Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kirumi
Kirumi
Kirumi
Ebook69 pages47 minutes

Kirumi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எந்த தப்பும் செய்யாத சந்திரனுக்கும், அவரது மனைவி ரோகிணிக்கும் எய்ட்ஸ் நோய் வரக் காரணம் என்ன? தற்கொலை செய்துகொள்பவரின் மரணத்தை ஆராயந்து மர்மத்தை விடுவித்தாரா டியாரா? தனக்கு நடந்த தவறுக்காக மக்களை பழிவாங்க நினைப்பவர் யார்? என கிருமியில் வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580111009239
Kirumi

Read more from Arnika Nasser

Related to Kirumi

Related ebooks

Related categories

Reviews for Kirumi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kirumi - Arnika Nasser

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    கிருமி

    Kirumi

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    ஒரு ராட்சச கழுகு சந்திரனை தூக்கிக்கொண்டு பறந்தது. முதுகு சதையையும் சட்டையையும் சேர்த்து கூரிய அலகால் கவ்வியிருந்தது. பிரளய வலி. சுற்றிலும் பச்சை நுரையீரல்கள் சூழ்ந்த பூமி மனிதன். ஓரிடத்தில் மட்டும் பூமி மனிதனின் நெற்றி வானம் வரை புடைத்திருந்தது. புடைப்பு ஒரு எரிமலை. எரிமலை உச்சியில் திமிங்கலம் சைஸ் துவாரம். துவாரத்துக்குள் எரிமலைக்குழம்பு. சந்திரனை தூக்கி வந்த கழுகு திடீரென்று எரிமலைக் குழம்புக்குள் தவறவிட்டது.

    குழகுழப்பாய் உருகினான் சந்திரன்.

    ஆயிரம் பிறவிகளில் மரணம் ஏற்படுத்தும் வேதனை.

    வீரிட்டான்!

    பக்கத்தில் படுத்திருந்த ரோகிணி அதிர்ந்து எழுந்தாள். கெட்ட கனவு ஏற்படுத்திய தாக்கத்தில் வியர்க்க விறுவிறுக்க எழுந்தமர்ந்தான் சந்திரன்.

    சந்திரன். வயது 30. உயரம் ஆறடிக்கு சற்றே கம்மி. முரட்டு கேசம். கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்ணி விற்பவன். அவனுக்கும் ரோகிணிக்கும் திருமணமாகி ஆறுமாதம்தான் ஆகிறது. அவள் பௌதிகம் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவள். நான்கு மாத கர்ப்பிணி.

    என்ன சந்திரன்? என்னாச்சு... கெட்ட கனவு எதும் கண்டியா? தடுமாறி எழுந்து குளிர்நீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

    பருகினான்.

    திக்கித்திணறி கனவைக் கூறினான்.

    சிந்துபாத் கதை எதுவும் படிச்சீங்களா? அதுலதான் கழுகுகள் மனுசனை தூக்கிட்டுபோகும்!

    இது அம்புலி மாமா, தினமலர் சிறுவர் மலர் கதை வகை கனவல்ல; நடக்கப்போகும் ஏதோ ஒரு பயங்கரத்தை படிமமாக காட்டுகிறது!

    என்ன பயங்கரம்?

    யோசனையில் ஆழ்ந்தான்.

    உன்கிட்ட சொல்லவா வேணாமான்னு இருக்கு. நீ கர்ப்பிணி பெண் வேற...

    சும்மா சொல்லு சந்திரன்!

    கடந்த ரெண்டு மாசமா என் உடம்பு சரியில்லை. எனக்கு ஏதோ ஆய்டுச்சு!

    என்ன ஆய்ருச்சு?

    எப்ப பாத்தாலும் உடல் அசதி. கம்ப்யூட்டர் மானிட்டரை ரெண்டு நிமிஷம் பாத்தாலே தலை சுத்துது. சாப்பாட்டை கண்டா வெறுப்பு. செக்ஸ்ல ஈடுபாடு இல்லை. எனக்கு ஜலதோஷம் பிடிச்சா மூணு நாளைக்கு மேல் நீடிக்காது. ஆனா பார். இந்த ரெண்டு மாசமா பிடிச்ச ஜலதோஷம் விலகல...

    ஜலதோஷத்தை பற்றி நீ சொல்றது உண்மைதான். ஈஸினோபோலியாவோ என்னவோ?

    ம்ஹும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி என் உடல் எடை 68 கிலோ!

    சரி!

    நானும் வாராவாரம் எடை பாத்துக்கிட்டு இருக்கேன். வாராவாரம் ஒண்ணேகால் கிலோ எடை குறைவு. எட்டு வாரத்துக்கு பிறகு என் எடை 58 கிலோ!

    பத்து கிலோ எடை குறைவா? நீ எந்த டயட்டிங்லயும் இல்லயே...

    இன்னும் எத்தனையோ உடல் உபாதைகள்!

    "சுத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1