Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suriyan Santhippu Part 2
Suriyan Santhippu Part 2
Suriyan Santhippu Part 2
Ebook329 pages1 hour

Suriyan Santhippu Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதிய புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்தான். அவனை நட்பாய் அணுகி அவனை வாசிக்க வேண்டும். அவனிடமிருந்து புதியதொரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நான் 75க்கு மேற்பட்ட புத்தகங்களை வாசித்த அனுபவம்தான் 'சூரியன் சந்திப்பு'. நான் நேர்காணல் பண்ண விரும்பியவர்களின் பட்டியல் தயாரித்தேன்; அவர்களைப்பற்றி நல்ல, கெட்ட செய்திகள் சேகரித்தேன்; ஒவ்வொருவரிடமும் கேட்க நூறு கேள்விகள் தயாரித்தேன்; நேர்காணலை கதை சொல்லும் உத்தியில் எழுதத் தீர்மானித்தேன்; சூரியன்களுடன் சொந்தமாய்த் தொலைபேசி நேரம் பெற்றேன்; பேட்டியைக் குறிப்புகள் எடுத்து வந்து அன்றிரவே முழுதாய் எழுதி மூன்றில் ஒரு பங்காய்ச் சுருக்கி DTP செய்தேன்; தொடர்கள் முழுவெற்றி பெற்றன.இதோ உங்கள் கையில்...

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580111007776
Suriyan Santhippu Part 2

Read more from Arnika Nasser

Related to Suriyan Santhippu Part 2

Related ebooks

Reviews for Suriyan Santhippu Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suriyan Santhippu Part 2 - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    சூரியன் சந்திப்பு பாகம் 2

    (நேர்காணல்)

    Suriyan Santhippu Part 2

    (Nerkanal)

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    ஹாய் ஜாம்பவான்ஸ்’ என்ற தலைப்பில் 'சரவணா ஸ்டோர்ஸ்' இதழில் வெளிவந்த என் நேர்காணல்களையும் ‘சூரியன் சந்திப்பு’ என்ற தலைப்பில் 'தினமலர் - வார மலரில்' வெளிவந்த என் நேர்காணல்களையும் ஒன்றாய் இணைத்து 'சூரியன் சந்திப்பு' என்கிற பொதுத்தலைப்பில் இரு தொகுப்புகளாக்கியுள்ளேன். (சூரியன் சந்திப்பு முதல்பாகம், இரண்டாம் பாகம்) இரு தொகுப்புகளிலும் சேர்த்து எழுபத்தைந்துக்கு மேற்பட்ட நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.

    ‘சூரியன் சந்திப்பு’ தொடர் வாரமலரில் வெளிவரத் தொடங்கியபோது ஒரு விதண்டாவாத 'சு' எழுத்தாளர் கீழ்க்கண்ட இரு கேள்விகளை எழுப்பினார்.

    1. ‘சூரியன் சந்திப்பு’ - தலைப்பில் இருக்கும் 'சூரியன்' ஆர்னிகா நாசரைக் குறிக்கிறதா? அல்லது நேர்காணல் செய்யப்படும் பிரமுகர்களைக் குறிக்கிறதா? அப்படி அது பிரமுகர்களைக் குறிக்கிறதென்றால் தலைப்பு ‘சூரியன்கள் சந்திப்பு’ என்றல்லவா வரவேண்டும்?

    2. ஒரு பிரபல எழுத்தாளர் நேர்காணல் பண்ணப்போவது பதவியிறக்கம் இல்லையா? 'ரிப்போர்ட்டர்' வேலை ஆர்னிகா நாசருக்கு தேவையா?

    முதல் கேள்விக்கு என் பதில்: ‘சூரியன் சந்திப்பு’ தலைப்பில் ஒரு பூடகம் விரும்பியே செய்தேன். சூரியன் நானும்தான்; சூரியன் – நான் சந்திக்கப் போனவர்களும்தான்!

    இரண்டாவது கேள்விக்கு என் பதில்: ரிப்போர்ட்டர் பணி சாதாரணமானது அல்ல. பொதுவாகவே ரிப்போர்ட்டர் பணி ஒரு Thankless Job! எழுத்தாளர்கள் தத்தம் கூட்டுக்குள்ளேயே ஒரு King size egoவுடன் வாழ்வது எனக்கு உடன்பாடல்ல. அவன் வெளியே வரவேண்டும். புதிய புதிய மனிதர்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்தான். அவனை நட்பாய் அணுகி அவனை 'வாசிக்க’ வேண்டும். அவனிடமிருந்து புதியதொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நான் 75க்கு மேற்பட்ட புத்தகங்களை வாசித்த அனுபவம்தான் 'சூரியன் சந்திப்பு’.

    நான் நேர்காணல் பண்ண விரும்பியவர்களின் பட்டியல் தயாரித்தேன்; அவர்களைப்பற்றி நல்ல, கெட்ட செய்திகள் சேகரித்தேன்; ஒவ்வொருவரிடமும் கேட்க நூறு கேள்விகள் தயாரித்தேன்; நேர்காணலை கதை சொல்லும் உத்தியில் எழுதத் தீர்மானித்தேன்; நேர்காணல்கள் வெளிவந்த பத்திரிகைகளைத் தொந்திரவு பண்ணாமல் சூரியன்களுடன் சொந்தமாய்த் தொலைபேசி நேரம் பெற்றேன்; பேட்டியைக் குறிப்புகள் எடுத்து வந்து அன்றிரவே முழுதாய் எழுதி மூன்றில் ஒரு பங்காய்ச் சுருக்கி DTP செய்தேன்; தொடர்கள் முழுவெற்றி பெற்றன.

    எனது பட்டியலில் இருந்தும் கீழ்க்கண்டவர்களைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காக நேர்காணல் செய்ய முடியவில்லை.

    1. எழுத்தாளர் சுஜாதா (ஸாரி நாசர் அந்த அந்துமணி தொடர்ந்து என்னை கிண்டல் பண்ணி அவர் பத்திரிகைல எழுதிக்கிட்டுருக்கார்! நானெப்படி அவர் பத்திரிகைக்கு பேட்டி தரமுடியும்?)

    2. வசனகர்த்தா ஆரூர்தாஸ் (பேட்டி வேண்டாமே நாசர்! என்னை பத்தி நிறைய எழுதிட்டேன், பேசிட்டேன். சொன்னதையே சொல்லி வாசகர்களைப் போரடிக்கக் கூடாது!)

    3. கவிஞர் வாலி ஆரூர்தாஸ் கூறிய அதே காரணத்தைக் கூறினாலும் ‘Off the record’ ஆக 73 நிமிடங்கள் தொலைபேசியில் என்னுடன் பேசி என்னை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தார்.

    4. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (என்னை எதுக்கு பேட்டி? நானென்ன அரசியல்வாதியா? போய் அரசியல்வாதியைப் போட்டோ எடுங்க! நான் பேசும் கூட்டத்துக்கு வந்து குறிப்பெடுத்து பிரசுரம் பண்ணிக்கொள்ளுங்கள்)

    5. டைரக்டர் பாலுமகேந்திரா (சாரி நாசர்... நான் ரொம்ப பிஸி... புதுப்படப் பணியில் மூழ்கியிருக்கிறேன் ) அவர் சொன்ன புதுப்படம் 19 மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை.

    6.என் அபிமான எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி (ராணி ஆசிரியர் திரு அ. மா. சாமி) பத்திரிகையின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு அவர் பேட்டி கொடுக்க முன்வரவில்லை. 1986இல் அண்ணாமலைப் பல்கலைகக் கழகத்தில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடந்தது. திரு. அ. மா. சாமிக்கு சிதம்பரத்தைச் சுற்றிக்காட்டும் பணி எனக்குத் தரப்பட்டது. அப்போது அவர் எனக்குக் கூறிய பல அறிவுரைகள் எனது பிற்கால எழுத்துலக வாழ்க்கைக்குப் பெரிதும் உதவின.

    7. இந்துமதி - மனதுக்குள் எதனையே வைத்துக்கொண்டு என்னை பலமுறை அலைக்கழித்தார். ஒரு கட்டத்தில் Hidden agendaவுடன் பேசும் இவரை எதற்கு நேர்காணல் பண்ணி நம் நேரத்தை வீண்பண்ண வேண்டுமென முடிவெடுத்து பட்டியலில் இருந்து இந்துமதி பெயரை ட்ராப் செய்தேன். பல பெண் எழுத்தாளர்களை நேர்காணலுக்காக அணுகியபோது அவர்களின் ஈகோவும் சக எழுத்தாளர்களைப் படிக்காத தன்மையும் மதிக்காத தன்மையும் என்னை அசுரமாய்த் தாக்கின. அந்த ஈகோ பிடித்த பெண் எழுத்தாளர்களின் பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்.

    8. நடிகர் ராஜ்கிரண் (புதுப்படம் தயாரித்து டைரக்ட் செய்யும் பணியில் மூழ்கியிருக்கிறேன்... ஸாரி)

    9. நடிகர் நாகேஷ். கிரேஸிமோகன் உதவியால் நாகேஷ் சாரின் அப்பாயின்ட்மென்ட் இருமுறை கிடைத்தும் சில எதிர்பாராத காரணங்களால் நேர்காணல் தவறிப்போயிற்று.

    10. ஆனந்தவிகடன் ஆசிரியர் திரு எஸ். பாலசுப்பிரமணியன், தினமணி ஆசிரியர் திரு. சம்பந்தம், கல்கி ஆசிரியர் திரு. கி. ராஜேந்திரன், குமுதம் ஆசிரியர் ராவ் அவர்கள் (ராவ் சார் ஒவ்வொரு தடவை தொலைபேசி பேசும்போதும் அலாதியான சிரிப்புடன் நம்மை எதிர்கொள்வார். அவரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.)

    இந்தப் பட்டியல் போதும் என நினைக்கிறேன், நேர்காணல்களில் பெரிதும் ஒத்துழைத்த சூரியன்களைப் பற்றியும் சில வார்த்தை கூற விரும்புகிறேன்.

    1. ரவி பெர்னார்ட் - மோசமான நெகடிவ் கேள்விகளை வீசியபோதும் சிரித்தபடி பதில்கூறி சந்தேகங்கள் தீர்த்தார்.

    2. நக்கீரன் கோபால் - என்னுடைய ரோல் மாடல்களில் இவரும் ஒருவர். சென்னையில் நான் ஒருவருடம் இருந்தபோது எனக்குப் பல வழியில் உதவினார்.

    3. கிரேஸிமோகன் - இவருடைய வெற்றிக்கு இவரின் திறமை மட்டும் காரணமல்ல; கள்ளமில்லா உள்ளத்துடன் நட்பு பாராட்டும் குணமும்தான்.

    4. மதன் அட்டகாசமான ஒத்துழைப்பு தந்தார். தமிழ்ப் பத்திரிகையின் மிகக் கவர்ச்சியான ஆல்ரவுண்டர் இவர்.

    5. ராஜேஷ்குமார் - தடபுடல் விருந்தோம்பல் பண்ணி மனதை நிறைத்தார்.

    6. தினமலர் அந்துமணி மற்றும் தினமலர் ஆசிரியர் திரு இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் - தமிழ்ப் பத்திரிகை உலகில் Once in ablue moon நடக்கும் அபூர்வ நிகழ்வே இவர்களின் பேட்டிகள்!

    7. அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எல்.பி. வெங்கட்ரங்கன் – அண்ணாமலையில் நான் பணிபுரியும் ஒரே காரணத்தினால்தான் மேற்சொன்ன இருவரையும் பேட்டி எடுக்கும் பாக்கியம் கிட்டியது.

    8. நடிகர் விவேக் - வாரமலர் இவரைப் பற்றிப் பல நெகடிவ் செய்திகள் பிரசுரித்த கோபத்தில் இருந்தார். இவருடன் நட்பாய்ப் பழகிக் கோபத்தைத் தணித்தேன். ‘சக மதுரைக்காரன்’ என்கிற ஒரே காரணத்துக்காக முழுமையான பேட்டி தந்து என்னை நெகிழ வைத்தார் விவேக்.

    9. ஹார்லிக்ஸ் தேவதை மாலாமணியன் (மாணிக்கம் நாராயணன் பேட்டி

    10. காக்கா ராதாகிருஷ்ணன் - இவரின் முகவரியை ஒரு கைதேர்ந்த டிடக்டிவ் போல் செயல்பட்டுக் கண்டுபிடித்தேன். இவருக்குக் காது சுத்தமாகக் கேட்கவில்லை. இருந்தாலும் இவரின் அழகிய மகள் உதவியுடன் பிரம்ம பிரயத்தனம் பண்ணி சிறப்பான நேர்காணல் பண்ணினேன்.

    மொத்தத்தில் ‘சூரியன் சந்திப்பு’ என்னைப் பல பரிமாணங்களில் பட்டை தீட்டியது.

    பொருளடக்கம்

    டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி

    ஜ.ரா. சுந்தரேசன்

    பிரபஞ்சன்

    ஸ்டெல்லா புரூஸ்

    ராஜேஷ்குமார்

    சத்தியமூர்த்தி

    மதன்

    சுபா

    படுதலம் சுகுமாரன்

    நாஞ்சில்நாடன்

    வெ. கிருஷ்ணமூர்த்தி

    விக்கிரமன்

    சாருநிவேதிதா

    மனுஷ்யபுத்திரன்

    அந்துமணி

    ரா. வேங்கடசாமி

    இந்திரா சௌந்தர்ராஜன்

    இரா. கிருஷ்ணமூர்த்தி

    அமுதா

    சின்னக்குத்தூசி

    ப. சிவகாமி

    பீட்டர்

    நீலவன்

    மு. மேத்தா

    லேனா தமிழ்வாணன்

    ஜி. அசோகன்

    என்.சி. மோகன்தாஸ்

    கே. ரவிசங்கரன்

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    நளினி சாஸ்திரி

    டாக்டர் பூவண்ணன்

    தென்கச்சி கோ. சுவாமிநாதன்

    சூரியன் சந்திப்பு – 1

    டாக்டர் எம்.ஏ.எம். ராமசாமி - ஆர்னிகா நாசர்

    செட்டிநாட்டு அரண்மனை கம்பீரமாய் நிமிர்ந்திருந்தது. வரவேற்பறையில் நானும் புகைப்படக்கலைஞரும் காத்திருந்தோம். வரவேற்பறை முழுக்க குதிரைப்பந்தயங்களில் வெற்றி பெற்ற ஷீல்டுகள் ‘டிஸ்பிளே’ செய்யப்பட்டிருந்தன.

    ராஜாவின் மூத்த உதவியாளர் ஏ.ஆர்ஆர். வெளிப்பட்டார்.

    வணங்கினேன்.

    புன்னகைத்தார். சாப்ட்டீங்களா?

    சாப்ட்டோம்!

    பத்து நிமிடக் கரைசலுக்குப்பின் ஏ.ஆர்.ஆர் எங்களை ராஜாவிடம் அழைத்துச் சென்றார். அப்போதுதான் ராஜா அய்யப்பன் கோயிலுக்கு போய் திரும்பியிருந்தார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் தும்பைப்பூவாக காட்சியளித்தார். முகத்தில் ‘அரிஸ்டோ கிரேடிக்’ புன்னகை. ஸ்கேனிங் பார்வை. மகரந்தக் குரல்.

    கேளுங்க! என்றார்.

    குதிரைகள் மீது உங்களுக்கு ஏற்பட்ட நேசத்தைக் கூறுங்கள் அய்யா!

    1970களுக்குப் பின்தான் எனக்கு குதிரைகள் மீது ஈடுபாடு வந்தது. குதிரைகளை குழந்தைகள் போல நேசிக்கிறேன்!

    குதிரை ரேஸ் சூதாட்டமா?

    இல்லை. அது ஒரு Sport!

    உங்களது சூரப்பட்டு குதிரைப் பண்ணையைப் பற்றி கூறுங்கள் அய்யா!

    1984-ல் 200 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது சூரப்பட்டு குதிரைப்பண்ணை. அந்தப் பண்ணையில் ஆயிரம் குதிரைகள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு குதிரையின் விலை ஐந்து இலட்சம். குதிரைகளை கவனிக்க மருத்துவர் குழுமம் இருக்கிறது. இந்தப் பண்ணையை நம்பி இருநூறு குடும்பங்கள் வாழ்கின்றன!

    உங்கள் குதிரைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த குதிரை எது?

    எல்லா குதிரைகளும் எனக்கு செல்லக் குழந்தைகள் மாதிரி. குறிப்பாக Silver jet சொல்லலாம்!

    உங்களின் ராசியான ஜாக்கி யார்?

    ஸ்விம் பெர்ன். லண்டன் ஜாக்கி. ராணி எலிஸபெத் குதிரைகளுக்கு ஜாக்கியாக இருந்தவர்!

    குதிரையை எம்.எப். ஹுஸைன் உட்பட பலர் sex symbol ஆக பார்க்கிறார்கள். சரியா தவறா!

    ஐயப்பன் கொடி மரத்தில் குதிரை சின்னம் வைத்துள்ளோம். குதிரை தெய்வம் சார்ந்த படிமம்!

    காயப்படும் குதிரைகளை சுட்டு விடும் பழக்கம் இன்றைக்கும் உண்டா?

    உண்டு!

    குதிரை எந்த நாட்டுக்காவது தேசிய விலங்காக இருந்திருக்கிறதா?

    எனக்குத் தெரிந்து - இல்லை!

    குதிரைகளுக்கும் ஜாக்கிகளுக்கும் இடையே பேசும் மொழி தனியாக உண்டா?

    உண்டு!

    உலகத்திலேயே உங்களுக்கு பிடித்த ரேஸ் மைதானம்!

    சிங்கப்பூர், துபாய் மைதானங்கள்!

    எல்லா சாதியினரும் தங்கள் கலாச்சார அடையாளத்தை தொலைத்துவிட்டார்கள். நகரத்தார் சமூகம் மட்டும் எப்படி சிக்கனத்திலும் விருந்தோம்பலிலும் சிறந்து விளங்குகிறது!

    பாரம்பரியம், கூட்டுக்குடும்ப முறைதான் காரணம். நாங்கள் நல்ல விஷயங்களை எங்களின் பெரியவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். நாங்கள் திருப்பிச் செலுத்தும் வழிமுறை அறியாது கடன் வாங்குவதில்லை. எங்கள் வாழ்வியல் முறையில் கணக்கு பாடம் பெரும்பங்கு வகிக்கிறது!

    ஐயப்பனின் மீது உங்களுக்கு இருக்கும் அதீத ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. அதன் பின்புலத்தைக் கூறுங்களேன்!

    23.1.70 அன்று எனது நகமும் சதையுமான. அண்ணன் மறைந்தார். அவரது மரணம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அண்ணனின் மறைவுக்குப் பின் நான் தீபாவளி கொண்டாடுவதில்லை. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகமானது. சம்பத்குமார் என்கிற நண்பர் மூலம் ஐயப்பன் மீது ஈடுபாடு பூத்தது. சபரிமலைக்கும் போய் வந்தேன். அன்றிலிருந்து ஐயப்பனின் மீதான ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது!... பற்றி நிறுத்திக் கூறினார். மொத்தத்தில் ஐயப்பனிடம் முழு சரணாகதி அடைந்துவிட்டேன்!

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உங்களது செல்லக் குழந்தையா?

    ஆமாம். அதில் சந்தேகமென்ன?

    குறிப்பிட்ட சமூகத்தார் தொடங்கும் கல்வி நிறுவனங்களில் அந்த குறிப்பிட்ட சமூகத்தினரே அதிக சலுகையும் முன்னுரிமையும் பெறுவர். ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நகரத்தார் சமூகம் அதிக சலுகையும் முன்னுரிமையும் எப்போதும் பெற்றதில்லையே ஏன்?

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எல்லோருக்கும் பொதுவானது. சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் எதுவுமே செய்கிறோம். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் பெரிதும் பயனடைந்திருக்கிறார்கள்!

    கடந்த ஐம்பது ஆண்டு. காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்ணிலிருந்து ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் சினிமாக்காரர்களும் தோன்றியிருக்கிறார்கள். அது உங்களுக்கு பெருமைதானே?

    கட்டாயமாய்!

    நிறைய தமிழ் படங்களில் செட்டிநாடு அரண்மனை வருகிறது. அந்தப்படங்களின் கதைச்சுருக்கம் உங்கள் பார்வைக்கு வருகிறதா?

    இல்லை. வெறும் அன்பின் அடிப்படையில்தான் ஷூட்டிங் நடத்த அனுமதி தரப்படுகிறது!

    உங்களின் இத்தனை வருட பொது வாழ்க்கையில் தனது சுயகௌரவம் பாதிக்காது கூழைக்கும்பிடு போடாது விசுவாசம் காட்டிய காட்டுகின்ற விசுவாசிகள் பட்டியல் தரமுடியுமா?

    அமரர் ம.பொ.சி., அண்ணன் ராஜாராம், ஏஆர்ஆர், வைத்தி சுப்பிரமணியன் ஐயர், எம்.எஸ். மீரா...

    எல்லா வசதிகளும் கூடிய ஒரு தன்னந்தனித் தீவில் நீங்கள் விரும்பிய குதிரைகளுடன் ஒரு வருடம் இருக்கும் வாய்ப்பு வந்தால் ஒப்புக்கொள்வீர்களா?

    மாட்டேன். எனக்கு எனது கடமைகளே முக்கியம்!

    எம்.ஜி.ஆர், சிவாஜி, சீர்காழி, கலைஞர், மூப்பனார் பற்றி உங்கள் அபிப்ராயம்?

    எம்.ஜிஆர் - ‘எங்களைப் போல் விருந்தோம்பலில் சிறந்தவர்’. கலைஞர் ‘தலை சிறந்த நிர்வாகி’. சிவாஜி - ‘ஓர் அய்யப்பன் பக்தர்’. சீர்காழி கோவிந்தராஜன் - ‘தமிழ் இசை பரப்பியதில் பெரும்பங்கு வகித்தவர்’. மூப்பனார் - ‘குடும்ப நண்பர்’...

    தமிழ்வழிக் கல்வி சாத்தியமா?

    நிச்சயம் சாத்தியம்!

    இந்தியக் கல்விமுறை மாற்றப்பட வேண்டுமா?

    அந்தந்த காலகட்டத்துக்குரிய சிறுசிறு மாறுதல்கள் போதும்!

    தமிழ் தவிர இனிமையான உலக மொழிகள்?

    ஈரோப்பின் சில மொழிகள்!

    தங்களது அன்பு மகன் ஐயப்பன் பற்றி!

    ஐயப்பன் பி.ஏ. கம்ப்யூட்டர் படித்தவர். நிர்வாகத்திறமையும் நன்னெறியும் கீழ்படிதலும் உடையவர்.

    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதிகம் செய்யவில்லை என ஒரு ஆவலாகி உள்ளதே?

    அது தவறு. உச்சநீதிமன்றம் சொன்னதை விட அதிகமாய் ‘18 சதவீதம்’ தலித்மக்களுக்கு செய்கிறோம். தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அனைத்து கொடுமைகளையும் களைந்த களையும் திராவிட இயக்கங்களின் கருப்பையே அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த டாக்டர் எம்.ஜி. முத்துக்குமாரசாமியை ஆறு வருடங்கள் துறைவேந்தராய் அமர்த்தி அழகு பார்த்ததும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான். கடந்த எழுபது வருடங்களில் தென் ஆற்காடு மாவட்டம் பெற்ற சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான். அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்பகந்துறை மூலம் அவ்வை துரைசாமியின் ‘வள்ளலார் அருட்பா விளக்கம்’ (10 பாகம்) ஆர்.கே. சண்முகத்தின் ‘கம்ப ராமாயணம்’, மீ.ப. சோமுவின் ‘சித்தர் இலக்கியம்’ போன்ற சிறப்பான நூல்களை வெளியிட்டு நூலகவளர்ச்சிக்கு தொண்டாற்றி இருக்கிறோம். வருடம் நாற்பதாயிரம் பேர் கல்வியறிவு பெறும் தொலைதூர கல்வி இயக்கம். இந்தியாவிலேயே தலைசிறந்த பல்மருத்துவம் செய்யப்படும் பல் மருத்துவக்கல்லூரி உள்ளதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தான். உலகப் புகழ்பெற்ற கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் இருப்பதும் அண்ணாமலையில் தான். மொத்தத்தில் ஓர் அரசாங்கம் பண்ண வேண்டிய பணிகளை எங்களது குடும்பம் செய்துவருகிறது!

    அடுத்த பிறவி இருந்தால் யாராக பிறக்க விரும்புகிறீர்கள்?

    "நான் நானாகவே. இதே பாட்டனார்

    Enjoying the preview?
    Page 1 of 1