Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirunaangur Divya Desangal
Thirunaangur Divya Desangal
Thirunaangur Divya Desangal
Ebook151 pages41 minutes

Thirunaangur Divya Desangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'திருநாங்கூர் திவ்ய தேசங்கள்' என்கிற புராண, வரலாற்று ஆலயத் தேற்று நூல்! திவ்ய தேசங்கள் என்ற சொல் காதில் விழும்போதே அந்தத் திருமாலின் திரு உருவமும், அவன் சார்ந்த ஸ்ரீவைஷ்ணவ நெறிப்பாடுகளும் மனமிசை நமக்குள் தோன்றத் தொடங்கி விடும். கூடவே ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள், பன்னிரு ஆழ்வார்கள், இவர்களின் பிரபந்தப் பாடல்கள் என்று அகிலமும் நமக்குள் அணிவகுத்தும் நின்று விடும்.

இந்தத் திவ்ய தேசங்கள் 108-ல் 106 தான் நிலமிசை உள்ளது. மீதமுள்ள இரண்டான திருப்பாற்கடலும், வைகுண்டமும் விண்ணகரில் உள்ளது. மண்மிசை உள்ள 106-ஐயும் திட்பமுடன் கடந்தவர்க்கே இந்த இரண்டும் வாய்க்கும். இந்த 106-ல் 40 திவ்ய தேசங்களை சோழதேசம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தச் சோழ மண்ணில்தான் வைணவமும் சைவமும் போட்டி போட்டுக் கொண்டு தழைத்தன. இந்த நாற்பதிலும்கூட ஒரு பதினோரு திவ்ய தேசங்கள் சீர்காழி நகரைச் சுற்றி பத்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள், சென்று வர முடிந்த தொலைவிற்குள் இருப்பதுதான் ஒரு ஆச்சர்யம்.

Languageதமிழ்
Release dateDec 2, 2023
ISBN6580170310418
Thirunaangur Divya Desangal

Read more from J.V. Nathan

Related to Thirunaangur Divya Desangal

Related ebooks

Reviews for Thirunaangur Divya Desangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirunaangur Divya Desangal - J.V. Nathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருநாங்கூர் திவ்ய தேசங்கள்

    Thirunaangur Divya Desangal

    Author:

    ஜே.வி.நாதன்

    J.V. Nathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jv-nathan

    பொருளடக்கம்

    மதிப்புரை

    என்னுரை

    1. நுழைவாயில்

    2. திருவாலி - திருநகரி திவ்யதேசம், பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம்

    3. மணிமாடக் கோயில் ஸ்ரீபத்ரி நாராயணப் பெருமாள்

    4. திரு அரிமேய விண்ணகரம் ஸ்ரீகுடமாடு கூத்தர் பெருமாள்

    5. திருச்செம்பொன் செய்கோயில் ஸ்ரீ பேரருளாளன்

    6. திருத்தெற்றியம்பலம் ஸ்ரீசெங்கண்மால்

    7. திருவெள்ளக்குளம் ஸ்ரீஅண்ணன் பெருமாள்

    8. திரு வண்புருடோத்தமம் ஸ்ரீவண் புருஷோத்தமப் பெருமாள்

    9. திருமணிக்கூடம் ஸ்ரீவரதராஜப் பெருமாள்

    10. திருவைகுந்த விண்ணகரம் ஸ்ரீவைகுந்த நாதர்

    11. கீழைச் சாலை - திருத்தேவனார் தொகை ஸ்ரீமாதவப் பெருமாள்

    12. ஸ்ரீ பார்த்தன் பள்ளி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீகோலவில்லிராமர்

    13. திருக்காவளம்பாடி ஸ்ரீகோபாலகிருஷ்ணன்

    ஆசிரியர் குறிப்பு

    சமர்ப்பணம்

    என் அன்பு மகன் திரு ஜே.வி.கணபதி சுப்ரமணியன், பாசமிகு மருமகள் திருமதி ஜெயஸ்ரீ மற்றும் இனிமையான என் பேத்திகள் அவ்னி, வெண்பா ஆகியோருக்கு.

    மதிப்புரை

    எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்

    தமிழ் பத்திரிகையாளர் உலகில் ஒரு தனித்த இடத்தைப் பெற்று பல்லாண்டுகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரு ஜே.வி.நாதன்.

    பத்திரிகையாளர், கட்டுரையாளர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட ‘இன்னொரு பிரம்மா’ என்றும் தாராளமாய் இவரைப் பற்றிக் குறிப்பிடலாம்.

    என் நினைவு தெரிந்தே 50 ஆண்டுகளாக எழுதி வருபவர்… அநேகமாய் இவரை அறிந்திராத இலக்கியவாதிகள் இல்லை என்றே கூறிவிடலாம்.

    அப்படிப்பட்ட இவர் அகவை எழுபதைக் கடந்த நிலையிலும் ஓய்வுக்கு ஒரு ஓய்வைக் கொடுத்து, இளம்பிள்ளை போல் பயணங்கள் பல செய்து, மிகுந்த மெனக்கெடலோடு இவரால் எழுதப்பட்டதுதான் இந்த ‘திருநாங்கூர் திவ்ய தேசங்கள்’ என்கிற புராண, வரலாற்று ஆலயத் தேற்று நூல்!

    திவ்ய தேசங்கள் என்ற சொல் காதில் விழும்போதே அந்தத் திருமாலின் திரு உருவமும், அவன் சார்ந்த ஸ்ரீவைஷ்ணவ நெறிப்பாடுகளும் மனமிசை நமக்குள் தோன்றத் தொடங்கி விடும். கூடவே ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள், பன்னிரு ஆழ்வார்கள், இவர்களின் பிரபந்தப் பாடல்கள் என்று அகிலமும் நமக்குள் அணிவகுத்தும் நின்று விடும்.

    இந்தத் திவ்ய தேசங்கள் 108-ல் 106 தான் நிலமிசை உள்ளது. மீதமுள்ள இரண்டான திருப்பாற்கடலும், வைகுண்டமும் விண்ணகரில் உள்ளது. மண்மிசை உள்ள 106-ஐயும் திட்பமுடன் கடந்தவர்க்கே இந்த இரண்டும் வாய்க்கும். இந்த 106 ல் 40 திவ்ய தேசங்களை சோழதேசம் தன்னகத்தே கொண்டுள்ளது.

    இந்தச் சோழ மண்ணில்தான் வைணவமும் சைவமும் போட்டி போட்டுக் கொண்டு தழைத்தன. இந்த நாற்பதிலும்கூட ஒரு பதினோரு திவ்ய தேசங்கள் சீர்காழி நகரைச் சுற்றி பத்து கிலோ மீட்டர் சுற்றளவிற்குள், சென்று வர முடிந்த தொலைவிற்குள் இருப்பதுதான் ஒரு ஆச்சர்யம்.

    இந்தப் பதினோரு திவ்ய தேசங்களான ‘மணிமாடக் கோவில், திருச்செம்பொன் செய் கோவில், அரிமேய விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருவெள்ளக்குளம், திருவண்புருஷோத்தமம், திருமணிக்கூடம், திருவைகுந்த விண்ணகரம், கீழைச்சாலை, ஸ்ரீபார்த்தன் பள்ளி, திருக்காவளம்பாடி’ ஆகிய இந்தக் கோவில்களுக்கு ஒரு பெரும் சிறப்பு என்னவென்றால், ஒரு ஆண்டு முழுக்க ஏகாதசி விரதம் இருந்த பயனை இந்த 11 கோவில்களின் தரிசனம் நமக்குத் தந்துவிடுகிறது என்பதுதான்!

    புரசை மரங்கள் சூழ்ந்த பலாச வனப் பகுதியாகவும் இந்த 11 திவ்ய க்ஷேத்திரங்களும் கருதப்படுகின்றன. இறைவனுக்கும் அவனது வேள்விக்கும் உரிய சமித்துகளில் புரசையும் ஒன்று. பெரும் மருத்துவ குணம் கொண்டது இதன் புகை என்றால், இந்த விருட்சத்தின் மருத்துவச் சிறப்பைச் சொல்லத் தேவையில்லை.

    இந்த விருட்சக் காட்டை வருடிவரும் காற்றுக்குள் உயிர்க்காற்று எனப்படும் ஆக்சிஜனின் அளவும் அபரிமிதமாய் இருப்பதால் இந்த ஆலயங்களை அலைந்து திரிந்து நாம் தரிசிக்கும் சமயம், நம் பெரும் எத்தனத்தால் சுவாசக் கிரியை வேகமடைந்து ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்ளும் ஒரு உந்துதல் உருவாகிறது. இது உடல், மனம் இரண்டுக்குமே பெரும் நலமளிப்பதை நாம் மறுக்க முடியாது.

    இப்படி ஒரு நலம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கருதியே அந்நாளில் இப்பரந்த மண்மிசை இங்கு இத்தலங்கள் தோன்றின. இதனால் திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படும் இந்தப் பதினோரு திவ்ய தேசங்களுக்கு ஒரு தனித்த சிறப்பு இருப்பதைக் காண்கிறோம்.

    மேலினும் மேலாக அந்த ஆதி சிவனின் பிரம்மஹத்தி தோஷத்திற்கான சாபவிமோசனம் அளித்த தலங்களாகவும் இவை இருப்பதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். தோஷத்திற்கு ஆளான சிவபெருமான், இந்த பதினோரு திவ்ய தேசப் பெருமாள்களின் தரிசனத்திற்கு ஆளாகி சாபவிமோசனம் பெற்றுத் தெளிந்தாராம்!

    அம்மட்டில் சைவ வணவ ஒற்றுமைக்கும் இணக்கத்திற்கும் இந்த ஆலயங்கள் சான்றாக உள்ளன. பல ஆழ்வார் பெருமக்களால் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களாக இவை இருப்பதோடு, திருமங்கை ஆழ்வாரையும் இத்தலங்களில் ஒன்றான திருவாலிதான் நமக்களித்தது. பன்னிரு ஆழ்வார்களில் நமக்கெல்லாம் மிக நெருக்கமாய் உணர முடிந்தவர் திருமங்கை ஆழ்வார் ஆவார்! மறவர் குலத்தில் பிறந்து, மது, மாமிசம், மங்கை என வாழ்ந்து, வேட்டை, போர் எனப் புரிந்து இந்த மாய உலகின் ஆசாபாசங்களின் ஒரு கனத்த மூட்டையாகத் திகழ்ந்தவர் இவர்! ‘சாபம், தாபம், காமம், குரோதம், வன்மம், செருக்கு, தைரியம், வீரம், புகழ் போதை’ என்ற நவரச உணர்வுகளின் களமாகவே விளங்கியவர்!

    இப்படிப்பட்ட இவரை ஒரு இளம்பெண் திருமால் அடிமையாக மாற்றுகிறாள். திருமாலை இவர் நெஞ்சம் அறிந்தபின், அது தெளிந்து நிமிர்ந்து இவரை அதுவே ஒரு நல்ல ஸ்ரீவைஷ்ணவராக்கி பின் ஆழ்வார்களின் வரிசையிலும் சேர்க்கிறது.

    ஆழ்வார் பெருமக்களில் பெரியவர் சிறியவர் என்ற பேதங்களுக்கு இடமேயில்லை. தங்களின் பக்திச் சிறப்பால் பெரும் தியாகங்களால், உயர்ந்த செயல்களால் ஆழ்வார் என்கிற பதத்துக்கு அவர்கள் உரியவர்களாயினர். இவர்களில் திருமங்கையாழ்வார் சற்றே மாறுபடுவதையும், கூடுதல் வியப்பளிப்பதையும் கூர்ந்து நோக்கினால் உணரலாம்.

    தனக்கு எதுவானாலும் பரவாயில்லை - தன்னை இந்த உலகம் பழித்தால் பழித்துவிட்டுப் போகட்டும் - என்று தன்னையே அடகு வைத்து களவுத் தொழில் புரிந்து அதன்மூலம் ஆலயங்களைச் செப்பனிட்டவர் இவர்.

    ஒருவர் தன் உயிரையே தர முற்படுவதை விடச் சிறந்தது தன் புகழைத் தருவதும், இகழிற்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்வதுமாகும். பிறர் பழிக்க வாழக்கூடாது என்பதுதானே மானுடத்தின்

    Enjoying the preview?
    Page 1 of 1