Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Saamiyamma
Saamiyamma
Saamiyamma
Ebook89 pages35 minutes

Saamiyamma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஊர் மக்கள் அனைவரும் பெண் தெய்வமாக நினைத்து வழிபடும் கடவுள் போன்றவர் சாமியம்மா. இவரின் அதி தீவிர பக்தன் சம்பத்.

தொழிலதிபராக வளர்ந்து வரும் சம்பத்திற்கு அஸ்ட்ரானமி படித்த அழகிய பெண் நயனிகாவுடன் திருமணம் நடக்கிறது. ஆனால் சம்பத் சாமியம்மாவின் மேல் தீவிர பக்தி கொண்டிருப்பது நயனிகாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடாகிறது.

அவள் சாமியம்மாவின் உண்மை ரூபத்தை வெளிஉலகிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறாள். அதனால் அவள் சந்திக்கும் விளைவுகள் என்ன? அந்த முயற்சியில் நயனிகா வெற்றி பெற்றாளா? வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580111008330
Saamiyamma

Read more from Arnika Nasser

Related to Saamiyamma

Related ebooks

Reviews for Saamiyamma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Saamiyamma - Arnika Nasser

    https://www.pustaka.co.in

    சாமியம்மா

    Saamiyamma

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    வானக்கடலில் நட்சத்திரமீன்கள்

    மொட்டைமாடியில் டெலஸ்கோப்பை ஸ்டாண்டில் பொருத்தி நிறுத்தி இருந்தாள் நயனிகா. டெலஸ்கோப்பை வான் உயர்த்தி நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

    நயனிகா அஸ்ட்ரானமி படித்தவள். சுஸ்மிதா சென்னின் சாயல் அமைந்தவள். முழங்கால் வரை நீண்ட தலைகேசம் நீண்ட முகம் கச்சிதப்படுத்தப்பட்ட புருவங்கள். நீலக்கண்கள். கண்களை விட்டு வெகுவாய் சரிந்து நுனி பருத்த மூக்கு அகலம் குறைவான குட்டிகுட்டி ரோஸ் உதடுகள் கொண்ட வாய். மேல் வரிசை பற்களின் நடுவே அலாதியான இடைவெளி. ஒட்டகச்சிவிங்கியின் தங்கையாய் நீண்ட கழுத்து. பிறந்த குழந்தையின் தலைஅளவுக்கு இரு மார்பகங்கள் நத்தையின் கூடு போல் சிறு தொப்புள்.

    ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மாடியிலிருந்து இறங்கினாள்.

    இரு டால்பின் மீன்கள் துள்ளின.

    அவளுக்காக அவளது பெற்றோர் காத்திருந்தனர்.

    இருவரையும் ஆச்சரியமாக பார்த்தாள் நயனிகா.

    அம்மா நீ தூங்கல?

    ம்ஹிம்!

    இன்னைக்கி சனிக்கிழமை ராத்திரி! வழக்கமா கிளப்புக்கு போயிருவீங்களே டாடி! போகல?

    இல்லம்மா… உன்கிட்ட முக்யமான விஷயம் ஒண்ணு பேசனும்!

    டெலஸ்கோப் கருவியை மடக்கி வைத்துவிட்டு பெற்றோர் எதிரில் அமர்ந்தாள்.

    "இப்பச் சொல்லுங்க!’

    மேல என்னம்மா படிக்கப் போற?

    எதுவும் திட்டமிடல…

    இப்டி எத்னி வருஷத்துக்கு ராத்திரி வானத்தை வேடிக்கை பாத்துக்கிட்டுயிருக்கப் போற நயனி!

    அதனால?

    நாங்க உனக்கு திருமணம் செஞ்சு வைக்க ஆசைப்படுரோம்…

    ம்…

    ஒரு நல்ல வரன் வந்திருக்கு… பெயர் சம்பத்… சிவில் இன்ஜினியர்! டைமண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்னு கம்பெனி வச்சிருக்கார் ப்ளாட்ஸ் கட்டி விற்கிறார்! வீட்டுக்கு ஒரே பய்யன்… அம்மா மட்டும்தான்…."

    சரி!

    அவரை நாளைக்கி ஈவினிங் அவரோட மதரோட வரச் சொல்லியிருக்கோம் வருவார். பாரு….  பிடிச்சிருந்தா மேல பேசுவோம்… உனக்கு புடிக்கலேன்னா வெட்டி விட்ருவம்…

    பேசி முடிச்சிட்டீங்களா? எனக்கு திருமண ஆசையே இல்ல.. ஒரு ரெண்டு வருடம் போகட்டுமே…

    ‘இப்டி தள்ளிப்போட்டுக்கிட்டே போனா எப்டிம்மா? எங்களுக்காக கொஞ்சம் இறங்கி வாம்மா… ப்ளீஸ்….

    சில நொடிகள் மௌனித்தாள்.

    ஓகே ஓகே…. அந்த சம்பத்தை வரச் சொல்லுங்க… பாப்பம்!

    தாங்க்யூ நயனி!

    தோள்களை குலுக்கி  சிரித்தபடி தன்னறைக்குப் போனாள் நயனிகா.

    மறுநாள் காலை.

    வாசலில் ஒரு பியட் கார் வந்து நின்றது.

    காரிலிருந்து ஒரு முப்பது வயது இளைஞன் வெளிப்பட்டான். உடன் அவனது பணக்காரக்குண்டு தாய்.

    இளைஞன் நீலநிற புல்சூட் உடுத்தியிருந்தான். உடுத்தியிருந்த ஆடைகளுக்கு சிறிதும் பொருத்தமில்லாமல் நெற்றி நிறைக்கும் விபூதிபட்டை. அதன் நடுவே மிகப்பெரிய வட்டமாய் குங்குமம். வலது கையில் ரேடோ வாட்ச் கட்டியிருந்தான். ,இடக்கையில் முடிக்கயிறு.

    நிறைய சம்பிரதாயங்கள் பார்ப்பவனாய் தெரிந்தது.

    அம்மாவை முன்விட்டு பின் நடந்தான்.

    உள்வாசலுக்குள் பிரவேசிக்கும்போது வலதுகாலை விரும்பி வைத்தான்.

    சதா ஏதோ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

    நயனிகாவின் பெற்றோர் வரவேற்றனர்.

    சம்பத் நுனி சோபாவில் அமர்ந்திருந்தான்.

    நயனிகா சந்தனநிற பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். பார்டரில் ரோஸ்நிற ஜரிகை. மேரி பியர்ஸ் ஸ்டைலில் தலை அலங்காரம். தலை நிறைய மல்லிகைப்பூ

    வீட்டுக்குள் நுழையும் போதே சம்பத்தை பார்த்துவிட்டாள் நயனிகா.

    இதென்ன? மாப்பிள்ளை மாடர்ன் ட்ரஸ் போட்ட சாமியார் போல் இருக்கிறார்.

    சிரிப்பு குமைந்துகொண்டு வந்தது அடக்கிக் கொண்டாள்.

    அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

    அவளைப் பார்த்த கணம் பேராசைகண்கள் மிளிர்ந்தான் சம்பத்.

    அனைவருக்கும் பொதுவாய் வணக்கம் வைத்தாள்

    Enjoying the preview?
    Page 1 of 1