Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manjal Nilavugalai Choodu!
Manjal Nilavugalai Choodu!
Manjal Nilavugalai Choodu!
Ebook96 pages33 minutes

Manjal Nilavugalai Choodu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தீடிரென்று ஊரில் உள்ள பிரபல எழுத்தாளர்கள் வித விதமாக கொல்லப்படுகிறார்கள். காரணம் தெரியாமல் போலீஸ் விழிபிதுங்கி நிற்கிறது. துப்பறிவதில் கில்லாடியான டியாராவிடம் கேஸ் ஒப்படைக்கிறது போலீஸ். ஒருவிதமாக டியாராவும் அவர் மனைவியான ஜெரூஷாவும் ஓரளவு நெருங்கும் போதுதான் தெரிகிறது அந்த லிஸ்டில் டியாராவும் இருப்பது! டியாராவால் குற்றவாளியை நெருங்கமுடிந்ததா எப்படி என்பதை தெரிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580111006282
Manjal Nilavugalai Choodu!

Read more from Arnika Nasser

Related to Manjal Nilavugalai Choodu!

Related ebooks

Related categories

Reviews for Manjal Nilavugalai Choodu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manjal Nilavugalai Choodu! - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    மஞ்சள் நிலவுகளை சூடு!

    Manjal Nilavugalai Choodu!

    Author:
    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ரின் சோப் நிற ஆகாயம் மெது மெதுவாக பிரகாசம் மங்கி வர்ண கதம்ப ஆகாயமாகி அந்திப்பொழுது என்றது. செங்கல் நிற மேற்குத் திசை சூரியன் தகதக தர்பூசணி பழமாய் கடலுக்குள் வீழ்ந்து பூமியின் மறு அரைக்கோளத்துக்கு வெளியேறி அங்கு விடியல் என்றது. கதாநாயகன் நடிக்கும் பிரேமில் மு.கொட்டை தனமாய் தலைநீட்டும் உபரி நடிகன் போல சூரியனின் பகலிலேயே வானத்தில் தெளிவில்லாமல் தென்பட்ட அரை நிலவு இப்போது சூரியன் மறைந்த தைரியத்தில் சோகை மஞ்சள் நிறம் பெற்று சிரித்தது.

    அரை மணி நேர தாமதத்தில்-

    சோப்புத் துண்டால் வாக்கியம் எழுதப்பட்ட பேப்பரை நீரில் நனைத்தவுடன் சிறிது சிறிதாக எழுத்துக்கள் பார்வைக்கு தென்படுவது போல நீக்ரோ வேஷத்துக்கு தயாரான வானம் நட்சத்திரங்களை காட்ட ஆரம்பித்தது.

    பெசன்ட் நகரின் ஒரு புது பங்களாவிலிருந்து ஒரு கன்டெஸ்சா வெளிப்பட்டது.

    அதன் டிரைவர் சீட்டில் ஸ்டீரிங்கை கையாண்டபடி க்ரைம் எழுத்தாளர் பவ்யா ரத்தீஷ். வாயில் 555 புகைந்தபடி ஆண் எழுத்தாளர்தான். வயது கி.பி.2000ல் 44 ஆகும். உயரம் 5 அடி 7 அங்குலம். திருமணம் செய்து கொள்ளாதவர். ஆனால் இதுவரை 169 பெண்களை தொட்டவர். இதுவரை 400 சிறுகதைகளும் 250 நாவல்களும் ஆறுவருட இலக்கிய வாழ்வில் எழுதி குவித்தவர்.

    கார் சோழாவுக்குள் புகுந்தது. காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு தன் அடர்த்தி குறைந்த முன் வழுக்கை கேசத்தை சீரமைத்துவிட்டு வாசல் யூனிபார்மின் சல்யூட்டுக்கு பதிலாய் தலை ஆட்டியபடி பாருக்குள் புகுந்தார்.

    ஜின் கலந்த பானம் பருகினார். ஒருமாதிரி உப்புக் கரித்தது எலுமிச்சை ரச சுவையுடன்.

    பில் பே பண்ணிவிட்டு வெளியே வந்தார். காரை திரும்ப கிளப்பி கடற்கரை சாலைக்கு பறந்தார். காரை பிளாட்பாரத்துக்கு இணையாக நிறுத்திவிட்டு ரிலாக்ஸ்டாக அமர்ந்தார். புல்வெளியில் ஜோடிகள் ஜோடிகள்.

    ஒரு செடி மறைவில்- 

    ஆணின் மடியில் புரபசனல் டச் பெண். ஆண் அவளின் மேல் ஜாக்கட் பட்டன்களை விடுவித்து தன் கைகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தான்.

    சீரணி அரங்கம் அனாதையாய் தெரிந்தது. லைட் ஹவுஸின் மூக்குப் பகுதி சகல திசைகளிலும் சுழன்றது. பவ்யா ரத்தீஷ்க்கு போர் அடித்தது.

    காஸ்மாபாலிட்டன் க்ளப் போவமா? ச்சை. வேணாம். பெண்ணின் வியர்வை வாசனை முகர்ந்து 120 மணி நேரமாகிறது. உடலின் ஆண்மைப் பேய் பருவப் பெண் பலி கேட்கிறது. யா. எனக்கு அந்த உச்சகட்ட அவஸ்தை ஐந்து நிமிடம் வேண்டும். அதில்தான் என் கம்பீரம் ஆளுமை உணர்கிறேன். யாரைக் கூப்பிடலாம்? யெஸ். போனவாரம் வந்தாளே மதுபாலிகா. அவள் தான் சரியானவள். ஒத்துக்கொள்வாளா? அவளின் பலவீனத்தைத் தட்டுவோம். வீழ்வாள்.

    காரை திருப்பி தன் பங்களாவுக்கு திரும்பினார் பவ்யா ரத்தீஷ். ஆடை மாற்றிக்கொண்டு ஒரு முழு பீர் பாட்டிலை காலி செய்து விட்டு டெலிபோனை நெருங்கினார்.

    மதுபாலிகா கொடுத்துச் சென்ற நம்பருக்காக தன் வலது ஆட்காட்டி விரலை ஆறு எண்களுக்கு விரட்டினார்.

    ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங் ரிங் ரிங்... டடக்.

    ஹலவ் மதுபாலிகா இருக்காங்களா?

    நீங்க யாரு?

    (சிரிப்பு) நானா? துப்பறியும் நாவல் எழுதும் பவ்யா ரத்தீஷ்...

    சாரி சார். கொஞ்ச நேரம் லைன்ல இருங்க. மதுவ வரச் சொல்றேன்.

    ரிசீவரை காதில் இருத்தியபடி டேபிளில் படிந்த தூசியில் நிர்வாணப் பொம்மை வரைந்து பார்த்தார்.

    தெளிவில்லாத பேச்சுக்குரல். பின் ரிசீவரை யாரோ எடுத்தனர்.

    ஹலவ்!

    வணக்கம் சார். நாந்தான் மதுபாலிகா பேசுறேன். எப்டியிருக்கீங்க...

    "ஏதோ உன்னைப் போன்றோர் கருணையால் நன்றாக இருக்கிறேன். போன தடவை உன் கதைகளைப் பற்றிச் சொன்னாயே...இப்போது என் பங்களாவுக்கு எடுத்துவா. ஒரு பிரபல பத்திரிகை எடிட்டர் இங்கு வந்திருக்கிறார். பலமாக அறிமுகப்படுத்தி உடனே

    Enjoying the preview?
    Page 1 of 1