Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arokiya Vazhvirkku Muthiraigal
Arokiya Vazhvirkku Muthiraigal
Arokiya Vazhvirkku Muthiraigal
Ebook102 pages27 minutes

Arokiya Vazhvirkku Muthiraigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு விஷயம் ஆரோக்கியம். நன்றாக இருக்கும் போது நாம் நமது உடலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. உடலானது சீர்கெட்டு வியாதிகள் வரும்போதுதான் நாம் ஆரோக்கியத்தைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குகிறோம்.

நமது உடலை முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் பாதுகாக்க வேண்டும். பண்பாடு மிக்க நமது பாரத நாட்டில் யோகிகள் யோகம் பிராணாயாமம், தியானம், முத்திரைகள் என பல அதிசயமான வழிமுறைகளைக் கண்டறிந்து நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவை அனைத்தும் பொக்கிஷங்கள் என்றால் அது மிகையாகாது. இவை அறிவியல்பூர்வமாகவும் நிரூபணமாகியுள்ளன. வெளிநாட்டினர் இத்தகைய பொக்கிஷங்களைப் பயின்று முழுப்பலன்களையும் அனுபவித்து வருகிறார்கள். நாமோ அவற்றின் அருமை பெருமைகளைப் பற்றி இன்னமும் தெரியாதவர்களாகவே இருக்கிறோம்.

“ஆரோக்கிய வாழ்விற்குப் பிராணாயாமம்” “ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்” என்ற நூல்களைத் தொடர்ந்து “ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்” என்ற நூலினை உங்களுக்காக எழுதியுள்ளேன். முத்திரைப் பயிற்சி பல அதிசய விஷயங்களை உள்ளடக்கியது. பயிற்சி செய்வது மிகவும் சுலபம். இந்த நூல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றால் அது மிகையாகாது. இந்த நூலில் மொத்தம் 32 முத்திரைகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஒரு சிறந்த நூல்.

“ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்” என்ற இந்த நூலை தனது புஸ்தகா நிறுவனத்தில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி. புத்தகங்களின் மூலம் ஒன்றாய் இணைவோம். புத்தகங்களின் மூலம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். மீண்டும் புத்தகங்களில் வாயிலாக சந்திப்போம்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580138806623
Arokiya Vazhvirkku Muthiraigal

Read more from R.V.Pathy

Related to Arokiya Vazhvirkku Muthiraigal

Related ebooks

Reviews for Arokiya Vazhvirkku Muthiraigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arokiya Vazhvirkku Muthiraigal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்

    Arokiya Vazhvirkku Muthiraigal

    Author:

    ஆர். வி. பதி

    R. V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை

    ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு விஷயம் ஆரோக்கியம். நன்றாக இருக்கும் போது நாம் நமது உடலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. உடலானது சீர்கெட்டு வியாதிகள் வரும்போதுதான் நாம் ஆரோக்கியத்தைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குகிறோம்.

    நமது உடலை முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் பாதுகாக்க வேண்டும். பண்பாடு மிக்க நமது பாரத நாட்டில் யோகிகள் யோகம் பிராணாயாமம், தியானம், முத்திரைகள் என பல அதிசயமான வழிமுறைகளைக் கண்டறிந்து நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவை அனைத்தும் பொக்கிஷங்கள் என்றால் அது மிகையாகாது. இவை அறிவியல்பூர்வமாகவும் நிரூபணமாகியுள்ளன. வெளிநாட்டினர் இத்தகைய பொக்கிஷங்களைப் பயின்று முழுப்பலன்களையும் அனுபவித்து வருகிறார்கள். நாமோ அவற்றின் அருமை பெருமைகளைப் பற்றி இன்னமும் தெரியாதவர்களாகவே இருக்கிறோம்.

    ஆரோக்கிய வாழ்விற்குப் பிராணாயாமம் ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம் என்ற நூல்களைத் தொடர்ந்து ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள் என்ற நூலினை உங்களுக்காக எழுதியுள்ளேன். முத்திரைப் பயிற்சி பல அதிசய விஷயங்களை உள்ளடக்கியது. பயிற்சி செய்வது மிகவும் சுலபம். இந்த நூல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றால் அது மிகையாகாது. இந்த நூலில் மொத்தம் 32 முத்திரைகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஒரு சிறந்த நூல்.

    ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள் என்ற இந்த நூலை தனது புஸ்தகா நிறுவனத்தில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி. புத்தகங்களின் மூலம் ஒன்றாய் இணைவோம். புத்தகங்களின் மூலம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். மீண்டும் புத்தகங்களில் வாயிலாக சந்திப்போம்.

    ஆர் .வி .பதி

    பொருளடக்கம்

    என்னுரை

    ஆயுசு நூறு

    முத்திரைகள் - ஓர் அறிமுகம்

    பிரம்ம முகூர்த்தம்

    பத்மாசனம்

    அர்த்த பத்மாசனம்

    வஜ்ஜிராசனம்

    ஓம்

    நம்புங்கள்

    ஆன்மிக முத்திரைகள்

    நலம் தரும் முத்திரைகள்

    பரதநாட்டியத்தில் முத்திரைகள்

    மூன்று அடிப்படை குணங்கள்

    கடவுளை அடையும் வழிமுறைகள்

    அஷ்டாங்க யோகம்

    ஏழு சக்கரங்கள்

    பிராணாயாமா - ஓர் சிறிய அறிமுகம்

    நாடிசுத்தி

    தியானம் ஓர் அறிமுகம்

    உடல் நலம் காக்கும் உணவுகள்

    எப்படிச் செய்ய வேண்டும்?

    எளிமையாகக் கற்கலாம்

    ஆயுசு நூறு

    மனிதனாய் பிறக்கும் நம் அனைவருக்குமே ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மேலும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? அதற்காக நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் என்னென்ன? உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள். உடற்பயிற்சி என்பது நமது உடலை கட்டுப்கோப்பாக மாற்ற உதவும் ஒரு பயிற்சி. நமது உடலுக்குள் சேரும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். உடலின் வெளிப்புறத்தை கவர்ச்சிகரமாக மாற்றிக் காட்டும். உடலின் வெளிப்புறம் மட்டும் கவர்ச்சிகரமாக இருந்தால் போதுமா? இதை விட முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது உடலினுள் காணப்படும் நூற்றுக்கணக்கான உறுப்புகள் தொடர்ந்து சிறப்பாக இயங்க வேண்டும். உடலுக்குள் உள்ள உறுப்புகளைத் தொடர்ந்து சிறப்பாக இயங்க வைக்கத் தேவையான பயிற்சிகளே யோகம், மூச்சுப்பயிற்சி, முத்திரை மற்றும் தியானப் பயிற்சி போன்றவைகளாகும். இத்தகைய பயிற்சிகளை முறைப்படி கற்று தொடர்ந்து செய்து வந்தால்

    Enjoying the preview?
    Page 1 of 1