிவமணம் வீசும் தெய்வத் திருநூலாக எவ்வாறு உருவாக்கி உள்ளார். என்பதையும் "உடனாய் நிற்கிறான்" என்ற தலைப்பில் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலினை ஆக்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடையலாம்.

Languageதமிழ்
Release dateApr 1, 2023
ISBN6580156008918
Udanai Nirkindraan

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Udanai Nirkindraan

Related ebooks

Reviews for Udanai Nirkindraan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Udanai Nirkindraan - Edaimaruthour Ki Manjula

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    உடனாய் நிற்கின்றான்

    Udanai Nirkindraan

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆதினம் (வாழ்த்துரை)

    சிறப்புரை

    என்னுரை அல்ல... அவனுரை...!

    குரு காணிக்கை

    1. ஆடல்வல்லான்

    2. முக்கண் முதல்வன்

    3. அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்

    4. ஞானம் ஈசன்பால் அன்பு

    5. திருமுறைச் சிறப்புகள்

    6. இன்பமும் அன்பும்

    7. அழுதால் உன்னைப் பெறலாமே...

    8. கோயில் சுடுகாடு

    9. சிலம்பொலி வழியே சிற்றம்பலவன் வழிபாடு

    10. ஆசைப்பட்டேன்...

    11. திருக்கயிலாயம் செல்ல நான்கே படிகள்

    12. ஆன்மீகம் என்றால்...?

    13. வாழு(டு)ம் வகை

    14. விரதம் இருப்பது அவசியமா?

    15. வேள்வி எதற்கு?

    16. முக்குண விளக்கம்

    17. ஞானிகள் ஏன் கோவணம் அணிகிறார்கள்...?

    18. ‘உயிர் செகுத்து உண்ணாமை நன்று’!

    19. சினம் காக்க!

    20. தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்

    21. சிறு தெய்வம் ஏத்தாதே...!

    22. முட்டையா? கோழியா? எது முதலில்?

    23. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

    24. மாங்கனி அற்புதம்

    25. திருப்பொன்னூசல்

    26. சிவபெருமான் எழுதும் பட்டோலை!

    27. பேரின்பப் பெருஞ்சொல்

    28. விழுங்கினேன்; விக்கினேன்!

    29. வாசகமும் வாச்சியமும்

    30. உடனாய் நிற்கின்றான்

    உதவிய நூல்கள்

    குறியீட்டுச் சொல் அகராதி

    ஆசிரியரது பிற படைப்புகள்

    ஆதினம் (வாழ்த்துரை)

    Description: உடன்

    நாள்: 04/04/109

    அருள் வாழ்த்துரை

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

    இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள்வாழ்க

    கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க

    நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

    நமச்சி வாயவே நானறி விச்சையும்

    நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

    நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே

    - அப்பர் தேவாரம்.

    உடனாய் நிற்கிறான் என்ற தலைப்பில் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்கள் ஒரு கட்டுரைத் தொகுப்பு நூலினை ஆக்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

    சைவ சமயத்தின் பல்வேறு கூறுகளையும் மிகுந்த ஈடுபாட்டுடன் நூல் ஆசிரியர் விளக்கியிருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது. பல்வேறு இதழ்களிலும் வெளிவந்துள்ள கட்டுரைகள் ஒரே நூலில் இடம்பெற்றுத் திகழ்தல் வாசகர்களுக்குப் பயன்தரும் முறையில் அமையும்.

    சைவத்துறையில் கல்வியறிவினைப் பெருக்கியிருப்பதோடு உணர்வு பூர்வமாகச் சிவநேயத்தினையும் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்கள் பெருக்கியுள்ளார் அவர்தம் பணிகள் மேன்மேலும் சிறப்புற்றுத்திகழ வேண்டுமென நமது வழிபடு கடவுளாகிய அருள்மிகு ஞானப்பெருங்கூத்தன் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகிறோம்.

    சிவ. கி. மஞ்சுளா, அவர்கள்

    தினமணி Sub Editor,

    4/1254, 4th Block,

    முகப்பேர் மேற்கு,

    சென்னை 600 037.

    Description: u1

    சிறப்புரை

    "என்னால் அறியாப் பாதம்தந்தாய்!

    யான் அது அறியாதே கெட்டேன்!

    உன்னால் ஒன்றும் குறைவு இல்லை!

    உடையாய்! அடிமைக்கு ஆர் என்பேன்;

    பல்நாள் உன்னைப் பணிந்து ஏத்தும்

    பழைய அடியரொடும் கூடாது,

    என் நாயகமே! பிற்பட்டு இங்கு

    இருந்தேன்! நோய்க்கு விருந்தாயே!"

    (ஆனந்த மாலை பா 2)

    ஆடல்வல்லானின் அற்புத அருட்களஞ்சியம் திருவாசகம். ஆளுடைய அடிகள் சிவபாத்தியனாய்ப் பிறந்து, தென்னவன் பிரமராயனாய் உயர்ந்து, திருப்பெருந்துறைக் குருந்தம் மேய குருமணியாய் ஆட்கொள்ளப் பெற்று அறிவாற் சிவமே ஆனவர்.

    அவர் சிவனடிக் கீழ் இருந்து சொல்லிய திருப்பாட்டு சிவபுராணம். பரம்பொருள் அவர் உளமே புகுந்து, சிவமாக்கி, வினைக்கட்பொழித்து பாடச்செய்தது. சிவனது காலாதீதப் பழைமையினை, அநாதி காலமாக உயிட்கட்கு இரங்கியருளும் பெருஞ்சீரினை, தேன் பிலிற்றும் செழிய மாணிக்கச் சொற்களால் தெரிவிப்பது. பொருளுணர்ந்து கலந்து பாடுவோர் அதன் வண்ணத்தராய் சிவனடிக்கீழ், சிவனருட் செல்வராய், உருத்திர பல்கணத்தார். சிவகணநாதரி, யோகியர் மற்றும் பிரமன், திருமால் இந்திராதி தேவர் யாவரும் வணங்கித் துதிக்கும் பெருநிலை எய்துவர் என்பது பெறலரும். திருக்கடைக்காப்புச் செய்தியால் அடிகள் அருளுகின்றார். பரம்பொருள்தன், தனிப்பெருங்கருணை காரணமாக, கலியினால் உயிர்கள் படும் துன்பம் நீங்கி. உடன் தோன்றிய ஆணவமல வலி தொலைந்து, ஆன்ம, மாயாமல் அழுக்குகளும் அகன்று, சிவப்பேறுற்ற பெருநிலையில் சிவபோகம் துய்ப்பான் வேண்டி ஆளுடைய அடிகளை நிலவுலகில் தம்மின் நீக்கி பிறக்குமாறு செய்தருளினார்.

    பிற பக்குவ உயிர்களை அதிட்டித்துக் குருவாய் வந்து அருட்கொடை வழங்காமல், தாமே ஓர் அந்தணக்கோலம் பூண்டு, திருப்பெருந்துறையில் குருந்தின்கீழ் கோலமும் காட்டி, குருமணியாய் அடியார் குழாத்துடன் எழுந்தருளிக் காத்திருந்தார். அடிகளை ஈர்த்து கொண்டு பலவகையான அருட்கொடைகளை வழங்கி, பல நாட்கள் உடனாய் இருந்து, அடிகள் அருளிய வாசகத்தேனைச் செவிமடுத்து, அடிகள் சென்ற தலங்களிலும் பழைய அருட்கோலக் காட்சியினை நல்கியருளினார்.

    மிண்டர்களாய்த் தில்லைக்குப் படையெடுத்த புத்தபிக்குகளின் துள்ளல்களை அடக்க அவர்களை ஊமையாக்கி, பிறவி ஊமையாயிருந்த ஈழத்து அரசிளங்குமரியைப் பேசவைத்து, மிண்டர்கள் எழுப்பிய தடைக்கட்கெல்லாம் விடை கூறுமாபோல் ஊமைப்பெண் பதிலுரை அமையச் செய்தருளினார். புத்தபிக்குகள் அடிகள் அருளாற்றலை வியந்து போற்றி சைவ சமயத்தைத் தழுவினார்கள்.

    அடிகளின் அவனித்தலப் பயணம் முடிவுறுதலைக் கண்ட பரமன், உருக்காந்து ஓர் அந்தணன் வடிவில் வந்து அடிகளை வியந்து போற்றி, மீண்டும் திருவாசகச் செழுமாமறையினை ஓதச்செய்தார். தம் திருக்கரத்தால் வாசகமணியின் மணிவார்த்தைகள் அனைத்தையும் எழுதியபின், அகத்துறையின் அடித்தளமாய் இருப்பது சிவஞானச் செவ்வியே எனக்காட்ட, அடிகளைத் திருக்கோவையிருமாறு வேண்ட, திருச்சிற்றம்பலக் கோவையாராக அடிகள் அருளவும் அதனையும் அவ்வந்தணர் எழுதி முடித்துத் தம்கைச் சாத்துமிட்டு விடைபெற்று, அழகிய திருச்சிற்றம்பலப் படியில் எழுதிய ஏடுகளை வைத்தருளினார். தமிழ் செய் தவம் அளக்கற்பாலதோ?

    இனி ‘உடனாய் நிற்கின்றான்’ என்னும் நூலோடு உடனாவோம். சைவசித்தாந்தச் செந்நெறி உணர்த்தும் தலையாய செய்தி, பரம்பொருள் யாவற்றுள்ளும், எஞ்ஞான்றும் ஒன்றாய், உடனாய், வேறாய் நிற்கின்றான் என்பதும், அவற்றுள்ளும் உடனாய் நிற்கும் நிலை உயிர்ப்பானது, உய்த்துணர வேண்டியது என்றும் கூறுவர். பரமனருளை, ‘காட்டும் கருணை, காணும் கருணை’ இருவகைப்படுத்துவர். பரமன் உயிருடன் பிரிதலின்றி ‘உடனாய் நிற்பது’ காணும் கருணையே! கண்காணுமாறு உள் உயிர் உடனாய் நின்று உதவுவதுபோல், உயிர்க்குயிராய் பிரியாது நிற்கும் பரமனும் உயிரோடு ஒன்றி, உடனாய் நின்று தானும் கண்டு காட்டியருளும் திருவருட் கீர்த்தியினை, நுண்ணிதாய் உணர்ந்து, உணர்த்தும் பாங்கு போற்றுதற்குரியது. அம்மையாரின் கட்டுரைத் தொகுப்பு சிவப்பேரின்பத்திர்க்கோர் விருந்து.

    அம்மையார் கூற்றுப்படியே தம் குழந்தைப் பருவத்தே இடைமருதூர் (திருவிடைமருதூர்)க் கோயிலில் ஓடி விளையாடி, சிவனருட் சீரினைக் குதலை மொழியால் சிதறிய நிலை ஓங்கி உயர்ந்து நின்று அரிய பல, கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் திருவாசகத் தொடர்புள்ள கட்டுரைகளாக மலர்ந்துள்ளன.

    அடிகள் பெருமானார். இடைமருதை, ‘அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவி’ என்று போற்றுவார். ஆனந்தத்தேன் பொதிகளும் பொந்து சிதறிய துளிகளுள் ஒன்று அம்மையார் உளமே புகுந்து பெருகிப் பெருகிப் பெருவெள்ளமாய் மாணிக்கவாசகப் பெருமான் ஆன்மநாயகராகி, அப்பெருமானே வியக்குமளவு பணி செய்து மகிழ்கின்றார். யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீர் படைத்த பெருமான், அம்மையார் ‘பேரிளம் பெண்’ பருவமுற்ற நிலையிலும் அதற்கொப்ப அவர் உள்ளத் துய்ப்பிலும் பெருக அருள் புரிந்தார் எனலாம். பிறந்து மொழிபயிலும் நிலையிலேயே காதல் சிறந்து சேவடி சேர்ந்த காரைக்கால் அம்மை சாயலாக இந்த அம்மையாரும் மணிவாசகப் பெருமான் மீது நேராக்காதல் கொண்டுத் தம் ஊனாய், உயிராய், உணர்வாய்க் கலந்த பெருமான், உத்தமனாய், அத்தனாய், உடையானாய் விளங்குதலின் சைவ உலகிற்குச் சிவமணமே வீசும் தெய்வத் திருநூல்களை வழங்குகின்றார்கள்.

    இந்நூளுள் சற்று நுழைந்து பார்ப்போம். அம்மையார் ‘கோவணப் பெருமை’யைப் பற்றிய விளக்கம் ஒரு புதுமை. மேலும் அவர்கள் கோழியை விடவில்லை, முட்டையையும் விட்டு விடவில்லை. அவற்றிற்குத் தரும் பரிணாம விளக்கம் ஓர் ஆய்வு எனலாம். மற்றும் அன்று பரமதத்தன் அம்மையார் வேண்டிப் பெற்ற அருட்கனியாம் மாங்கனி சுவைத்திடும் பேறு பெற்றான். ஆனால் நம் அன்னையாரோ முக்கனிகளுள் தலையாய மாங்கனிகள் ஐந்தினைச் செழுமையாய் வரிசைப்படுத்தி நம்மைச் சுவைக்க வைக்கின்றார்கள். ஐந்தும் அற்புத மாங்கனிகளே ஐந்தெழுத்துப் பெருமானுடன் அணைவிக்கும் பெற்றியனவே!

    அன்னையார் இராமாபுரம் அருள் தரும் மாணிக்கவாசகர் மன்றத்தோடு தொடர்பு கொண்ட நாள்முதலே அம்மன்றம் சீரிய பணிகளால் ஓங்கி வளர உதவி வருகின்றார்கள்.

    சைவத்தமிழ் பல்கலைபோல் வளர்த்திடும் அம்மையார், நீடிய நல்வாழ்வுடன் எல்லா வளங்களும் இனிதமைந்து. பத்தித்துறைக்கோர் இமயப் பேரிலக்கியமாய்த் திகழும் திருவாசகத்தேனால் அமைந்த தெள்ளமுதமயமான ஆய்வுகட்கு விளைநிலமாய்த் திகழ்ந்து பார்போற்ற விளங்குவாராக என அன்பருடன் இணைந்து இறைஞ்சுகின்றோம்.

    நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக!

    மன்ற அமைப்புச் செயலர் இரா.கி. சச்சிதானந்தம்.

    அருள்தரும் மாணிக்கவாசகர் மன்றம் - இராமாபுரம்

    காவேரிப்பாக்கம் (வழி)

    வேலூர் மாவட்டம்.

    12.08.2009

    சிவாயசிவ

    திருச்சிற்றம்பலம்

    மணிவாசகர் மலரடி வாழ்க!

    என்னுரை அல்ல... அவனுரை...!

    "அறவையேன்! மனமே! கோயிலாக் கொண்டுஆண்டு,

    அளவிலா ஆனந்தம் அருளி,

    பிறவிவேர் அறுத்து, என் குடிமுழுதாண்ட

    பிஞ்ஞகா! பெரிய எம்பொருளே!

    திறவிலே கண்ட காட்சியே! அடியேன்

    செல்வமே! சிவபெருமானே!

    இறவிலே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்!

    எங்கு எழுந்தருளுவது இனியே?"

    இந்த பூமி மிகப்பெரியது. சூரியன் பூமியின் பதின்மூன்று லட்சம் மடங்கு பெரியது. சூரியனிலும் பெரிய எண்ணில்லாத நட்சத்திரங்கள், ஆகாயத்தில் விளங்குகின்றன. இவை பூத அண்டங்களைச் சேர்ந்தவை. பூதங்களுக்கு மேலான தத்துவங்களால் ஆக்கப்பட்டவை. இவைகளிலும் மிக அதிகமானவை. இவைகள் எல்லாம் ஒருங்கே சேர்ந்தாலும் சிவபெருமானின் முன்னே அணு அளவாகவும் நிற்க மாட்டா.

    நிறைவினாலும், அறிதற்கு அருமையினாலும், மிகுந்த அருளினாலும், ஒருவரால் பெறுதற்கு அருமையினாலும், சிவபெருமான் தனக்கு ஒப்பில்லாதவராக விளங்குகிறான் என்பதை.

    "பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின்

    அருமைக்கும் ஒப்பு இன்மை யான்"

    என சைவசித்தாந்த நூலான ‘திருவருட்பயனில்’ (பா.2) உமாபதிசிவம் அருளிச் செய்துள்ளார். இதிலிருந்து (இப்பாட்டிலிருந்து) சிவபெருமான் எவ்வளவு பெரியவன்; உயர்ந்தவன்; சிறந்தவன் என்பதை அறிய முடிகிறது.

    அப்படிப்பட்ட கிடைத்தற்கரிய அப்பரம்பொருளாம் சிவபெருமானின் அருட்கொடையால் உதித்ததுதான் இந்நூலில் உள்ள கட்டுரைகள்.

    அவனை மனதால் ‘கட்டிக்’ கொண்டவர்க்கு அவனைப்பற்றிக் ‘கட்டு’ உரைத்தல் என்பது எளிதானதே! ஆனால் அப்பரம்பொருள் அடியார்களை, அடித்து அடித்து அக்காரம் தீட்டிய பின்புதான் தன் திருவருளைக் காட்டியருளுவான்.

    நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதனிடம் நள்ளிரவு ஒன்றில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பேரில், அவனைப்பற்றிய கட்டுரை ஒன்றை என்னை முதன் முதலாக (ஆடல்வல்லான்) எழுத வைத்தான். அதற்கு முதல் பரிசையும், பொற்கிழியையும் அவனே பெற்றுக் கொண்டான்.

    பேதையாக இருந்தபோது அவன் திருக்கோயில்களையே விளையாட்டுத் திடலாகப் பயன்படுத்திய என்னை, பேரிளம் பெண்ணாக்கி, அவனது பேரருட்காகவும், பேரின்பத்திற்காகவும், ஏங்க வைத்த ஏக்கங்களின் துடிப்புகள்தான் இந்நூலில் உள்ள எழுத்துக்கள்!

    கையில் எழுதுகோலை அவன் எடுத்துவிட்டால், அதை தடுப்பவர் யார், மறுப்பவர்தான் யார்? திருவாசகம் எழுதிய பொற்கரங்களாயிற்றே...? மக்களின் மன வாசகத்தைக் கடக்கச்செய்ய அப்பெரிய பரம்பொருளால் இயலாதா என்ன?

    என்னால் இதை எழுத முடியவில்லையே... இதை எப்படி முடிக்கப் போகிறேன்? என ‘யான், எனது’ என்று என்னையே முன்னிலைப்படுத்தி கூறிக்கொண்டிருந்த வேளையில், அவனது மறைப்பாற்றல் அருளாற்றலாக மாறி, "என்னை மறந்து உன்னை முன்னிலைப்படுத்துகிறாயே ! பேரிளம் பெண்ணாகியும் இன்னும் பேதையாகவே இருக்கிறாயே! என் கண் அசைவில் இந்த உலகமே களிநடம் புரிவதை மறந்தனையே பேதையே? என்று என்னை ‘தீ சேர் மெழுகாய்’ உருகி அழவைத்தான்; அரவணைத்தான்; அன்பு செய்தான்; ஆட்கொண்டான்.

    நான் நானாகி இருந்தபோது எழுத முடியாத கட்டுரைகள் சில, அவனே முடித்தும் வைத்தான் நான் அவனாகிப் போனபோது.

    சைவ சமயம் மேன்மை உடையது. அதிலும் சித்தாந்த சைவம் அதிமேன்மை உடையது. இதிலுள்ள அனைத்து கட்டுரைகளும் சைவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அனைத்துமே, அடியேன் மானசீக குருவாக வரித்துக் கொண்ட மணிவாசகப் பெருமானை முன்னிலைப்படுத்தி அவரது மணி வார்த்தைகளைத் தலைப்பாகக் கொண்டே எழுதப்பட்டவை. அவரது மணிவார்த்தையே மேதகு வார்த்தை; அவர் கூறியதே உண்மை.

    சைவசமய சாத்திர நூல்களை இன்னும் பலர் அறியாமல், அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர். அதற்கும் நமக்கும் என்ன தொடர்பு; அதில் அப்படி என்ன இருந்துவிடப் போகிறது என்ரெண்ணி அன்றன்றைக்குப் படித்துவிட்டு தூக்கி எறியக்கூடிய போக நூல்களை நாடித் திரிகின்றனர்.

    சைவ நன்நூல்கள் உயிர்க்கு மேன்மை தரும்; உயிர் வந்த வழியை அடையாளம் காட்டும், உயிரைத் தூய்மையாக்கும் தத்துவங்கள் அனைத்தும் தோத்திர, சாத்திர நூல்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவை, நாம் இந்த பூமியில் பிறந்ததன் பயனைச் சொல்கின்றன. இறைவனைக் கண்டுணர்ந்து ஆனந்தக் களிப்பில். அழுது அழுது அடியடைந்த அன்பர்களின் மணிவாக்குகள் அவை.

    ‘தன்னை மறப்பது:’ ‘தான் நினைக்கும் பொருளை மறக்காதிருப்பது’ இவை கடவுளுக்கும் காதலுக்கும் மட்டுமே சாத்தியப்படும். தன்னை இழந்து பிறிதொன்றைப் பெறுவது, ‘யான் எனது’ என்னும் தன்முனைப்பு அற்ற நிலையில்தான் சிவத்தைப் பெறமுடியும்! காதலும்கூட அப்படித்தான்!

    இறைவனிடம், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ‘தீ சேர் மெழுகொத்த’ பின்புதான் அவன் அருட்பார்வை அடியார்மேல் பதியும்.

    உடனாய் நிற்கின்றான் எனும் இந்நூலின் தலைப்பிற்கான கட்டுரையைப் படித்த பின்பு, அவன் எப்படி நம்முடன் உடனாய் நிற்கின்றான் என்று நன்கு புரிந்து கொள்ள முடியும்.

    இறைவன் தன்னை நினைந்து உருகும் அடியவரை நைய வைப்பதெல்லாம், அவரிடத்துள்ள தீவினைகள் பலவும் நில்லாமே நீங்க வைப்பதற்காகும். இறைவன் அவ்வாறு செய்வது கருணையே அன்றி வேறல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் குமரகுருபர சுவாமிகள்.

    "நின்பணி பிழைப்பில் புளியம் வளாரினால்

    மோதுவிப்பாய்" என்றும்,

    "தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம் சொலாற்றின்,

    வந்திடாவிடின் உறுக்கி வளாரினால் அடித்துத்தீய

    பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடிற் பரிவேயாகும்

    ஈசனார் முனிவும் என்றும்"

    என்ற சிவஞான சித்தியார் பாடலும் இங்கு கருதத்தக்கது.

    இந்நூல் மூலம் மக்களுக்கு பயனுண்டென்றால் அப்பயனாய் விளங்கும் என் தலைவனாம் அம்மையப்பனுக்குத்தான் அனைத்தும்! என்னோடு அவன் ‘உடனாய் நின்றதால்’ உருவானதே இந்தப் படைப்பு!

    இந்நூலுக்கு ஆசியுரை வழங்கிய திருவாவடுதுறை ஆதினம் 32-வது குருமகா சந்நிதானம் பொற்பாதங்களைப் பணிகிறேன்.

    இந்நூலுக்கு சிறப்புரை வழங்கி சிறப்பித்த பெரியவர், இரா. சச்சிதானந்தம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! இவர் சிவ பரம்பொருளை உயிராகவும், மணிவாசகப் பெருமானை உடலாகவும் திருவாசகத்தை உணவாகவும் கொண்டவர். அவருடன் எனக்கு ஏற்பட்ட நட்புதான் மணிவாசகரைப் பற்றி அடியேன் பல வழிகளில் சிந்திக்க வைத்து பல கட்டுரைகளை எழுத வைத்தது.

    இந்நூலென்னும் ஆடைக்கு இழையாக இருந்த அனைத்து நூல்களுக்கும் நன்றிகள் பல!

    இதிலுள்ள கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டு சிறப்பு செய்த நாளிதழ், ஆன்மீக மாத இதழ், நுாற்றாண்டு விழாமலர், முதன்மை நாளேட்டு, கும்பாபிஷேக மலர் போன்ற அனைத்து இதழ்களுக்கும் என் பணிவான நன்றி உரித்தாகுக! இந்நூலை நல்ல முறையில் தட்டச்சு செய்து உதவிய திருமதி. லலிதாகணேஷ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒரு நூலை வாசிக்கையில் வாசகனுக்கு அந்த நூல் ஏதேனும் ஓர் உளமாற்றத்தை அல்லது ஏதாவது ஒரு தாக்கத்தை உண்டாக்க வேண்டும். அந்த வகையில், ஆன்மீகத் தாக்கத்தை இந்நூல் ஏற்படுத்தி வாசகர்களாகிய உங்களை அழ வைத்தால் சிவபரம்பொருள் உங்களுடன் உடனாய் நிற்கின்றான் என்று நினைத்து அகமகிழுங்கள்!

    இறைவன் ஆன்மாக்களை ஆட்கொள்ளும் வகை இரண்டு. ஒன்று, குரங்கு குட்டி நியாயம்; அதாவது குட்டி தன் தாயைப் பற்றிக் கொள்வது போல தகுதியுள்ள ஆன்மாக்கள் கடவுளைப் பற்றி நிற்றல். மற்றொன்று, பூனைக்குட்டி நியாயம். அதாவது, தாய் குட்டியைப் பற்றி நிற்றல் போல தகுதிக் குறைவுடைய ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு இறைவனே (மானுடச்சட்டைத் தாங்கி – குருவாக) எளிவந்து இறங்கி கருணை பாலித்தல்.

    வள்ளலார் சுவாமிகள் தமது முதல்இரவு அறையில் திருவாசகத்தைப் படித்து முடித்த பின்புதான் இல்லறத்தைத் தொடங்கினாராம். அவரது வழிபடு நூல் திருவாசகமாகத்தான் இருந்தது. அதைப்போல இதிலுள்ள கட்டுரைகளை எழுதி முடித்தபோது என் உள்ளத்திலும் திருவாசகத்தையே அடியேன் வழிபடு நூலாக ஏற்றி வைத்தான் இடைமருதீசர்.

    துன்பத்திற்குக் காரணம் ஆணவமலம்; இன்பத்திற்கு காரணம் திருவருள்பற்று. உயிர்களின் ஆணவமல நோயைப் போக்கக் கூடிய ஒரே மருந்து, அதுவும் அருமருந்து, திருவாசகம் என்ற தேன் மட்டுமே. குருவருளும், திருவருளும் சேர்ந்து நம்மைக் கருவியாக்கி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து விட்டோமானால் துன்பம் இல்லை, துயரம் இல்லை! ஆன்மீகத் தேடலின் முடிவு தன்னை உணர்வதுதான்!

    அழுதால் அவனைப் பெறுவது உறுதி!

    மருவினிய மலர்ப்பாதம் மனத்தில் வந்து உள் உருக, தெருவுதொறும் மிக அலறி, ‘சிவபெருமான்’ என்று ஏத்தி. பருகிய நின் பரங்கருணைத் தடம் கடலில் படிவாமாறு அருள்! எனக்கு இங்கு - இடைமருதே இடம் கொண்ட - அம்மானே!

    திருச்சிற்றம்பலம்

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    குரு காணிக்கை

    Description: கு

    கு. வைத்தியநாதன்

    சிவபெருமானின் திருவுருவாய் மானிடச் சட்டைத் தாங்கி, எழுந்தருளி, இறைவன் ஒன்றாயும், வேறாயும். உடனாயும் இருப்பதை போதித்தருளி, சிவஞானத் தேனைச் சைவ சித்தாந்தம் மூலம் பருக வைத்த எனது ஞானாசிரியரான கு. வைத்தியநாதன் அவர்களுக்கு இந்நூல் எனது அன்புக் காணிக்கை!

    1. ஆடல்வல்லான்*

    (சைவ சிந்தாந்த நோக்கில்)

    ஆடல்வல்லான் ஆடுமிடம்:

    சோழ நாட்டுச் சைவத் திருத்தலங்களில் முதலாவதாகத் திகழ்வது திருத்தில்லை (சிதம்பரம்). சைவத் திருத்தல வரிசை திருத்தில்லையில் துவங்கிக் கயிலையில் நிறைவு பெறுகிறது.

    தமிழகம் ஞானபூமி. ஞானத்திறத்தில் ஞானிகளை விளைவிக்கும் திறத்தில் தமிழ்மண் இந்திய மண் ஒன்றே நன்செய் நிலம் என்று கூறலாம். ஏனைய அனைத்தும் புன்செய்க் காடு என்றும் பாலைவனம் என்றும் கூறலாம் என்கிறார் தவத்திரு ஊரன் அடிகள்.

    அவர் கூறியதைப் போல தமிழ்நாடு ஒரு ஞானபூமியாகும். உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் கோயில்கள் மிகுதியாக உள்ளன. ஞானிகளும் மிகுதியாக உள்ளனர். அவதாரங்களான அடியார்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழ்நாட்டின் முத்திரைச் சின்னம் கோபுரச் சின்னம்தான். காரணம், கோயிலின் பெருமைகளையும் மகிமைகளையும் பேசுவதற்காகத்தான் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. அப்படிக் ‘கோயில்’ என்று பெருமையாகக் கூறத்தக்கது தமிழ்நாட்டிலுள்ள ஆடல்வல்லான் உறையும் இடமான சிதம்பரமே.

    ‘கோயில்’ என்றாலே சைவர்களுக்கு சிதம்பரத்தைத் தான் குறிக்கும். இத்திருத்தலத்தைப் புகழ்ந்து,

    "செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்

    செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற

    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய

    செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே"

    என்று பாடுகிறார், திருஞானசம்பந்தப் பெருமான் அவர்கள்.

    "மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்!

    வஞ்சகர் போயகல!"

    என்கிறார் சேந்தனார்.

    திருவிசைப்பா அருளிய கருவூர்த் தேவர்,

    "என்பெலாம் உருகும் அன்பாதம் கூட்டத்து

    என்னையும் புணர்ப்பவன் கோயில்"

    என இத்தலத்தைக் ‘கோயில்’ என்றே குறிப்பிடுகின்றார்.

    இப்படி அடியார்களால் போற்றப்படும் இத்திருத்தலம் இந்நிலவுலகத்து நடுவாக உள்ளது.

    இத்தலத்திற்குப் பெரும்பற்றப்புலியூர் என்னும் பெயரும் உண்டு. புலிப்பாதர் என்னும் வியாக்கிரபாத முனிவர் இத்தலத்தில் பூசித்ததால் இப்பெயர்

    Enjoying the preview?
    Page 1 of 1