Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirukayilaya Sirappu
Thirukayilaya Sirappu
Thirukayilaya Sirappu
Ebook75 pages21 minutes

Thirukayilaya Sirappu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனான சிவபரம்பொருள். அங்கிங்கெனாதபடி -பூலோகத்தில் பல திருத்தலங்களில் எழுந்தருளி இருந்தாலும், திருக்கயிலாய மலையில் சிறப்பாக. உமையொருபாகனாக சிவகணங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் புடைசூழ வீற்றிருந்தருளுகிறார். திருக்கயிலாய தரிசனம் கிடைக்கப்பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும்.

இந்நூலில் உள்ளவைகளைத் தொகுத்து, பதிப்பிக்கும் வாய்ப்பை சிவபெருமான் அடியேனுக்கு அருளியது முன்வினைப் பயன் என்றே கருதுகிறேன்

இந்நூலில் உள்ளவைகளைத் தொகுத்து முடித்தவுடன் கயிலாய தரிசனமே கிடைக்கப்பெற்ற நிறைவு ஏற்பட்டது. உருகி உருகிப் பாடியருளிய அருளாளர்களது இத்திருப்பதிகங்கள் நம்மை கயிலாயத்துக்கே கொண்டுசெல்லும் வலிமை வாய்ந்தவை. திருக்கயிலைப் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் இப்பதிகங்களைப் படித்து மனதால் சிவனுடன் ஐக்கியமாகலாம்

Languageதமிழ்
Release dateAug 23, 2022
ISBN6580156008619
Thirukayilaya Sirappu

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Thirukayilaya Sirappu

Related ebooks

Reviews for Thirukayilaya Sirappu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirukayilaya Sirappu - Edaimaruthour Ki Manjula

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருக்கயிலாய சிறப்பு

    Thirukayilaya Sirappu

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே...

    வாழ்த்தி வணங்குகிறேன்

    குரு மரபு வணக்கம்

    திருக்கயிலாய சிறப்பு

    திருஞான சம்பந்தப்பெருமான் அருளிய திருக்கயிலாயப் பதிகம்

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கயிலாயப் (திரு நொடித்தான் மலை) பதிகம்

    திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரம் திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம்

    ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளின் - திருவாசகம்

    திருக்கயிலாய சிறப்பு

    என் மது வெள்ளமே...

    வாழ்த்தி வணங்குகிறேன்

    இந்நூல் வெளிவர உதவி, சிவத்தொண்டு புரிந்த, எஸ். கல்யாணி அம்மாள், திரு. கே.வைத்தியநாதன், தெள்ளாறு எ.மணி, எஸ்.சுப்பரமணியன் (குருக்கள்), என்.உப்பிலிமணி, எஸ்.மகேஸ்வரி, திரு.சிவக்குமார், கரு.மீனாட்சி சுந்தரம், ஆர். மாணிக்கவாசகம், துரை. ஜெயானந்தம் மற்றும் அட்டைப்படம் - நூலை வடிவமைத்து உதவிய நண்பர் ஜி.வி.பி., அனைவரது பேரன்பையும், சிவத்தொண்டையும் நினைந்து, வாழ்த்தி வணங்குகிறேன்!

    சிவமயம்

    திருச்சிற்றம்பலம்

    குரு மரபு வணக்கம்

    அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு

    நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாதனாகி

    பங்கய துளவனாரும் வேத்திர படை பொறுத்த

    செங்கையம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!

    நால்வர் துதி

    பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி!

    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி!

    வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!

    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!

    சமயக் குரவர் துதி

    சைவத்தின் மேல் சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம்

    தெய்வத்தின் மேல் தெய்வம் இல்எனும் நான்மறைச் செம்பொருள்

    வாய்மை வைத்த சீர்திருத் தேவாரமும், திருவாசகமும்

    உய்வைத் தரச் செய்த நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே!

    நால்வர் நற்றாள் போற்றும் நன்னாள்

    சித்திரைச் சதயம் அப்பர்; சிறந்தவை காசி மூலம்

    அத்தரைப் பணிசம் பந்தர் ஆனிமா மகத்தில் அந்த

    முத்தமிழ் வாதவூரர் முதிய நல் ஆடி தன் னில்

    சுத்தமாஞ் சோதி நாளில் சுந்தரர் கயிலை சேர்ந்தார்.

    ஆதீனம் குரு முதல்வர் அருள் திருநமச்சிவாய மூர்த்திகள்

    கயிலாய பரம் பரம்பரையிற் சிவஞான

    போத நெறி காட்டும் வெண்ணெய்

    பயில் வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்

    மெய்ஞ்ஞான பானுவாகிக்

    குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறை வாழ்

    குரு நமச்சிவாய தேவன்

    சயிலாதி மரபுடையோன் திருமரபு

    நீடூழி தழைக மாதோ!

    தவத்திரு மாதவ சிவஞான யோகிகள்.

    அகச்சந்தான குரவர்

    அருட்குழக ரெழிற்கயிலை முழுக்காவல் நந்திபிரான் அடிகள் போற்றி!

    தெருட்சிபெறு மளக்கமல சனற்குமர முனிவன் இரு திருத்தாள் போற்றி!

    இருட்டுமலத் தகல் சத்ய ஞானதரி சினிசரண இணைகள் போற்றி!

    மருட்சியறு பரஞ்சோதி யருஞ்சீல குருபரன்கள் மலர்கள் போற்றி!

    Enjoying the preview?
    Page 1 of 1