Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennavarey Mannavarey
Ennavarey Mannavarey
Ennavarey Mannavarey
Ebook205 pages47 minutes

Ennavarey Mannavarey

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

என்னவரே மன்னவரே என்ற இந்த மின்னூலில் என்னவரே மன்னவரே மற்றும் திடுக்கிடும் திருப்பங்கள் என்ற இரண்டு குறுநாவல்கள் உள்ளன. ஒன்று சமூகக்கதை. மற்றொன்று க்ரைம்கதை. இரண்டு கதைகளுமே திருப்பங்கள் நிறைந்தவை. சுவாரசியமானவை. படியுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்குச் சொல்லுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580138806572
Ennavarey Mannavarey

Read more from R.V.Pathy

Related to Ennavarey Mannavarey

Related ebooks

Reviews for Ennavarey Mannavarey

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennavarey Mannavarey - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    என்னவரே மன்னவரே

    Ennavarey Mannavarey

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னவரே மன்னவரே

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    திடுக்கிடும் திருப்பங்கள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    என்னவரே மன்னவரே

    1

    திருவடிசூலம். எழில் கொஞ்சி விளையாடும் ஒரு கிராமம். நாலாதிசைகளிலும் பச்சைப்பசேலென படர்ந்திருக்கும் செடி கொடிகள். ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் பெரிய பெரிய மரங்கள். சில்லென்ற காற்று இதமாய் வருடிக் கொடுக்கும் அற்புதமான சூழல். குயில்கள் எழுப்பும் இனிய ஓசை இசையாய் பரவும்.

    முத்துவேல். அந்த கிராமத்தின் பெரியமனிதர். பல ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர். அவரது தாத்தா காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய ஓட்டு வீட்டில் தன் முன்னோர்களின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    அவரது ஒரே மகள் தாமரை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஒரு தேர்ந்த சிற்பி செதுக்கிய அழகு பதுமைக்கு உயிர் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாள் அவள்.

    நல்ல பெண். செல்வந்தரின் ஒரே மகள் என்ற கர்வம் துளிகூட இல்லாதவள்.

    தாமரை எழுந்திரு. மணி ஏழாச்சி

    அவளது அம்மா தங்கம் தாமரையை எழுப்பினாள்.

    போம்மா. ஏழுதானே ஆச்சி. தொந்தரவு பண்ணாம போய் சமையலை கவனிம்மா

    விடிகாலை எழுந்திருக்கிறதுதாம்மா ஒரு பொண்ணுக்கு அழகு. நாளைக்கு கல்யாணம் பண்ணிகிட்டு மாமியார் வீட்டுக்குப் போய் இதுமாதிரி தூங்கினா உன் மாமியார் என்னைத்தான் குறை சொல்லுவாங்க

    தூக்க கலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்தாள் தாமரை.

    அப்ப வீட்டோட மாப்பிள்ளையா பார்த்துடும்மா

    சொல்லிவிட்டுக் குறும்பாய் சிரித்தாள்.

    இப்படியெல்லாம் பேசக்கூடாது வாயாடிக்கழுதை

    உன் பொண்ணுதானேம்மா நான்

    தாமரையின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள் தங்கம்;.

    அய்யோ வலிக்குது விடும்மா

    முதல்ல எழுந்திரு. அப்பத்தான் விடுவேன்

    சிணுங்கிக் கொண்டே எழுந்தாள்.

    மணி பத்து

    தபால்காரர் முத்து சைக்கிளை தள்ளியபடி வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் திண்ணையை விட்டு எழுந்தாள் தாமரை.

    அய்யா தபால்காரரே. எனக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்குதா?

    இப்பவே எழுதிப்போடும்மா. நாளைக்கே வரும்

    என்னய்யா திமிரா பேசறே. இருந்தா குடு. இல்லேன்னா இல்லைன்னு சொல்லிட்டுப் போயேன்

    வந்தா தரமாட்டேனா?. தினமும் கேட்டு வெறுப்பேத்தறியேம்மா. நாலே தெரு. தினமும் எண்ணி நாலு லெட்டர்தான் வருது. இதைக் குடுக்க லொங்கு லொங்குன்னு டவுன்லே இருந்து சைக்கிள்ளே வரணும். நாலு லெட்டரையும் நானே படிச்சியும் காட்டணும். நல்ல பொழைப்பு

    ம். சும்மாவா செய்யறே. மாசக்கடைசியிலே நோட்டை எண்ணி வாங்கறேயில்லே

    நல்லா பேசக் கத்து வெச்சிருக்கீங்க

    அம்மா கோயிலுக்குப் போயிட்டு வர்றேம்மா

    ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா

    தினமும் மாலையில் சிவன் கோயிலுக்குப் போவது தாமரையின் வழக்கம்.

    கோயிலுக்குப் புறப்பட்டாள்.

    கோயிலை ஒட்டியிருந்த அந்த பெரிய அரசமரத்தடியில் இருந்த கருங்கல் திண்ணையில் உட்கார்ந்து பீடியை புகைத்தபடி போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான் வேலு.

    வேலு அந்த கிராமத்தின் போக்கிரி. யாரையாவது தினமும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பது, போக்கிரித்தனம் எல்லாம் அவனுக்கு கைவந்த கலை. வேலை ஏதும் செய்யாவிட்டாலும் பாக்கெட்டில் எப்போதும் பணம் வைத்திருப்பான். மாதத்தின் முதல் வாரத்தில் பிக்பாக்கெட் அடிப்பான். இரண்டு முறை ஜெயிலுக்கும் போய் வந்திருக்கிறான்.

    தாமரை கோயிலை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் எழுந்தான் வேலு.

    என்ன தாமரை கோயிலுக்கா?

    நான் எங்கே போனா உனக்கென்ன?

    நீ ரொம்ப அழகா இருக்கே தாமரை

    அனாவசியமா என்கிட்டே வம்புக்கு வராதே

    வந்தா என்ன பண்ணுவே?

    அப்பாகிட்டே சொல்லி உன் கையை காலை ஒடைப்பேன்

    பரவாயில்லையே. ரொம்ப தைரியம்தான் உனக்கு. உன்னை மாதிரி தைரியமான பொண்ணுதான் எனக்கு பொண்டாட்டியா வரணும். என்ன சொல்றே?

    தாமரைக்குக் கோபம் வந்தது.

    ச்சீ போடா வெத்து வேட்டு

    சொல்லிவிட்டு விறுவிறுவென கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் தாமரை.

    கன்னத்தில் அறை வாங்கியதைப் போல உணர்ந்தான் வேலு

    கோபத்தோடு அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    2

    கோயிலிலிருந்து வீட்டிற்குத் திரும்பினாள் தாமரை.

    வேலு தன்னிடம் நடந்து கொண்டதைப் பற்றி தாமரை வீட்டில் சொல்லவில்லை. அவனை நினைக்கும்போதே எரிச்சலாய் இருந்தது. ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு தன் அறைக்குப் போய் படிக்கத் தொடங்கினாள். புத்தகம் படிப்பதென்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவ்வப்போது தேவையில்லாமல் வேலுவின் முகம் அவள் ஞாபகத்திற்கு வந்து அவளை கோபப்படுத்தியது.

    அடுத்தநாள் வழக்கம்போலவே தாமரையை எழுப்பினாள் அம்மா.

    எழுந்து பல்தேய்த்து முகம் கழுவி காபி குடித்துவிட்டு கோலம் போட்டாள் தாமரை.

    பத்து மணிக்கு போஸ்ட்மேன் வந்தார்.

    இன்று ஏதும் கேட்காமல் பேசாமல் திண்ணையில் உட்காரந்தாள் தாமரை.

    என்னம்மா தினமும் லெட்டர் வந்திருக்கான்னு கேட்டு உயிரை எடுப்பே. இன்னைக்கு பேசாம உட்கார்ந்திருக்கியே

    பதிலேதும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள் தாமரை.

    இந்தாம்மா உனக்கொரு லெட்டர் வந்திருக்கு

    அந்த கடிதத்தைப் பார்த்து சந்தேஷப்பட்டாள் தாமரை.

    உடனே வாங்கிப் பார்த்தாள். சென்னையில் வசிக்கும் அவள் தோழி மாலினி எழுதியிருந்தாள்.

    தபால்காரர் புறப்பட்டுப் போனார்.

    கடிதத்தைப் பிரித்துப் படித்த தாமரை அம்மாவிடம் ஓடினாள்..

    அம்மா மாலினி லெட்டர் போட்டிருக்காம்மா

    மாலினியா யாரது?

    என்னம்மா அதுக்குள்ளே மறந்துட்டியா? என் கூட அஞ்சாம்கிளாஸ் வரைக்கும் ஒண்ணா படிச்சாளே அந்த மாலினிம்மா. ஹெட்மாஸ்டரோட பொண்ணு. இப்ப மெட்ராஸ்லே இருக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே வந்து ஒருநாள் தங்கிட்டுப் போனாளே

    யோசித்துப் பார்த்த அம்மாவிற்கு மாலினியின் முகம் ஞாபகத்திற்கு வந்தது.

    ஓ அவளா என்றாள்.

    அவளுக்கு கல்யாணமாம். பத்திரிகை குடுக்கறதுக்காக நாளன்னைக்கு வர்றேன்னு எழுதியிருக்கா

    "ரொம்ப சந்தேஷம். உனக்கும் வயசாகிகிட்டே போகுது. கூடிய சீக்கிரம்

    Enjoying the preview?
    Page 1 of 1