Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ammavin Petti
Ammavin Petti
Ammavin Petti
Ebook194 pages1 hour

Ammavin Petti

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையிலும் புனைவுத் தன்மை இல்லாமல் யதார்த்தமான நிகழ்வுகள். மனதின் ஆழம் வரை சென்று தொடும் உரையாடல்கள், வர்ணனைகள்.

"நாங்க அடிக்கடி சண்டை போட்டுகிட்டாலும், எதிரும் புதிருமாய் இருந்தாலும், என் பையனைக் காதலிச்சு, தன் வீட்டாரை உதறிட்டு வந்த ராஜம் என்னை ‘அம்மா’ன்னுதான் கூப்பிடுவா. ஆக, அவளும் எனக்குமகள்தான். (‘அம்மாவின் பெட்டி’)

ஜே.வி.யின் உரையாடல்கள் எளிமையாக இருந்தாலும் அதில் ஒரு வலிமை ஒளிந்திருப்பது, பாலுக்குள் நெய் மறைந்திருப்பதற்குச் சமமாகவே நினைக்கிறேன். அதேபோல் வர்ணணைகளும் படிப்பவர்களுக்கு ஒரு விஷுவல் எஃபெக்ட் தருவதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

Languageதமிழ்
Release dateOct 3, 2023
ISBN6580170310273
Ammavin Petti

Read more from J.V. Nathan

Related to Ammavin Petti

Related ebooks

Reviews for Ammavin Petti

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ammavin Petti - J.V. Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மாவின் பெட்டி

    (சிறுகதைத் தொகுப்பு)

    Ammavin Petti

    (Sirukathai Thoguppu)

    Author:

    ஜே.வி. நாதன்

    J.V. Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jv-nathan

    பொருளடக்கம்

    அணிந்துரை

    1. அம்மாவின் பெட்டி

    2. பா ரா மு க ம்!

    3. சுமைதாங்கி

    4. ஸ்கைலார்க் 007-!

    5. மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ்!

    6. பிணைப் பூக்கள்

    7. கி ழ வி

    8. தா க ம்

    9. மன நிழல்

    10. வ ர ன்

    11. மந்திரவாதியும் ஓர் இளம் பெண்ணும்!

    12. பூ ட் டு

    13. நந்தினி டீச்சர்

    14. மன வலி

    15. பிரியமான சகியே...!

    16. பிச்சைக்காரி

    17. இசைக்க மறந்த தவில்!

    18. நீ செஞ்சது சரிதான் புள்ளே!

    19. ஒரு இண்டர்வியூவில்...

    20. ச ங் கு

    1500 கிரைம் த்ரில்லர் நாவல்களுக்கு மேல் எழுதி, இன்னும் சளைக்காமல் பல நூல்களை எழுதிக் கொண்டிருப்பவரும், எண்ணற்ற தமிழ் உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மர்ம நாவல் மன்னரும், என் இனிய நண்பருமான திரு ராஜேஷ்குமார் அவர்கள் இந்தத் தொகுப்பு நூலுக்கு அளித்துள்ள

    அணிந்துரை

    E:\Priya\Book Generation\Ammavin petty\78-min.jpg

    ராஜேஷ்குமார்

    கோயம்புத்தூர்-641046

    உரைகல்

    ஒரு சிறுகதையின் ஆரம்ப வரியிலேயே ஒரு வாசகனை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் திறமை, அரிதாக ஒரு சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே வாய்க்கின்ற ஒன்று. அந்த அரிதான எழுத்தாளர்களில் ஒருவர்தான் ஜே.வி.நாதன். கடந்த 40 வருட காலமாக அவர் எழுத்துலகில் வெற்றிகரமாக பவனி வருவதற்கு இந்தத் திறமை ஒன்றே போதுமான காரணமாக அமைந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

    ஒரு சிறுகதை சிறந்த சிறுகதை என்றோ, முத்திரைக் கதை என்றோ பெயர் பெற வேண்டுமென்றால், அதன் ‘கரு’ ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஜே.வி.நாதன் எழுதிய எல்லாக் கதைகளிலுமே சோடை போகாத ஒரு ஆரோக்கியமான ‘கரு’ ஒளிந்து கொண்டிருப்பதை ஓர் அதிசயமாகவே பார்க்கிறேன். அறுபது வயதைத் தாண்டியவர், மறுபடியும் இருபது வயதுக்கு வந்து இன்னமும் இந்த எழுத்துலகில் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

    எழுத்துத் துறையில் நான் எழுத வந்த காலகட்டத்தில் ஜே.வி.நாதன் என்கிற பெயர் ஏதாவது ஒரு வார இதழிலோ அல்லது நாளிதழிலோ வெளிவந்து என்னுடைய பார்வையில் தட்டுப்பட்டுக் கொண்டேயிருக்கும். அவருடைய எந்த ஒரு கதையைப் படித்தாலும்சரி, அதில் சமுதாய நலன் சார்ந்த விஷயமோ, அல்லது குடும்ப நலன் சார்ந்த விஷயமோ அறச் சீற்றத்தோடு வெளிப்படுவதைக் கவனித்து வியந்து போயிருக்கிறேன். இந்த 2020-களிலும் வியந்து கொண்டிருக்கிறேன். அவருடைய கதைகளைப் படித்துவிட்டு, இது போன்ற கதைகளை நாமும் எழுத வேண்டுமென்று நினைத்து முயற்சியும் செய்திருக்கிறென்.

    இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் பல்வேறு வார இதழ்களில் பிரசுரமாகிப் பிரகாசித்தவை. அதில் சிலவற்றை நான் படித்து ஜே.வி.யை செல்போனில் அழைத்து, சுடச் சுடப் பாராட்டியும் இருக்கிறேன்.

    இந்தத் தொகுப்பில் உள்ள எந்த ஒரு சிறுகதையிலும் புனைவுத் தன்மை இல்லாமல் யதார்த்தமான நிகழ்வுகள். மனதின் ஆழம் வரை சென்று தொடும் உரையாடல்கள், வர்ணனைகள்.

    "நாங்க அடிக்கடி சண்டை போட்டுகிட்டாலும், எதிரும் புதிருமாய் இருந்தாலும், என் பையனைக் காதலிச்சு, தன் வீட்டாரை உதறிட்டு வந்த ராஜம் என்னை  ‘அம்மா’ன்னுதான் கூப்பிடுவா. ஆக, அவளும் எனக்குமகள்தான். (‘அம்மாவின் பெட்டி’)

    ஜே.வி.யின் உரையாடல்கள் எளிமையாக இருந்தாலும் அதில் ஒரு வலிமை ஒளிந்திருப்பது, பாலுக்குள் நெய் மறைந்திருப்பதற்குச் சமமாகவே நினைக்கிறேன்.

    அதே போல் வர்ணணைகளும் படிப்பவர்களுக்கு ஒரு விஷுவல் எஃபெக்ட் தருவதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

    பெரிதாக வளர்ந்திருந்த பாம்புப் புற்று. அருகில் நிறைய சூலங்கள், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், குங்குமம், மஞ்சள் ஆகியவை புற்றின் மேல் நிறையத் தூவப்பட்டிருந்தது. அருகில் குறவைச் சாமியார். காவி வேட்டி, திறந்த மேலுடம்பு, கழுத்தில் ஏதேதோ மணி மாலைகள், நெற்றியில் பெரிய சந்தனப் பட்டை, பெரிய குங்குமப் பொட்டு, கடா மீசை, தலையில் காவித் துணியில் தலைப்பாகை கட்டிக் காட்சியளித்தார் ‘. ( ‘மட்டன் பிரியாணி, சிக்கன் லெக் பீஸ்’)

    புத்தகம் நெடுகிலும், ஒவ்வொரு சிறுகதையிலும் வர்ணணைகள் காட்சிகளாக மாறி, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை நமக்குத் தருகின்றன.

    ஒரு எழுத்தாளர் பத்து வருட காலம் ‘NON STOP’ ஆகத் தொடர்ந்து எழுதுவதே ஒரு பெரிய சாதனை. ஆனால், ஜே.வி. அவர்கள் கடந்த 40 ஆண்டுக் காலமாய் எழுதிக் கொண்டே இருக்கிறார். இந்தக் ‘களைப்பில்லா உழைப்பு’ இறையருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும். அவரோடு பயணித்த பல சம காலத்து எழுத்தாளர்கள், தங்களின் எழுதுகோல்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் ஜே.வி. என்ற குதிரை மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிற்து. எழுத்துலகில் நிச்சயமாக இது ஒரு சாதனையாகவே பார்க்கப்படும்.

    இந்தச் சிறுகதைகள் தொகுப்பை ஒரு பத்துப் பேர் படித்தால் அதில் குறைந்த பட்சம் ஏழு பேராவது ஜே.வி.நாதனின் மற்ற படைப்புகளைத் தேடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கைதானே ஒரு படைப்பாளியின் வெற்றி. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறது இந்தப் புத்தகம்.

    தமிழகத்தின் தலை சிறந்த படைப்பாளிகளில், நான் மிகவும் மதிக்கும் திரு வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள், ஒருமுறை என்னோடு அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது, ஜே.வி.யைப் பற்றிச் சொன்ன ஒரு வாக்கியம் இப்போது நினைவுக்கு வருகிறது.

    ஜே.வி.நாதன் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல... அகண்ட வாசிப்புக்குச் சொந்தக்காரர். அவர் படிக்காத புத்தகம் கிடையாது.

    அவர் சொன்னது உண்மைதான்.

    அந்த அகண்ட வாசிப்புதான் ஜே.வி.யைப் புடம் போட்டு ஓர் அற்புத எழுத்தாளராய் உருவாக்கியிருக்கிறது.

    தமிழ் எழுத்துலகில் ஒரு சாதனையைச் சத்தமில்லாமல் செய்து முடித்துவிட்ட ஜே.வி., இன்னமும் ஓர் நாற்பது ஆண்டுகள் எழுதிக் கொண்டே ஆரோக்கியமாய் மகிழ்ச்சியாய் தம் துணையோடு நூறு வயதைக் கடந்தும் வாழ இறையருளை வேண்டுகிறேன்.

    இது பேராசை அல்ல.

    நடக்கப் போகிற நிஜம்.

    மிக்க அன்புடன்,

    ராஜேஷ்குமார்

    1. அம்மாவின் பெட்டி

    ‘குமுதம்’ வார இதழ் 29-8-2018.

    அம்பத்தூரில் வசிக்கும் தங்கை கலாவிடமிருந்து ராகவனுக்கு அலைபேசி அழைப்பு.

    அண்ணே, அம்மாவுக்கு கொஞ்சம் ஒடம்பு அதிகமா இருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன்னா வரமாட்டேன்னு அடம்…

    என்ன ஒடம்பு அவங்களுக்கு? நல்லாத்தானே இருந்தாங்க...

    ஆமாண்ணே. போன வியாழக்கிழமை வீட்டுல பூஜை வெச்சிருந்தேன். நிறைய டெவோட்டீஸ் வந்திருந்தாங்க. சுவாமிக்கு அலங்காரம், புஷ்ப ஜோடிப்பு எல்லாம் அவங்கதான். வழக்கம்போல வந்தவங்க சிலர் கிட்டே மூஞ்சியைத் தூக்கி வெச்சிகிட்டு, எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாங்க. வழக்கமா கூட்டு வழிபாட்டுக்கு வர்றவங்க எல்லோரும் என் மேல பிரியம் உள்ளவங்க. அம்மாவோட குணம் முன்னாடியே தெரிஞ்சிருந்ததால, ஒர்த்தரும் அதைப் பெரிசா எடுத்துக்கல...

    அம்மா குணம் தெரிஞ்சதுதானே? என்ன பண்ணுது?

    ரெண்டு நாளா அவங்களால் எதையும் சாப்பிட முடியலை. கால் தம்ளர் பால் கொடுத்தேன். அதையும் வாந்தி எடுத்துட்டாங்க. கால் ரெண்டும் வீங்கியிருக்கு. சுறு சுறுப்பா வீட்டுல சுத்திச் சுத்தி வர்ற அவங்க ஒரே எடத்துலியே சுருண்டு படுத்துக் கெடக்கறதைப் பார்க்க முடியலை! பெரியவனைப் பாக்கணும்னு அப்பப்ப சொல்றாங்க. நீங்க வந்து பாத்து ரெண்டு வார்த்தை பேசினீங்கன்னா தெம்பா எழுந்து ஒக்காந்துடுவாங்க!

    நான் ஒங்க அண்ணி ராஜத்தை மிஷன் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிட்டு, வீட்டுக்கும் ஆஸ்பிடலுக்கும் அல்லாடிகிட்டிருக்கேன். இப்ப, இது வேற ஒரு பிரச்சினையா?

    நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்கண்ணே. பங்கஜமும் கெளரியும் இங்கதான் இருக்காங்க. அம்மாவை அவங்களும் கூட இருந்து பாத்துக்கறாங்க... ஏதாச்சும் அதிகமா அம்மாவுக்கு முடியலைன்னா போன் போடறேன்... வந்துடுங்க. அப்புறம், அண்ணிக்கு எப்டிண்ணா ஒடம்பு இருக்கு? ஆஸ்பத்திரியில் என்ன சொன்னாங்க? ஹார்ட்டுல ஏதோ பிராப்ளம். வால்வ் மாத்தணும்னும் லட்சக் கணக்குல பணம் செலவாகும்னும் சொன்னீங்க. ரொம்பக் கவலையா இருக்குண்ணா... அப்பா இறந்த பிற்பாடு, மூணு தங்கச்சிகளை நீங்களும் அண்ணியும்தான் பாத்துகிட்டீங்க. அண்ணிக்கும் அம்மாவுக்கும் ஒருத்தருக்கொருவர் பிடிக்காம போச்சே தவிர, எங்க எல்லோருக்கும் அண்ணின்னா கடவுள் மாதிரிண்ணே. அவங்களுக்குப் போய் இப்படியொரு கஷ்டம் வந்திருக்க வேணாம்!

    ராகவனுக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. வெச்சிடறேம்மா. ஒங்க அண்ணி ஆஸ்பத்திரில பெட்லதான் இருக்கா. வர்ற வாரம் ஆபரேஷன். ஹார்ட் வால்வ் ரீப்ளேஸ் பண்ணப் போறதா பெரிய டாக்டர் சொல்றார். சரி, நா அப்புறம் பேசறேன்மா!

    போனை வைத்துவிட்டு ராகவன் தொலைவில் தெரிந்த கோயில் கோபுரத்தை வெறித்துப் பார்த்தார். ‘வாழ்க்கையில் மனிதருக்குக் கஷ்டங்கள் வரலாம். ஆனால், இப்படியா? என்ன கொடுமை? ஏன் எனக்கு மட்டும் இப்படி?’

    மறுநாள் தகவல் வந்தது. ராகவனின் தாய் அன்னத்தின் கதை முடிந்து விட்டது என்று.

    சாயங்காலம் நாலு மணிக்கு அம்மா மூச்சு விட சிரமப்பட்டாங்க. பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் வழியிலேயே உயிர் போயிடுச்சு அண்ணே… அம்மாவின் உடம்பை இங்கேயே அடக்கம் பண்ணிட முடிவு செய்துடலாமா? அங்கே அண்ணி ஆஸ்பத்திரில இருக்கிறதால, இங்கேயே பண்றதுதான் சரியா இருக்கும்னு தோணுதுண்ணே. நானும் இங்கே தங்கைகளும் அதே முடிவைத்தான் எடுத்திருக்கோம்… நீங்க என்ன சொல்றீங்க?

    என்ன பண்றதுன்னு தெரியாமக் கொழம்பிப் போயிருந்தேன் கலா. என் பளுவை நீ தீர்த்துட்டேம்மா. நீ சொல்றது ரொம்பச் சரி. அம்மாவுக்கும் என் மனைவிக்கும் தினம் மோதல் வந்து நான் கஷ்டப்பட்டப்ப, அம்மாவை என்கிட்டே அனுப்பிடுங்கண்ணே, நான் பாத்துக்கறேன். எனக்கு ஏதும் சிரமமில்லன்னு நீ சொன்னே. இப்ப, அங்கேயே அடக்கம் பண்ண ஏற்பாடு செய்றேன்னு சொல்லி என் வயித்துல பால் வார்த்திருக்கே. உனக்கு என்ன கைமாறு செய்யப் போறேன் கலா?

    என்னண்ணே, பெரிய வார்த்தையெல்லாம். அண்ணியைப் பாத்துக்க ஆள் போட்டுட்டு, சீக்கிரம் இங்கே வாங்க. மூத்த பையன்கிறதால நீங்கதான் கொள்ளி போடணுமாம். நாளைக்கு மதியம் எடுத்துடலாம்னு சொல்றாரு என் வீட்டுக்காரரு...

    சரிம்மா, நான் அடுத்த பஸ்சிலேயே கிளம்பி வந்துடறேன்…

    ***

    கண்ணாடிப் பேழையில் அன்னம் மீளாத் துயில் கொண்டிருந்தார். வாசலில் ட்ரம்ஸ் அடிப்பின் அதிர்வில் செவிப்பறை கிழிந்தது. வீட்டுக்கு முன், வீதி நடுவில செத்தை, குப்பைகளை எரித்து, அதைச் சுற்றி வட்டமாக நின்றவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் இளைஞர்கள். தோல் வாத்தியங்களை நெருப்பில் சூடு படுத்தி, இரண்டு கைகளிலும் குச்சிகள் வைத்து, ரிதத்துடன் அடித்து, அந்தப் பிரதேசத்தையே கலக்கிக் கொண்டிருந்தார்கள்.

    அம்மாவின் மரணம் ராகவனை அதிகமாகப் பாதிக்கவில்லை. அவர் கண்ணில் ஒரு துளிக் கண்ணீர் கூட வெளிப்படவில்லை. அம்மா செய்த அக்கிரமம், அழிச்சாட்டியம் ராகவன் மனசில் கசப்பையே நிறைத்து வைத்திருந்தது. இருந்தாலும் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமை உணர்வு மனதில் உறுத்தவே ஓடி வந்திருந்தார்.

    வந்தவுடன் ராகவன் தங்கை கலாவை வீட்டுக்குள் அழைத்துப் போய் தாயின் இறுதிச் செலவுக்குக் கொண்டு போயிருந்த பணத்தைக் கொடுத்தார். அவள் வாங்க மறுத்தாள். "அண்ணே, மாசாமாசம் நீங்க தவறாம அம்மாவுக்கு மணியார்டரில் அனுப்பின பணத்தை அம்மா செலவே பண்ணாம சேர்த்து வெச்சிருந்தாங்க. போன மாசம் அம்மா என்னை நகைக் கடைக்குக் கூட்டிப் போயிருந்தாங்க. தன் தோடு, மூக்குத்தி, கழுத்து

    Enjoying the preview?
    Page 1 of 1