Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kerala Divya Desangal
Kerala Divya Desangal
Kerala Divya Desangal
Ebook148 pages37 minutes

Kerala Divya Desangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாண்டவர்கள் நிறுவிய கோவில்கள் உட்பட இந்த 13 கேரள திவ்யதேசங்களுக்கும் நாமும் நேரில் சென்று தரிசித்தது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் அற்புதமாக இந்நூலை உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர் ஜே.வி. நாதன் அவர்கள்.

ஆன்மீக விஷயங்களை சுவைபட எழுதுவதென்பது மிகவும் சவாலான விஷயம். ஆழ்ந்த நுணுக்கமான சப்ஜெக்ட் என்பதால், அதில் சுவாரஸ்யத்துக்காக கற்பனை, சஸ்பென்ஸ் போன்ற எதையும் சேர்க்க இயலாது! ஆனால், இந்த புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல சுவாரஸ்யங்கள் நிரம்பியுள்ளன.

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580170310294
Kerala Divya Desangal

Read more from J.V. Nathan

Related to Kerala Divya Desangal

Related ebooks

Reviews for Kerala Divya Desangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kerala Divya Desangal - J.V. Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கேரள திவ்ய தேசங்கள்

    Kerala Divya Desangal

    Author:

    ஜே.வி. நாதன்

    J.V. Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jv-nathan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. திருப்புலியூர்: பாவம் போக்கும் பரமன் ஸ்ரீமாயபிரான் பெருமாள்!

    2. திருச்செங்குன்றூர் (திருச்சிற்றாறு): வேண்டியவர்க்கு வேண்டியதைக் கொடுக்கும் பெருமாள்!

    3. திருவாறன்விளை (ஆறன்முலா): வித்யா லாபம், துக்க நிவாரணம் அருளும், அர்ச்சுனன் வழிபட்ட ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்!

    4. திருவண்வண்டூர்: நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் ஸ்ரீபாம்பணையப்பர்!

    5. திருக்கடித்தானம்: அருளை வாரி வழங்கும் ஸ்ரீஅற்புத நாராயணர்!

    6. திருவல்லவாழ்: பகை, பயம் போக்கும் பெருமாள்!

    7. திருவட்டாறு: ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட ஸ்ரீஆதிகேசவப் பெருமாள்!

    8. திருவெண்பரிசாரம்: பிணிகளைத் தீர்த்து, செல்வம் தந்து, அருளையும் வாரி வழங்கும் பெருமாள்!

    9. திருவனந்தபுரம்: ஐஸ்வர்யத்தை வாரி வழங்கும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி!

    10. திருநாவாய்: நன்மைகள் யாவும் தரும் ஸ்ரீநவ முகுந்தப் பெருமாள்!

    11. திருமூழிக்களம்: துன்பப்படுவோரின் துயர்நீக்கும் ஸ்ரீலட்சுமணப் பெருமாள்!

    12. திருவித்துவக்கோடு: ஆபத்து சமயத்தில் பக்தரைக் காக்கும் ஸ்ரீஉய்ய வந்த பெருமாள்!

    13. திருக்காட்கரை: பாவங்களைப் போக்கும் திருக்காட்கரையப்பன்!

    சமர்ப்பணம்

    என் நெஞ்சில் என்றும் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் என் மகள் திருமதி பூர்ணிமா ஜே.வி., மருமகன் டாக்டர் எஸ். ஆனந்தகுமார் எம்.எஸ்சி., பிஹெச்.டி., மற்றும் பேரன் திரு விஷால் ஆகியோருக்கு.

    அணிந்துரை

    எஸ்.கல்பனா. மேனாள் பொறுப்பாசிரியர், (‘கல்கி’ குழும வெளியீடான) ‘தீபம்’, மாதமிருமுறை இதழ், மற்றும் மேனாள் ‘கல்கி வெப்சைட்’ எடிட்டர்.

    E:\Priya\Book Generation\jv nathan\kerala\1.jpg

    (எஸ்.கல்பனா)

    குருஷேத்திரத்தில் நடந்த போர்க்களக் காட்சிகளை துரியோதனன் அரண்மனையில் கண்பார்வையற்ற மன்னர் திருதராஷ்டிரனுக்கு தன் ஞானதிருஷ்டி மூலம் கண்டு விவரித்தார் சஞ்சயன். அந்த நேரடி வர்ணனை மூலம் போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்று உணர முடிந்தது மன்னருக்கு!

    அதேபோல் பாண்டவர்கள் நிறுவிய கோவில்கள் உட்பட இந்த 13 கேரள திவ்யதேசங்களுக்கும் நாமும் நேரில் சென்று தரிசித்தது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் அற்புதமாக இந்நூலை உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர் ஜே.வி.நாதன் அவர்கள்.

    ஆன்மீக விஷயங்களை சுவைபட எழுதுவதென்பது மிகவும் சவாலான விஷயம். ஆழ்ந்த நுணுக்கமான சப்ஜெக்ட் என்பதால், அதில் சுவாரஸ்யத்துக்காக கற்பனை, சஸ்பென்ஸ் போன்ற எதையும் சேர்க்க இயலாது! ஆனால், இந்த புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல சுவாரஸ்யங்கள் நிரம்பியுள்ளன. திரு. ஜே.வி.நாதன் அவர்கள் படைப்பாளி மட்டுமல்ல... சிறந்த படிப்பாளியும்கூட என்பதால் இது சாத்தியமாகியுள்ளது!

    ஒவ்வொரு கோவிலுக்கும் தொடர்பாக இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில சுவாரஸ்யங்கள் இதோ!

    வழக்கமாக முருகன் கோவில்களில்தான் பக்தர்கள் காவடி எடுப்பது சகஜம். ஆனால், பீமன் கட்டி வழிபட்ட தலமான ‘திருப்புலியூர் ஸ்ரீமாயபிரான் பெருமாள்’ கோவிலில் மகர சங்கராந்தியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுப்பார்களாம்.

    அர்ஜூனன் கட்டி வழிபட்ட ‘திருவாறன்விளை ஸ்ரீபார்த்தசாரதிபெருமாள்’ கோவிலில்தான் ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் திருவாபரணப் பெட்டி பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கிறதாம். மகரஜோதி சமயத்தில் மட்டும் சபரிமலைக்கு அப்பெட்டி எடுத்து வரப்பட்டு, விழா முடிந்ததும் திரும்பவும், திருவாபரணப் பெட்டி, இக்கோவிலுக்கு கொண்டு வந்து பாதுகாக்கப் படுமாம். ஓணம் பண்டிகையின்போது இங்கு நடக்கும் ‘வெள்ளம்களி’ என்ற படகுப்போட்டி, குழந்தைகளுக்கு இக்கோயிலில் நடத்தப்படும் ‘தேச்சுக்குளி’ சம்பிரதாயம் என்று பல புதுமைகள் இக்கோயிலில் உண்டு!

    அதேபோல் தர்மருக்கு அட்சய பாத்திரம் கிடைக்கப் பெற்ற ‘திருவண்வண்டூர் ஸ்ரீபாம்பணையப்பர்’கோயிலின் கஜமேளா வைபவம்...

    ‘திருக்கடித்தானம் ஸ்ரீஅற்புதநாரயணர்’ கோயில் சுற்றுச் சுவரை ஒரே நாள் இரவில் பூதகணங்கள் உருவாக்கின என்ற விபரம்!

    ‘திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி’ கோவில் பற்றிய பல அதிசயத் தகவல்கள் மிக அருமை!

    ‘திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள்’ கோயிலில் நமஸ்கார மண்டபத்தில் மன்னருக்கு மட்டுமே நமஸ்காரம் செய்ய உரிமை உண்டாம்; பக்தர்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய அனுமதியில்லையாம்!

    திருப்பதி வேங்கடேச பெருமாளுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை ‘திருவெண்பரிசாரம் திருவாழ்மார்பன்’ கோயிலில் செலுத்தலாம்!

    ‘திருவல்லவாழ் ஸ்ரீவல்லப பெருமாள்’ கோயிலில் இன்றளவும் விஸ்வாமித்திரர் அளித்த பாத்திரங்களில்தான் கோயில் மதிய அன்னதானச் சமையல் நடத்தப்படுகிறதாம்! கடும் இருமல், ஜூரம் போன்ற உபாதைகள் (கொரோனா?) நீங்க, இங்கு பிரார்த்தித்தால் நோய் பறந்தோடும் என்பது பக்தர்களின் அழுத்தமான நம்பிக்கை.

    - இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுமையான பல தகவல்களை சுவைபட தந்திருக்கிறார் நூலாசிரியர்.

    ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் எழுதும்போது அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் சுருக்கமாகவும் விபரமாகவும் தந்திருப்பது இப்புத்தகத்தின் தனிச் சிறப்பு!

    அதாவது - கோவிலின் தல புராணம், கோவிலின் அமைப்பு, மூலவர் பற்றிய புராண விளக்கங்கள், அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாக்கள், அமைவிடம், தரிசன நேரம் என்று அனைத்து விபரங்களும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளதால், ஒரு ‘மினி-கைடு’ மாதிரி விளங்குகிறது இந்நூல்.

    மேலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் அக்கோயில் எந்த ஆழ்வாரால் மங்களாசாசனம் (பாடப் பெற்றது) செய்யப்பட்டது என்ற விபரத்துடன் அவர் இயற்றிய பாடலும் பொருளும் கொடுத்திருப்பது - சர்க்கரைப் பொங்கலில் ‘அடிஷனல்’ முந்திரிப் பருப்பு மாதிரி புத்தகத்துக்குச் சுவை சேர்க்கிறது.

    மொத்தத்தில், இந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும், நாம் ‘மலைநாட்டு திருப்பதி’ கோயில்களுக்கு ஒரு டூர் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. அதேசமயம் - நம் மனக் கண்ணில் காட்சியளித்த இக்கோயில்களை நேரிலும் சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவலும் எழுகிறது.

    அதுதான் நூலாசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி!

    - எஸ்.கல்பனா

    என்னுரை

    E:\Priya\Book Generation\jv nathan\jvn photo-min.JPG

    ‘கேரள திவ்ய தேசங்கள்’ என்ற என் இந்த நூலுக்கு அருமையானதொரு அணிந்துரையை வழங்கியுள்ளார், திருமதி எஸ். கல்பனா அவர்கள்.

    திருமதி கல்பனா, ‘கல்கி’ குழும ஆன்மிக, மாதமிருமுறை இதழான ‘தீபம்’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும்,

    Enjoying the preview?
    Page 1 of 1