Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mouniyin Marupakkam
Mouniyin Marupakkam
Mouniyin Marupakkam
Ebook274 pages1 hour

Mouniyin Marupakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொதுவாகவே, மௌனியின் எழுத்து இலக்கிய உலகில் தனித்துவமானதும் புதுத் தடம் போட்டுக் கொண்டு போனதும் ஆகும். அவரைப் பற்றிய அனுபவ உண்மைகளும் அவ்வாறே. இலக்கிய ரசிகர்கள் மற்ற எழுத்தாளர்களைப் பற்றி அறிந்த அளவுக்கு மௌனியை அறிந்து கொள்ள இயலவில்லை. அவரோடு சுமார் 16 வருடங்கள் பழகியிருந்த எழுத்தாளர் ஜே.வி. நாதன் இந்த நூலின் மூலம் மௌனியின் மறு பக்கத்தை அனுபவ பூர்வமாகவும் ஆதார பூர்வமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜே.வி. நாதனின் எழுத்து நடையில் மெளனியின் பேட்டியைப் படிக்கிறபோது சிலிர்க்கிறது மனது. மௌனியை மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பேட்டி கண்டு வேறு வேறு பத்திரிகைகளில் ஜே.வி. நாதன் எழுதியுள்ளார்; அவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. மௌனியின் 'தவறு', 'அத்துவான வெளி' ஆகிய சிறுகதைகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவ வியலாளரான திரு. ஆல்பர்ட் பி. ஃப்ராங்க்ளின் அளித்துள்ள ஆங்கில விமரிசனம் இந்நூலில் தரப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் ஜே.வி. நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்கள், மௌனியின் கையெழுத்து ஆகியவை வாசகர்களுக்கு அபூர்வ பொக்கிஷமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580170310293
Mouniyin Marupakkam

Read more from J.V. Nathan

Related to Mouniyin Marupakkam

Related ebooks

Reviews for Mouniyin Marupakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mouniyin Marupakkam - J.V. Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மௌனியின் மறுபக்கம்

    +

    (இதுவரை வெளிவராத மெளனியின் கடிதங்கள்!)

    Mouniyin Marupakkam

    Author:

    ஜே.வி. நாதன்

    J.V. Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jv-nathan

    பொருளடக்கம்

    ஜே.வி.நாதன்

    சிறுகதைத் திருமூலர்

    மௌனி பற்றி எழுத்தாளர்கள்...

    மதிப்புரை

    என்னுரை

    1. முதல் சந்திப்பு

    2. கதையைப் பிரதி எடுத்த கதை…

    3. ந. முத்துசாமியின் வேதனை!

    4. ‘தவறு’ சிறுகதையின் விமர்சனங்கள்

    5. ஸ்ரீ நடராஜருக்கு அட்டெண்டன்ஸ்!

    6. தீப ஒளி மறைந்த மர்மம்!

    7. வித்தியாசமான ஒரு வயலின்!

    8. க.நா.சு.வின் சிதம்பர விஜயம்

    9. 24 சிறுகதைகள்... உச்சக்கட்டப் புகழ்!

    10. நெஞ்சில் கனன்ற சோகத் தீ!

    11. நள்ளிரவில் ஒரு கேள்வி!

    12. மெளனியுடன் நா.பா.!

    13. மது அனுபவத்தை எழுத்தில்...?

    14. மெளனியின் ‘கெஸ்ட்’டாக தருமு சிவராமு!

    15. ஜெயகாந்தன் பாராட்டிய மெளனியின் சிறுகதை!

    16. ‘மாறுதல்’ - மெளனியின் சிறுகதை!

    17. சுந்தர ராமசாமிக்கு ஒரு கடிதம்!

    18. பேசாத மெளனி பேசினார்...!

    19. ‘அத்துவான வெளி’ - விமர்சனம்

    20. ‘சிறுகதைத் திருமூலர்’ மெளனி (பேட்டி)

    21. மௌனியின் மௌனம் கலைகிறது (பேட்டி)

    22. மௌனியுடன் ஒரு பேட்டி

    23. பிரியமுள்ள ஜே.வி.நாதனுக்கு...

    24. மெளனியின் மொழி நடை என்னை மயக்கியது!

    பிரெஞ்சு மொழிக்குப் போகும் தமிழ் இலக்கியங்கள்…

    ‘கவிக்கோ’ அணிந்துரை

    ஜே.வி.நாதன்

    E:\Priya\Book Generation\jv nathan\jvn photo-min.JPG

    தமிழ்ச் சிறுகதையுலகின் பிதாமகர்களான புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, ந.பிச்சமூர்த்தி ஆகியோரில் மௌனியும் இவரும் கொண்டிருந்த நட்பு அலாதியானது; ஆழமானது. மௌனியுடன் சுமார் 16 ஆண்டுகள் நெருக்கமாகப் பழக இவருக்குக் கிடைத்த வாய்ப்பு, வேறு எவருக்கும் கிட்டாத ஒன்று.

    மௌனியுடனான தன் அனுபவங்கள், அவரைச் சந்தித்து தேன்மழை, கணையாழி, தாய் இதழ்களில் எழுதி வெளிவந்த பேட்டிகள், மௌனி இவருக்கு எழுதிய இதுவரை வெளிவராத கடிதங்கள்... என இந்த நூலில் மௌனியின் புதியதொரு பரிமாணத்தைத் தமிழ் வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் திரு ஜே.வி.நாதன்.

    சிதம்பரத்தில் பிறந்தவர். தற்போது வாசம் வேலூரில். இவருடைய மனைவி ஜெயா வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்.

    மௌனி, வல்லிக்கண்ணன், அகிலன், நா.பா., ஆகியோருடன் கொண்ட நெருங்கிய பழக்கம் இவரை இலக்கியத்தின் பக்கம் திருப்பியது எனலாம். சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ பரிசை மூன்று முறை பெற்றுள்ளார். ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த ‘முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்கள்!’ என்ற இவருடைய கட்டுரை ‘தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த புலனாய்வுக் கட்டுரை’ என்று சென்னை ‘விஜில்’ அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப் பதக்கம் உள்ளிட்ட ‘பாஞ்ச ஜன்யம்’ என்ற விருதைப் பெற்றது.

    எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரையோடு ‘வேட்டை’ உள்ளிட்ட பத்து சிறுகதைத் தொகுதிகள்; மற்றும் ‘சக்தி விகடன்’ இதழில் 48 அத்தியாயங்கள் தொடர்ந்து வெளிவந்த ‘ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!’ என்ற இவரது கட்டுரைகள் விகடன் வெளியீடாக வந்து வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. ‘குமுதம் பக்தி ஸ்பெஷல்’ பத்திரிகையில் ‘கடவுள் தோன்றிய கதை’, மற்றும் ‘கேரள திவ்ய தேசங்கள்’, ‘திருநாங்கூர் திவ்ய தேசங்கள்’, ‘பிற மாநில அபூர்வக் கோயில்கள்!’ என்று ஆன்மிக நூல்கள் பலவும் எழுதி வெளியிட்டுள்ளார்.

    ‘மெளனியின் மறுபக்கம்’ - கவிக்கோ அப்துல் ரகுமான் அணிந்துரை, திரு கி.அ.சச்சிதானந்தம் முன்னுரை, மெளனியின் அசல் கையெழுத்துக் கடிதங்களோடும், மெளனியைத் தன் டாக்டரேட் பட்டத்துக்கு ஆய்வு செய்த ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் லெட்டீஷியா இபனேஸின் ‘குமுதம்’ மற்றும் ‘தீராநதி’ பத்திரிகைகளில் வெளிவந்த பேட்டிகளுடனும் வெளிவருவது மிகவும் சிறப்பான ஒன்று.

    சிறுகதைத் திருமூலர்

    மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது ஒரு புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே இப்படி முதல் தடவையாகப் படிக்கும்போது புது அனுபவமும், மறுபடியும் மறுபடியும் படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உண்டாக்கவல்லது என்பது விமரிசகர்கள் கண்டுள்ள உண்மை. பிரும்மத்தைக் கண்டவர்கள் அவசியம் நேர்ந்தால் அதை வேறு வேறு விதமாக வருணிப்பது போல மௌனியின் கதைகளைப் படிப்பவர்கள் அதை வேறு வேறு விதமாக வருணிக்க இயலும். இதுவும் இது மிகச் சிறந்த இலக்கியம் என்பதற்கு ஒரு அத்தாட்சியே ஆகும். இலக்கிய விமரிசகர் க.நா.சுப்பிரமணியம் 1967-ம் ஆண்டு மௌனியின் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட வரிகள் இவை.

    24 சிறுகதைகள் மட்டுமே எழுதி, தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடம் பிடித்திருப்பவர் ‘திருமந்திரம்’ போன்று செறிவாய் தன் படைப்புகளை எழுதியுள்ளதால் ‘சிறுகதைத் திருமூலர்’ என்று போற்றப்படும் மௌனி ஒருவர் மட்டுமே. சிறுகதைகளைத் தவிர, ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘எங்கள் ஊர் செம்மங்குடி’ என்று ஒரு கட்டுரையும், பி.எஸ்.ராமையா மணிவிழா மலரில் ‘எனக்குப் பெயர் கொடுத்தவர்!’என்று ஒரு கட்டுரையும் மட்டுமே மௌனி எழுதியவை உலகுக்கு அறிமுகமாகியுள்ளது. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு குறுநாவல் காணாமற் போய் விட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.

    பொதுவாகவே, மௌனியின் எழுத்து இலக்கிய உலகில் தனித்துவமானதும் புதுத் தடம் போட்டுக் கொண்டு போனதும் ஆகும். அவரைப் பற்றிய அனுபவ உண்மைகளும் அவ்வாறே. இலக்கிய ரசிகர்கள் மற்ற எழுத்தாளர்களைப் பற்றி அறிந்த அளவுக்கு மௌனியை அறிந்து கொள்ள இயலவில்லை.

    அவரோடு சுமார் 16 வருடங்கள் பழகியிருந்த எழுத்தாளர் ஜே.வி.நாதன் இந்த நூலின் மூலம் மௌனியின் மறு பக்கத்தை அனுபவ பூர்வமாகவும் ஆதார பூர்வமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ஜே.வி.நாதனின் எழுத்து நடையில் மெளனியின் பேட்டியைப் படிக்கிறபோது சிலிர்க்கிறது மனது.

    மௌனியை மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பேட்டி கண்டு வேறு வேறு பத்திரிகைகளில் ஜே.வி.நாதன் எழுதியுள்ளார்; அவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

    மௌனியின் ‘தவறு’, ‘அத்துவான வெளி’ ஆகிய சிறுகதைகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவ வியலாளரான திரு ஆல்பர்ட் பி. ஃப்ராங்க்ளின் அளித்துள்ள ஆங்கில விமரிசனம் இந்நூலில் தரப்பட்டுள்ளது.

    இந்நூலாசிரியர் ஜே.வி.நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்கள், மௌனியின் கையெழுத்து ஆகியவை வாசகர்களுக்கு அபூர்வ பொக்கிஷமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!

    - ஆசிரியர்

    மௌனி பற்றி எழுத்தாளர்கள்...

    1. தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழி வகுத்தவர் ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால், ‘மௌனி’ என்ற புனைப்பெயரில் எழுதி வருபவரைத்தான் குறிப்பிட வேண்டும். அவரைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்ல வேண்டும். கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைகளுக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டுவரக் கூடியவர் மௌனி ஒருவரே!

    - புதுமைப்பித்தன்.

    2. என் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று புதுமைப்பித்தன் கூறினார். இந்தப் போக்கே மௌனியில் உச்சநிலையடைகிறது. பொதுவாக ஒரு சம்பவத்தை விட, அச்சம்பவத்தில் மனித மனம் படும் பாட்டை அல்லது அதனால் ஏற்படும் உணர்வு அலையைக் குறிப்பதுதான் சிறுகதை. அதன் முழு அர்த்தத்தையும் மௌனி கதைகளில் காணலாம். புற உலகையே தம் எழுத்தில் இல்லாமல் செய்ய முனைபவர். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தரிசனம் அல்லது மானசக் காட்சி. மௌனியின் பாத்திரங்கள் அசாதாரணமானவை. புற நிகழ்ச்சிகளை அதாவது காலதேச வர்த்தமானங்களைக் கதையிலிருந்து ஒழித்து விடுவதற்காக அவர் சில கதைகளிலே பாத்திரத்திற்குப் பெயரே சூட்டவில்லை"

    - கலாநிதி க. கைலாசபதி (‘தமிழ் நாவல் இலக்கியம்’)

    3. மௌனியின் கதைகள் படிக்கப் படிக்கத்தான் தெளிவாகத் தொடங்கும். ஒருதரம் படித்துவிட்டு இதில் ஒன்றும் இல்லை என்று விசிறிவிட விரும்புகிறவர்கள் இலக்கிய விமரிசனம் செய்ய முன்வராமல் இருந்தால் நல்லது. ‘விஷயம் இருக்கிறது... புரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று பணிவுடன் வருபவர்களுக்கே விமரிசன உலகில் இடம் உண்டு. அப்படி வருபவர்கள் மௌனியின் கதைகளைப் பல தடவைகள் படித்துப் பார்க்க வேண்டும். எந்த விமர்சகனுடைய சிறந்த எழுத்தும் எந்த சிருஷ்டி இலக்கியாசிரியனுடைய எழுத்தையும் தள்ளிவிட்டு அதன் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள முடியாது.

    - க.நா.சுப்ரமணியம் (‘எழுத்து’ ஜனவரி 1962)

    4. புதுமைப்பித்தனும் மௌனியும் கு.ப.ரா.வும் போன்றவர்கள் எழுதினால் பிரச்னை எழும், சலசலப்பும் கண்டனங்களும் குவியும் எனத்தக்க கதைகளை எழுதியுள்ளனர். இதில் நம்மிடையே இப்போது வாழ்கிற் மௌனியைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். இவரது கதைகளில் சோதனைத் தன்மை விசேஷமாக சிறுகதையின் உருவ விஷயத்தில் மேலோங்கி நிற்கிறது. இவரது தமிழ் நடையே ஒரு சோதனை முயற்சி என்று சொல்ல வேண்டும். புதுமைப்பித்தனையும் கு.ப.ரா.வையும் புகழ்ந்து ஏற்றுக் கொள்கிற பலர் கூட மௌனியின் தமிழ் நடையில் ஆயாசம் கொள்வார்கள். புதுமை விரும்பிகள் புதுமைப்பித்தனிடமும் இல்லாத அழகுகளை மௌனியிடம் காணலாம்

    - ஜெயகாந்தன் (‘ஆல் இந்தியா ரேடியோ’வில் வாசித்த கட்டுரையிலிருந்து).

    5. மெளனியோடு 16 வருடங்கள் நெருங்கிப் பழகியவர் எழுத்தாளர் ஜே.வி.நாதன். ஆகவே இந்த நூலின் மூலம் மெளனியின் வாழ்க்கையையும் படைப்பு அனுபவத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

    மெளனியின் ‘தவறு’, ‘அத்துவான வெளி’ ஆகிய சிறுகதைகளும் ஜே.வி.நாதனுக்கு மெளனி எழுதிய கடிதங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

    மெளனி தான் எழுதும் கதைகள் எதற்கும் தலைப்பு வைத்ததில்லை. ஒவ்வொரு கதையையும் திரும்பத் திரும்பப் பலமுறை எழுதக்கூடியவர்.

    மெளனி தான் எழுதிய கதைகளைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாதவர். நிறையப் படிப்பார். அவர் படித்த புத்தகங்களில் தத்துவம் குறித்த நூல்கள் அதிகமாக இருந்தன. அவருடைய உறவினர்களுக்குக் கூட அவர் ஓர் எழுத்தாளர் என்பது தெரியவே தெரியாது என்கிறார் மெளனியின் சிறுகதைகளைத் தேடித் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்த எழுத்தாளார் கி.அ. சச்சிதானந்தம்.

    ***

    ஜே.வி.நாதன் தனது எழுத்தின் வழியே மெளனியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறார். நாமும் மெளனி அருகே அமர்ந்து உரையாடுவது போலவும், உடன் நடந்து செல்வது போலவும் நெருக்கமாக எழுதப்பட்டிருப்பதே இந்த நூலின் சிறப்பு.

    ‘மெளனியின் கதைகள் புரிவதில்லை’ என்பவர்கள் ஒருமுறை இந்த நூலைப் படித்தால் மெளனியைப் புரிந்து கொள்வதோடு, அவரது கதைகளையும் புரிந்து கொள்ள முடியும்.

    - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (இந்து தமிழ் நாளேடு)

    மதிப்புரை

    கி.அ.சச்சிதானந்தம்

    உலகச் சிறுகதையாளர்கள் என்ற உன்னத நிலையை எட்டிப் பிடித்துவிட்ட தமிழ் சிறுகதையாளர்கள் பலரைச் சொல்லலாம். இதில் எள்ளளவும் ஐயமில்லை. புதுமைப்பித்தன், மௌனி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் என்ற பெரிய பட்டியலைக் கொடுக்கலாம். அப்படியொரு வளமான, பெருமைப்படக்கூடிய தமிழ்ச் சிறுகதை மரபை உருவாக்கின எழுத்தாளர்களைப் பற்றிய நம்பகத்தகமான, விரிவான வாழ்க்கை வரலாறு வெளியிடப்படவில்லை. இத்தகைய நிலையை மேலை நாடுகளில் பார்க்க முடியாது; எடுத்துக்காட்டாக ரஷ்ய சிறுகதையாசிரியர் ஆண்டன் செகாவிற்கு வாழ்க்கை வரலாறு நூல்கள் எத்தனை? செகாவ்வின் பிறப்பு; பெற்றோர்கள் வாழ்ந்த இடம்; பயணம் செய்த இடங்கள்; சந்தித்த மனிதர்கள்; படித்த நூல்கள்; உரையாடல்கள்; நோய்வாய்ப்பட்ட காலங்கள்; எழுதுவதற்கான சூழல்கள்; நாட்குறிப்புகள்; பார்த்த நாடகங்கள்; அன்றாட வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் - இப்படிப் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடியும். புதைந்து போன மற்றும் மறைந்து போன நிகழ்ச்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டு புதிய வாழ்க்கை வரலாறு எழுதப்படுகிறது. ஆக, ஒரே எழுத்தாளரைப் பற்றி ஒன்றுக்கும் மேலான வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுகிறது. அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நம்முடைய வறட்சியும், அலட்சியமும், அக்கறையின்மையும், மேம்போக்கான தன்மையும் தெரியும்; அதற்காக நாம் கவலைப் படுவதாகவும் இல்லை!

    ஒரு நாடு அறியப்படுவதும் அடையாளம் காணப்படுவதும், அந்நாடு படைத்த இறவா இலக்கியங்களால்தானே? அந்நாட்டில் அரிய கண்டுபிடிப்புகளைக் கொடுத்தவர்கள், விஞ்ஞானிகள், மேதைகள் இருக்கலாம். அவர்களின் அறிவுலகப் பங்களிப்பு எவ்வளவு மேன்மையாக இருந்தாலும், அவர்களால் தம் நாட்டிற்கு அடையாளம் கொடுக்க முடியாது; இலக்கிய ஆசிரியர்களால்தான் கொடுக்க முடியும். இலக்கியம்தான் என்ன? மனித வாழ்க்கை அல்லவா? உறவுகள், உணர்ச்சிகள், மனத்தின் செயல்பாடுகள், இன்பங்கள், துன்பங்கள் - இவைதானே மனிதன்! மனித வாழ்க்கை இப்படி இருக்கும் வரை இலக்கியம் இருக்கும். இலக்கியத்தின் வெளிப்பாடுகள் மாறலாம். ஆனால் அடிப்படையில் மனித வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது. இதைத்தான் இலக்கியப் படைப்பாளி எண்ணுகிறான்; சிந்திக்கிறான்; எழுதுகிறான். மனித வாழ்க்கையின் விதவிதமான வெளிப்பாடுகளைச் சொல்லும் எழுத்தாளனின் வாழ்க்கையும் முக்கியமானது - அறியப்பட வேண்டியது என்பதினால், மேலை நாட்டில் கலைஞர்களின் - இலக்கியாசிரியர்களின் உட்பட - வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுகிறது.

    சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து, எழுதி, மறைந்தவர் மௌனி; இருபத்து நான்கே சிறுகதைகள் எழுதி ‘உலகச் சிறுகதையாளர்’ என்ற புகழை அடைந்து விட்டார். மௌனிக்கு நான் தருமு சிவராமு மூலமாகத்தான் அறிமுகமானேன். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் ஈழத்திலுள்ள திருக்கோணமலை இராமலிங்கம் என்பவர், தருமு சிவராமு என்ற பெயரில் சி.சு.செல்லப்பா நடத்தி வந்த ‘எழுத்து’ என்ற மாத இதழில் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வந்தார். மௌனியின் பக்தராக இருந்தவர். அவ்வப்போது திருக்கோணமலையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சி.சு.செல்லப்பாவுடன் தங்குவார். ஒரு தடவை சிதம்பரத்திலுள்ள மௌனியைச் சந்திக்கப் போய், மௌனியின் ஆதரவில் சிதம்பரத்தில் தங்க ஆரம்பித்தார். தருமு சிவராமு சென்னையில் என் வீட்டில் தங்கி இருக்கும்போது, நான் அவசியம் மௌனியைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார்.

    1966 ம் ஆண்டில் வந்த தமிழ் புத்தாண்டு அன்று தருமு சிவராமு சிதம்பரத்திலிருந்து மௌனியைப் பார்க்க வரவும்; நான் ஒரு சில நாட்களே தங்கி இருப்பேன் என்று எனக்கு ஒரு தந்தி கொடுத்தார். அவர் சிதம்பரத்தில் இருந்ததை அந்த தந்தியின் மூலம் அறிந்து கொண்டேன். அந்தக் காலத்தில் இப்போது இருக்கும் பேருந்து வசதி கிடையாது; இரயிலில் பயணம் செய்து விடியற்காலையில் சிதம்பரம் போய்ச் சேர்ந்தேன். அப்போது தருமு சிவராமு, மௌனி நடத்தி வந்த நெல் அரவை மில்லை ஒட்டினாற்போல் இருந்த வீட்டில் தங்கி இருந்தார். மௌனியோ தெற்கு ரத வீதியில் இருந்தார்.

    தருமு சிவராமுவும் நானும் மௌனியின் வீட்டுக்குப் போனோம். நாங்கள் படியேறும்போது, தருமு சிவராமு என் செவியில் இரகசியமாக, "மௌனி ஒரு மாதிரியானவர்;

    Enjoying the preview?
    Page 1 of 1