Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kodaikanal Marmam
Kodaikanal Marmam
Kodaikanal Marmam
Ebook123 pages1 hour

Kodaikanal Marmam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஏற்காட்டிலிருந்து கொடைக்கானல் மலை பகுதிக்கு இடம் பெயர்கின்றனர் மீனா, சுமேஷ் மற்றும் அவர்களுடைய தாய், தந்தை. அப்பகுதியில் மந்திரவாதி மலையப்பனின் மகளான ராகினி, மீனாவிற்கு நல்ல தோழியாக கிடைக்கிறாள். இதில் மீனாவும் அவள் தம்பியான சுமேஷும் எதிரும் புதிருமானவர்கள். இவர்களுக்கிடையில் நிகழும் குறும்புகள் என்னென்ன? திடீரென அங்கு ஒரு சத்தம்... அது என்ன சத்தம்? அந்த சத்தம் மீனாவை மிரட்டக் காரணம் என்ன? இதில் ராகினியும் மாட்டிக் கொள்வாளா? டாக்டர் கோபால்ஜி இவர்களுக்கு உதவி செய்வாரா? மீனாவின் மரவீட்டில் நடந்தது என்ன? கொடைக்கானலில் நாமும் இவர்களுடன் சில மர்மங்களை சந்திப்போம்...

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580111007819
Kodaikanal Marmam

Read more from Arnika Nasser

Related to Kodaikanal Marmam

Related ebooks

Related categories

Reviews for Kodaikanal Marmam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Vera level story,naa rompa enjoy panna , super, enaku rompa pidihca book

Book preview

Kodaikanal Marmam - Arnika Nasser

https://www.pustaka.co.in

கொடைக்கானல் மர்மம்

(சிறுவர்களுக்கான மர்ம நாவல்)

Kodaikanal Marmam

(Siruvargalukkana Marma Novel)

Author:

ஆர்னிகா நாசர்

Arnika Nasser

For more books

https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

முன்னுரை

‘கொடைக்கானல் மர்மம்’ சிறுவர் நாவல் ஒரு திகில் நாவல் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களின் மீது எனக்கொரு மயக்கம் உண்டு. குறிப்பாக கொடைக்கானலில் ஊட்டி அளவுக்கு கூட்டம் அலை மோதாது ஒலி மாசு, நிலத்தடி நீர் மாசு கிடையாது. கொடைக்கானல் ஒரு பூலோக சொர்க்கம். நாவலை இரவில் தனியாக படிக்க முடியாது அவ்வளவு திகில், திகில் கலந்த சுவாரசியம். அக்கா தம்பிக்கு இடையே ஆன பாச சீண்டல்களை நகைச்சுவையாய் சித்தரித்துள்ளேன்.

ஆவிகளின் மீது நம்பிக்கை இருந்தாலும் இல்லா விட்டாலும் இந்நாவலை வாசிப்பு சுகத்துக்காக வாசிக்கலாம்.

இத்தொகுப்பினை எனது முப்பதாண்டு கால நண்பர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எக்ஸ்ரே தொழில்நுட்புனராக பணியாற்றும் திரு. வி. மனோகரனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,

ஆர்னிகா நாசர்

அண்ணாமலை நகர்,

1210.2010

1

ஆறாயிரம் அடி உயரமுள்ள கொடைக்கானல் மலை எங்களை வரவேற்றது. குளிர்ந்த சிலுசிலுப்பான காற்று எங்கள் மீது வீசியது.

எங்கள் அப்பா ஒரு காட்டிலாகா அதிகாரி. பார்க்க வயதான அரவிந்த் சாமி மாதிரி இருப்பார். அம்மா குஷ்பு மாதிரி இருப்பார்.

ஏற்காட்டிலிருந்து மாற்றல் ஆகி கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பெற்றோருக்கு நாங்கள் இரண்டே பிள்ளைகள்.

மூத்தவள் நான். பெயர் மீனா. வயது 11. ஆறாம் வகுப்பு படிக்கிறேன். தலை வலிக்காக எப்போதும் கண்ணாடி அணிந்திருப்பேன். எனக்கு வித்தியாசமான பெரிய காதுகள். அதை பிடித்து இழுத்து கேலி செய்வான் என் தம்பி.

அதோடு இருட்டைக் கண்டு பயப்படுவேன். சிறு வயதில் அடிக்கடி கெட்ட கனவுகள் கண்டு படுக்கையிலே ‘மூச்சா’ போய் விடுவேனாம். அதனால எங்கள் டாடி கூட என்னை ‘மூச்சா குட்டி மூச்சா குட்டி’ என கிண்டல் அடிப்பார்.

அடுத்து என் தம்பி சுமேஷைப் பற்றி.

சுமேஷுக்கு என்னை விட இரண்டு வயது கம்மி. நான்காம் வகுப்பு படிப்பவன். குள்ளமாய் இருப்பான். இடது கை பழக்கம் உள்ளவன். எழுதுவது, ஸ்பூனால் சாப்பிடுவது எல்லாமே இடது கையால். இடது கையில் எப்போதுமே ஒரு கிரிக்கெட் பந்து வைத்திருப்பான். பெரிய டொனால்ட் என்று நினைப்பு, பந்தை தூக்கி தூக்கி போட்டு பிடிப்பான். அதோடு எக்குத்தப்பாய் வீசுவான். அவனால் எங்கள் வீட்டில் நூற்றுக்கணக்கான கண்ணாடி சாமான்கள் நொறுங்கியிருக்கின்றன.

அது மட்டுமா?

நாக்கை மடித்து பயங்கரமாய் விசில் அடிப்பான். அதுவும் டாடி இல்லாதப்பத்தான். இருந்தால் உதைப்பார். குரங்கு மாதிரி குட்டிகரணம் அடிப்பான்.

வாய்க்குள் காற்றை நிறைப்பான். ஒற்றை விரலை வாய்க்குள் விட்டு ஒரு இழு இழுப்பான். சோடா புட்டி உடைப்பது போல சப்தம் எழும்.

மொத்தத்தில் சுமேஷ் ஒரு விஷமகார பையன்.

எனக்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் தான் பிடிக்கும். அவனுக்கு லாரா தான் பிடிக்கும்.

எனக்கு கமல் பிடிக்கும். அவனுக்கு ரஜினிதான் பிடிக்கும்.

எனக்கு ஏ.ஆர். ரகுமான் மியூசிக் பிடிக்கும். அவனுக்கு ஆதித்யன் பிடிக்கும்.

எதை நான் சூப்பர் என்கிறேனோ அதை அவன் படுமட்டம் என்பான்.

வேற ஒரு பையன் என்றால் ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் கூடப்பிறந்த தம்பியாச்சே என்ன பண்றது? அட்ஜஸ்ட் பண்ணிப் போறேன்

இப்பக் கூட பாருங்க... என்னை பார்த்து பழிப்பு காட்றான் சுமேஷ்!

வீட்டுச் சாமான்களுடன் எங்கள் வேன் பெருமாள் மலை கிராமத்துக்குள் புகுந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் மர வீடுகள்.

எல்லா வீடுகளையும் தாண்டி கடைசி மரவீட்டின் முன் வேன் நின்றது.

எல்லாரையும் முந்திக் கொண்டு கீழே குதித்தான் சுமேஷ்.

டாடி இதுதான் நாம தங்கப் போற மரவீடா?

ஆமாண்டா... ஏன்? வினவினார் அப்பா.

பழைய டைப் வீடா இருக்கு. மத்த வீடுகளிலிருந்து ரொம்ப தள்ளி இருக்கு. அதான்...

விலைக்கா வாங்கிருக்கும்? அரசாங்கம் வாடகைக்கு கொடுத்த வீடு... இன்னொரு ஊருக்கு மாத்தல் ஆகி போகும் போது காலிபண்ண வேண்டிய வீடு. எப்படியிருந்தா என்ன? ம்ம்... வேன்ல இருக்குற சாமான்களை எல்லாம் வீட்டுக்குள்ள தூக்கிட்டு போங்க.

வேன் டிரைவரும், காட்டிலாகா பியூனும் உதவினர்.

சாமான்களை வீட்டுக்குள் அடுக்கி வீட்டை சுத்தப்படுத்தினர்.

மிகப்பெரிய மர வீடு. ஆறு அறைகளும், ஒரு படுக்கையறையும், ஒரு சமையலறையும் இருந்தன. மாடியில் ஓர் அறை பூட்டப்பட்டே கிடந்தது.

அம்மா சமையலில் ஈடுபட்டாள்.

மேஜைக்கு சுடச்சுட நூடுல்ஸ் வந்தது. அனைவரும் சேர்ந்தே சாப்பிட்டோம். சாப்பிடும் போது அப்பா பேச ஆரம்பித்தார்.

"உங்க ரெண்டு பேரையும் செயின்ட் மேரீஸ் ஸ்கூல்ல சேர்த்திருக்கேன். இன்னும் பத்து

Enjoying the preview?
Page 1 of 1