Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thondai Naattu Divya Desangal
Thondai Naattu Divya Desangal
Thondai Naattu Divya Desangal
Ebook161 pages39 minutes

Thondai Naattu Divya Desangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பர்களுக்கு,

வணக்கம். “தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள்” என்ற இந்த நூலைப் படிக்கத் தேர்வு செய்த நீங்கள் மிகவும் பாக்கியசாலி. இந்த நூலில் மேற்காணும் தொண்டைமண்டலப் பகுதிகளில் அமைந்த 22 திவ்ய தேசங்களைப் பற்றிய தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

கோயில் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பதினான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இவ்வாறாக ஒரு நகரத்தில் இவ்வளவு திவ்ய தேசங்கள் வேறெங்கும் அமைந்திருக்கவில்லை. மேலும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சிவத்தலங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. அவை இரண்டும் திருநிலாத்திங்கள் துண்டம் (ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்) மற்றும் திருக்கள்வனூர் (ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோயில்) காஞ்சிபுரத்திலேயே அமைந்துள்ளதும் சிறப்பம்சமாகும்.

காஞ்சிபுரத்தில் 1978 முதல் 1981 வரை பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் படித்த போது அனைத்து ஸ்தலங்களுக்கும் பலமுறை சென்று தரிசிக்கும் பேறு பெற்றேன். நான் தொண்டைநாட்டில் அமைந்த 22 திவ்ய தேச ஸ்தலங்களையும் பலமுறை சென்று தரிசிக்கும் பாக்கியமும் பெற்றேன்.

இந்த நூலை வெளியிடும் புஸ்தகா நிறுவனத்தில் மின்னனூலாக வெளிளிடும் திரு.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி.

அன்புடன்
ஆர்.வி.பதி

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580138807283
Thondai Naattu Divya Desangal

Read more from R.V.Pathy

Related to Thondai Naattu Divya Desangal

Related ebooks

Related categories

Reviews for Thondai Naattu Divya Desangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thondai Naattu Divya Desangal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள்

    Thondai Naattu Divya Desangal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள் – ஓர் அறிமுகம்

    திருக்கச்சி அத்திகிரி

    அட்டபுயக்கரம்

    திருத்தண்கா - தூப்புல்

    திருவேளுக்கை

    திருநீரகம் (047) – திருஊரகம் (050) – திருக்காரகம் (052) – திருக்கார்வானம் (053)

    திருப்பாடகம்

    திரு நிலாத்திங்கள் துண்டம்

    திருவெக்கா

    திருக்கள்வனூர்

    திருப்பவளவண்ணம்

    திருப்பரமேச்சுர விண்ணகரம்

    திருப்புட்குழி

    திருநின்றவூர்

    திருஎவ்வுள் (திருவள்ளுர்)

    திருவல்லிக்கேணி

    திருநீர்மலை

    திருவிடந்தை

    திருக்கடல்மல்லை

    திருக்கடிகை (சோளிங்கர்)

    என்னுரை

    அன்பர்களுக்கு,

    வணக்கம். தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள் என்ற இந்த நூலைப் படிக்கத் தேர்வு செய்த நீங்கள் மிகவும் பாக்கியசாலி. இந்த நூலில் மேற்காணும் தொண்டைமண்டலப் பகுதிகளில் அமைந்த 22 திவ்ய தேசங்களைப் பற்றிய தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

    கோயில் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பதினான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இவ்வாறாக ஒரு நகரத்தில் இவ்வளவு திவ்ய தேசங்கள் வேறெங்கும் அமைந்திருக்கவில்லை. மேலும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சிவத்தலங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. அவை இரண்டும் திருநிலாத்திங்கள் துண்டம் (ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்) மற்றும் திருக்கள்வனூர் (ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோயில்) காஞ்சிபுரத்திலேயே அமைந்துள்ளதும் சிறப்பம்சமாகும்.

    காஞ்சிபுரத்தில் 1978 முதல் 1981 வரை பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் படித்த போது அனைத்து ஸ்தலங்களுக்கும் பலமுறை சென்று தரிசிக்கும் பேறு பெற்றேன். நான் தொண்டைநாட்டில் அமைந்த 22 திவ்ய தேச ஸ்தலங்களையும் பலமுறை சென்று தரிசிக்கும் பாக்கியமும் பெற்றேன்.

    இந்த நூலை வெளியிடும் புஸ்தகா நிறுவனத்தில் மின்னனூலாக வெளிளிடும் திரு.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள் – ஓர் அறிமுகம்

    தொண்டைநாட்டில் திருக்கச்சி அத்திகிரி, அட்டபுயக்கரம், திருத்தண்கா, திருவேளுக்கை, திருநீரகம், திருப்பாடகம், திரு நிலாத்திங்கள் துண்டம், திரு ஊரகம், திருவெஃகா, திருக்காரகம், திருக்கார்வானம், திருக்கள்வனூர், திருப்பவளவண்ணம், திருப்பரமேச்சுர விண்ணகரம், திருப்புட்குழி, திருநின்றவூர், திருஎவ்வுள் (திருவள்ளுர்), திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருவிடவெந்தை, திருக்கடல்மல்லை, சோளசிம்மபுரம் (திருக்கடிகை) சோளிங்கர் என மொத்தம் 22 திவ்யதேசங்கள் அமைந்துள்ளன.

    தொண்டநாடு – ஒரு சிறுகுறிப்பு

    ‘தொண்டைநாடு காஞ்சி மாநகரைத் தலைமை இடமாகக் கொண்டு ஆளப்பட்டு வந்த பகுதியாகும் என்பதை இலக்கண இலக்கியக் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறியலாம். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி தொண்டை மண்டலம் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும், முந்தைய ஆர்க்காடு, செங்கற்பட்டு, நெல்லூர் மாவட்டங்களை உள்ளடக்கியதுமான தமிழ்நாட்டுப் பகுதி (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி,1982:2093) என்று தொண்டை மண்டல சதகத்தின் வழியாகக் கூறுகின்றது.

    வைணவ உரைநடை வரலாற்று முறைத் தமிழ்ப்பேரகராதி, தொண்டை மண்டலம் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும் ஆற்காடு, செங்கற்பட்டு, நெல்லூர் மாவட்டங்களை உள்ளடக்கியதுமான தமிழ்நாட்டுப் பகுதி (வைணவ உரைநடை வரலாற்று முறைத் தமிழ்ப் பேரகராதி, 2001:587) எனக் கூறுகிறது. இது இப்போதைய சித்தூர், செங்கற்பட்டு, வடார்க்காடு, தென்னார்க்காடு உள்ளிட்ட வட்டவடிவ நிலப்பரப்பினை உடையது’

    (ஆதாரம் முத்துக்கமலம் மின்னிதழில் பண்டைத் தமிழக வரலாற்றில் தொல் தொண்டை மண்டலம் என்ற தலைப்பில் முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620002 அவர்கள் எழுதிய கட்டுரை)

    தொண்டைமண்டல திவ்யதேசங்களில் பல தனிப்பெரும் சிறப்புகள் அமைந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை கீழே காணலாம்.

    1. பதினான்கு திவ்ய தேசங்கள் காஞ்சிமாநகரில் அமைந்துள்ளன. இப்படியாக ஒரு நகரத்தில் அதிகமாக திவ்யதேசங்கள் அமைந்துள்ளது காஞ்சிமாநகரத்தில்தான்.

    2. திவ்ய தேசங்களிலேயே மிகச்சிறிய வடிவிலான மூலவராக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குள் அமைந்த ஒரு சிறிய சன்னிதியில் திருக்கள்வனூர் பெருமாள் என்ற திருநாமம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

    3. பெருமாளின் நிறத்தைக் கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே தலம் காஞ்சி பவளவண்ணர் திருக்கோயில்.

    4. பொதுவாக வலப்பக்கத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீதேவி இடப்பக்கத்தில் திருப்புட்குழி தலத்திலும் திருவிடந்தை தலத்திலும் எழுந்தருளியுள்ளார்.

    5. ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மற்றும் திருமழிசையாழ்வார் என நால்வரின் அவதார ஸ்தலமாகத் திகழ்கின்றன. காஞ்சிபுரத்தில் அமைந்த திருவெஃகாவில் அவதரித்தவர் பொய்கையாழ்வார். கடல்மல்லை என்றழைக்கப்படும் மாமல்லபுரத்தில் அவதரித்தவர் பூதத்தாழ்வார். சென்னையில் அமைந்துள்ள திருமயிலையில் அவதரித்தவர் பேயாழ்வார். சென்னைக்கு அருகில் அமைந்த திருமழிசையில் அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.

    6. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் மகாவிஷ்ணு காஞ்சி மாநகரில் அமைந்துள்ள அட்டபுயக்கரத் தலத்தில் மட்டுமே எட்டு திருக்கரங்களுடன் அஷ்டபுஜப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி சேவை சாதிக்கிறார்.

    7. உலகளந்த பெருமாள் கோயில் நான்கு திவ்ய தேசங்கள் அமையப் பெற்ற ஒரே தலமாகத் திகழ்கிறது.

    திருக்கச்சி அத்திகிரி

    (காஞ்சிபுரம்)

    ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில் (043)

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூற்றியெட்டு வைணவத்தலங்களில் 43 வது தலம் விஷ்ணுகாஞ்சியில் அமைந்துள்ள பெருந்தேவித்தாயார் சமேத ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில்தான் உலகப்புகழ் பெற்ற அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளிகொண்டுள்ளார். இவர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்து வருகிறார். இந்த ஆலயத்து இறைவனை ஐராவதம் என்ற யானை மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். இதனால் இத்தலம் அத்திகிரி என்று அழைக்கப்படுகிறது. பிரம்மாண்டமான இத்தலம் 20 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு கோபுரம் 9 நிலைகளுடனும் மேற்கு கோபுரம் 7 நிலைகளுடன் அமைந்துள்ளது.

    தலவரலாறு

    C:\Users\PATHY\Desktop\unnamed.jpg

    ஒருசமயம் பிரம்மன் தனது மனம் தூய்மை பெற வேண்டி

    Enjoying the preview?
    Page 1 of 1