Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sirappana Vazhvu Tharum Vainava Thalangal
Sirappana Vazhvu Tharum Vainava Thalangal
Sirappana Vazhvu Tharum Vainava Thalangal
Ebook164 pages42 minutes

Sirappana Vazhvu Tharum Vainava Thalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். 20 வைணவத் தலங்கள் அடங்கிய “வளமான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்” என்ற நூலினைத் தொடர்ந்து “சிறப்பான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்” என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 வைணவத் தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை. இது போன்று இன்றும் மூன்று வைணவக்கோயில் நூல்களை எழுத இருக்கிறேன். இந்த நூலினை சிறப்பாக மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580138807163
Sirappana Vazhvu Tharum Vainava Thalangal

Read more from R.V.Pathy

Related to Sirappana Vazhvu Tharum Vainava Thalangal

Related ebooks

Reviews for Sirappana Vazhvu Tharum Vainava Thalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sirappana Vazhvu Tharum Vainava Thalangal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    சிறப்பான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்

    Sirappana Vazhvu Tharum Vainava Thalangal

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஸ்ரீலட்சுமி நரசிம்மஸ்வாமி திருக்கோயில்

    ஸ்ரீஅனந்தவல்லி ஸமேத ஸ்ரீ அழகு சுந்தரவரதராஜப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீ பச்சை வாரணப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீதயாலெஷ்மி சமேத ஸ்ரீவானமுட்டிப்பெருமாள் (என்கிற) ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீபூமிநீளா ஸமேத ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீ சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோயில்

    ஸ்ரீ வைகுண்டப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீயோகராமர் திருக்கோயில்

    ஸ்ரீ லஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயில்

    ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீபுண்டரீக வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோவில்

    திருவேங்கடப்பெருமாள் திருக்கோயில்

    ஸ்ரீசீதாதேவி சமேத ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோயில்

    ராதா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபாலஸ்வாமி திருக்கோயில்

    ஸ்ரீஆனந்தவள்ளி சமேத சுந்தரவரதராஜப்பெருமாள் திருக்கோயில்

    சிறப்பான வாழ்வு தரும் வைணவத் தலங்கள்
    ஆர்.வி.பதி

    60 குமுதம்

    அணுபுரம் 603127

    திருக்கழுக்குன்றம் வட்டம்

    செங்கற்பட்டு மாவட்டம்

    9443520904

    என்னுரை

    வணக்கம். 20 வைணவத் தலங்கள் அடங்கிய வளமான வாழ்வு தரும் வைணவத் தலங்கள் என்ற நூலினைத் தொடர்ந்து சிறப்பான வாழ்வு தரும் வைணவத் தலங்கள் என்ற இந்த நூலில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பான 20 வைணவத் தலங்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த கோயில் கட்டுரைகள் அனைத்தும் குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம் முதலான பிரபல ஆன்மிக இதழ்களில் பிரசுரமாகி வாசகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றவை. இது போன்று இன்றும் மூன்று வைணவக்கோயில் நூல்களை எழுத இருக்கிறேன்.

    இந்த நூலினை சிறப்பாக மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    ஜீன் 2021

    ஆவணியாபுரம்

    ஸ்ரீலட்சுமி நரசிம்மஸ்வாமி திருக்கோயில்

    G:\Finished Perumal Temples\Aavaniyapuram Narashimar Temple\Avaniyapuram Entrance.jpg

    நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை என்பது ஆன்மிக மொழி. வேண்டும் வரங்களை கணப்பொழுதில் தந்தருள்பவர் நரசிம்மர். தமிழ்நாட்டில் பல இடங்களில் நரசிம்மஸ்வாமி எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு வட்டத்தில் அமைந்த தட்சிண அஹோபிலம் என்று அழைக்கப்படும் ஆவணியாபுரத்தில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் திருவரங்கம், திருப்பதி, சோளிங்கர், காஞ்சிபுரம் மற்றும் ஆவணியாபுரம் ஆகிய ஐந்து மூர்த்திகளும் ஒரு சேர அருள்பாலிப்பதால் இத்தலம் பஞ்சஷேத்திரஸ்தலம் எனப் பெயர் பெற்றுத் திகழ்கிறது. இத்தலம் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்சதிருப்பதி, ஆவணி நாராயணபுரம் என்று பல அற்புதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு :

    G:\Finished Perumal Temples\Aavaniyapuram Narashimar Temple\avaniyapuam temple.jpg

    இரண்யகசிபு கடுந்தவம் இயற்றி தேவர்களாலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, இரவிலோ, பகலிலோ, உள்ளேயோ, வெளியேயோ தனக்கு மரணம் நிகழக்கூடாது என்ற விநோதமான வரத்தைப் பெற்றிருந்தான். இதனால் தேவர்கள் முதலான பலரையும் துன்புறுத்தி வந்தான். அகந்தை அவன் மனதில் நிறைந்திருந்தது. இரண்யகசிபுவுக்கு நாரதமுனிவரிடம் மந்திரோபதேசம் பெற்ற பிரகலாதன் என்ற ஆண் குழந்தை பிறந்து நாராயணன் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கியது. இதனால் ஆத்திரமடைந்த இரண்யகசிபு தன் மகனான பிரகலாதனையே கொல்லத் துணிந்தான். தன் நாராயணன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று பிரகலாதன் கூற அகந்தை மனம் படைத்த இரண்யகசிபுவோ அலட்சியமாய் பேச நாராயணன் மனித உருவமும் சிங்க முகமும் கொண்ட நரசிம்மராக அவதரித்து தூணிலிருந்து வெளிப்பட்டு இரண்யகசிபுவை பகலுமல்லாத இரவுமல்லாத அந்திசாயும் வேளையில், உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாயிற்படியில் வைத்து வதம் செய்து அழித்தார். ஆக்ரோஷமான நரசிம்மர் கோலத்தை பிருகு முனிவருக்காக மீண்டும் காட்டி அருளிய ஒரு அற்புதத் தலமே இந்த ஆவணியாபுரம்.

    தேவர்களும், முனிவர்களும் நரசிம்மரை வணங்கி அவருடைய திருக்கோலத்தை ஈரேழு உலகத்திற்கும் காட்டியருள வேண்டும் என வேண்டிக் கொண்டனர். இதற்கு நரசிம்மர் "தேவர்களாகிய நீங்கள் ஒரு உத்தமமான இடத்தில், குளிர்ச்சிதரும் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்து வாருங்கள். உங்கள் விருப்பத்தை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறேன்’ என்று கூறினார். இதன் பொருட்டு பூலோகம் வந்த தேவர்கள் இத்தலத்தில் வெப்பாலை மரங்களாக தோன்றி தவமிருந்தனர். அங்கு வந்த பிருகு முனிவர் வெப்பாலை மரத்தடியில் தவமியற்றினார்.

    ஒரு சுவாதித் திருநாளில் தேவர்களுக்கும், பிருகு முனிவருக்கும் லட்சுமி நரசிம்மராய் காட்சி தந்து அருளினார். அனைவரும் வணங்கி மகிழ்ந்தனர். பிருகு முனிவரோ இத்தலத்தில் தாங்கள் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’ என்று நரசிம்மரிடத்தில் விண்ணப்பிக்க அவரும் மலை உச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகவும், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளாகவும், திருவரங்கம் அரங்கநாதப் பெருமாளாகவும், சோளிங்கர் யோகநரசிம்மராகவும் எழுந்தருளினார். பெருமாளின் பஞ்ச திருக்கோலங்களை ஒரு சேர தரிசித்த பிருகு முனிவர் அம்மூர்த்திகளைப் பூஜிக்கத் தீர்த்தம் ஒன்றினை அருளுமாறும் வேண்டிக் கொள்ள ஸ்ரீலஷ்மி நரசிம்மர் தனது வலக்கரத்திலிருந்து ஒரு தீர்த்தத்தினை உண்டாக்கினார். பெருமாளின் திருக்கரத்திலிருந்து தோன்றிய அத்தீர்த்தம் பாகூ நதி எனும் பெயர் பெற்றது. ஏரண்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரை தரிசித்து அட்டமாசித்திகளைப் பெற்றார். நாரதரும், தும்புருவும் இத்தலத்து நரசிம்மரை வணங்கி வேண்டி விரும்பிய உலகங்களுக்குச் செல்லும் பேற்றினை அடைந்தனர்.

    தேவர்கள் இத்தலத்தில் வெப்பாலை மரங்களாக தவமியற்றிய போது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தங்களின் சுயவடிவம் பெற்று ஸ்ரீ லஷ்மிநரசிம்மரைப் பூஜித்து வந்தார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் சுவாதி நட்சத்திரத்தன்றும், சனிக்கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் லஷ்மியின் முகம் சிங்க முகத்தில் காட்சியளிக்கிறது. மேலும் கருடாழ்வாரும்

    Enjoying the preview?
    Page 1 of 1