Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pani Nilavai Pathanidu
Pani Nilavai Pathanidu
Pani Nilavai Pathanidu
Ebook90 pages32 minutes

Pani Nilavai Pathanidu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateAug 22, 2016
ISBN6580111001407
Pani Nilavai Pathanidu

Read more from Arnika Nasser

Related to Pani Nilavai Pathanidu

Related ebooks

Reviews for Pani Nilavai Pathanidu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pani Nilavai Pathanidu - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    பனி நிலவை பதனிடு

    Pani Nilavai Pathanidu

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அன்பு என்றால் என்னவென்று எனக்கு முழுமையாக உணர்த்திய என் ஐந்து வயது மகள் ஜாஸ்மினுக்கு இந்நாவல் சமர்ப்பணம்.

    1

    காத்திருந்து காத்திருந்து பூத்துப்போன உதய்சந்தரின் உலக ஆர்வக் கண்கள் பெளர்ணமித்தன. இருபதடி தூரப்பார்வையில் ஓர் ஆட்டோ உருமி நின்றது. அதிலிருந்து மிதமான ஹை ஹீல்ஸ் அமைத்த அலங்கார செருப்பு கவ்விய பனிவெண்மையில் சந்தனம் குழைத்த கால்கள் இறங்கின.

    கால்களின் மேல் பதித்த பார்வையை மங்கல் செய்து புதுபார்வையை உயர்த்தி அவள் முகத்தில் பதித்தான் உதய்சந்தர்.

    நீள்வட்ட மிருது பளபளப்பான ஜப்பானிய சாயல் முகம் -ஒழுங்கு நேர்த்தியாய் வாரிய கேசம் கொண்டு - கூந்தலின் கீழ் நுனி ரோம்ப் பூவாய் மலர்த்தப்பட்டு ரப்பர் பான்டால் இறுக்கப்பட்டிருந்தது. இதம் தெளிக்கும் பெண் காந்தக் கண்கள். சுவாச நேசத்துக்கு இருவாசல் கொண்ட சற்றுத் தூக்கலாய் பூரித்த மூக்கு. அகலம் குறுகிய 2x16 முத்துகளுக்கு குதிரைலாட வடிவில் பாதுகாப்பளிக்கும் வாய். ஆறுவிரல் வளைப்புக்கு சரி அடங்கும் கழுத்து - மெலி மெலிந்த செயின் கீழ்நுனியில் சிலுவை அணிந்து.

    பிஸ்கட் நிற கோட்டா காட்டன் சாரி அணிந்திருந்தாள். டிசைன் பூக்களின் நடுநடுவே சிறு வட்டக் கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்தன. சேலைத் துணியிலேயே தைக்கப்பட்ட ஜாக்கெட் அணிந்திருந்தாள். இடது நடு மேல் தோள்பட்டிடையில் சாரிபுரூச் பதித்திருந்தாள். பக்கவாட்டுத் தோற்றத்தில் வித்தியாசமாய் தெரியாமலிருக்க அங்கேயும் பின் செய்திருந்தாள்.

    தோளில் நீளவார் கொண்டு தொங்கிய லேடிஸ் பேக்கிலிருந்து பணமெடுத்து ஆட்டோ டிரைவரிடம் கையிலளித்தாள். பிறந்த குழந்தையின் உள்ளங்கால் மென்மையில் நடத்தாள்.

    ஜேனட், வங்கி வாசலுக்குள் நுழைய சுவர்க்கடிகாரம் காலை மணி பத்தானதை அலங்கார ஓசையால் அறிவித்தது. வங்கிக்குள் அடர்ந்திருந்தது வாடிக்கையாளர் கூட்டம். தன் இருக்கைக்குச் செல்லும்போதே ஊழியருக்கு வணக்கம் தெரிவித்தாள். தன் இருக்கையில் அமரும் போது புடவையில் பின் பகுதியை நீவியபடி பாந்தமாய் அமர்ந்தாள்.

    - கேஷ் கவுன்ட்டரில் அமர்ந்திருந்த உதய்சங்கர் உயிர்த்தான்.அவனின் தின காலை அலுவலே-ஆட்டோவிலிருந்து இறங்கி வங்கி வாசல் நுழைந்து அவள் இருக்கை அமையும் வரை அவளை கண்களாலேயே 'விடியோ கவரேஜ்' செய்வதுதான். அலுக்காத ஒன்று. தினம் தினம்.ஆவல் கூடும் ஒன்று.

    ஜேனட் பொற்செல்வி!

    என்ன கம்பீரமான பெயர் உனக்கு! இல்லை பெயர்தான் உன்னால் கம்பீரம் சுமக்கிறது! அழகான பெண்களுக்கு புத்திசாலித்தனம் இருக்காது. புத்திசாலிப் பெண்களுக்கு அழகிருக்காது. அழகான புத்திசாலிப் பெண்களுக்கு பணிவும் பொறுமையும் இருக்காது. ஆனால் உன்னிடத்தில் அத்தனையும் உள்ளன. வங்கியில் பணி புரிபவருக்குத் தேவையான மகா பொறுமையும் தொய்வில்லாமல் வேலை செய்யும் திறனும் உன்னிடத்தில் அபரிதமாய் உள்ளன.

    இரு வாரங்களுக்கு முன் மாதத்தின் முதல் வாரத்தில் பென்ஷன் வாங்கும் ஒரு பாட்டி உன் கவுன்ட்டருக்கு வந்து 'என் பெஞ்சினு வந்துட்டதா பாரு அம்மாடி!" என்றாள்.

    நீயும் லெட்ஜரை எடுத்துப் பார்த்தாய். உதடு பிதுக்கினாய். பின் இதமாய் கிரிடிட் ஆகல பாட்டி! என்றாய்.

    பாட்டியின் கண்களில் உப்புநீர் நல்லா பாரு தாயி! இன்னைக்கி அந்த பணம் வரலன்னா நான் கொலை பட்டினிம்மா...

    "கொஞ்சம் இரு பாட்டி என்று நீ எழுந்தாய். மேனேஜரிடம் சென்று மீண்டும் லெட்ஜர் லிஸ்ட்டை சரி பார்த்தாய். தவறுதலாக பாட்டியின் பணம் வேறொரு ஒற்றுமை நம்பரில் 'கிரிடட்' ஆகியிருப்பதை கண்டு பிடித்தாய். உன் முகம் சூரியனித்தது.அடுத்த அரைமணி நேரத்தில் அந்தப் பாட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்தாய்

    இதுபோல் ஆயிரம் சம்பவங்கள். உன் வேலை முடித்து விட்டால் பக்கத்து இருக்கை சகாக்களுக்கு வேலையில் உதவுகிறாய். மேலதிகாரிக்கு பணிவாய் பதில் சொல்வாய்.

    நீ இந்த கிளைக்கு வந்து.ஆறு மாதங்கள்தான்.ஆகின்றன. அதற்குள் என் மனதில் இடம் பிடித்து விட்டாய். உன்னை நான்

    Enjoying the preview?
    Page 1 of 1